Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    40 - நேபுகாத்நேச்சாரின் கனவு

    தானியேலும் அவன் நண்பர்களும் பாபிலோன் ராஜாவின் பணியில் சேர்ந்ததுமே, இஸ்ரவேலின் தேவனுடைய வல்லமையை யும் உண்மையையும் அந்த சிலைவழிபாட்டுத் தேசத்தாருக்கு வெளிப்படுத்தும்படியான நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. நேபுகாத்நேச் சார் புதுமையான சொப்பனம் ஒன்றைக் கண்டான். அதனால், அவ னுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது. அது ராஜாவின் மனதை ஆழமாகப் பாதித்தபோதிலும், நித்திரையை விட்டு எழுந்தபோதோ, அந்தச் சொப்பனத்தின் காரியங்களை அவ னால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.தீஇவ 491.1

    குழப்பத்திலிருந்த நேபுகாத்நேச்சார், ‘சாஸ்திரிகள், ஜோசியர் கள் சூனியக்காரர்கள்’ எனத் தன்னுடைய ஞானிகளைக் கூடிவரச் செய்து, அவர்களிடம் உதவி கோரினான். ஒரு சொப்பனம் கண் டேன்: அந்தச் சொப்பனத்தை அறிய வேண்டுமென்று என் ஆவி கலங்கியிருக்கிறது’‘ என்றான். தன்னுடைய குழப்பத்திற்கான கார ணத்தைச் சொல்லிவிட்டு, தன் மனப்பாரத்திற்கு மருந்தாக விளக் கம்வேண்டினான்.தீஇவ 491.2

    அதற்கு அந்த ஞானிகள், ‘’ராஜாவே, நீர் என்றும் வாழ்க சொப் பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த் தத்தை விடுவிப்போம்” என்றார்கள்.தீஇவ 492.1

    மனிதரின் மறைபொருள்களை வெளிப்படுத்துவதாகப் பாசாங்கு பண்ணிவந்த அவர்கள், அக்காரியத்தில் ராஜாவுக்கு உதவ முடிய வில்லை. எனவேதான், அவர்களுடைய மழுப்பலான பதிலால் அவன் கோபமும் சந்தேகமும் கொண்டான். சொப்பனத்தின் அர்த் தத்தை மாத்திரமல்ல; சொப்பனத்தையே தனக்குச் சொல்லச் சொல்லி, ஒரு பக்கம் பரிசுகளையும் வெகுமதிகளையும், இன்னொரு பக்கம் மரண தண்டனையையும் அவர்களுக்கு முன்வைத்தான். சொப்பனம் தனக்கு மறந்துவிட்டதாகச் சொன்னவன், ‘’நீங்கள் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்கு அறிவியாமற்போனால் துண்டித்துப் போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும். சொப்பனத்தையும் அதின் அர்த்ததையும் தெரிவித்தீர்களேயாகில், என்னிடத்தில் வெகுமதிகளையும் பரிசுகளையும் மிகுந்த கனத்தை யும் பெறுவீர்கள்” என்றான்.தீஇவ 492.2

    ஆனாலும் அந்த ஞானிகள், ‘’ராஜா அடியாருக்குச் சொப்ப னத்தைச் சொல்வாராக: அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப் போம்” என்று அதே பதிலையே கூறினார்கள்.தீஇவ 492.3

    தான் நம்பினவர்களின் நயவஞ்சகத்தினால் மிகவும் உக்கிரங் கொண்ட நேபுகாத்நேச்சார், ‘’என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்த படியினாலே நீங்கள் காலதாமதம் பண்ணப் பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது. காலம் மாறுமென்று நீங்கள் எனக்கு முன்பாகப் பொய்யும் புரட்டுமான விசேஷத்தைச் சொல்லும்படி எத்தனம் பண்ணி இருக்கிறீர்கள்; நீங்கள் சொப்பனத்தை எனக்குத் தெரி விக்காமற்போனால், உங்களெல்லாருக்கும் இந்த ஒரே தீர்ப்பு பிறந் திருக்கிறது; ஆகையால் சொப்பனத்தை எனக்குச் சொல்லுங்கள்; அப்பொழுது அதின் அர்த்தத்தையும் உங்களால் காண்பிக்கக் கூடு மென்று அறிந்து கொள்ளுவேன்’‘ என்றான். தானி 2:8, 9.தீஇவ 492.4

    தங்களுடைய தோல்வியின் விளைவுகளை எண்ணி அச்சத் தால் நிறைந்த ஜோசியர்கள், ‘ராஜாவின் வேண்டுகோள் அர்த்தமற் றது’ என்றும், ‘எந்தவொரு மனிதனுக்கு முன்பாகவும், ஒருக்கால மும் அத்தகைய சோதனை வைக்கப்பட்டதில்லை’ என்றும் அவனி டம் சொல்ல அவர்கள் எத்தனம் பண்ணினார்கள். ‘’ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப் படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசிய னிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை. ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிற வர்களோடே வாசம்ண்ணாத தேவர்களேயொழிய ராஜ சமுகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை” என்று குத்தலாய்ப் பேசினார்கள்.தீஇவ 492.5

    இதினிமித்தம் ‘ராஜா மகா கோபமும் உக்கிரமுங்கொண்டு, பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலை செய்யும் படி கட்டளையிட்டான்’.தீஇவ 493.1

    இராஜாவால் பிறப்பிக்கப்பட்ட ஆணையை நிறைவேற்றும் படி புறப்பட்டுச் சென்ற அதிகாரிகளால் தேடப்பட்டவர்களுள் தானியேலும் அவனுடைய நண்பர்களும் அடங்குவர். ஆணையின் படி அவர்களும் கொல்லப்பட வேண்டியவர்களென்று சொல்லப் பட்ட போது, ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியாகோடே தானியேல் ‘யோசனையும் புத்தியுமாய்ப் பேசி, ‘இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய்ப் பிறந்ததற் குக் காரணம் என்ன?’ என்று கேட்டான். விநோதமான சொப்பனத் தினால் ராஜாவுக்கு ஏற்பட்ட குழப்பம் பற்றியும், தாம் இம்மட்டும் முற்றிலுமாக நம்பியிருந்தவர்களால் உதவக்கூடாமல் அவன் அடைந்த ஏமாற்றம் பற்றியும் அவனிடம் கூறினான் ஆரியோகு . இதனைக் கேட்டதும், தானியேல் தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ராஜாவின் சமுகத்திற்குச் செல்ல துணிந்தான்; சொப் பனத்தையும் அதன் அர்த்தத்தையும் வெளிப்படுத்துமாறு தன் தேவ னிடம் கேட்கும்படி தனக்கு கால அவகாசம் தருமாறு வேண்டிக் கொண்டான்.தீஇவ 493.2

    அந்த வேண்டுகோளுக்கு ராஜா சம்மதித்தான். பின்பு தானி யேல் வீட்டுக்குப் போய் அனனியா, மீஷாவேல், அசரியா என் னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான்’ வெளிச்சத்திற்கும் அறிவிற்கும் ஆதாரமானவரிடமிருந்து அவர்கள் ஞானத்தை வேண்டினார்கள். தாங்கள் இருக்கவேண்டிய இடத்தில் தேவன் தங்களை வைத்திருந்ததையும் தேவபணி செய்து கடமை பொறுப்புகளை நிறைவேற்றி வந்ததையும் உறுதியுடன் விசுவாசித் தனர். தங்களுக்குக் குழப்பமும் ஆபத்தும் ஏற்பட்ட சமயங்களில் எல்லாம் பாதுகாப்பையும் வழிநடத்துதலையும் வேண்டி அவ ரிடமே சென்றார்கள்; அவரும் அவர்களுக்கு ஓர் அனுகூலமான துணையாக விளங்கினார். இப்போதும், தங்களுக்கு ஏற்பட்டிருந்த அந்த குறிப்பிடத்தக்க பிரச்சனையிலிருந்து தங்களை விடுவிக்கு மாறு, பூமியின் நியாயாதிபதியினிடத்தில் மீண்டும் தங்களை ஒப் படைத்து, நொறுங்குண்ட இருதயத்தோடு வேண்டிக்கொண்டார் கள். அவர்கள் விருதாவாக வேண்டிக்கொள்ளவில்லை. அவர்கள் கனப்படுத்தி வந்ததேவன்தாமே இப்போது அவர்களைக்கனப்படுத்தி னார். கர்த்தருடைய ஆவியானவர் அவர்கள்மேல் தங்கினார். இராஜா வின் சொப்பனமும் அதன் அர்த்தமும் இராக்காலத்தின் தரிசனத்தில் ‘ தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்டது.தீஇவ 493.3

    தனக்குக் கொடுக்கப் பட்ட வெளிப் பாட்டிற்காக முதல் வேலையாக தேவனை ஸ்தோத்தரித்தான் தானியேல். பின்பு தானி யேல் சொன்னது, ‘’தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்கு முள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது. அவர் காலங்களையும் சமயங் களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற் படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமா னதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறி வார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத் தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜா வின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்தபடியினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன்” என்று ஆர்ப்பரித்தான்.தீஇவ 494.1

    ஞானிகளை அழிக்க கட்டளை பெற்றிருந்தவனான ஆரியோ கிடம்உடனே சென்று, “‘பாபிலோனின்ஞானிகளை அழிக்காதேயும், என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம் ; ராஜா வுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன்” என்றான் தானியேல். அப் பொழுது அந்த அதிகாரி, தானியேலைத் தீவிரமாக ராஜாவுக்கு முன் அழைத்துக்கொண்டுபோய், ‘’சிறைப்பட்டு வந்த யூதேயா தேசத் தாரில் ஒரு புருஷனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவுக்கு அர்த் தத்தைத் தெரிவிப்பான்’‘ என்று சொன்னான்.தீஇவ 494.2

    உலகின் வல்லரசாக விளங்கிய சாம்ராஜ்யத்தின் மன்னனுக்கு முன்பாக அடக்கமும் அமைதியுமாக நின்றிருந்தான் அந்த யூத சிறைக் கைதி. பேச ஆரம்பித்ததுமே, சகலஞானத்திற்கும் ஆதாரமானவரை உயர்த்திப் பேசினான். தான் எவ்வித கனத்தையும் ஏற்க மறுத்தான்.தீஇவ 494.3

    நேபுகாத்நேச்சாருடைய
    சொப்பனத்தின் சிலை
    தீஇவ 495.1

    மேன்மையும் லட்சியமும் கொண்டவன் பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார். மனிதரின் ராஜ்யங்களைக்குறித்த ஒரு வல்லமையான தீர்க்கதரிசனம்தான் அவன் கண்ட சொப்பனத்தின் சிலை. தனக்குப்பிறகு என்ன நிகழுமென்று அவன் அறிய விரும் 3 3 பினான்; மனிதரால் அர்த்தம் சொல்லமுடியாத அச்சொப்பனத்தின் சிலை மூலம் அவ 8னுக்குப்பின் நிகழும் காரியங்களைத் தேவன் வெளிப்படுத்தினார்.தீஇவ 495.2

    பாபிலோன் என்றென்றும் நிலைத்திருக்குமென்று நினைத்திருந்த நேபுகாத்நேச் சாருக்குத் அந்தச் சொப்பனத்தைக் கொடுத்தார் தேவன். ஏகாதிபத்திய வேட்கையைக் காட்டிலும் சத்தியம் மேன்மையானது என்பதை ராஜா அறியும்படியாகவும், பாபிலோன் 3 என்றென்றும் நிலைநிற்காது என்பதைராஜா புரியும்படியாகவும் தம் தீர்க்கதரிசி மூலமாக 3 அந்தச் சொப்பனத்தின் அர்த்தத்தை நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்தார் தேவன். 2 3 பூமியின் ராஜ்யங்கள் எவ்வளவுதான் சிறப்பு பெற்றிருந்தாலும், அவை யாவும் தற்காலிக ! மானவையே, அவை ஒழிந்துபோம். பர்வதமாகி பூமியை நிரப்பிய கல்லால் சுட்டிக்காட் டப்பட்ட கிறிஸ்துவின் ராஜ்யமே ஒழிந்துபோகாத ஒரே நித்திய ராஜ்யம் என்பதை பாபி லோனியராஜாவும், அவர் மாத்திரமல்ல, அவருக்குப்பின்வரும் ஒவ்வொருராஜாவும் அறி யும்படியாகவே அந்தச் சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் நேபுகாத்நேச்சாருக்குக் கொடுத்தார் தேவன்.தீஇவ 495.3

    மனித உருவிலான அச்சிலையானது மனிதனின் ராஜ்யத்தைச் சுட்டிக்காட்டியது; 8 ஆனால் அந்தச் சிலையின் பிரிவுகளும், அதன் உலோகச் சின்னங்களும் உலகை ஆளும் நான்கு பெரும் ராஜ்யங்களைச் சுட்டிக்காட்டின; அவை தானியேலின் காலம் முதல் உல 8 கில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. அதில் பாபிலோன் முதலாம் ராஜ்யமாயிருந்தது. நேபு 3 காத்நேச்சாரின்கீழ்புகழின் உச்சிக்கே சென்று, உலகையாளும் ஒப்புயர்வற்றராஜ்யமாகத் திகழ்ந்தது. “தெற்கேயிருந்த பாபிலோன் ராஜ்யமானது மக்கள் தொகையிலும், பண் 3 டைக்கால வழக்கங்களை பின்பற்றுவதிலும் அசீரியாவைவிட மிகவும் உயர்ந்திருந்தது. 3 அதுதான் நாகரிகத்தின் பிறப்பிடமாகவும் மையமாகவும் திகழ்ந்தது; அங்கிருந்துதான் ! மேற்கத்திய ஆசியா முழுவதிலும் நாகரிகம் பரவிற்று” என்கிறார் செய்செ என்பவர். - The Ancient Empires of the East, 1894, 1900 eds., P.93.தீஇவ 495.4

    ’’வெகுகாலம் தொன்றுதொட்டு வருகிறதும், இதுவரையிலும் கண்டுபிடிக்! கப்பட்டுள்ளதுமாகிய பண்டைய முற்போக்கு நாகரிகம் அந்நாட்டில் காணப்பட்டதற்குச் 3 சில தடயங்கள் வெளியாகியுள்ளன. கலாச்சாரத்திற்கும், நாகரிகத்திற்கும், இலக் கியத்திற்கும், மதத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமைக்கும் பாபிலோன் அடையாள.” - Art. “Babylonia,” The New Schaff - Herzog Encyclopedia of Religious Knowledge (New York, 1908), Vol. 1, pp. 396. 397...தீஇவ 495.5

    “உலகின் எந்தவொரு தலைநகரமும் இத்தனை வல்லமையோடும் செழிப்போடும், கலாச்சாரத்தோடும் இவ்வளவு அதிகமான நாட்கள் நீடித்திருந்ததில்லை’ - Robert Wm. Rogers, A History of Babylonia and Assyria, 4th ed., vol. I, p.386 .தீஇவ 496.1

    அந்த தேவ வெளிப்படுத்துதலும் எச்சரிப்பும் உலகை ஆளும் அந்த மகா ராஜ் லயத்திற்குக் கொடுக்கப்பட்டதுஏற்றதாயிருந்தது. ஆனாலும், அந்த வெளிப்பாடு கொடுக் கப்பட்ட அதே தலைமுறையில், அதாவது கி.மு539இல், நபோனிடஸ் மற்றும் அவருடைய குமாரன்பெல்ஷாத்சார் போன்ற பெலவீனமான மன்னர்களின் கீழ் மேன்மையான, பொன் 8 னாலான பாபிலோன் ஒழிந்துபோனது.தீஇவ 496.2

    பாபிலோனுக்குப்பிறகு, மகா கோரேஸின்கீழ்மேதிய- பெர்சியா எழுந்தது. சிலை யின் வெள்ளிப்பாகத்தால் சுட்டிக்காட்டப்பட்ட பெர்சியா, கிட்டத்தட்ட இருநூறு வருடங் கள், உலக சாம்ராஜ்யமாக சிங்காசனத்தில் வீற்றிருந்தது.தீஇவ 496.3

    கி.மு. 331இல், அர்பெலா யுத்தத்தின்போது, ஆட்சியமைக்கும் அதிகாரத்திற்காக 8 3 மகா அலெக்ஸாண்டரோடு யுத்தம் செய்து மூன்றாம் தரியு கோடா மென்னஸ் தோல்வி 3 அடைந்தான்; அதன்பிறகு கிரேக்கத்தின் அலெக்ஸாண்டர் உலக அரசனானான். 8 கிரேக்கத்தின் அடையாளம் வெண்கலம். அலெக்ஸாண்டர் கி.மு. 323 இல் மரித்தான்; 8 சிலவருடங்களிலேயே தங்களுக்குள் யுத்தம் செய்த தளபதிகள் அவனுடைய ராஜ்யத்தைப் 3 பங்கிட்டுக்கொண்டார்கள்; அதனைத் தொடர்ந்து, அது பெலவீனப்பட்டது; டைபீரியஸ் 8 3 நதியருகே எழுந்த பேரரசனுக்கு அது இரையானது.தீஇவ 496.4

    முன்பு வல்லமைமிக்க கிரேக்க சாம்ராஜ்யத்தோடு இருந்த சீரியாவை கி.மு. 1903 3 இலும், அந்தச் சாம்ராஜ்யத்தின் மக்கதோனியாப்பகுதியை கி.மு168இலும் ரோம் கைப் பற்றியது; அதே ஆண்டு, ரோமின் இரும்பாட்சி அதிகாரத்தை எகிப்து ஏற்றுக்கொண்டது.? 3 ரோம் குடியரசாக இருந்தபோதிலும், ஆரம்பத்திலிருந்தே ஐக்கிய நாடாக விளங்கியது. 8 2 பிறகு, அது ஒரு சாம்ராஜ்யமானது. நான்காம் நூற்றாண்டில், வடக்கே, ரோமரல்லாத மற்ற 8 வர்களின் படையெடுப்பாலும் கிழக்கே ஐரோப்பியரின் படையெடுப்பாலும் ரோம சாம் 3 ராஜ்யத்தில் பிரிவு ஏற்பட்டது. அதனை யே இரும்பும் களிமண்ணும் கலந்த பாகம் சுட்டிக் காட்டுகிறது; இரும்பரசான ரோம் என்றென்றுமாக உடைந்தது. அவர்கள் மற்ற மனுஷ 3 ரோடே சம்பந்தங்கலப்பார்கள் என்று தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டபடி, ரோமிலிருந்து 8 பிரிந்த ஐரோப்பிய நாடுகளை கலப்பு திருமணங்கள் மூலம் ஒரே தேசமாக இணைக்க அதி 3 களவில் முயற்சிகள் எடுக்கப்பட்டன; அவை தோற்றன. சார்லிமன், நெப்போலியன் போன் 8 றோர் படைபெலத்தால் ஓர் ஐக்கிய அரசை நிறுவமுயன்றனர்; ஆனால் தோற்றனர். களி 3 மண்ணோட இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளா திருப்பார்கள் என்கிறது தீர்க்கதரிசனம். அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளா 8 திருப்பார்கள்’ எனும் வார்த்தைகள் அரசியல் வியூகத்தையோ படைபலத்தையோவிட 3 பலம்வாய்ந்தவை.தீஇவ 496.5

    ரோமின் கடைசி ராஜ்யத்தின் நாட்களில் பரலோகத்தின் தேவன் என்றென்றைக் கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழுப்பப்பண்ணுவார்; அது வேறேஜனத்திற்கு விடப்படு வதில்லை. அவருடைய சொந்த ஜனங்கள்தாமே அதனை என்றென்றுமாகச் சுதந் 8 தரித்துக்கொள்வார்கள். “சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம்”தீஇவ 496.6

    - வெளியீட்டாளர்கள். ’’நான் கண்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமோ?’‘ என்று ஆவலோடு கேட்ட ராஜாவிற்கு, ‘ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானி களாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர் களா லும் கூடாது, மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பர லோகத்திலிருக்கிற தேவன் கடைசி நாட்களில் சம்பவிப்பதைராஜா வாகிய நேபுகாத்நேச் சாருக்குத் தெரிவித்திருக்கிறார்” என்று பதில் ளித்தான் உம்முடைய சொப்பனமும் உம்முடைய தலையில் உண் டான தரிசனங்களும் என்னவென்றால்ராஜாவே, உம்முடைய படுக் கையின்மேல் நீர் படுத்திருக்கையில், இனிமேல் சம்பவிக்கப் போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பிற்று; அப் பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப் போகிறதை உமக்குத் தெரிவித்தார். உயிரோடிருக்கிற எல்லாரைப் பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளி யாக்கப்பட்டது.தீஇவ 496.7

    ’ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின் றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது. அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும், அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமா யிருந்தது.தீஇவ 497.1

    ’நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப் படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவை களை நொறுக்கிப்போட்டது. அப்பொழுது அந்த இரும்பும் களி மண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங் குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்து போ கிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாத படி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல் லாம் நிரப்பிற்று. ‘தானி 2:34, 35.தீஇவ 497.2

    ’சொப்பனம் இதுதான்’ என்று உறுதிபட கூறினான் தானியேல்.ஒவ்வொரு காரியத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ராஜா, தன்னைக் கலங்கப் பண்ணிக்கொண்டிருந்த சொப்பனம் அதுவே என்பதை உணர்ந்தான். அதன் அர்த்தத்தை மனப்பூர்வ மாகக் கேட்க அவன் மனது ஆயத்தமாயிருந்தது. ராஜாதி ராஜா வானவர் ஒரு மாபெரும் சத்தியத்தை அந்த பாபிலோனிய மன்னனி டம் தெரிவிக்க இருந்தான். ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற் படுத்தவும், பூமியின் ராஜ்யங்களின் மேலும் தமக்கு வல்லமை உண் டென்றும் தேவன் வெளிப்படுத்த இருந்தார். பரலோகத்திற்கு, தான் ஆற்றவேண்டிய கடமைகுறித்த ஓர் உணர்வைப் பெறநேபுகாத்நேச் சாரின் மனம் விழித்துக்கொள்ள வேண்டியிருந்தது. உலகத்தின் முடிவுமட்டுமுள்ள எதிர்கால நிகழ்வுகள் யாவும் அவனுக்கு முன் பாக வெளிப்படுத்தப்பட இருந்தன.தீஇவ 498.1

    ’ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையை யும் மகிமையையும் அருளினார். சகல இடங்களிலுமுள்ள மனுபுத் திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளை யும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளை யெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே.தீஇவ 498.2

    ’உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும்; பின்பு பூமியையெல்லாம் ஆண்டு கொள்ளும் வெண் கலமான் மூன்றாம் ராஜ்யம் ஒன்று எழும்பும்.தீஇவ 498.3

    ’நாலாவது ராஜ்யம் இரும்பைப்போல உரமாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பை போல அவைகளை யெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.தீஇவ 498.4

    ’பாதங்களும் கால்விரல்களும் பாதி குயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆகிலும் களி மண்ணோடே இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும். கால்விரல் கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால், அந்த ராஜ்யம் ஒருபங்கு உரமும் ஒரு பங்கு நெரிசலுமாயிருக்கும். நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களி மண்ணோடே இரும்பு கலவாதது போல அவர்கள் ஒருவரோடொரு வர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.தீஇவ 498.5

    ’அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என் றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டு வந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளி யையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும். இனிமேல் சம்பவிக்கப்போகி றதை மகாதேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமா னது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம்’ என்று தொடர்ந்து கூறினான் தானியேல் தானி 2:44, 45தீஇவ 499.1

    அந்த விளக்கத்தின் நிஜத்தன்மையை உணர்ந்த ராஜா, பணி வோடும் பயத்தோடும் ‘’முகங்குப்புற விழுந்து, வணங்கி, நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாய் இருக்கிறார்’‘ என்றான்.தீஇவ 499.2

    ஞானிகளை அழிக்க தான் போட்ட கட்டளையைத் திரும்பப் பெற்றான் நேபுகாத்நேச்சார். மறைபொருள்களை விடுவிக்கிறவ ரோடுதானியேல் கொண்டிருந்த உறவினால், அவர்களுடைய உயிர் தப்புவிக்கப்பட்டது. பின்பு ராஜாதானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனை பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனி லுள்ள சகலஞானிகளின் மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித் தான். தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதின் பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மாகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைத்தான்; தானியே லோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான்’.தீஇவ 499.3

    மனித வரலாற்றுக்குறிப்புகளைப்பார்த்தால், தேசங்களின் வளர்ச் சியும், ராஜ்யங்களின் விழுகையும் எழுகையும் மனிதனின் வீரத்தை யும் முயற்சியையும் சார்ந்திருப்பதாகவே தோன்றுகிறது; அவனு டைய ஆற்றலையும் ஆசையையும் மனப்போக்கையும் பொறுத்தே காரியங்கள் பெருமளவில் தீர்மானிக்கப்படுவதுபோல் தெரிகிறது. ஆனால், உண்மை என்னவென்று தேவவார்த்தையில் சொல்லப்பட்ட டிருக்கிறது. அதாவது, மனித விருப்பத்தாலும் ஆற்றலாலும் உணர்வு களாலும் ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் பிரதி நிகழ்வுகள் யாவிலும், வானுலகானாலும் பூவுலகானாலும் சர்வ இரக்கம் நிறைந்தவரின் அரசாங்கமானது அவருடைய சித்தத்தின் யோசனைகளை நிறை வேற்ற அமைதலாகவும் பொறுமையாகவும் கிரியை செய்வதை நாம் காணலாம்.தீஇவ 499.4

    பல்வேறு இனத்தவரையும் தேசத்தாரையும் சிருஷ்டித்து, பர வச் செய்ததில் தேவனின் நோக்கம் பற்றி அத்தேனேயின் ஞானி களுக்கு முன் ஒப்பற்ற அழகும் கனிவுமான வார்த்தைகளால் விவ ரிக்கிறான் பவுல் அப்போஸ்தலன். ‘உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினதேவனானவர் மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்து, முன் தீர்மானிக்கப் பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித் திருக்கிறார். கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டு பிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்’‘ என்கிறான் அப்போஸ்தலன். அப்போஸ்தலர் 17:24-27.தீஇவ 500.1

    விருப்பப்படுகிற எவரும் ‘உடன்படிக்கையின் கட்டுக்குள் ‘ வரலாம் என்பதைத் தெளிவுப்படுத்தியுள்ளார் தேவன். எசே 20:37. ‘மனிதர் பூமியில் குடியிருக்கவேண்டும்’ என்பதும், அதனால் அவர்கள் தங்களுக்கும் மற்றவருக்கும் ஆசீர்வாதத்தையும், தங் கள் சிருஷ்டிகருக்குக் கனத்தையும் கொண்டுவர வேண்டும்’ என் பதே சிருஷ்டிப் பில் அவருடைய நோக்கமாயிருந்தது. விருப்பப் படுகிற அனைவருமே இந்த நோக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். அவர்களைப் பற்றி, ‘இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்’‘ என்று ஏசா 43:21 சொல்கிறது.தீஇவ 500.2

    தேசங்களானாலும் தனிமனிதரானாலும் மெய்யான சகல செழிப் பிற்கும் அடிப்படை நியதிகளைத் தம் பிரமாணத்தில் தேவன் வெளிப் படுத்தியுள்ளார். இந்தப் பிரமாணத்தைக் குறித்து இஸ்ரவேலருக்கு அறிவித்தான் மோசே. இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமும் மாய் இருக்கும். இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே; இது உங்கள் ஜீவனாயிருக்கிறது’ உபா4:6; 32:47. இஸ்ரவேலருக்கு உறுதியளிக்கப்பட்ட அதே ஆசீர்வாதங்கள்தாம், அதே நிபந்தனைகள் ளோடும் அதே அளவோடும், வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு தனிமனி தனுக்கும் ஒவ்வொரு தேசத்திற்கும் உறுதியளிக்கப்பட்டிருக்கின்றன.தீஇவ 500.3

    நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன் சில தேசங்கள் பெயர் பெற்று விளங்கின. காலங்களைப் புரட்டிப்பார்த்த சர்வஞானியான வர் அந்த உலகளாவிய ராஜ்யங்களின் விழுகையையும் எழுகையை யும் முன்னறிவித்தார். ‘பாபிலோன் ராஜ்யம் விழுந்து, இரண்டாம் ராஜ்யம் ஒன்று தோன்றும்’ என்றும், அதனைச் சோதித்தறிவதற்கான காலம் கொடுக்கப்படும்’ என்றும் நேபுகாத்நேச்சாருக்கு அறிவித்தார் தேவன். மெய்யானதேவனைமேன்மைப்படுத்த தவறுவதினிமித்தம் அதன் மகிமையும் ஒழிந்து, அதன் இடத்தில் மூன்றாம் ராஜ்யம் எழ விருந்தது. அந்த ராஜ்யமும் ஒழிந்துபோக இருந்தது; இரும்பைப் போன்று உறுதியான நான்காம் ராஜ்யம் உலகத்தை ஆளவிருந்தது.தீஇவ 501.1

    பூமியின் சகலராஜ்யங்களிலும் செழிப்பு மிக்கதாயிருந்த பாபி லோனின் மன்னர்கள், தேவபயத்தோடு எப்பொழும் நடந்துகொண் டிருந்திருப்பார்களானால், அவர்களைத் தம்மோடு இணைத்து, பெலப்படுத்துவதற்கான ஞானத்தையும் வல்லமையை யும் தேவன் அருளியிருப்பார். ஆனால், குழப்பமும் கஷ்டமும் ஏற்பட்டபோது மாத்திரமே அவர்கள் தேவனைத் தங்கள் பாதுகாப்பாகக் கொண் டிருந்தார்கள். தங்களுடைய ஞானிகளால் உதவ முடியாத நேரங் களில் தான், தானியேல் போன்றோரைத் தேடினார்கள். இவர்கள் தேவனைக் கனப்படுத்துகிறவர்கள் என்பதையும் அவரால் கனப் படுத்தப்பட்டவர்கள் என்பதையும் அறிந்திருந்தார்கள். தேவ செயல்களின் மறைபொருள்களை விடுவிக்குமாறு இவர்களிடம் தான் அவர்கள் வேண்டிக்கொண்டார்கள்; ஏனெனில், மகத்துவ பாபிலோனின் அரசர்கள் அறிவாளிகளாக இருந்தபோதிலும், அக் கிரமத்தால் தேவனைவிட்டு வெகுதூரத்திற்குச் சென்றிருந்தார்கள்; எதிர்காலம் குறித்து தங்களுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிப்புகளையும் வெளிப்படுத்தல்களையும் அவர்களால் விளங்கிக்கொள்ள முடிய வில்லை .தீஇவ 501.2

    தேசங்களின் வரலாற்றில் தேவனுடைய தீர்க்கதரிசனத்தின் படியே காரியங்கள் நிறைவேறினதைத் தேவ வார்த்தையின் மாணாக் கன் கண்டுகொள்ளலாம். இறுதியில், உடைந்தும் தகர்ந்தும் போன நிலையில் பாபிலோன் ஒழிந்தது. ஏனெனில், அதன் மன்னர்களுக் குச் செழிப்பு வந்தபோது, தங்களுக்கு தேவன் தேவையில்லை யென்று நினைத்தார்கள்; தங்கள் ராஜ்யத்தின் மகிமைக்கு மனித சாத னையைக் காரணமாக எண்ணினார்கள். மேதிய-பெர்சிய அரசும் பரலோகத்தின் உக்கிரத்தால் நியாயந்தீர்க்கப்பட்டது. ஏனெனில், தேவபிரமாணத்தைக் காலுக்கடியில் போட்டு அது மிதித்தது. பெரும் பாலான ஜனங்களுடைய இருதயங்களில், தேவ பயத்திற்கே இட மில்லாதிருந்தது. துன்மார்க்கமும் தூஷணமும் சீர்கேடும் எங்கும் நிலவின. அதற்குப்பின் வந்த ராஜ்யங்கள் அதைவிட சீர்கெட்டும் மோசமாகவும் இருந்தன; ஒழுக்க நியதியில் அவர்கள் மிகவும் தரம் தாழ்ந்துகொண்டே சென்றார்கள்.தீஇவ 501.3

    பூமியின் மேலுள்ள ஒவ்வோர் ஆட்சியாளருக்கும் பரலோ கமே அதிகாரத்தை வழங்கியுள்ளது; அவ்வாறு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்துதான் வெற்றி அமைகிறது. ‘நீ என்னை அறியாதிருந்தும் நான் உனக்கு இடைக் கட்டு கட்டினேன்’ என்பதுதான் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தெய்வீக கண்காணிப்பாளர் கொடுக்கும் வார்த்தையாகும். ஏசா 45:5. முன்பு நேபுகாத்நேச்சாரிடம் சொல்லப்பட்ட வார்த்தைகளே ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் வாழ்க்கை பாடமாயிருக் கிறது. ‘நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக் கொண்டு, நீதியைச் செய்து, உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம். ‘தானி 4:27.தீஇவ 502.1

    ’நீதி ஜனத்தை உயர்த்தும். நீதியினால் சிங்காசனம் உறுதிப் படும். அது ‘அன்பினால் நிலைத்து நிற்கும்’ என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும். ‘ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத் துகிறவர்’ வெளிப்படுத்துகிறவல்லமையில் இந்நியதிகள் செயல்படு வதை உணரவேண்டும். இவற்றை அறிவதுதான் வரலாற்றின் தத் துவத்தை அறிவதாகும். நீதி 14:34; 16:12; 20:28; தானி 2:21.தீஇவ 502.2

    தேவவார்த்தையில் மாத்திரமே இது தெளிவாகச் சொல்லப்பட் டுள்ளது. தேசங்களானாலும் தனிமனிதனானாலும், அவர்களை ஒப்பற்றவர்களாக்குவதாகத் தென்படும் வசதிகளும் வாய்ப்புகளும் அவர்களின் பெலனைச் சார்ந்ததல்ல என்பதும், அவர்களின் பெரு மையையோமேன்மையையோ அது சார்ந்ததல்ல என்பதும் அங்குச் சொல்லப்பட்டுள்ளது. தேவநோக்கத்தை எவ்வளவு உண்மையோடு அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்பதில்தான் அது அடங்கியுள் ளது.தீஇவ 502.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents