Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    29 - பாபிலோனிலிருந்து தூதுவர்கள்

    வளமிக்க தன் ஆட்சியின் மத்தியில், கொடிய வியாதியால் பீடிக்கப்பட்டான் எசேக்கியா. ‘வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏது வாயிருந்தான்; மனிதனால் குணப்படுத்த இயலாத அளவிற்கு அவன் நிலை இருந்தது. ‘’நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்கு படுத்தும். நீர் பிழைக்க மாட்டீர், மரித்துப்போவீர்” என்று கர்த்தர் சொல் லுகிறார்’ என்ற செய்தியை தீர்க்கதரிசியாகிய ஏசாயா அவனிடம் அறி வித்தபோது, எஞ்சியிருந்த கடைசி நம்பிக்கையும் அற்றுப்போனது. ஏசாயா 38:1.தீஇவ 340.1

    சூழ்நிலை முற்றிலும் அந்தகாரமாகத் தோன்றியது; ஆனா லும், இம்மட்டும் தன் ‘அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத் தில் அனுகூலமான துணையுமாய் இருந்தவரை நோக்கி, ராஜாவின் ணப்பித்தான். ‘எசேக்கியாதன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக் கொண்டு, கர்த்தரை நோக்கி, ‘’ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன் பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும்” என்று விண் ணப்பம் பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.’2இராஜாக் கள் 20:2,3.தீஇவ 340.2

    அவ பக்தியும் அதைரியமுமான காலக்கட்டத்தில் தேவ ராஜ் யத்தின் மேம்பாட்டிற்காகவல்லமையாகப் பிரயாசப்பட்டவர்களில், தாவீதின் நாட்களுக்குப்பின் எசேக்கியாவுக்கு ஒத்த அரசர்கள் எவருமில்லை. மரணப்படுக்கையில் கிடந்த அந்த மன்னன் உண்மை யோடு தன் தேவனைச் சேவித்திருந்தான்; ‘யேகோவாவே ராஜாதி ராஜா’ என்பதில் மக்களின் நம்பிக்கை பெலப்படும்படி செய்திருந் தான். ஆகவே, தாவீதைப்போல இப்போது அவனால் மன்றாட முடிந்தது:தீஇவ 341.1

    ’என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக;
    என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.
    என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது;
    என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.
    தீஇவ 341.2

    சங்கீதம் 88:2,3.

    கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும்
    என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.
    உம்மால் ஆதரிக்கப்பட்டேன்’
    என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும் ‘தேவனே,
    எனக்குத் தூரமாயிராதேயும்;
    என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும். ‘
    இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும்,
    வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும்,
    என்னைக் கைவிடீராக.’
    தீஇவ 341.3

    சங்கீ தம் 71:5,6,9,12,18.

    தம்முடைய இரக்கங் களுக்கு முடிவில்லாதவர்’ தம் தாசனின் ஜெபத்தைக் கேட்டார். புலம்பல் 3:22. ‘ஏசாயா பாதி முற்றத்தை விட்டு அப்புறம் போகிறதற்கு முன்னே, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர் சொன்னது, ‘’நீ திரும்பிப் போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி, ‘உன் தகப்ப னாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்ன வென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். உன் நாட்க ளோடே பதினைந்து வருஷங்களைக்கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என் நிமித் தமும் இந்த நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன்’ என்று சொல்” என்றார். 2இராஜா 20:4-6.தீஇவ 341.4

    நம்பிக்கையும் நிச்சயமுமான வார்த்தைகளோடு சந்தோஷ மாகத் திரும்பிவந்தான் தீர்க்கதரிசி. புண்பட்டிருந்த இடத்தில் அத் திப்பழ அடையை வைக்குமாறு சொல்லிவிட்டு, தேவ இரக்கத்தை யும் பாதுகாக்கும் கிருபையையும் குறித்த செய்தியை ராஜாவுக்கு அறிவித்தான் ஏசாயா.தீஇவ 342.1

    மீதியான் தேசத்தில் மோசே செய்ததுபோல, பரலோக தூதுவ ரின் பிரசன்னத்தில் கிதியோன் செய்ததுபோல, தன்னுடைய எஜமான் பரலோகம் எடுத்துக்கொள்ளப்படுவதற்குச் சற்றுமுன் எலிசா செய்தது போல, அச்செய்தி பரலோகத்திலிருந்துதான் வந்தது என்பதற்குச் சில அடையாளங்களை வேண்டினான் எசேக்கியா. ‘’கர்த்தர் என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம் நாளிலே நான் கர்த்தருடைய ஆலயத் திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன?’ என்று அவன் தீர்க்க தரிசியிடம் விசாரித்தான். இராஜா 20:8.தீஇவ 342.2

    அதற்குப் பிரதியுத்தரமாக, ‘கர்த்தர் தாம் சொன்ன வார்த்தை யின்படியே செய்வாரென்பதற்கு, கர்த்தரால் உனக்கு உண்டாகும் அடையாளமாகச் சாயை பத்துப்பாகைமுன்னிட்டுப் போகவேண்டும் மோ, பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டுமோ?” என்று கேட் டான் தீர்க்கதரிசி. ‘’சாயை பத்துப்பாகை முன்னிட்டுப் போகிறது லேசான காரியம்” என்று சொன்ன எசேக்கியா, ‘’சாயை பத்துப் பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டும்” என்றான்.தீஇவ 342.3

    தேவனுடைய நேரடித் தலையீட்டால் மாத்திரமே சூரிய கடியா ரத்தில் பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பக்கூடியதாயிருந்தது; எசேக் கியாவின் விண்ணப்பத்தை தேவன் கேட்டதற்கு அதுவே அவ ருக்கு ஓர் அடையாளமாக விளங்க இருந்தது. அதன்படி, ‘ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில், அவர் ஆகாசுடைய சூரியக் கடியாரத்தில் பாகைக்குப் பாகை முன்போன சாயை பத்துப் பாகை பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார்.’ வச. 8-11.தீஇவ 342.4

    தன் முந்தைய பெலனை மீண்டும் பெற்றவனாக, யேகோவா வின் இரக்கங்களைக் கவிதைச் சொற்களாகப் பாராட்டினான் யூதா வின் ராஜா. மீதமானதன் நாட்களை ராஜாதி ராஜாவுக்கு நன்றியோடு சேவை செய்து கழிப்பதாகவும் பொருத்தனை பண்ணினான். தேவன் தன்னை மனவுருக்கத்துடன் அணுகினதை நன்றியோடு அவன் உணர்ந்தான். தங்கள் வாழ்நாளைத் தங்கள் சிருஷ்டிகரின் மகிமைக் காகச் செலவழிக்க விரும்பும் யாவருக்கும் ஊக்கமூட்டுவதாக இருக்கிறது.தீஇவ 342.5

    ’நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல்
    பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன்
    என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்.
    ’கர்த்தரை, கர்த்தரை நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே
    தரிசிப்பதில்லை;
    இனி பூலோகக் குடிகளோடே இருந்து மனுஷரை நான்
    காண்பதில்லை.
    என் ஆயுசு மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல
    என்னைவிட்டுப் பெயர்ந்து போகிறது; ‘
    ’நெய்கிறவன் பாவை அறுக்கிறது போல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்;
    என்னைப்பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; ‘
    இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர்.
    விடியற்காலமட்டும் நான் எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன்;
    அவர் சிங்கம் போல என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்;
    ’இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர் என்று சொல்லி, நமுட்டைப்போலும்,
    தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன்,
    புறாவைப் போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின
    கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்,
    என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும்
    என்றேன்.
    நான் என்ன சொல்லுவேன் ?
    அவர் எனக்கு வாக்கு அருளினார்;
    அந்தப் பிரகாரமே செய்தார்;
    என் ஆயுசின் வருஷங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை
    நினைத்து
    நடந்துகொள்வேன்.
    ஆண்டவரே,
    இவைகளினால் மனுஷர் பிழைக்கிறார்கள்,
    இவைகளெல்லாம் என் உயிர்க்கு உயிராயிருக்கிறது;
    என்னைச் சொஸ்தப்படவும் பிழைக்கவும் பண்ணினீர்.
    ’இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது;
    தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்;
    என் பாவங்களை யெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.
    பாதாளம் உம்மைத் துதியாது,
    மரணம் உம்மைப் போற்றது;
    குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தைத் தியானிப்பதில்லை. ‘
    நான் இன்று செய்கிறதுபோல,
    உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே,
    உம்மைத் துதிப்பான்,
    தகப்பன் பிள்ளைகளுக்கு
    உமது சத்தியத்தைத் தெரிவிப்பான். ‘
    கர்த்தர் என்னை இரட்சிக்கவந்தார்;
    ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம்
    கர்த்தருடைய ஆலயத்தில்
    என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம்.’
    தீஇவ 343.1

    ஏசாயா 38:10-20.

    இதெக்கேல் மற்றும் ஐப்பிராத்தின் பள்ளத்தாக்குகளில் பழமை வாய்ந்த ஓர் இனத்தினர் வசித்து வந்தனர். அச்சமயத்தில் அவர் கள் அசீரியருக்குக் கீழ்ப்பட்டிருந்தபோதிலும், உலகை ஆட்சி செய்ய அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஞானவான்கள் வானசாஸ்திரத்தைக் கற்பதில் மிகுந்த கவனம் செலுத்தினர். சூரிய கடிகாரத்தின் சாயை பத்துப்பாகை பின்னிட்டதை அவர்கள் கண்ட போது, மிகுந்த திகைப்படைந்தனர். யூதாவின் ராஜா கேட்டுக் கொண்டபடி, ஓர் அடையாளமாக அந்த அற்புதம் நடைபெற்ற தென் பதையும், அவருக்குப் பரலோகத்தின் தேவன் புதிதாக வாழ்நாட் களை அருளியிருக்கிறார் என்பதையும் அவர்களின் ராஜாவாகிய மெரோதாக் பலாதான் அறிந்தபோது, வியாதியிலிருந்து குணமான எசேக்கியாவுக்கு வாழ்த்துதல் தெரிவிக்கவும், கூடுமானால், அந்த மகத்தான அற்புதத்தைச் செய்ய திராணியுள்ள தேவனைப்பற்றி அதிகம் அறியவும் அவனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பினான்.தீஇவ 344.1

    தூரதேசத்து மன்னனிடமிருந்து வந்த அந்தத் தூதுவர்களின் சந்திப்பால், ஜீவனுள்ள தேவனை மகிமைப்படுத்த எசேக்கியா வுக்கு ஒரு தருணம் கிடைத்தது. சகல சிருஷ்டிகளையும் தாங்கி நடத்துகிறவரும், நம்பிக்கையாவும் மறைந்த நிலையில் தன் ஜீவ னைக் காப்பாற்ற தயவு காட்டின் வருமான தேவனைக் குறித்து எத் தனை எளிதாக அவர்களிடம் அவன் சொல்லியிருக்கலாம்! கல்தே யாவின் சமவெளிகளிலிருந்து சத்தியத்தைத் தேடிவந்த அவர்கள், ஜீவனுள்ள தேவனின் ஒப்புயர்வற்ற ஆளுகையைக் காண வழி நடத்தப்பட்டிருந்தால், அக்கணத்தில் எத்தகைய ஒரு மாற்றம் நடை பெற்றிருக்கும்!தீஇவ 344.2

    ஆனால், எசேக்கியாவின் உள்ளத்திலோ பெருமையும் மாயை யும் குடிகொண்டிருந்தது. எத்தகைய பொக்கிஷங்களால் தேவன் தம் மக்களைச் செல்வந்தராக்கியிருந்தாரோ, அவற்றை அந்த மனிதரின் கண்கள் இச்சிக்கும்படி, தன் சுயமேன்மையால் விளம் பரப்படுத்தினான். தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமள தைலத்தை யும், தன் ஆயுதசாலை அனைத்தையும், தன் பொக்கிஷசாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான்; எசேக் கியா தன் அரமனையிலும், தன் ராஜ்யத்தில் எங்கும் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை. ஏசா 39:2. தேவனை மகி மைப்படுத்துவதற்காக அல்ல, அயல் நாட்டுப் பிரபுக்களின் கண் களில் தன்னை உயர்த்திக்காட்டவே அவன் அப்படிச் செய்தான். ‘அந்த மனிதர் தங்கள் இருதயங்களில் தேவபயமோ தேவ அன்போ கொண்டிராத வல்லமையான ஒரு தேசத்தின் பிரதிநிகள்’ என்பதை யும் நாட்டின் பொக்கிஷங்கள் சம்பந்தமாக அவர்களை நம்பகமான வர்களாகக் கருதுவது விவேகமற்றது என்பதையும் அவன் சற்று நிதானிக்கவில்லை.தீஇவ 344.3

    எசேக்கியாவின் நன்றியறிதலுக்கும் பக்திக்கும் ஒரு சோத னையாக ஸ்தானாபதிகளின் சந்திப்பு அமைந்தது. ‘ஆகிலும் பாபி லோன் பிரபுக்களின் ஸ்தானாபதிகள் தேசத்திலே நடந்த அற்புதத் தைக் கேட்க அவனிடத்துக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனைச் சோதிக்கிறதற்காக தேவன் அவனைக் கைவிட்டார்’ என்று வேதாக மம் சொல்கிறது. 2 நாளா 32:31. இஸ்ரவேலின் தேவனுடைய வல்ல மையையும் தயவையும் மனவுருக்கத்தையும் குறித்துச் சாட்சிகர தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை எசேக்கியா பயன்படுத்தி யிருந்தால், அந்த ஸ்தானாபதிகள் அதனைத் தங்கள் தேசத்தில் அறிக்கையிட்டபோது, அது இருளை ஊடுருவும் வெளிச்சமாக அமைந்திருக்கும். ஆனால் சேனைகளின் தேவனுக்கு மேலாக அவன் தன்னை உயர்த்தினான். அவன் தனக்குச் செய்யப்பட்ட உபகாரத் திற்குத்தக்கதாய் நடவாமல் மனமேட்டிமையானான்’. வச. 25.தீஇவ 346.1

    அதனால் எத்தனை ஒரு மோசமான விளைவு ஏற்பட இருந் தது! தாங்கள் கண்ட ஐசுவரியங்கள் பற்றிய அறிக்கையோடு ஸ்தா னாபதிகள் திரும்பிச் செல்வது பற்றியும், பாபிலோன் மன்னனும் அவனுடைய ஆலோசகரும் எருசலேமின் பொக்கிஷங்களால் தங் கள் நாட்டை வளப்படுத்த திட்டமிடவிருந்தது பற்றியும் ஏசாயா வுக்கு வெளிப்படுத்தப்பட்டது. எசேக்கியா பெரும் பாவம் செய்து விட்டான். ‘ஆகையால் அவன்மேலும், யூதாவின் மேலும், எருச லேமின்மேலும் கடுங்கோபமூண்டது’. வச. 25.தீஇவ 346.2

    ’அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத் தில் வந்து, ‘’அந்த மனுஷர் என்ன சொன்னார்கள்? எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள்?’‘ என்று கேட்டான். அதற்கு எசேக்கியா, ‘’பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து என்னிடத்திற்கு வந்தார் கள்” என்றான். அப்பொழுது அவன், ‘’உம்முடைய வீட்டில் என் னத்தைப் பார்த்தார்கள்?’‘ என்று கேட்டான். அதற்கு எசேக்கியா, ‘’என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கி ஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை ” என்றான்’.தீஇவ 346.3

    ’அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி, ‘சேனை களுடைய கர்த்தரின் வார்த்தையைக் கேளும். இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உன் வீட்டில் உள்ளதிலும், உன் பிதாக்கள் இந் நாள் வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாய் வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டு போகப்படும். நீ பெறப்போ கிற உன் சந்ததியாகிய உன் குமாரரிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்’‘ என்றான்.தீஇவ 347.1

    அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி, ‘’நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட் களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே ” என்றான். ஏசா 39:3-8.தீஇவ 347.2

    செய்த தவற்றுக்காக மனவருத்தம் கொண்டு, தன், ‘மனமேட்டி மையினிமித்தம் அவனும் எருசலேமின் குடிகளும் தங்களைத் தாழ்த் தினபடியால், கர்த்தருடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட் களிலே அவர்கள்மேல் வரவில்லை . ‘2நாளா 32:26. ஆனால் தீமையின் விதை விதைக்கப்பட்டிருந்தது. ஏற்றக்காலத்தில் அது வளர்ந்து, தவிப்பையும் பாழ்க்கடிப்பையும் கொடுக்கும் அறுவடை யைத் தர இருந்தது. கடந்த காலத்தவற்றைச் சரிசெய்து, தான் தேவ னுடைய நாமத்திற்குக் கனத்தை ஏறெடுக்க அவன் உறுதியான நோக்கம் கொண்டிருந்ததால் யூதாவினுடைய ராஜாவின் மீதமான நாட்களில் அதிக வளம் கொழிக்க இருந்தது; இருந்தாலும் அவ னுடைய விசுவாசம் கடுமையாகச் சோதிக்கப்படவேண்டியதாயிற்று. மேலும், யேகோவாவினிடத்தில் முற்றிலும் நம்பிக்கை வைப்ப தால் மாத்திரமே தன்னையும் தன் மக்களையும் முற்றிலும் அழித்துப் போடச் சதியாலோசனை செய்யும் அந்தகாரச் சக்திகளை ஜெயங் கொள்வதற்கான நம்பிக்கையைப் பெறமுடியும் என்பதையும் அவன் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.தீஇவ 347.3

    ஸ்தானாபதிகளின் சந்திப்பின்போது தன்னுடைய கடமையில் தவறிய எசேக்கியாவின் வரலாற்றில் நம் அனைவருக்கும் முக்கிய மான பாடம் உள்ளது. நம்முடைய அனுபவத்தின் மகத்தான அத்தி யாயங்கள் குறித்தும் தேவனுடைய இரக்கம் மற்றும் கருணை குறித் தும் இரட்சகரின் ஈடு இணையற்ற அன்பின் ஆழம் குறித்தும் இப் போது நாம் பேசுவதைக் காட்டிலும் அதிகமாகப் பேசவேண்டியவர் களாயிருக்கிறோம். மனதிலும் இருதயத்திலும் தேவ அன்பு நிறைந் திருக்கும்போது, ஆவிக்குரிய வாழ்வின் காரியங்களைப் பிறருக்கு அறிவிப்பது கடினமாயிராது. மேன்மையான எண்ணங்களும், உயர் வான ஆசைகளும் சுயநலமற்ற நோக்கங்களும் சத்தியம் குறித்த நுணுக்கமான அறிவும், பரிசுத்தத்தையும் பக்தியையும் ஏக்கத்தோடு நாடுதலும் இருதயப் பொக்கிஷத்தின் தன்மையை வெளிப்படுத்தும் வார்த்தைகளாக வெளிப்படும்.தீஇவ 347.4

    நாம் தினமும் யாரோடெல்லாம் சகவாசம் கொள்கிறோமோ அவர்களுக்கு நம் உதவியும் வழிநடத்துதலும் தேவையாயிருக்கின் றன. ஏற்றகாலத்தில் பேசப்பட்ட ஒரு வார்த்தை பசுமரத்தாணி போல் விளங்கத்தக்க ஒரு மனநிலையில் அவர்கள் இருக்கக்கூடும். நாளைய தினத்திற்குத் தள்ளிப்போட்டால் அவர்களை நாம் காணக் கூடாத இடத்திற்கு அந்த ஆத்துமாக்கள் செல்லக்கூடும். நம் சக பிரயாணிகளிடம் நாம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி வரு கிறோம்?தீஇவ 348.1

    ஒவ்வொரு நாளும் நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உண்டு. ஒவ்வொரு நாளும் நம் வார்த்தைகளும் செயல்களும் நம்மோடு சகவாசம் கொள்கிறவர்கள்மேல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. நாம் நம் நடைகளைப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்வதும் நம் உதடுகளின் மேல் கவனம் கொள்வதும் எத்தனை அவசியமாயிருக் கிறது! ஒரு கண் அலட்சியமோ, விவேகமற்ற ஒரு செயலோ, சில பாவதூண்டல்களின் பேரலைகளோ ஓர் ஆத்துமாவைக் கீழ் நோக் கிய பாதையில் இழுத்துச் செல்லலாம். மனித உள்ளங்களில் நாம் விதைத்த எண்ணங்களை நம்மால் உய்த்தறிய முடியாது. அவை தீமையானவைகளாக இருக்குமானால், நம்முடைய சக்தியால் தடுத்து நிறுத்த முடியாத தொடர்ச்சியான சூழ்நிலைகளையும் தீமையின் அலைகளையும் நாம் உருவாக்கிவிடக்கூடும்.தீஇவ 348.2

    மாறாக, நம்முடைய முன்மாதிரியால் மற்றவர்கள் சிறந்த நியதி களை வளர்த்துக்கொள்ள உதவுவோமானால், நன்மை செய்வதற் கான வல்லமையை நாம் அவர்களுக்கு வழங்குகிறோம். அவர்கள் பங்கிற்கு அவர்களும் அதே நன்மையான செல்வாக்கைப் பிறரிடத் தில் ஏற்படுத்துவார்கள். இப்படியாக நம்மையறியாமல் நாம் ஏற் படுத்தும் செல்வாக்கால், நூற்றுக்கணக்கானோரும் ஆயிரக்கணக்கா னோரும் பயனடைவார்கள். கிறிஸ்துவின் மெய் விசுவாசி ஒரு வன்தான்யாரோடெல்லாம் பழகுகிறானோ அவர்கள் அனைவரின் நல் நோக்கங்களையும் பெலப்படுத்துகிறான் அவிசுவாசமும், பாவ ஆசையும் கொண்ட உலகிற்கு முன்பாக தேவ கிருபையின் வல்ல மையை வெளிப்படுத்துகிறான்.தீஇவ 348.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents