Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    36 - யூதேயாவின் கடைசி அரசன்

    தன் ஆளுகையின் ஆரம்பத்தில், பாபிலோன் மன்னனுடைய நம்பிக்கைக்கு முற்றிலும் பாத்திரவானாயிருந்தான் சிதேக்கியா; சமயத்திற்கேற்ற ஆலோசனை சொல்லும் எரேமியாவைத் தனக்கு ஆலோசகனாகப் பெற்றிருந்தான். பாபிலோனியரிடம் ஒரு செம் மையான போக்கைக் கடைப்பிடித்து, எரேமியா மூலம் கொடுக்கப் பட்ட தேவ செய்திக்குச் செவிகொடுப்பதன் மூலம் உயரதிகாரத்தில் இருந்த அநேகரின் மரியாதைக்கு அவன் ஆளாகியிருக்கலாம்; மெய்யான தேவனைப்பற்றிய அறிவை அவர்களுக்குப் போதிக்க ஒரு தருணத்தைப் பெற்றிருக்கலாம். ஏற்கனவே நாடு கடத்தப்பட்டு பாபிலோனில் இருந்தவர்கள் அதன் மூலம் ஒரு சாதகமான சூழ் நிலையில் வைக்கப் பட்டிருப்பார்கள்; அநேக உரிமைகளையும் பெற்றிருந்திருப்பார்கள்; தேவனுடைய நாமம் எங்கும் கனம் பெற்றி ருந்திருக்கும்; யூதா தேசத்தில் எஞ்சியிருந்தவர்கள் தங்களுக்கு இறுதியாக நேரிடவிருந்த மோசமான அழிவுகளிலிருந்து தப்பி யிருப்பார்கள்.தீஇவ 440.1

    தங்களைச் சிறைப்பிடித்துச் சென்றவர்களின் தற்காலிக ஆட்சிக்கு அடிபணிந்து போகும்படி, பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களிடமும் சிதேக்கியாவிடமும் யூதா மக்கள் அனைவரிடமும் வேண்டிக்கொண்டான் எரேமியா. சிறைப்பிடித்துச் செல் லப்பட்டவர்கள் தாங்கள் இருந்த இடத்தில் சமாதானத்தை நாடவேண்டியது மிகமுக்கியமானதாயிருந்தது. ஆனாலும், மனித இருதயத்தின் சுபாவத்திற்கு இது முற்றிலும் முரணானது; இந்தச் சூழ்நிலைகளைச் சாதகமாக்கிக்கொண்ட சாத்தான், எருசலேமிலும் பாபிலோனிலும் மக்கள் மத்தியில் கள்ளத்தீர்க்கதரிசிகளை எழும்பச் செய்தான். ‘அடிமைத்தனம் எனும் நுகம் சீக்கிரத்தில் உடைக்கப்படும்’ என்றும், ‘தேசத்தின் முந்தைய மகிமை மீண்டும் மலரும்’ என்றும் அவர்கள் அறிவித்தார்கள்.தீஇவ 441.1

    சிறைப்பட்டுச் சென்றிருந்தவர்களும் ராஜாவும் அத்தகைய வஞ்சகமான தீர்க்கதரிசனங்களுக்கு செவிகொடுத்தால், அவர்கள் மோசமான தீர்மானங்களை எடுப்பதற்கும், தங்களுக்கான தேவ னுடைய இரக்கமான திட்டங்களை அவமாக்குவதற்கும் வாய்ப்பு இருந்தது. தீவிரவாதம் தலைதூக்கி, உபத்திரவம் ஏற்படாமல் இருக்கும்படி, அக்கலகத்தால் ஏற்படவிருந்த நிச்சயம் விளைவுபற்றி யூதாவின் ராஜாவுக்கு எச்சரிப்பு கொடுத்து, அந்தப் பிரச்சனையைக் காலதாமதமின்றி அணுக எரேமியாவுக்குக் கட்டளையிட்டார் தேவன். சிறைப் பட்டுப்போனவர்கள் தாங்கள் சீக்கிரத்தில் விடுதலையாகப் போவதாக நம்பி மோசம் போகாதபடி, எழுத்துகள் மூலமும் அறிவுறுத்தப்பட்டது. ஊழியர்களால் முன்னுரைக்கப் பட்டபடி, எழுபதுவருட காலச் சிறையிருப்பின் முடிவில் இஸ்ர வேலை மீண்டும் நிலைநிறுத்த தேவன் வைத்திருந்த நோக்கம் பற்றிச் சுட்டிக்காட்டப்பட்டது.தீஇவ 441.2

    இஸ்ரவேலுக்கான தம்திட்டங்கள் குறித்து, சிறைப்பட்டுப்போன வர்களிடம் எத்தனை மன உருக்கத்தோடு தேவன் அறிவித்தார்! சீக்கிரத்தில் விடுதலை கிடைக்குமென எதிர்பார்க்கும்படி கள்ளத் தீர்க்கதரிசிகளால் அவர்கள் தூண்டப்படுவார்களானால், பாபிலோ னில் அவர்களுடைய நிலை மிகவும் மோசமாகிவிடும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அவர்கள் ஏதாவது கிளர்ச்சியை ஏற்படுத்தி னாலோ நடவடிக்கையில் இறங்கினாலோ, அதற்கான கல்தேய அதிகாரிகள் எச்சரிப்படைந்து, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சிறைப்பட்டவர்களின் உரிமைகளைப் பறிக்க வும் வாய்ப்பு இருந்தது. அது உபத்திரவத்தையும் அழிவையுமே கொண்டுவரும். அவர்கள் தங்கள் நிலையை அமைதியோடு ஏற்றுக்கொண்டு, அந்த அடிமைத்தனத்திலும் சந்தோஷமாயிருக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதே அவருடைய வேண்டுகோளா யிருந்தது. ‘நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள். நான் உங்களைச் சிறைப்பட்டுப் போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம் பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்’ என்பதே அவர்களுக்கு அவர் கொடுத்த ஆலோசனையாகும். வச.5-7.தீஇவ 441.3

    பாபிலோனிலிருந்த கள்ளப்போதகர்களில் இருவர் தங் களைப் பரிசுத்தவான்கள் என்று சொல்லிக்கொண்டனர். ஆனால், அவர்களுடைய வாழ்வோ சீர்கெட்டிருந்தது. அந்த மனிதர்களின் தவறான போக்கையும் அவர்களின் தீங்கையும் குறித்துக் கண்டித்து, அவர்களை எச்சரித்தான் எரேமியா. தாங்கள் கடிந்துகொள்ளப்பட்ட தால் அவர்கள் கோபங்கொண்டு, மெய்த்தீர்க்கதரிசியின் பணிக்குத் தடையாயிருந்தார்கள். அதாவது, பாபிலோன் ராஜாவுக்கு மக்கள் தங்களைக் கீழ்ப்படுத்த வேண்டிய காரியத்தில், அதற்கு மாறாகச் செயல்படவைக்கவும், அவருடைய வார்த்தைகளை அவமதிக் கவும் மக்களைத் தூண்டி விட்டார்கள். அந்தக் கள்ளத்தீர்க்கதரிசி கள் நேபுகாத்நேச்சாரின் கரங்களில் ஒப்பு கொடுக்கப்படுவார்கள்’ என்றும், ‘எரேமியாவின் கண்களுக்கு முன்பாகக் கொல்லப்படுவார் கள்’ என்றும் அவன் மூலமாக தேவன் அறிவித்தார். அதன்பிறகு சில நாட்களிலேயே, அது நிறைவேறியது.தீஇவ 442.1

    மெய்த்தேவனுடைய பிரதிநிதிகளாக விளங்குகிறவர்கள் மத் தியில் குழப்பத்தையும் கலகத்தையும் உண்டுபண்ணும் மனிதர்கள் முடிவு காலம் மட்டும் எழுந்து கொண்டேதான் இருப்பார்கள். பாவத்தை லேசான காரியமாக எடுத்துக்கொள்ளும்படி பொய்த்தீர்க்க தரிசனம் கூறுகிறவர்கள் மக்களை ஊக்கப்படுத்துவார்கள். அவர் களுடைய பாவச் செய்கைகளின் மோசமான விளைவுகள் வெளிப் படும்போது, தங்களுடைய பிரச்சனைகளுக்குக் காரணராக, தங் களை உண்மையோடு எச்சரித்தவர்களைச் சுட்டிக்காட்ட முயல்வார் கள். அப்படியே, தங்கள் தீய நிகழ்வுகளுக்கெல்லாம் காரணராக எரேமியாவைத்தான் யூதர்கள் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால், முற் காலத்தில் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் சொல்லப்பட்ட யேகோ வாவின் வார்த்தைகள் நிறைவேறினது எவ்வளவு நிச்சயமோ, அதே போல இக்காலத்திலும் அவருடைய வார்த்தைகள் நிறைவேறுவது அவ்வளவு நிச்சயம்.தீஇவ 442.2

    பாபிலோனியருக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறு ஆரம்பம் முதலே தொடர்ந்து வலியுறுத்தி வந்தான் எரேமியா. யூதாவுக்கு மாத்திரமல்ல, சுற்றிலுமிருந்த அநேக தேசத்தாருக்கும் இந்த ஆலோசனை கொடுக்கப்பட்டது. ‘பாபிலோன் ராஜாவுக்கு எதிராக ஒன்றுசேர்ந்து கலகம் செய்ய அது ஏற்ற சமயம்தானா?’ என்றும், ‘அதற்கு எதிராக யுத்தம் செய்ய அவர்கள் தங்களோடு கூட்டுசேர்வார் களா?’ என்றும் சிதேக்கியாவிடம் விசாரிக்க, அவருடைய ஆளு கையின் ஆரம்பத்தில் ஏதோம், மோவாப், தீருபோன்ற நாடுகளின் அரசர்களிடமிருந்து தூதுவர்கள் வந்தார்கள். அந்தத் தூதுவர்கள் அவனுடைய பதிலுக்காகக் காத்திருந்த சமயத்தில், கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, ‘நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும் உண்டு பண்ணி, அவைகளை உன் கழுத்திலே பூட்டிக்கொண்டு, அவைகளை எருசலேமுக்குச் சிதைக்கியா ராஜாவினிடத்தில் வரும் ஸ்தானாபதிகள் கையிலே ஏதோமின் ராஜாவுக்கும், மோவாபின் ராஜாவுக்கும், அம்மோன் புத்திரரின் ராஜாவுக்கும், தீருவின் ராஜாவுக்கும், சீதோனின் ராஜாவுக்கும் அனுப்பு’ என்று சொல்லப்பட்டது. எரே 27:2,3தீஇவ 443.1

    பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் ‘நாட்டுக் கென்று குறிக்கப்பட்ட காலம் வரும் வரை, அவனுக்கும் அவனு டைய மகனுக்கும் பேரனுக்கும் பணிவிடை செய்யும்படி’ இஸ்ர வேலர் அனைவரையும் நேபுகாத்நேச்சாரின் கரத்திலே தேவன் ஒப்புக்கொடுத்ததை அந்தத் தூதுவர்கள் மூலம் அவர்களுடைய அரசர்களுக்குச் சொல்லியனுப்புமாறு எரேமியாவுக்குக் கட்டளை யிடப்பட்டது. வச்ச 7.தீஇவ 443.2

    மேலும், பாபிலோனின் மன்னனைச் சேவிக்க அவர்கள் மறுப் பார்களானால், அவர்கள் நிர்மூலமாகுமட்டும், ‘பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார் களென்றும் அந்தத் தூதுவர்களிடம் சொல்லப்பட்டது. இதற்கு மாறாகப் போதிக்கக்கூடிய கள்ளத்தீர்க்கதரிசிகளின் போதகங் களைவிட்டு அவர்கள் விசேஷமாக விலகவேண்டியிருந்தது. ‘’பாபிலோன் ராஜாவை நீங்கள் சேவிப்பதில்லையென்று உங்களுக் குச் சொல்லுகிற உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், உங்கள் குறிகாரருக் கும், உங்கள் சொப்பனக்காரருக்கும், உங்கள் நாட்பார்க்கிறவர் களுக்கும் உங்கள் சூனியக்காரருக்கும் நீங்கள் செவிகொடாதிருங் கள். நான் உங்களை உங்கள் தேசத்திலிருந்து தூரப்படுத்துகிறதற் கும், உங்களைத் துரத்தி விடுகிறதற்கும், நீங்கள் அழிகிறதற்குமாக அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார் கள். ஆனாலும் எந்த ஜாதி தன் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தி, அவனைச் சேவிக்குமோ, அந்த ஜாதி யைத் தன் தேசத்தைப் பயிரிட்டு, அதிலே குடியிருந்து தாபரிக்கப் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’‘ என்றான் எரேமியா. எரே 27:8-11. பாபிலோனின் ஆட்சிக்கு அடிபணிவதுதான், அதிக கலக்காரரான அம்மக்களுக்கு இரக்கமுள்ள தேவன் கொடுத்த லேசான தண்டனையாயிருந்தது. ஆனால், அடிமைத்தனத்தின் அத்தகைய கட்டளைக்கு எதிராக அவர்கள் கலகம் செய்வார்களா னால், அவருடைய சிட்சையின் முழு அளவையும் அவர்கள் அனுபவிக்கவேண்டியிருந்தது.தீஇவ 443.3

    அடிமைத்தனம் எனும் நுகத்தைத் தன் கழுத்திலே சுமந்து, தேவனுடைய சித்தத்தை எரேமியா அவர்களுக்கு வெளிப்படுத் தியபோது, அங்குக் கூடியிருந்த மற்ற தேசத்துத் தூதுவர்களின் மத்தியில் ஏற்பட்ட ஆச்சரியத்திற்கு அளவேயில்லை. நிலையான எதிர்ப்புக்கு மத்தியிலும், கீழ்ப்படிதல் எனும் தன் கொள்கையில் உறுதியாக நின்றான் எரேமியா. தேவனுடைய ஆலோசனையை மறுத்துப் பேச துணிவு கொண்டவர்களில், அனனியா என்பவன் முக்கியமானவன். எச்சரிக்கப்பட்ட கள்ளத் தீர்க்கதரிசிகளில் அவனும் ஒருவன். இராஜாவிடமும் அரசவை யிலும் தயவுபெற விரும்பின் அவன் எரேமியாவுக்கு எதிராகக் குரலெழுப்பி, யூதருக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைத் தேவன் தனக்குத் தந்ததாகக் கூறினான். ‘ இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், பாபிலோன் ராஜாவின் நுகத்தை முறித்தேன். பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத் நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்துப் பாபிலோனுக்குக் கொண்டு போன கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளை எல்லாம் நான் இரண்டு வருஷ காலத்திலே இவ்விடத்துக்குத் திரும்பக் கொண்டு வரப்பண்ணுவேன். யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவுடைய ராஜாவையும் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதர் அனைவரையும் நான் இவ்விடத்துக்குத் திரும்ப வரப்பண்ணுவேன்; பாபிலோன் ராஜாவின் நுகத்தை உடைப்பேன் என்றார்’ என்று சொன்னான். எரேமியா 28:2-4.தீஇவ 444.1

    ஆசாரியர்கள் மற்றும் ஜனங்களின் சமுகத்தில் நின்றிருந்த எரேமியா, தேவன் குறித்திருக்கிற காலம் மட்டும் பாபிலோன் ராஜா வுக்குக் கீழ்ப்படிந்திருக்குமாறு அவர்களை வேண்டிக்கொண்டான். தன்னைப் போலவே எச்சரிப்பும் கடிந்துகொள்ளுதலுமான செய்தி களை அறிவித்திருந்த ஓசியா, ஆபகூக், செப்பனியாபோன்றோரின் தீர்க்கதரிசனங்களை யூதாவின் மனிதருக்கு அவன் சுட்டிக்காட்டி னான். பாவத்திலிருந்து மனந்திரும்பாததின் விளைவாக ஏற்படும் தண்டனை குறித்துச் சொல்லப்பட்டிருந்த தீர்க்கதரிசனங்கள் நிறை வேறும் விதத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் அவர்களிடம் கூறினான். முற்காலத்தில், தேவனுடைய தூதுவர்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் மிகச் சரி யாக நிறைவேறின.தீஇவ 445.1

    முடிவாக, ‘’சமாதானம் வரும் என்று தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் சொல்லி இருக்க, அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால், அப்பொழுது அவன் கர்த்தர் மெய்யாய் அனுப்பின தீர்க்க தரிசியாக விளங்குவான்” என்று கூறினான் எரேமியா. வச9. அதற்கு மாறாகச் செயல்பட இஸ்ரவேலர் தீர்மானித்தால், யார் மெய்த்தீர்க்க தரிசி என்பதை எதிர்காலக் காரியங்கள் தெளிவாக வெளிப்படுத்த இருந்தன.தீஇவ 445.2

    கல்தேயருக்குக் கீழ்ப்படியுமாறு எரேமியா கூறின ஆலோ சனைச் செய்தியின் நம்பகத்தன்மைக்குச் சவால்விடத் துணிந்தான் அனனியா. அடையாளச் சின்னமாக எரேமியாவின் கழுத்தில் கிடந் தங்கத்தை எடுத்து, ஒடித்த அனனியா, இந்தப் பிரகாரமாக இரண்டு வருஷ காலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சா ருடைய நுகத்தைச் சகல ஜாதிகளின் கழுத்திலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’‘ என்றான்.தீஇவ 446.1

    ’அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியே போனான்’. வச 11. அந்தப் பிரச்சனையிலிருந்து விலகிச் செல்வதைக் காட்டி லும், அவரால் வேறெதையும் செய்யமுடியவில்லை . ஆனால், எரேமியாவுக்கு வேறொரு செய்தி கொடுக்கப்பட்டது. ‘நீ போய், அனனியாவை நோக்கி, ‘’நீ மரநுகத்தை உடைத்தாய்; அதற்குப் பதிலாக இருப்பு நுகத்தை உண்டு பண்ணு” என்று கர்த்தர் சொன் னார். பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சரைச் சேவிக்கும்படிக்கு இருப்பு நுகத்தை இந்த எல்லா ஜாதிகளுடைய கழுத்தின் மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள் என்று இஸ்ரவே லின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்’‘ என்றார்.தீஇவ 446.2

    ’பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி, ‘’இப்போதும் அன்னியாவே கேள்; கர்த்தர் உன்னை அனுப் பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய் தாய். ஆகையால், இதோ, உன்னைப் பூமியின் மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டா கப் பேசி னாயே’‘ என்றான். அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ் வருஷத்திலேயேதானே ஏழாம் மாதத்தில் செத்துப்போனான். ‘வச னங்க ள் 13-17.தீஇவ 446.3

    எரேமியாவின் மேலும் அவனுடைய செய்தியிலும் மக்கள் அவநம்பிக்கைப் படுமாறு செய்தான் அந்தக் கள்ளத்தீர்க்கதரிசி. தன்னைத் தேவனுடைய ஊழியக்காரனென்று சொல்லிக் கொண்ட துன்மார்க்கத்தின் விளைவாக, அவன் மரித்தான். அன்னியாவின் மரணம் பற்றி ஐந்தாம் மாதத்தில் எரேமியா தீர்க்கதரிசனம் உரைத் தான் : ஏழாம் மாதத்தில் அது நிறைவேறியது. அவனுடைய வார்த்தைகள் மெய்யாய் நிறைவேறின.தீஇவ 446.4

    கள்ளத்தீர்க்கதரிசிகளின் கூற்றால் உண்டான அமளியானது, ‘சிதேக்கியா பாபிலோனியருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட் டான்’ என்று சந்தேகங்களை எழுப்பிவிட்டது. துரிதமாகவும் தெளிவாகவும் செயல்பட்டால் மாத்திரமே, ஓர் அடிமையாக அவன் தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட இருந்தான். சுற்றிலும் முள்ள தேசங்களுக்கு எருசலேமிருந்து தூதுவர்கள் சென்றிருந்தார் கள். அவர்கள் திரும்பிவந்த சில நாட்களில், ‘சாந்தகுணமுள்ள பிரபுவாகிய’ செராயாவோடு சேர்ந்து, யூதாவின் ராஜா ஒரு முக்கிய வேலையாக பாபிலோன் சென்றான். அப்போது, பாபிலோனியரின் சந்தேகத்தைப் போக்குவதற்கான வாய்ப்பாக அதனைப் பயன் படுத்திக் கொண்டான். எரே 51:59. கல்தேய அரசவையில் நிகழ்ந்த அந்தச் சந்திப்பின்போது, தான் விசுவாசத்தோடு நடந்து கொள் வதாக நேபுகாத்நேச்சாரிடம் மீண்டும் வாக்குக்கொடுத்தான் சிதேக்கியா.தீஇவ 447.1

    தானியேல் மற்றும் பிற எபிரெய சிறைக்கைதிகள் மூலம், மெய்த் தேவனின் சர்வ அதிகாரத்தையும் வல்லமையையும் பாபிலோனின் மன்னர்கள் நன்கு அறிந்திருந்தனர்; எனவே, தான் உண்மையோ டிருப்பதாக சிதேக்கியா மீண்டும் ஒருமுறை வாக்களித்ததும், இஸ்ர வேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் வாக்களிக்குமாறு நேபுகாத்நேச்சார் அவனைக் கேட்டுக்கொண்டான். மறுபடியுமாக தான் கொடுத்த வாக்குறுதியைச் சிதைக்கியாமதித்து நடந்திருப்பானா னால், அவன் தன் வார்த்தையைக் காப்பாற்றியிருப்பானானால், எபிரெயரின் தேவனைக்கனப்படுத்துவதாகவும் அவருடைய நாமத் தில் பய பக்தி கொள்வதாகவும் சொல்லிக்கொண்டோரின் நடத்தை யைக் கவனித்து வந்த அநேகரின் உள்ளங்களில் பலத்ததாக்கத்தை அது ஏற்படுத்தியிருக்கும்.தீஇவ 447.2

    ஆனால், ஜீவனுள்ள தேவனுடைய நாமத்திற்குக் கனத்தைக் கொண்டுவர தனக்கிருந்த மேலான சிலாக்கியத்தையூதாவின் ராஜா மறந்தான். ‘தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பா னதைச் செய்தான்; அவன் கர்த்தருடைய வாக்கை உரைத்த எரே மியா என்கிற தீர்க்கதரிசிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை. தேவன்மேல் தன்னை ஆணையிடுவித்துக் கொண்ட நேபுகாத்நேச் சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, இஸ்ரவே லின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பாதபடிக்கு, தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்’ என்று சிதேக்கியா பற்றி எழுதப்பட்டுள்ளது. 2நாளா 36:12, 13.தீஇவ 447.3

    யூதா தேசத்தில் தன் சாட்சியை எரேமியா தொடர்ந்து சொல்லி வருகையில், பாபிலோனில் சிறைப்பட்டிருந்தவர்களை எச்சரித்துத் தேற்றவும், எரேமியாவால் சொல்லப் பட்ட கர்த்தருடைய வார்த் தையை உறுதிப்படுத்தவும் அவர்கள் மத்தியில் எழுந்தான் எசேக்கி யேல் தீர்க்கதரிசி. சிறைப்பட்டிருந்தவர்கள் மனதில் அவர்கள் எருச லேமிற்குச் சீக்கிரத்தில் திரும்பிவிடலாமெனும் எதிர்ப்பார்ப்பை உண்டு பண்ணினவர்களின் பொய்யான கணிப்புகளை நம்புவதின் மூடத்தனத்தை சிதைக்கியாவின் நாட்களிளெல்லாம் எசேக்கியேல் தெளிவுபடுத்தினான். எருசலேம் முற்றுகையிடப்பட்டு, முற்றிலும் மாக அழிக்கப் பட இருந்ததைப் பல்வேறு அடையாளங்களாலும் செய்திகளாலும் முன்னுரைக்கும்படி தேவன் அவனுக்குக் கட்டளை யிட்டார்.தீஇவ 448.1

    எருசலேமிலும், தேவனுடைய ஆலயத்தின் உள்வாசலிலும், உட்பிரகாரத்திலும் செய்யப்பட்டுவந்த அருவருப்புகள் சிலவற்றை சிதேக்கியாவினுடைய ஆளுகையின் ஆறாம் வருடத்தில் ஒருதரிச னத்தின் மூலம் எசேக்கியேலுக்கு வெளிப்படுத்தினார் தேவன். திகைத்து நின்ற எசேக்கியேலுக்கு முன்பாக விக்கிரக அறைகள், வரையப்பட்ட சுரூபங்கள் சகலவித ஊரும் பிராணிகள் அருவருப் பான மிருகங்களின் சுரூபங்கள் இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்கள்’ என இவையாவும் வேகமாகக் காட் டப்பட்டு மறைந்தன. எசே.8:10.தீஇவ 448.2

    மக்கள் மத்தியில் ஆவிக்குரிய தலைவர்களாக இருக்கவேண் டிய இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில்’ எழுபது பேர், ஆலயப் பிராகாரத்தின் பரிசுத்த ஸ்தலத்திலிருந்த விநோத அறைகளில் தீட் டப்பட்டிருந்த விக்கிரகங்களின் சித்திரங்களுக்கு முன்பாகத் தூபங் காட்டுகிறவர்களாகக் காணப்பட்டார்கள். அஞ்ஞானப் பழக்கவழக் கங்களில் மூழ்கியிருந்த யூதாவின் மனிதர், ‘கர்த்தர் எங்களைப் பார்க் கிறதில்லை’ என்று தங்களை வஞ்சித்துக் கொண்டார்கள்; ‘கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்’ என்று தூஷணமாகப் பேசினார்கள். வச 11.12.தீஇவ 448.3

    இன்னும் அதிக அருவருப்புகளையும் ‘ தீர்க்கதரிசி அங்குக் காணவேண்டியிருந்தது. வெளிப்புறத்திலிருந்த ஒருவாசலிலிருந்து உட்பிராகாரம் வரையிலும் ‘தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்தீரிகளையும்’ ‘கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்தில் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத் தைந்து புருஷர், தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரிப்பதையும் அவன் கண் டான். வசனங்கள் 13-16.தீஇவ 448.4

    யூதா தேசத்தின் மேடான இடங்களில் நடைபெற்ற துன்மார்க் கம் குறித்த இந்த அதிர்ச்சியான தரிசனம் முழுவதிலும் எசேக்கியே லோடு இருந்த மகிமையானவர் இப்போது, ‘’மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப் புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள். ஆகையால் நானும் உக்கிரத்தோடே காரியத்தை நடத்துவேன்; என் கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை; அவர்கள் மகா சத்தமாய் என் செவிகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் செவிகொடுப்பதில்லை’‘ என்று தீர்க்கதரிசியிடம் சொன்னார். வசனங்க ள் 17, 18.தீஇவ 449.1

    கர்த்தருடைய நாமத்தைச் சொல்லி, ஜனங்களுக்கு முன்பாக நிற்கத் துணிவுகொண்ட துன்மார்க்கரைக்குறித்து, தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள்; என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன்’ என்று எரேமியா மூலம் ஆண்டவர் உரைத்திருந்தார். எரே 23:11. சிதேக்கியாவின் ஆட்சி யில், ஆலயம் பரிசுத்தலைச்சலாக்கப்பட்டதுதான் யூதாவின் கொடிய குற்றமென்று நாளாகமப் புத்தகத்தின் முடிவில் குற்றஞ்சாட் டப்பட்டுள்ளது. ‘ஆசாரியரில் பிரதானமானவர்கள் யாவரும் ஜனங் களும் கூடிப் புறஜாதிகளுடைய சகல அருவருப்பு களின்படியும் மிகவும் துரோகம் பண்ணி, கர்த்தர் எருசலேமிலே பரிசுத்தம்பண் ணின அவருடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்’ என்று பரிசுத்த எழுத்தாளர் எழுதுகிறார். 2நாளா 36:14.தீஇவ 449.2

    யூதா ராஜ்யம் அழிக்கப்படவிருந்த நாள் வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தது. தம்முடைய கடுமையான நியாயத்தீர்ப்புகளைத் தாமதிக்குமென்கிற எவ்வித நம்பிக்கையையும் அதன்பிறகு ஆண்ட வர் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. ‘’நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை” என்றே அவர் சொன்னார்.எரே 25:29.தீஇவ 449.3

    ஆனால், இந்த வார்த்தைகள் ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்குமே உள்ளாயின. மனந்திருந்தாதவர்களோ, ‘’நாட்கள் நீடிக்கும், தரி சனம் எல்லாம் அவமாகும்” என்றனர். தீர்க்கதரிசனத்தின் மெய் யான் இவ்வார்த்தையை அவர்கள் மறுதலித்ததை, எசேக்கியேல் மூலம் தேவன் கடுமையாகக் கண்டித்தார். ஆகையால் நீ அவர்களை நோக்கி, ‘’கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், அவர்கள் இனி இஸ்ரவேலிலே இந்த பழமொழியைச் சொல்லிவராத படிக்கு நான் அதை ஒழியப்பண்ணுவேன்; நாட்களும் எல்லா தரிசனத் தின் பொருளும் சமீபித்து வந்தன என்று அவர்களோடே சொல்லு. இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவில் இனிச் சகல கள்ளத் தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இராமற்போகும். நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே, நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்த ராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்” என்றார் ஆண்டவர்.தீஇவ 450.1

    “பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர், ‘மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார் இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேக நாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங் களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள். ஆகையால், என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்ப தில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்’ என்று அவர்களோடே சொல்” என்றதாகச் சாட்சியளித்தான் எசேக் கியேல். எசே 12:22-28.தீஇவ 450.2

    தேசத்தை வேகமாக அழிவுக்குள் வழிநடத்திச் சென்றதில், அவர்களுடைய ராஜாவாகிய சிதேக்கியாதான் முதன்மையானவ னாயிருந்தான். தீர்க்கதரிசிகள் மூலம் கொடுக்கப்பட்ட ஆலோச னைகளை முற்றிலும் உதறிவிட்டு, நேபுகாத்நேச்சாருக்கு தான் கட மைப்பட்டிருந்ததை மறந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரு டைய நாமத்தில் எடுத்துக்கொண்ட விசுவாசப் பிரமாணத்தையும் மீறி, தீர்க்கதரிசிகளுக்கு எதிராகவும் தன்னுடைய நலம் விரும்பி களுக்கு எதிராகவும் தன் தேவனுக்கு எதிராகவும் கலகம் செய்தான் யூதாவின் ராஜா. தன் சுயபுத்தியின் மதிகேட்டினால், இஸ்ரவேலின் வளர்ச்சிக்கு ஆதிகால முதல் சத்துருவாக இருப்பவர்களிடத்தில் அவன் உதவி கோரினான். அதாவது, ‘தனக்குக் குதிரைகளையும் அநேகம் ஆட்களையும் அனுப்ப வேண்டுமென்று தன் ஸ்தானாபதி களை எகிப்துக்கு அனுப்பினான்.’தீஇவ 450.3

    இப்படி, பரிசுத்தமான ஒவ்வொரு பொறுப்பையும் இழிவாக மறுதலித்தராஜாவைப்பற்றி, இப்படிப்பட்டவனுக்கு வாய்க்குமோ? இப்படிச் செய்கிறவன் தப்பித்துக்கொள்வானோ? உடன்படிக் கையை முறித்தவன் தப்பித்துக்கொள்வானோ? தன்னை ராஜாவாக ஏற்படுத்திய ராஜாவினுடைய ஆணையை அசட்டைபண்ணி, அவ னுடைய உடன்படிக்கையை முறித்துப்போட்டவன், அந்த ராஜா வினுடைய ஸ்தானமாகிய பாபிலோன் நடுவிலே அவனண்டையில் இருந்து மரணமடைவானென்று என் ஜீவனைக் கொண்டு சொல்லு கிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். பார்வோன் பெரிய சேனையோடும், திரளான கூட்டத்தோடும் வந்து இவனுக் காகயுத்தத்தில் உதவமாட்டான். இதோ, இவன் கையடித்துக் கொடுத் திருந்தும் உடன்படிக்கையை முறித்துப்போட்டு, ஆணையை அசட்டை பண்ணினான்; இப்படியெல்லாம் செய்தவன் தப்புவதில்லை” என் றார் ஆண்டவர். எசேக்கியேல் 17:15-18.தீஇவ 451.1

    ’அவபக்தியுள்ள துன்மார்க்க அதிபதி’ இறுதியாகக் கணக்கு ஒப்புவிக்கவேண்டிய நாள் வந்தது. ‘’பாகையைக் கழற்று, கிரீ டத்தை எடுத்துப்போடு” என்று ஆணையிட்டார் தேவன். கிறிஸ்து தாமே தம்முடைய ராஜ்யத்தை நிறுவும் வரையிலும், இனி யூதா வுக்கு ஒரு ராஜா உண்டாயிருப்பதில்லை. அதைக் கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன்; உரிமைக்காரனானவர் வருமட்டும் அது இல்லாதிருக்கும்; அவருக்கே அதைக் கொடுப்பேன்” என்பதே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனம் குறித்த தேவ கட்டளையா யிருந்தது. எசேக்கியேல் 21:25-27.தீஇவ 451.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents