Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    38 - இருளிலிருந்து வெளிச்சம்

    தேவ ஊழியர்களின் தீர்க்கதரிசன செய்திகளில் நம்பிக்கை யூட்டும் விஷயங்கள் இல்லாதிருந்திருக்குமானால், யூதா ராஜ்யத் தின் முடிவில் நிகழ்ந்த அழிவும் மரணமுமான அந்தகார வரு டங் களில், உறுதிமிக்க உள்ளம் கொண்டோர்கூட நிலைகுலைந்திருக் கக் கூடும். எருசலேமில் எரேமியா மூலமும், பாபிலோனிய அரச வையில் தானியேல் மூலமும் கேபார் நதியண்டையில் எசேக்கி யேல் மூலமும் தேவன் தம் நித்திய நோக்கத்தை வெளிப்படுத்த இரக்கங்கொண்டார்; மோசேயின் எழுத்துகளில் சொல்லப்பட்டி ருக்கும் வாக்குத்தத்தங்களை தாம் தெரிந்து கொண்ட ஜனங்களுக்கு நிறைவேற்றதாம் விரும்புவதின் நிச்சயத்தைக் கொடுத்தார். தமக்கு உண்மையோடு இருப்பவர்களுக்கு தாம் செய்வதாகச் சொல்வதை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார். அவருடைய வசனமோ ‘என் றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனம்.’ 1பேதுரு 1:23.தீஇவ 464.1

    தம் பிள்ளைகள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த நாட்களில் அவர்கள் தம் பிரமாணத்தை நினைவுகூரும்படி, எண்ணிலடங்கா ஏற்பாடுகளைச் செய்திருந்தார் தேவன். கானானில் குடியேறிய பிற கும், ஒவ்வொரு குடும்பத்தாரும் தேவனுடைய கட்டளைகளை அனுதினமும் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது; கதவு நிலைகளி லும் வாசல்களிலும் அவற்றைத் தெளிவாக எழுதிவைக்க வேண்டி யிருந்தது; தகடு , மரம், கல் முதலானவற்றில் அவற்றைச் செதுக்கி வைக்கவும் வேண்டியிருந்தது. அவற்றைப் பாடலாக இயற்றி, பெரியோரும் சிறியோரும் பாட வேண்டியிருந்தது. இந்தப் பரிசுத்த கட்டளைகளைப் பொது இடங்களில் ஆசாரியர்கள் போதிக்க வேண்டியிருந்தது; தேசத்தை ஆளுபவர்கள் அவற்றை அனுதின் மும் ஆராய வேண்டியிருந்தது. இதில் எழுதியிருக்கிறவைகளின் படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்’‘ என்று நியாயப்பிரமாணம் குறித்து யோசு வாவுக்குக் கட்டளையிட்டார் தேவன். யோசுவா 1:8.தீஇவ 464.2

    மோசேயின் எழுத்துகளை இஸ்ரவேலர் அனைவருக்கும் போதித்தான் யோசுவா. ‘மோசே கட்டளையிட்ட எல்லாவற்றிலும் யோசுவா, இஸ்ரவேலின் முழுச்சபைக்கும், ஸ்திரீகளுக்கும் பிள் ளைகளுக்கும், அவர்களுக்குள் நடமாடி சஞ்சரித்த அந்நியர்கள் ளுக்கும் முன்பாக, ஒரு வார்த்தையும் விடாமல் வாசித்தான்.’ யோசுவா 8:35. ஏழு வருடங்களுக்கு ஒருமுறை கூடாரப் பண்டி கையின்போது, நியாயப்பிரமாணப் புத்தகத்தின் வார்த்தைகளை பொதுமக்கள் கேட்க முற்றிலுமாக வாசிக்கவேண்டுமென்ற தேவ கட்டளைக்கு இணங்க அவ்வாறு செய்யப்பட்டது. ‘புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர் களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும் படிக்கும், அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப் போகிற தேசத்தில் உயிரோடிருக்கும் நாளெல்லாம், உங்கள் தேவ னாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் ஜனத் தைக் கூட்டி, அதை வாசிக்கவேண்டும்’ என்று இஸ்ரவேலின் ஆவிக் குரிய தலைவர்கள் கட்டளை பெற்றிருந்தார்கள். உபா 31:12, 13.தீஇவ 465.1

    பின்னான நூற்றாண்டுகளில் இந்த ஆலோசனை பின்பற்றப் பட்டிருக்குமானால், இஸ்ரவேலின் வரலாறு எவ்வளவு மாறுபட்ட டிருக்கும்! மக்கள் தங்கள் உள்ளங்களில் பரிசுத்த தேவ வார்த்தை யின்மேல் பயபக்திகொள்வதால் மாத்திரமே அவர்கள் தேவநோக் கத்தை நிறைவேற்றத்தக்க நம்பிக்கை கொள்வது கைகூடிவரும் வதாயிருந்தது. இஸ்ரவேலர் தேவனுடைய பிரமாணத்தின் மேல் கொண்டிருந்த பற்றுதான், தாவீதின் ஆட்சியிலும் சாலொமோனு டைய ஆட்சியின் ஆரம்ப நாட்களிலும் அவர்களைப் பெலப்படுத் தியது; ஜீவவார்த்தையிலிருந்த விசுவாசத்தின் மூலமாகத்தான் யோசியா மற்றும் எலியாவின் நாட்களில் சீர்திருத்தம் நடைபெற் றது. இஸ்ரவேலின் பொக்கிஷமான, அதே வேதவாக்கிய சத்தி யத்தை முன்வைத்தே சீர்திருத்தத்திற்கு ஏதுவாக மக்களிடம் எரே மியாவேண்டிக்கொண்டான். அவன் எங்கெல்லாம் ஊழியம் செய் தானோ, அங்கெல்லாம், ‘யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தை களைக் கேளுங்கள்’ என்ற ஊக்கமான வேண்டுதலோடு மக்களைச் சந்தித்தான். எரே 11:2.தீஇவ 465.2

    யூதாவினுடைய துன்மார்க்கப்போக்கின் இறுதி நாட்களில், தீர்க்கதரிசிகளின் அறிவுரைகளால் பயனேதும் இல்லாதது போலவே தோன்றியது. எருசலேமை முற்றுகையிட மூன்றாவது முறையாக அதாவது, கடைசி முறையாக கல்தேயச் சேனைகள் வந்தபோது, ஒவ்வொரு இருதயமும் நம்பிக்கையற்றுப் போனது. அவர்கள் நிர் மூலமாக்கப்படுவார்களென முன்னுரைத்தான் எரேமியா; கல்தேய ரிடம் சரணடையுமாறு வலியுறுத்தினதின் நிமித்தமே இறுதியில் அவன் சிறையில் தள்ளப்பட்டான். ஆனால், அந்நகரத்தில் இன் னும் உண்மையோடு இருந்தவர்களை நம்பிக்கையற்றவர்களாக தேவன் விட்டுவிடவில்லை . தன் செய்திகளைப் பரிகாசித்தவர் களின் பலத்த கண்காணிப்பில்தான் இருக்க நேரிட்டபோதிலும், மன்னிக்கவும் இரட்சிக்கவும் பரலோகம் சித்தங்கொண்டிருந்தது பற்றின் புது வெளிப்பாடுகள் ஏரேமியாவுக்கு உண்டாயின. தேவனு டைய சபையைத் தேற்றிவரும் வற்றாத ஊற்றாக மன்னிப்பும், இரட் சிப்பும் அன்று முதல் இன்று மட்டும் விளங்கிவருகின்றன.தீஇவ 466.1

    தேவனுடைய வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக் கொண்டவனாய் ஓர் உவமையை நடித்துக்காட்டினான் எரேமியா. தேவன் தம் மக்களுக்காகக் கொண்ட நோக்கம் இறுதியாக நிறை வேறுவதில் தனக்கிருந்த உறுதியான விசுவாசத்தை அந்நகரின் குடி மக்களுக்கு அதன் மூலம் விவரித்துக் காண்பித்தான். சாட்சிகளுக்கு முன்பாகவும் சட்டத்துக்கும் வழக்கத்துக்கும் ஏற்றசகலமுறைமையின்தீஇவ 466.2

    ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ,
    தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும்,
    நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும்,
    வானத்தையும் பூமியையும், உண்டாக்கினீர்;
    உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.
    தீஇவ 468.1

    எரேமியா 32:17. படியும், பக்கத்துக்கிராமமான ஆனதோத்திலிருந்த தன் மூதாதையரின் நிலத்தைப் பதினேழு சேக்கலிடை வெள்ளிக்கு வாங்கினான்.

    ஏற்கனவே பாபிலோனியரின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்த அந்நிலப்பகுதியை வாங்கியது, எப்படிப் பார்த்தாலும் மனித பார் வைக்கு முட்டாள்தனமானதாக இருந்தது. எருசலேமின் அழிவு பற்றியும் யூதேயாவின் சீரழிவு பற்றியும் ராஜ்யத்தின் பேரழிவு பற்றி யும் தீர்க்கதரிசிதாமே முன்னுரைத்துக் கொண்டிருந்தான். தூர தேச மான பாபிலோனில் நீண்டகாலம் சிறைப்பட்டுபோவதுபற்றியும் அவன் தீர்க்கதரிசனம் உரைத்துக்கொண்டிருந்தான். அவன் வயது முதிர்ந்தவனாக இருந்ததால், அந்நிலத்தால் தனிப்பட்ட விதத்தில் பயனடையவும் அவன் நம்பிக்கை கொள்ள கூடாதிருந்தது. ஆனா லும், வேதவாக்கியங்களில் சொல்லப்பட்டிருந்த தீர்க்கதரிசனங் களை அவன் படித்திருந்தான். சிறையிருப்பின் புத்திரரை அவர் களின் சுதந்தரமான வாக்குத்தத்த தேசத்திற்கு மீண்டும் கொண்டுவர தேவன் கொண்ட நோக்கத்தை அவனுடைய உள்ளத்தில் அது ஆழ மாக உணர்த்தியது. சிறைப்பட்டு போகிறவர்கள் தங்கள் இக்கட் டின் நாட்கள் முடிவடையும்போது, திரும்பிவந்து தங்கள் பிதாக் களின் தேசத்தை மீண்டும் சுதந்தரித்துக் கொள்வதை விசுவாசக் கண்ணால் கண்டான் எரேமியா. தன்னுடைய இருதயத்திற்கு மிகுந்த ஆறுதலைக் கொண்டுவந்த நம்பிக்கையால் மற்றவர்களையும் தேற் றும்படி தன்னால் என்ன செய்யக்கூடுமோ அதனை ஆனதோத்தி லிருந்த நிலத்தை வாங்கினதின் மூலம் செய்ய விரும்பினான்.தீஇவ 469.1

    மாற்றுப் பத்திரங்களில் கையெழுத்திட்டு, அவற்றைச் சாட்சி களின் மேற்கையொப்பத்தால் உறுதிப்படுத்தின பிறகு, தன்னுடைய செயலாளனான பாருக்கிடம், ‘’நீ முத்திரை போடப்பட்ட கிரயப் பத்திரமும் திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்த சாசனங்களை வாங்கி, அவைகள் அநேகநாள் இருக்கும்படிக்கு அவைகளை ஒரு மண்பாண்டத்திலே வை. ஏனெனில், இனி இந்தத் தேசத்தில் வீடு களும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” என்றான் எரேமியா. எரே 32:14,15.தீஇவ 469.2

    அசாதாரணமான இந்த நில ஒப்பந்தம் நடைபெற்ற நேரத்தில் யூதாவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. நிலத்தின் கொள்முதல் விபரங்களையெல்லாம் சரிசெய்து, எழுதப்பட்ட பத் திரங்களை எல்லாம் பாதுகாக்க ஏற்பாடு செய்த கையோடு, அசையா உறுதிகொண்டிருந்த எரேமியாவின் விசுவாசம் கூட இப்போது மிக வும் சோர்ந்துபோனது. யூதாவை ஊக்கப்படுத்தும் தன் முயற்சியில் அளவுக்கதிகமான தன்னம்பிக்கையுடன் அவன் செயல்பட்டுவிட் டானோ? தேவ வார்த்தையின் வாக்குத்தத்தங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியில் பொய்யான நம்பிக்கைகளுக்கு அவன் இடங்கொடுத்துவிட்டானோ? தேவனோடு உடன்படிக்கை உறவுக் குள் பிரவேசித்திருந்தவர்கள், தங்களுக்காக செய்யப்பட்ட ஏற் பாடுகளை வெகுநாட்களாகப் பரியாசம் பண்ணியே வந்தார்கள். தெரிந்துகொள்ளப்பட்ட தேசத்திற்கான வாக்குத்தத்தங்கள் முற்றி லும் நிறைவேறுமா?தீஇவ 469.3

    தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்ப மறுத்தவர்களின் வேதனைகளைக் கண்டு மனக்குழப்பத்தாலும் துக்கத்தாலும் குறு கிப்போன தீர்க்கதரிசி, மனித இனத்திற்கான தேவநோக்கம் குறித்த அதிக வெளிச்சத்திற்காக தேவனிடம் மன்றாடினான்.தீஇவ 470.1

    ’ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத் தையும் பூமியையும், உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை . ஆயிரம் தலைமுறைகளுக் கும் கிருபை செய்கிறவரும், பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர் களுடைய பின்னடியார் பிள்ளைகளின் மடியிலே சரிக்கட்டுகிற வருமாகிய சேனைகளின் கர்த்தர் என்றும் நாமமுள்ள மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவனே, யோசனையிலே பெரியவரும் செய் லிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத் தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக் குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரரு டைய எல்லா வழிகளின் மேலும் நோக்கமாயிருக்கின்றன. இஸ்ர வேலிலும் மற்ற மனுஷருக்குள்ளும் இந்நாள் வரைக்கும் விளங்கு கிற அடையாளங்களையும் அற்புதங்களையும் தேவரீர் எகிப்து தேசத்திலே செய்து, இந்நாளில் நிற்கும் கீர்த்தியை உமக்கு உண் டாக்கி, இஸ்ரவேலாகிய உமது ஜனத்தை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணி, அவர்களுடைய பிதாக்களுக்கு நீர் கொடுப்பேன் என்று ஆணையிட்ட பாலும் தேனும் ஓடிய தேசமாய் இருக்கிற இந்தத் தேசத்தை அவர்களுக்குக் கொடுத்தீர். அவர்கள் அதற்குள் பிர வேசித்து, அதைச் சுதந்தரித்துக் கொண்டார்கள்; ஆனாலும் அவர் கள் உமது சத்தத்துக்குச் செவிகொடாமலும், உமது நியாயப்பிர மாணத்தில் நடவாமலும், செய்யும்படி நீர் அவர்களுக்குக் கற்பித்த தொன்றையும் செய்யாமலும் போனார்கள்; ஆதலால் இந்தத் தீங்கை யெல்லாம் அவர்களுக்கு நேரிடப்பண்ணினீர்’ என்று அவன் அறிக் கையிட்டான். வச 17-23.தீஇவ 470.2

    நேபுகாத்நேச்சாரின் சேனைகள் திடுதிப்பென வந்து சீயோ னின் மதில்களைப் பிடித்துக்கொள்ள இருந்தனர். நகரத்தைப் பாது காக்கும் கடைசி முயற்சியாக ஆயிரக்கணக்கானோர் மடிந்து கொண் டிருந்தனர். பசியாலும் நோயாலும் அநேகமாயிரம் பேர் செத்துக் கொண்டிருந்தனர். எருசலேமின் முடிவு ஏற்கனவே முடிவு செய்யப் பட்டிருந்தது. முற்றுகையிட்டிருந்த எதிரிப்படையினரால் போடப் பட்ட கொத்தளங்கள் நகரத்தின் அலங்கங்களுக்கு மேலாக எழும்பி யிருந்தன. ‘இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத் தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினி மித்தமும், கொள்ளை நோயினி மித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயரின் கையிலே கொடுக்கப் படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க் கிறீர். கர்த்தராகிய ஆண்டவரே, நகரம் கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறதாயிருந்தும், தேவரீர் என்னை நோக்கி, ‘நீ உனக்கு விலைக்கிரயமாகக் கொண்டு அதற்குச் சாட்சிகளை வை என்று சொன்னீரே’‘ என்று தேவனை நோக்கி தொடர்ந்து ஜெபித் தான் தீர்க்க தரிசி. எரே 32:24,25.தீஇவ 471.1

    தீர்க்கதரிசியின் ஜெபத்திற்கு கிருபையான பதில் கிடைத்தது. சத்தியத்தின் ஊழியனுடைய விசுவாசமானது அக்கினியால் புட மிட்டதுபோல சோதிக்கப்பட்ட அந்த இக்கட்டான நேரத்தில், கர்த் தருடைய வார்த்தை எரேமியாவிற்கு உண்டாகி, அவர், ‘’இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ ?” என்று கேட் டார். வச 26, 27. நகரம் சீக்கிரத்திலேயே கல்தேயரின் கரங்களில் விழ இருந்தது; அதன் வாசல்களும் அரண்மனைகளும் தீக்கொளுத் தப்பட்டு, எரிக்கப்பட இருந்தன; ஆனால், அழிவு சமீபித்திருந்த போதிலும், எருசலேமின் குடிகள் சிறைக்கைதிகளாகக் கொண்டு செல்லப்படவிருந்தபோதிலும், இஸ்ரவேலைக்குறித்த யேகோவா வின் நித்திய நோக்கம் இன்னும் நிறைவேற வேண்டியிருந்தது. தம் முடைய தாசனின் ஜெபத்திற்கு மேலும் பதிலளிக்கும் வகையில், தம்முடைய சிட்சைகளை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் குறித்துத் தேவன் இப்படியாகச் சொன்னார்:தீஇவ 471.2

    ’’இதோ, என் சினத்திலும் என் கோபத்திலும், என் மகாஉக்கிரத் திலும், நான் அவர்களைத் துரத்தின் எல்லாத் தேசங்களிலும் இருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன். அவர்கள் என் ஜனமாய் இருப்பார்கள், நான் அவர்கள் தேவனாய் இருப்பேன். அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படுபடிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தை யும் ஒரே வழியையும் கட்டளையிட்டு, அவர்களுக்கு நன்மை செய் யும்படி நான் அவர்களைவிட்டுப் பின்வாங்குவதில்லை என்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து, அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள் மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இரு தயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத் திலே நிச்சயமாய் நாட்டுவேன்.தீஇவ 472.1

    ’நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினது போல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மனுஷனும் மிருகமுமில்லாதபடிக்குப் பாழாய்ப் போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப் பட்டுப் போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்தத் தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும். பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறை யிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’‘ என்றார். எரே 32:37-44.தீஇவ 472.2

    அவர்களை விடுவித்து, மீண்டும் நிலைநிறுத்தும்படி கொடுக் கப்பட்ட இந்த வாக்குறுதிகளை உறுதிப்படுத்தும் வகையில், ’எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட் டிருக்கையில், கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் அவனுக்கு உண்டாகி, அவர்:தீஇவ 472.3

    ’’இதைச் செய்கிற கர்த்தருமாய், இதைத்திடப்படுத்தும் படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என் னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்: என்னை நோக்கிக் கூப்பிடு. அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். எதிர்க்கொத்தளங்களினாலும் பட்டயத் தாலும் இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின் வீடுகளையும், யூதா ராஜாக்களின் வீடுகளையுங் குறித்து: இதோ, நான் அவர் களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத் தையும் வெளிப்படுத்துவேன். நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, முன்னிருந்ததுபோல அவர்களைக் கட்டுவித்து, அவர்கள் எனக்கு விரோதமாய் குற்றஞ் செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை நீங்கலாக்கிச் சுத்திகரித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க்குற்றஞ் செய்து, எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணின அவர்களும் டைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன்; நான் அவர்களுக் குச் செய்யும் நன்மையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச் செய்யும் எல்லா நன்மையினிமித்தமும் எல்லாச் சமாதனத்தி னிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.தீஇவ 473.1

    ’மனுஷனில்லாமலும் மிருகமில்லாமலும் அவாந்தரவெளி யாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும் யூதா வின் பட்டணங்களிலும் பாழான எருசலேமின் வீதிகளிலும், இன் னும் களிப்பின் சத்தமும் மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத் தமும், மணவாட்டியின் சத்தமும்: சேனைகளின் கர்த்தரைத் துதியுங் கள். கர்த்தர் நல்லவர். அவர் கிருபையென்றுமுள்ளதென்று சொல் லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திர பலிகளைக்கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படுமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்தது போலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல் லுகிறார்.தீஇவ 473.2

    ’’மனுஷனும் மிருகமும் இல்லாமல் அவாந்தரவெளியாய்க் கிடக்கிற இவ்விடத்திலும், இதற்கு அடுத்த பட்டணங் களிலும் ஆட்டுமந்தையை மேய்த்து மடக்குகிற மேய்ப்பர்களின் தாபரங்கள் உண்டாயிருக்குமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மலைத்தேசமான பட்டணங்களிலும், பள்ளத்தாக்குகளான பட்டணங் களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், பென்யமீன் நாட்டிலும் எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் தங்களைத் தொகையிடுகிறவனுடைய கைக்குள் ளாகக் கடந்துவரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.தீஇவ 474.1

    ’இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார். அப் பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும் யூதாவின் குடும்பத்துக் கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.’ எரே 33:1-14.தீஇவ 474.2

    சத்துருவின் வல்லமைகளோடு நடந்த நீண்ட போராட்டத்தில் தேவசபைக்கு ஏற்பட்ட அந்தகார நாட்களில் சபை இப்படியாகத் தேற்றப்பட்டது. இஸ்ரவேலை அழிக்கும் தன் முயற்சிகளில் சாத் தான் வெற்றிபெற்றது போல் தெரிந்தது. ஆனால், அப்போதைய நிகழ்ச்சிகளை தேவன் மாற்றியமைத்துக் கொண்டிருந்தார். கடந்த கால நிகழ்வுகளைச் சரிசெய்வதற்கான தருணம் வருங்காலங்களில் அவருடைய மக்களுக்குக் கிடைக்க இருந்தது. சபைக்குக் கொடுக் கப்பட்ட அவருடைய செய்தி இதுதான்:தீஇவ 474.3

    ’என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே. இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன், யாக்கோபு திரும்பிவந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத்தத் தளிக்கப்பண்ணுகிறவனில்லை. உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோட இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.’ ‘நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். எரே 30:10,11,17.தீஇவ 474.4

    சிதறிக்கிடந்த இஸ்ரவேல் கோத்திரத்தார் தாங்கள் மீண்டுமாக ஒன்றுகூடும் மகிழ்ச்சியான நாளில், ஒரே மக்களாக மீண்டும் இணைக்கப்பட இருந்தார்கள். தேவனே ‘ இஸ்ரவேலின் வம்சங் களுக்கெல்லாம் ராஜாவாக ஏற்றுக்கொள்ளப்பட இருந்தார். ’அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.’’கர்த்தர் சொல்லுகிறது என்ன வென்றால்: யாக்கோபின் நிமித்தம் மகிழ்ச்சியாய்க் கெம்பீரித்து, ஜாதிகளுடைய தலைவரின் நிமித்தம் ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கப்பண்ணி, துதித்து: கர்த்தாவே, இஸ்ரவேலில் மீதியான உமது ஜனத்தை இரட்சியும் என்று சொல்லுங்கள். இதோ, நான் அவர் களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டி வருவேன்; குருடரும், சப்பானிகளும், அவர்களில் இருப்பார்கள் அழுகையோடும் விண்ணப்பங்களோ டும் வாருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீர் உள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான். எரே 31:1, 7-9.தீஇவ 474.5

    பூமியின் மற்ற மக்கள் யாவரைக் காட்டிலும் பரலோகத்தின் அதிக தயவைப் பெற்றவர்களென ஒரு சமயத்தில் எண்ணப்பட்ட வர்கள் உலகத்தாரின் பார்வைக்கு இப்போது அற்பமாகத் தெரிந் தார்கள். அவர்கள் சிறைப்படுத்திக் கொண்டுசெல்லப்பட்டதில், கீழ்ப்படிதல் எனும் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அது அவர்களுடைய எதிர்கால சுகவாழ்விற்குத் தேவையாயிருந் தது. அவர் கள் அந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளும் மட்டும், தாம் அவர்களுக்குச் செய்ய விரும்பின எதையும் தேவனால் செய்யக் கூடாதிருந்தது. அவர்களுடைய ஆவிக்குரிய நலனுக்காக தாம் அவர்களைச் சிட்சிக்கும் நோக்கத்தை விவரிக்கும் வகையில், ‘’உன்னை நீதியான முறையில் தண்டிப்பேன்; உன்னைத் தண்டிக் காமல் விட்டுவிடமாட்டேன்’‘ என்றார். எரே 30:11. அவருடைய கனிவான அன்பிற்குப் பாத்திரவான்களாக இருந்தவர்கள் என் றென்றும் புறக்கணிக்கப்பட்டுப் போகவில்லை; அவர்களை அழிப் பதைவிட இரட்சிக்கும்படியாக, அவர்களுடைய தோல்வியை வெற்றியாக்கும் தம் திட்டத்தைப் பூமியின் தேசங்களுக்கு முன்பாக அவர் விவரிக்க விரும்பினார். தீர்க்கதரிசியிடம் தெரிவிக்கப்பட்ட செய்தி இதுவே:தீஇவ 475.1

    ’இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும் வண்ணமாக அதைக் காப் பார். கர்த்தர் யாக்கோபை மீட்டு, அவனிலும் பலத்தவனுடைய கைக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிறார். அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுகுட்டிகள் என்ப வைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடி வருவார்கள்; அவர்களு டைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போலிருக்கும்; அவர்கள் இனித்தொய்ந்து போவதில்லை. நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோ ஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன். ஆசாரியர்களின் ஆத்து மாவை கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என்ஜனங் கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவர்கள் என்று கர்த் தர் சொல்லுகிறார்.தீஇவ 475.2

    ’இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லு கிறது என்னவென்றால்: நான் அவர்கள் சிறையிருப்பைத் திருப்பும் போது, அவர்கள்: நீதியின் வாசஸ்தலமே, பரிசுத்த பர்வதமே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கக்கடவரென்கிற வார்த்தையை யூதா வின் தேசத்திலும் அதின் பட்டணங்களிலும் சொல்லுவார்கள். அதிலே யூதாவும் அதனுடைய எல்லாப் பட்டணங்களின் மனுஷரும் பயிரிடுங் குடிகளும், மந்தைகளை மேய்த்துத் திரிகிறவர்களும் ஏக மாய்க் குடியிருப்பார்கள். நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரண மடைய பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்.தீஇவ 476.1

    ’இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார். அப் பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கைபண்ணுவேன். நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே, அவர்க ளோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லு கிறார். அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிர மாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இரு தயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என்ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இனி ஒரு வன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறி யவன் முதல் பெரியவன் மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள் வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.’ எரே 31:10-14, 23-25, 31-34.தீஇவ 476.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents