Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    23 - அசீரியச் சிறையிருப்பு

    அழிவுக்குள்ளான இஸ்ரவேல் ராஜ்யத்தின் இறுதி நாட்கள் வன்முறையாலும் இரத்தம் சிந்துதலாலும் நிறைந்திருந்தன. ஆகாப் வீட்டாரால் உண்டான கொடுமையும் கொந்தளிப்பும் நிறைந்திருந்த காலக்கட்டத்தில் கூட இத்தகைய காரியங்கள் காணப்படவில்லை. இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, பத்துக் கோத்திரங்களின் மன்னர்களும் காற்றை விதைத்தார்கள்; இப்பொழுதோ சூறாவளிக் காற்றை அறுத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு ராஜாவாகக் கொன்று, பிறருக்கும் ஆட்சியின்மேல் ஆசை ஏற்பட வழி செய்தார் கள். அவ பக்தியுள்ள அத்தகைய நியாயக்கேடானவர்களைப் பார்த்து, அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக் கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளைவைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்’‘ என்று சொன்னார் ஆண்டவர். ஓசியா 8:4. நீதியான ஒவ்வொரு நியதியும் ஒதுக்கப்பட்டன. தேவகிருபை யின் களஞ்சியங்களாக பூமியின் தேசத்தாருக்கு முன்பாக நிற்க வேண்டியவர்கள், ஒருவருக்கு ஒருவரும், ‘கர்த்தருக்கு விரோதமா கவும் துரோகம் பண்ணினார்கள். ‘ஓசியா 5:7.தீஇவ 279.1

    தாங்கள் முற்றிலும் அழியும்படியான ஓர் ஆபத்தை மனந்தி ருந்தாத அத்தேசத்தார் சந்திக்கப்போவதை உணரும்படி, அவர் களைக் கடுமையாகக் கண்டித்தார் தேவன். முற்றும் முழுதுமாக மனந்திரும்புமாறும், மீறுதலில் நிலைத்திருந்தால் அழிவே உண்டா குமென்றும் எச்சரித்து ஆமோஸ் மூலமாகவும் ஓசியா மூலமாகவும் செய்திக்கு மேல் செய்தி அனுப்பினார் தேவன். ‘’அநியாயத்தை உழு தீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர் கள்; உங்கள் வழியையும் உங்கள் பராக்கிரமசாலிகளின் திரளையும் நம்பினீர்கள். ஆகையால், உங்கள் ஜனங்களுக்குள் அமளி எழும் பும்; பிள்ளைகளின் மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா அரண் களும் அழிக்கப்படும். அதிகாலமே இஸ்ரவேலின் ராஜா முற்றிலும் சங்கரிக்கப்படுவான்’‘ என்றான் ஓசியா. ஓசியா 10:13-15.தீஇவ 280.1

    எப்பீராயீமைக் குறித்து, ‘’அந்நியர் அவனுடைய பலத்தைத் தின்றார்கள்; அவனோ அதை அறியான்; நரைமயிரும் அவனில் தெளித்திருக்கிறது, அவனோ அதை அறியாதிருக்கிறான்” என்று சாட்சியிட்டான் தீர்க்கதரிசி. தேவனை மறந்த தேசத்தின் ஓர் அடை யாளமாக, இஸ்ரவேலின் கோத்திரத்தாருக்குள்ளே அவபக்தியில் கிடந்த ஒரு தலைவனாக எப்பீராயீமை அடிக்கடிச் சுட்டிக்காட்டி னான்ஓசியா தீர்க்கதரிசி. இஸ்ரவேலர் நன்மையை வெறுத்தார்கள்.’ தங்கள் தீமையான போக்கின் விளைவால் ஏற்படவிருந்த பேரழிவு களை அறிய முடியாமல், ‘நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டு ‘ பத்துக் கோத்திரத்தாரும் சீக்கிரத்தில் அந்நிய ஜாதிகளுக்குள்ளே அலைந்து திரிய இருந்தார்கள். ஓசியா 7:9; 8:3; 5:11; 9:17.தீஇவ 280.2

    இஸ்ரவேல் தலைவர்களில் சிலர் தங்கள் மரியாதை போய் விட்டதைத் தெளிவாக உணர்ந்தார்கள்; அதனை மீண்டும் பெற விரும்பினார்கள். ராஜ்யத்தைப் பெலவீனமடையச் செய்த அத்த கைய நடவடிக்கைகளை விட்டு விலகுவதற்குப் பதிலாக அக்கிர மத்திலே நீடித்திருந்தார்கள்; சமயம் வாய்த்தபோது அஞ்ஞான மார்க் கத்தாரோடு கூட்டணி வைத்து, அதிகாரத்தைப் பெற விரும்பி, தங் களையே வஞ்சித்துக் கொண்டார்கள். ‘எப்பிராயீம் தன் வியாதி யையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரிய னண்டைக்குப் போனான்’. ‘எப்பிராயீம் பேதையான புறாவைப் போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்; அசீரியனிடத்துக்கும் போகிறார்கள்.’ ‘அசீரிய ரோடே உடன்படிக்கை பண்ணுகிறான்.’ ஓசியா 5:13; 7:11; 12:1.தீஇவ 280.3

    பெத்தேலின் பலிபீடத்தின் முன் தோன்றின தேவமனிதன் மூல மாகவும், எலியா மூலமாகவும் எலிசா மூலமாகவும், ஆமோஸ் மூலமாகவும் ஓசியா மூலமாகவும் கீழ்ப்படியாமையால் உண்டா கும் தீங்குகள் குறித்து மீண்டும் மீண்டும் பத்துக்கோத்திரத்தாருக்கும் முன்பாக வலியுறுத்தினார் தேவன். ஆனால், கெஞ்சலுக்கும் கடிந்து கொள்ளுதலுக்கும் மத்தியிலும் இஸ்ரவேல் அவபக்தியில் மூழ்கிக் கொண்டே சென்றனர். ‘இஸ்ரவேல் அடங்காத கிடாரியைப்போல் அடங்காதிருக்கிறது’. ‘என் ஜனங்கள் என்னைவிட்டு விலகுகிற மாறுபாட்டைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றார் ஆண்டவர். ஓசியா 4:16; 11:7.தீஇவ 281.1

    கலகக்கார ஜனங்கள்மேல் பரலோகத்தின் கடுமையான நியா யத்தீர்ப்புகள் சம்பவித்த காலக்கட்டங்களும் இருக்கத்தான் செய் தன். ஆகையால் தீர்க்கதரிசிகளைக் கொண்டு அவர்களை வெட் டினேன்; என் வாய்மொழிகளைக் கொண்டு அவர்களை அதம்பண் ணினேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப் போல் வெளிப்படும். பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும் விரும்புகிறேன். அவர் களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணினார்கள்” என்றார் தேவன். ஓசியா 6:5-7.தீஇவ 281.2

    ’இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தருடைய வார்த்தைளைக் கேளுங் கள்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன். அவர்கள் எவ்வளவாய்ப் பெருகினார்களோ, அவ்வளவாய் எனக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தார்கள்; அவர்களுடைய மகிமையை இலச்சையாக மாறப்பண் ணுவேன். அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன்’ என் பதுதான் இறுதியாக அவர்களுக்குக் கொடுக்குப்பட்ட செய்தியாகும். ஓசியா 4:1, 6-9.தீஇவ 281.3

    அசீரியச் சிறையிருப்புக்கு முந்தைய நூற்றாண்டின் பிற்பாதி யில் இஸ்ரவேலில் காணப்பட்ட அக்கிரமமானது நோவாவின் காலத்திற்கும், தேவனை மனிதர் புறக்கணித்து தங்களை முற்றிலும் தீங்கிற்கு விற்றுப்போட்ட ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் இணை யாக இருந்தது. இயற்கையின் தேவனுக்கு மேலாக இயற்கையை உயர்த்துவதும், சிருஷ்டிகருக்குப் பதிலாக சிருஷ்டியைத் தொழு வதும் எப்பொழுதும் கொடிய பாவத்தையே விளைவித்தது. எனவே, இஸ்ரவேல் ஜனங்கள் அஸ்தோரத்தையும் பாகாலையும் தொழுது கொண்டு, இயற்கையின் சக்திகளை வணங்கியபோது, மேலானதும் உயர்வானதுமான சகலவற்றோடும் தங்கள் தொடர்பைத் துண்டித் துக்கொண்டார்கள்; பாவத்தூண்டலுக்கு எளிதில் இரையானார்கள். ஆத்துமாவின் அரண்கள் உடைந்துபோன நிலையில், வழிதவறிய அந்தத் தொழுகைக்காரர் பாவத்திற்கு எதிராகப் பாதுகாப்பில்லாமல் நின்றார்கள். மனித இருதயத்தின் தீய ஆசைகளுக்கு இணங்கிச்சென் றார்கள்.தீஇவ 281.4

    தங்களுடைய காலத்தின் குறிப்பிடத்தக்க கொடுமைகளுக்கும், வெளிப்படையான அநீதிக்கும், புதுமையான ஆடம்பரத் திற்கும் பகட்டிற்கும், இழிவான குடிப்பழக்கத்திற்கும் விருந்திற்கும், கொடிய விபச்சாரத்திற்கும் சிற்றின்பத் தோய்விற்கும் எதிராக தங் கள் சத்தங்களை உயர்த்தினார்கள் தீர்க்கதரிசிகள். ஆனால், பாவத் திற்கு எதிரான அவர்களின் கடிந்துகொள்ளுதலும் கண்டனங்களும் வீணாய்ப் போயின. ‘’ஒலிமுகவாசலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாய்ப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள். நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி, ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள்” என்றான் ஆமோஸ். ஆமோஸ் 5:10, 12.தீஇவ 282.1

    யெரொபெயாம் இரண்டு பொன் கன்றுகுட்டிகளைச் செய்து வைத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட விளைவுகளில் இவை சிலவா கும். நிலையான தொழுகை முறைகளிலிருந்து அவர்கள் விலக ஆரம் பித்து, கொடிய சிலைவழிபாட்டு முறைகள் அறிமுகமாவதற்கும், இறுதியில் தேசத்தின் குடிமக்கள் அனைவருமே மருட்சியான இயற்கை வழிபாட்டுச் சடங்குகளுக்குத் தங்களை ஒப்புக் கொடுக் குமளவிற்குச் செல்வதற்கும் அது வழிநடத்தியது. இஸ்ரவேலர் தங்களுடைய சிருஷ்டிகரை மறந்து, ‘தங்களை மிகவும் கெடுத்துக் கொண்டார்கள்’ ஓசியா 9:9.தீஇவ 282.2

    இத்தீமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து, நீதி யைச் செய்யும்படி வேண்டிக்கொண்டார்கள் தீர்க்கதரிசிகள். ‘நீங் கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்தாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும் அவரைத் தேடக் காலமாயிருக்கிறது. ‘’இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு. இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய். அவரை நோக்கி, ‘தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தய வாய் அங்கீகரித்தருளும் என்று சொல்லுங்கள்’‘ என்றான் ஓசியா. ஓசியா ‘ 10:12; 12:6; 14:1,2.தீஇவ 282.3

    அக்கிரமக்காரர்கள் மனந்திரும்புவதற்கு அநேக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. அவர்கள் கொடிய அவபக்தியிலும் பெருந் தேவையிலும் சிக்கியிருந்தபோது, பாவ மன்னிப்பையும் நம்பிக் கையையும் பற்றிய செய்தியே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. ‘’இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனா லும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு. எனக்கு ராஜாவை யும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; உன்னை இரட்சிக்கும் ராஜா எங்கே ?’‘ என்றார் தேவன். ஓசியா 13:9, 10.தீஇவ 283.1

    ’’கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்மு டைய காயங்களைக் கட்டுவார். இரண்டு நாளுக்குப் பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப் பொழுது நாம் அவருடைய சமூகத்தில் பிழைத்திருப்போம். அப் பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர்மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப் போலவும் நம்மிடத்தில் வரு வார்’‘ என்று வேண்டிக்கொண்டான் தீர்க்கதரிசி. ஓசியா 6:1-3.தீஇவ 283.2

    சாத்தானுடைய வல்லமையால் கண்ணியில் சிக்குண்ட பாவி களை விடுவிக்க தாம் ஏற்படுத்தியிருக்கிற நித்திய திட்டத்தைக் காணக்கூடாமல் போனவர்களுக்குப் புதுப்பித்தலையும் சமாதானத் தையும் அருள விரும்புகிறார் தேவன். ‘’நான் அவர்கள் சீர்கேட் டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப் பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று. நான் இஸ்ர வேலுக்குப் பனியைப் போலிருப்பேன்; அவன் லீலிப்புஷ்பத்தைப் போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான். அவன் கிளைகள்ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப் போலவும், அவனுடைய வாசனை லீபனோனு டைய வாசனையைப் போலவும் இருக்கும். அவன் நிழலில் குடி யிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப் போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவன் வாசனை லீபனோனுடைய திராட்சரசத்தின் வாசனையைப் போல இருக்கும். ‘இனி எனக்கும் விக்கிரகங்களுக்கும் என்ன?’ என்று எப் பிராயீம் சொல்லுவான்; நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவன் மேல் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான தேவதாரு விருட் சம்போலிருக்கிறேன்; என்னாலே உன் கனியுண்டாயிற்று’ என்று எப்பிராயீம் சொல்லுவான். ‘இவைகளை உணரத்தக்கஞானமுள்ளவன் யார்?தீஇவ 283.3

    இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்?
    கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், br/> நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள், br/> பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.’
    தீஇவ 284.1

    ஓசியா 14:4-9.

    தேவனைத் தேடுவதின் நன்மைகளை தேவன் பலத்த விதத் தில் வலியுறுத்தினார். என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப் பீர்கள். பெத்தோலைத்தேடாதேயுங்கள், கில் காலிலும் சேராதேயுங் கள், பெயெர்செபாவுக்கும் போகாதேயுங்கள். ஏனென்றால், ‘கில் கால் சிறையிருப்பாகவும் பெத்தேல் பாழானஸ்தலமாகவும் போகும்’.தீஇவ 284.2

    ’நீங்கள் பிழைக்கும் படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார். நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த் தர்யோசேப்பிலேமீதியானவர்களுக்கு இரங்குவார்’ என்று அழைப்பு விடுத்தார் ஆண்டவர். ஆமோஸ் 5:4,6,14,15.தீஇவ 284.3

    இந்த அழைப்புகளைக் கேட்டவர்கள் பெருமளவில் இருந் தாலும், அவற்றால் ஆதாயமடைய மறுத்துவிட்டனர். மனந்திருந் தாதவர்களின் தீய நோக்கங்களுக்கு தேவதூதுவரின் வார்த்தைகள் முரணானவைகளாக இருந்தன. எனவேதான், பெத்தேலிலிருந்த சிலைவழிபாட்டுப் பூசாரிகள் இஸ்ரவேலின் மன்னனிடம் ஆள் அனுப்பி, ‘’ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தை களையெல்லாம் சகிக்கமாட்டாது” என்றார்கள். ஆமோஸ் 7:10.தீஇவ 284.4

    ’’நான் இஸ்ரவேலைக் குணமாக்க விரும்பும்போது, எப்பி ராயீமின் அக்கிரமமும் சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப் படுத்தப்படும். இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன் பாகச் சாட்சியிட்டாலும், அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்த ரிடத்தில் திரும்பாமலும், இவை எல்லாவற்றிலும் அவரைத் தேடாம் லும் இருக்கிறார்கள்” என்று அறிவித்தார் தேவன். ஓசியா 7:1,10.தீஇவ 284.5

    வழிதப்பிப்போன தம்முடைய பிள்ளைகளைச் சந்ததிதோறும் தேவன் சகித்துக்கொண்டார். இப்பொழுதும், இஸ்ரவேலர் கலகம் செய்து எதிர்த்து நின்ற வேளையிலும், இரட்சிக்கச் சித்தமுள்ளவராக தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்த அவர் ஏக்கங்கொண்டார்: ‘’எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப் போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது” என்றார் தேவன். ஓசியா 6:4.தீஇவ 285.1

    தேசத்தின் மேல் பரவியிருந்த தீமைகள் அப்புறப்படுத்த முடி யாத அளவிற்கு இருந்தன. எனவேதான், இஸ்ரவேலுக்குக் கொடிய நியாயத்தீர்ப்புக்கொடுக்கப்பட்டது: ‘எப்பிராயீம் விக்கிரகங்ளோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு.’ ‘விசாரிப்பின் நாட் கள் வரும், நீதி சரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர் அறிந்துகொள்வார்கள்’. ஓசியா 4:17; 9:7.தீஇவ 285.2

    பெத்தேலிலும் தாணிலும் விநோதமான பலிபீடங்களை ஏற் படுத்தியதால் உண்டான அவபக்தியின் பெலனை இஸ்ரவேலின் பத்துக் கோத்திரத்தாரும் சந்திக்க இருந்தார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தேவசெய்தி இதுவே: ‘சமாரியாவே, உன் கன்றுக் குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள் மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தாங்கம் அடையமாட்டாதிருப்பார் கள்? அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; தட்டான் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக் குட்டிதுண்டு துண்டாய்ப் போகும். ‘’சமாரியாவின் குடிகள் பெத்தா வேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற் காகக் களிகூர்ந்த அதின்ஜனமும், அதின் பூசாசாரிகளும் அதற்காகக் துக்கங்கொண்டாடுவார்கள். அதுவும் அசீரியாவிலே யாரேப் ராஜா வுக்கு (சனகெரிப்) காணிக்கையாகக்கொண்டுபோகப்படும். ‘ஓசியா 8:5, 6; 10:5,6.தீஇவ 285.3

    ’’இதோ, கர்த்தராகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ் யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதைப் பூமியின் மேல் இராதபடிக்கு அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன்” என்று கர்த்தர் சொல்லுகி றார். ‘’இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறது போல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும் படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமை மணியும் தரை யிலே விழுவதில்லை. தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங் களுக்கு நேரிடுவதுமில்லையென்று என்ஜனத்தில் சொல்லுகிற பாவி களெல்லாரும் பட்டயத்தினால் சாவார்கள்.தீஇவ 285.4

    ’’அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும்” என்று கர்த்தர் சொல் லுகிறார்.“சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்தைத் தொட, அது உருகிப்போம்; அப்பொழுது அதின் குடிகளெல்லாரும் புலம்பு வார்கள்.’ ‘உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழு வார்கள்; உன் வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ர வேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டு போகப் படுவான். ஆகையால் இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய் யப்போகிறபடியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப் படு’. ஆமோஸ் 9:8-10; 3:15;9:5; 7:17:4:12.தீஇவ 286.1

    முன்னுரைக்கப்பட்ட இந்த நியாயத்தீர்ப்புகள் குறிப்பிட்ட காலம் நிறுத்தப்பட்டிருந்தன. இரண்டாம் யெரொபெயாமின் நீண்ட ஆட்சியின்போது, இஸ்ரவேல் சேனைகள் குறிப்பிடத்தக்க வெற்றி களைப் பெற்றன. ஆனால், வளம் நிறைந்த அக்காலக் கட்டமானது மனந்திருந்தாதவர்களின் இருதயங்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இறுதியில் யெரொபெயாம் பட்டயத்தினால் சாவான். இஸ்ரவேல் தன் தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டு போகப்படுவான்’ என்று ஆணையிடப்பட்டது. ஆமோஸ் 7:11.தீஇவ 286.2

    இந்த வார்த்தைகளிலிருந்த தெளிவைக் காணமுடியாத அள விற்கு மன்னனும் மக்களும் தங்கள் பாவத்தை உணரக் கூடாதவர் களாயிருந்தனர். பெத்தெலில் இருந்த சிலைவழிபாட்டுப் பூசாரி களின் தலைவர்களில் ஒருவன் அமத்சியா. தேசத்திற்கு எதிராகவும் மன்னனுக்கு எதிராகவும் தீர்க்கதரிசியால் பேசப்பட்ட தெளிவான வார்த்தைகளால் கோபங்கொண்ட அவன் ஆமோஸிடம், ‘’தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப் பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு. பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ் யத்தின் அரமனையுமாயிருக்கிறது’‘ என்று சொன்னான். வச. 7:12, 13.தீஇவ 286.3

    அதற்குத் தீர்க்கதரிசி, ‘’இஸ்ரவேல் சிறைப்பிடிக்கப்பட்டுக் கொண்டு போகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்று உறுதியாகப் பதிலளித்தான். வச. 17தீஇவ 286.4

    தேவதுரோகம் செய்த கோத்திரத்தாருக்கு எதிரான வார்த்தை கள் சொல்லப்பட்டபடியே நிறைவேறின; ஆனாலும் ராஜ்யத்தின் அழிவு படிப்படியாகத்தான் நிகழ்ந்தது. நியாயத்தீர்ப்பில் தேவன் இரக்கம் பாராட்டினார். ‘அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத் திற்கு விரோதமாய்’ முதலில் வந்தபோது, அப்போதைய இஸ்ரவே லின் ராஜாவான மெனாகேம் சிறைபிடிக்கப்படவில்லை. மாறாக, அசீரிய ராஜ்யத்தின் சிற்றரசனாக சிங்காசனத்திலேயே வீற்றிருக்க அனுமதிக்கப்பட்டான். ‘’மெனாகேம் பூலின் உதவியினால் ராஜ்ய பாரத்தைத் தன் கையில் பலப்படுத்தும் பொருட்டு அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான். இந்தப் பணத்தை அசீரியா வின் ராஜாவுக்குக் கொடுக்கும்படி, மெனாகேம் இஸ்ரவேலில் பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது வெள் ளிச் சேக்கல் தண்டினான்; அப்படியே அசீரியாவின் ராஜா தேசத் திலே நிற்காமல் திரும்பிப் போனான்.’ 2 இராஜாக்கள் 15:19, 20. அசீரியர்கள் பத்துக் கோத்திரத்தாரையும் தாழ்ச்சி பண்ணி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பிச் சென்றிருந்தார்கள்.தீஇவ 287.1

    தன்னுடைய ராஜ்யத்தில் அழிவைக் கொண்டுவந்த தீமையி லிருந்து மனந்திரும்புவதை விட்டுவிட்டு, ‘இஸ்ரவேலைப் பாவஞ் செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் ‘நிலைத்திருந்தான் மொனாகேம். அவனுக்குப் பிறகு வந்த பெக்காகியாவும் பெக்காவும் கர்த்தரின் பார்வைக்குப் பொல் லாப்பானதைச் செய்தார்கள்’. வச.18, 24, 28. இருபது வருடங்கள் அரசாண்டான் பெக்கா. ‘பெக்காவின் நாட்களில் ‘அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் இஸ்ரவேலைப் பிடித்து, கலிலேயா விலும் யோர்தானுக்குக் கிழக்கிலும் வாழ்ந்த கோத்திரத்தார் மத்தி யிலிருந்து ஏராளமானோரைத் தன்னோடு சிறைக்கைதிகளாகக் கொண்டு சென்றான். ‘ரூபனியரும் காத்தியரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும்” கீலேயாத் மற்றும் கலிலேயாவாகிய நப்தலிதேச மனைத்திலும் இருந்த மற்றவர்களும் பாலஸ்தீனாவிலிருந்து வெகு தொலைவிலிருந்த தேசங்களில், பிற மார்க்கத்தார் மத்தியில் சித றுண்டுபோனார்கள். 1நாளா 5:26; 2இராஜா 15:29.தீஇவ 287.2

    இந்தக் கொடிய இழப்பிலிருந்து வடராஜ்யத்தால் மீளவே முடியவில்லை. மீதமிருந்த சொற்ப மக்களால் அரசாங்க முறைமை கள் தொடர்ந்தபோதிலும், அவர்களால் அதிகாரம் பெற முடிய வில்லை. பெக்காவிற்குப் பிறகு ஓசெயா என்ற ஒரே ஒரு ராஜா மாத்திரமே வரவிருந்தான். சீக்கிரத்திலேயே ராஜ்யம் என்றென்று மாகவாரிக்கொள்ளப்படவிருந்தது. இக்கட்டும் துன்பமும் உண்டா யிருந்த அக்காலக்கட்டத்திலும் தேவன் இரக்கம் பாராட்டினார்; சிலைவழிபாட்டிலிருந்து திரும்ப மக்களுக்கு மீண்டும் ஒரு தரு ணத்தைக் கொடுத்தார். ஓசெயா அரசாண்ட மூன்றாம் வருடத்தில், எசேக்கியா என்ற நல்ல அரசன் யூதாவில் அரசாளத் தொடங்கி, தன்னால் இயன்ற அளவிற்கு அவசரமாக எருசலேம் தேவாலய ஆராதனைகளில் முக்கியச் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்தினான். பஸ்கா பண்டிகை கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எசேக்கியா ராஜாவாக நியமிக்கப்பட்ட யூதா மற்றும் பெஞ்சமின் கோத்திரத்தார் மாத்திரம் அந்த விருந்துக்கு அழைக்கப்படவில்லை; வடதேசத்தின் கோத்திரத்தார் அனைவரும் அழைக்கப்பட்டிருந் தனர். ஏனெனில், ‘எழுதியிருக்கிறபடி, வெகுகாலமாய் அவர்கள் அதை ஆசரிக்கவில்லை; ஆகையால், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமுக்கு வாருங்கள் என்று பெயர்செபா முதல் தாண்மட்டுமுள்ள இஸ்ரவேல் தேசமெங் கும்’ அறிவிப்பு கொடுக்கப்பட்டது.தீஇவ 287.3

    அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த நிருபங்களை அஞ்சல்காரர் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின் படியே இஸ்ரவேல் யூதா எங்கும் போய், இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களண்டைக்கு அவர் திரும்புவார். இப்போதும் உங்கள் பிதாக்களைப்போல உங் கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு, அவர் சதாகாலத்துக்கும் பரிசுத்தம் பண்ணின அவரு டைய பரிசுத்த ஸ்தலத்திற்கு வந்து, உங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவியுங்கள்; அப்பொழுது அவருடைய உக்கிரமான கோபம் உங் களை விட்டுத் திரும்பும். நீங்கள் கர்த்தரிடத்திற்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைப் பிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்தத் தேசத் திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களை விட்டு விலக் குவதில்லை ‘‘ என்றார்கள். 2நாளாகமம் 30:5-9.தீஇவ 288.1

    உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்;
    நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை
    உங்களை விட்டு விலக்குவதில்லை.
    தீஇவ 290.1

    உநாளாகமம் 30:9.

    எசேக்கியாவால் அனுப்பப்பட்ட அஞ்சல்காரர்கள், எப்பிரா யீம் மனாசே தேசங்களில் செபுலோன் மட்டுக்கும் ஊரூராக’ அச் செய்தியைக் கொண்டு சென்றார்கள். ‘மனந்திரும்பி, தேவனிடம் திரும்புவதற்கு இந்த அழைப்பானது ஓர் வேண்டுகோள்’ என்பதை இஸ்ரவேலர் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால், முன்பு வளம் கொழித்ததாயிருந்த வடராஜ்யத்தில் குடியிருந்த பத்துக்கோத்திரத் தாரில் மீதமானவர்கள், யூதாவிலிருந்து வந்த அரசு தூதுவர்களை அவமதித்து, ஏளனமாக நடத்தினார்கள். ‘அவர்கள் இவர்களைப் பார்த்து நகைத்துப் பரியாசம் பண்ணினார்கள்’ இருந்தாலும், அந்த அழைப்பிற்குச் சிலர் சந்தோஷத்தோடு இணங்கினார்கள். ‘புளிப் பில்லாத அப்பப்பண்டிகையை ஆசரிக்க ஆசேரிலும் மனாசேயிலும் செபுலோனிலும் சிலர் மனத்தாழ்மையாகி எருசலேமுக்கு வந்தார் கள்’ வச. 10-13.தீஇவ 291.1

    கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சல்மனாசா ரின் அசீரியச் சேனைகள் சமாரியாவை முற்றுகையிட்டன. அந்த முற்றுகையில் ஏராளமானோர் பசியாலும் வியாதியாலும் பட்டயத் தாலும் பரிதாபமாக மரித்தார்கள். அந்தத் தேசமும் நகரமும் வீழ்ந் தது; வீழ்ச்சியடைந்த பத்துக் கோத்திரத்தாரில் மீதமானவர்கள் அசீ ரிய ராஜ்யத்தின் ஆட்சிப்பகுதிகளுக்குச் சிறைக்கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டு, சிதறடிக்கப்பட்டனர்.தீஇவ 291.2

    வடராஜ்யத்திற்குச் சம்பவித்த அழிவானது பரலோகத்தின் நேரடி நியாயத்தீர்ப்பாயிருந்தது. தேவன் தம் நோக்கத்தை நிறை வேற்ற அவரால் பயன்படுத்தப்பட்ட கருவிகளாக மாத்திரம் இருந் தார்கள் அசீரியர்கள். சமாரியாவின் விழுகைக்குச் சற்றுமுன்பு தீர்க்க தரிசனம் உரைக்க ஆரம்பித்த ஏசாயாவின் மூலம், அசீரியச் சேனை கள் ‘என் கோபத்தின் கோல்’ என்று குறிப்பிட்டார் ஆண்டவர்; ‘’அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்” என்றார். ஏசா 10:5.தீஇவ 291.3

    இஸ்ரவேல் புத்திரர் அதிகமாக, ‘தங்கள் தேவனாகிய கர்த்த ருக்கு விரோதமாகப் பாவஞ் செய்து, துர்க்கிரியைகளைச் செய் தார்கள். அவர்கள் செவிகொடாமல் அவருடைய கட்டளை களையும், அவர் தங்கள் பிதாக்களோடே பண்ணின அவருடைய உடன்படிக்கையையும் அவர் தங்களுக்குத்திடச்சாட்சியாய்க்காண் பித்த அவருடைய சாட்சிகளையும் வெறுத்தார்கள். அவர்கள், ‘தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் விட்டு விட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங் களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத்தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்து கொண்டதின் நிமித் தமும், அவர்கள் உறுதியாக மனந்திரும்ப மறுத்ததின் நிமித்தமும் ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர் எல்லா ரையும் கொண்டு அவர்களுக்குக் கொடுத்த தெளிவான எச்சரிப்பு களின்படி, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளுமட்டாக ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர் கையில் ஒப்புக்கொடுத் தார்.’தீஇவ 291.4

    ’அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல் அவருடைய உடன்படிக்கையையும் கர்த்தரின் தாசனாகிய மோசே கற்பித்தயாவற்றையும் மீறினதின்’ நிமித்தம் ‘இஸ்ரவேலர் தங்கள் தேசத்தினின்று அசீரியாவுக்குக் கொண்டு போகப்பட்டார்கள்’. 2 இராஜா 17:7, 11, 14-16, 20, 23; 18:12.தீஇவ 292.1

    பத்துக் கோத்திரத்தார்மேல் கொண்டுவரப்பட்ட கொடிய நியா யத்தீர்ப்புகளில் ஞானமும் இரக்கமுமான நோக்கம் இருந்தது. அவர்களுடைய பிதாக்களின் தேசத்தில், அவர்கள் மூலமாக இனி மேலும் செய்யமுடியாததை, புறஜாதியாரின் மத்தியில் அவர்களைச் சிதறப்பண்ணி, அதன்மூலம் நிறைவேற்ற முயன்றார். மனித இனத் தின் இரட்சகரால் கிடைக்கும் மன்னிப்பைத் தங்களுக்குச் சொந்த மாக்கத் தெரிந்து கொண்ட அனைவரையும் இரட்சிக்கும் அவரு டைய திட்டம், அதன்பிறகுதான் நிறைவேற வேண்டியிருந்தது. இஸ்ரவேலருக்குக் கொண்டுவரப்பட்ட இக்கட்டுகளில், பூமியின் தேசத்தாருக்குத் தம் மகிமையை வெளிப்படுத்த அவர் வழியை ஆயத்தம்பண்ணிக்கொண்டிருந்தார். சிறைபிடித்துச் செல்லப்பட்ட அனைவருமே தங்கள் குற்றத்தை உணராதவர்களாக இருக்கவில்லை. தேவனுக்கு உண்மையாயிருந்த சிலரும், அவருக்கு முன்பாகத்தங் களைத் தாழ்த்தின் வேறு சிலரும் அவர்கள் மத்தியில் இருந்தனர். ‘ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகளான’ இவர்கள் மூலமாக அசீ ரிய ராஜ்யத்திலிருந்த ஏராளமானவர்கள் தம்முடைய சாற்றுப்பண்பு களையும் தம்முடையபிரமாணத்தின் நன்மைகளையும் கண்டுகொள்ள வேண்டுமென்று அவர் விரும்பினார். ஓசியா1:10தீஇவ 292.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents