Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    34 - எரேமியா

    யோசியாவின்கீழ் நடைபெற்ற சீர்திருத்தத்தின் விளைவாக நிரந்தர ஆவிக்குரிய மறுமலர்ச்சியை விரும்பினவர்களில் எரேமி யாவும் ஒருவன். யோசியாவினுடைய ஆளுகையின் பதிமூன்றாம் வருடத்தில், இளம்பிராயத்திலேயே தீர்க்கதரிசன ஊழியத்திற்காக அவன் அழைக்கப்பட்டான். லேவிய ஆசாரியக் குழுவின் ஓர் அங்கத்தினனாக சிறுபிராயம் முதலே தேவசேவைக்காகப் பயிற்று விக்கப் பட்டிருந்தான் எரேமியா. பிறப்பிலிருந்தே ‘ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாக’ தான் நியமிக்கப்பட்டிருந்ததை, மகிழ்ச்சியான அந்த ஆயத்த நாட்களில் அவர் உணர்ந்திருக்கவில்லை. தேவ அழைப்பு வந்ததும், தன்னுடைய இழிநிலை குறித்த உணர்வால் வேதனைப்பட்டார். ‘’ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறு பிள்ளையாயிருக்கிறேன்” என்றான். எரே 1:5, 6.தீஇவ 407.1

    தம் நம்பிக்கைக்குப் பாத்திரமான, பெரும் எதிர்ப்புக்கு மத்தி யிலும் நீதிக்காக நிற்கக்கூடிய ஒருவனை இளைஞனான எரேமியா வில் ஆண்டவர் கண்டார். சிறு பிராயத்தில் அவன் உண்மையுள்ளவர் னாக விளங்கினான். இப்பொழுதும், சிலுவையின் சிறந்த வீரனாக அவன் கஷ்டத்தைச் சகிக்கவேண்டியிருந்தது. ‘’நான் சிறு பிள்ளை யென்று நீ சொல்லாதே , நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்தி லும் நீபோய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன் னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்.’‘ ‘’நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளை யிடு கிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல் ; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணாதபடிக்கு ; நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு . இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக் கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றை தினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத் தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன். அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று தாம் தெரிந்துகொண்ட ஊழியனிடம் சொன்னார் தேவன். வச. 7, 8, 17-19.தீஇவ 407.2

    சத்தியத்திற்கும் நீதிக்கும் ஒரு சாட்சியாக, தேசத்திற்கு முன் நாற்பது வருடங்கள் எரேமியா நிற்கவேண்டியிருந்தது. விவரிக்க முடியா அவபக்தியின் ஒரு காலக்கட்டத்தில், மெய்யான ஒரே தேவ னையே தொழவேண்டியதைத் தன் வாழ்விலும் குணத்திலும் அவன் எடுத்துக்காட்ட வேண்டியிருந்தது. எருசலேமின் கொடிய முற்றுகை யின் காலத்தில், யேகோவாவின் வாயாக அவன் செயலாற்ற வேண்டி யிருந்தது. தாவீதின் வீட்டாருடைய விழுகையையும் சாலொமோ னால் கட்டப்பட்ட அழகான தேவாலயத்தின் அழிவையும் அவன் முன்னுரைக்க வேண்டியிருந்தது. துணிவோடு பேசினதின் நிமித் தம் சிறையில் அடைக்கப்பட்டபோதும், மேடைகளில் நின்று பாவத் திற்கு எதிராக ஒளிவுமறைவின்றி அவன் பேச வேண்டியிருந்தது. மனிதரின் புறக்கணிப்புக்கும் வெறுப்பிற்கும் அவமதிப்பிற்கும் ஆளானவன், நெருங்கியிருந்த அழிவு பற்றி தன் தீர்க்கதரிசனங் களில் சொல்லப்பட்டபடியே நிறைவேறுகிறதை இறுதியில் காண வேண்டியிருந்தது; அந்நகரத்தின் அழிவைத் தொடர்ந்து, அங்கு ஏற்படவிருந்த வேதனையிலும் துக்கத்திலும் அவன் பங்குகொள்ள வேண்டியிருந்தது.தீஇவ 408.1

    அழிவை நோக்கி தேசம் வேகமாகச் சென்றுகொண்டிருந்த போதிலும், அப்போதைய துக்கமான காட்சிகளைக் கடந்து எதிர் காலத்தில், தேவ ஜனங்கள் எதிரிகளின் தேசத்திலிருந்து மீட்கப் பட்டு, மீண்டும் சீயோனில் வைக்கப்படும் மகிமையான காட்சிகளை எரேமியா அடிக்கடி காண நேரிட்டது. தேவன் தம்முடைய உடன் படிக்கை உறவைதங்களோடு மீண்டும் புதுப்பிக்கவிருந்த காலத்தை அவன் தீர்க்கதரிசனமாகக் கண்டான். ‘அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போலிருக்கும்; அவர்கள் இனித்தொய்ந்து போவதில்லை . ‘எரே 31:12.தீஇவ 408.2

    தீர்க்கதரிசின ஊழியத்திற்கான தன்னுடைய அழைப்பு பற்றி எரேமியாதானே இப்படி எழுதுகிறான். ‘கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு, ‘இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன். பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க் கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றைய தினம் ஜாதி களின் மேலும் ராஜ்யங்களின் மேலும் ஏற்படுத்தினேன்” என்று கர்த் தர் என்னுடனே சொன்னார். எரே 1:9, 10.தீஇவ 409.1

    ’கட்டவும் நாட்டவும்’ என்கிற வார்த்தைகளினிமித்தம் தேவ னுக்கு ஸ்தோத்திரம். அவர்களை மீண்டும் காலூன்றச் செய்து, குணப்படுத்ததேவன் கொண்டிருந்த நோக்கத்தை இவ்வார்த்தைகள் மூலம் எரேமியா நிச்சயமாக அறிந்துகொண்டான். வரவிருந்த வரு டங்களில் கடுமையான செய்திகளை அவர்கள் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. சமீபித்திருந்த நியாயத்தீர்ப்புகள் குறித்த தீர்க்க தரிசனங்கள் பயமின்றி அறிவிக்கப்பட வேண்டியிருந்தன. சிநே யாரின் சமவெளிகளிலிருந்து ஒரு தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரவேண்டியிருந்தது. அவர்கள் என்னைவிட்டு அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளின் கிரியை யைப் பணிந்து கொண்ட அவர்களுடைய சகல தீமைகளினிமித்தமும் நான் என் நியாயந்தீர்ப்புகளை அவர்களுக்கு விரோதமாகக் கூறு வேன்” என்றார்தேவன் வச14, 16. தங்கள் பாவ செய்கையிலிருந்து மனந்திரும்பும் யாவருக்கும் பாவமன்னிப்பின் நிச்சயத்தையும் இந்த செய்திகளில் தீர்க்கதரிசி அறிவிக்கவேண்டியிருந்தது.தீஇவ 409.2

    யூதாவின் மனிதர் மனந்திரும்புதலென்னும் பணியை முற்றிலு மாக நிறைவேற்றி, தங்கள் ஆவிக்குரிய அடித்தளங்களை விரி வாகவும் ஆழமாகவும் போட வேண்டுமென, ஒரு புத்திசாலிக் கட்டட நிபுணன் போல, தன் ஊழியப் பணியின் ஆரம்பத்திலேயே அவர்களை ஊக்கப்படுத்தினான் எரேமியா. அப்போஸ்தலனாகிய பவுலால் ‘மரம், புல், வைக்கோல்’ என்றும், எரேமியாவால் குப்பை’ என்றும் கருதப்பட்ட பொருட்களால்தான் வெகுநாட்களாக அவர் கள் கட்டி வந்தார்கள். மனந்திருந்தாத அத்தேசத்தாரிடம், ‘’அவர் கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; கர்த்தர் அவர் களைத் தள்ளிவிட்டார்’ என்றான் அவன். எரேமியா 6:30. அவிசு வாசம், அவபக்தி எனும் குப்பைகளைத் தூரே எறிந்துவிட்டு, விசு வாசம், கீழ்ப்படிதல், நற்கிரியை எனும் விலையேறப்பெற்ற கல், புடமிடப்பட்ட வெள்ளி, பசும்பொன் போன்றவற்றை அஸ்திபாரப் பொருட்களாகப் பயன்படுத்திஞானமாகவும் நித்தி யத்திற்காகவும் கட்டத் துவங்குமாறு இப்பொழுது அவர்களை வலியுறுத்தினார். ஏனெனில், இவை மட்டுமே பரிசுத்த தேவனுடைய பார்வையில் ஏற்றவையாக இருக்கின்றன.தீஇவ 409.3

    தேவன் தம் மக்களுக்கு எரேமியாவின் மூலம் கொடுத்த செய்தி இதுவே: ‘ சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு. நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கப் பண்ணுவதில்லை; நான் கிருபையுள்ள வரென்று கர்த்தர் சொல்லுகிறார், ‘’நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன். நீயோ, உன் தேவனாகிய கர்த்தருக்கு விரோத மாய்த் துரோகம் பண்ணினதையும் உன் அக்கிரமத்தையும் ஒத்துக் கொள், என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள். நான் உங்கள் நாயகர்’ என்று கர்த்தர் சொல்லுகிறார்; ‘ஆனாலும் நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்; நீ என்னைவிட்டு விலகுவதில்லை’ என்று திரும்பவும் சொன்னேன். ‘சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன்’ என்கிறார். எரே 3:12-14, 19, 22.தீஇவ 410.1

    இந்த அற்புத மன்றாட்டின் கூடவே, சீர்கெட்ட தம் ஜனங்கள் தம்மிடம் திரும்புவதற்கு ஏதுவான வார்த்தையையும் கொடுத்தார் ஆண்டவர். ‘இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவ னாகிய கர்த்தர். குன்றுகளையும், திரளான மலைகளையும் நம்பு கிறது விருதா என்பது மெய்; இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவ னாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பது மெய்யே. இந்த இலச்சை யானது எங்கள் சிறுவயது முதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத் தையும், அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும், அவர்கள் குமார ரையும் குமாரத்திகளையும் பட்சித்துப்போட்டது. எங்கள் இலச்சை யிலே கிடக்கிறோம்; எங்கள் அவமானம் எங்களை மூடியிருக்கிறது; நாங்களும், எங்கள் பிதாக்களும் எங்கள் சிறு வயது முதல் இந்நாள் வரைக்கும் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ் செய்தோம்; எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சொல்லைக் கேளாமலும் போனோம்’ என்று அவர்கள் சொல்லவேண்டியிருந் தது. எரே 3:22-25.தீஇவ 410.2

    யோசியாவின்கீழ் நடைபெற்ற சீர்திருத்தம், தேசத்திலிருந்த சிலைவழிபாட்டுக் கோயில்களை அப்புறப்படுத்தியது. ஆனால், எராளமானோரின் இருதயங்கள் இன்னும் மாற்றமடையாமலே இருந்தன. முளைத்தெழும்பி, பரிபூரண அறுவடை தருவதாக தோன் றிய சத்தியத்தின் விதைகள், முட்செடிகளால் தடுக்கப் பட்டிருந்தன. இனி யொரு சீர்கேடு ஏற்பட்டால் அதோகதியாகிவிடும்; எனவே தங்கள் ஆபத்துபற்றின் உணர்வைத்தேசத்தாரிடம் ஏற்படுத்ததேவன் முயன்றார். யேகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் விளங்கி னால் மாத்திரமே தேவதயவையும் செழிப்பையும் அவர்கள் எதிர் பார்க்கமுடியும்.தீஇவ 411.1

    உபாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளைக்கவ னிக்குமாறு மீண்டும் மீண்டும் மக்களைக் கேட்டுக்கொண்டான் எரே மியா. எந்தவொரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் இவன், மோசேயின் நியாயப்பிரமாணத்திலுள்ளபோதனைகளை முக்கியப்படுத்தினான்; தேசத்திலும், ஒவ்வொரு மனிதனின் இருதயத்திலும் இது எவ்வாறு உன்னத ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கொண்டுவர முடியும் என்பதைக் காட்டினான். ‘’பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” என்று வேண்டிக்கொண்டான். எரே மியா 6:16.தீஇவ 411.2

    ஒருமுறை, தேவனுடைய கட்டளையின்படி நகரத்தின் பிர தான வாயில்களில் நின்றுகொண்டு, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்கவேண்டியதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினான் தீர்க்க தரிசி. ஓய்வு நாளின் பரிசுத்தத்தை மறந்து போகக்கூடிய ஆபத்தில் எருசலேமின் குடிகள் இருந்தனர். அந்நாளிலிருந்த உலகப்பிரகார மான காரியங்களை நாட வேண்டாமென கருத்தோடு எச்சரிக்கப் பட்டனர். கீழ்ப்படிதலை நிபந்தனையாகக் கொண்டேஓர் ஆசீர்வா தம் வாக்களிக்கப்பட்டிருந்தது. ‘’ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்கும்படிக்கு என் சொல்லைக் கேட் பீர்களானால், அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந் திருக்கிறவர்களும், இரதங்களின் மேலும் குதிரைகளின் மேலும் ஏறு கிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும், அவர்கள் பிர புக்களும், யூதாவின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நக ரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள் இந்த நகரமும் என் றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.’‘ என்றார் தேவன். எரே 17:24,25.தீஇவ 411.3

    மெய்ப்பற்றின் பலனாக செழிப்பு வாக்குரைக்கப்பட்டிருந்தது. நகரத்தின் குடிகள் தேவன்மேலும் அவருடைய பிரமாணம் மேலும் பற்றுக்கொள்ளாவிடில் அங்குச் சம்பவிக்கவிருந்த கொடிய நியாயத்தீர்ப்பு பற்றிய ஒரு தீர்க்கதரிசனமும் கூடவே கொடுக்கப்பட் டிருந்தது. தங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியுமாறும் அவருடைய ஓய்வுநாளைக் கனப்படுத்துமாறும் கொடுக்கப்பட்ட அறிவுரைக்கு அவர்கள் செவிகொடாத பட்சத்தில், நகரமும் அதன் ஸ்தலங்களும் அக்கினியால் முற்றிலும் அழிக்கப்பட இருந்தன்.தீஇவ 412.1

    எனவே, நியாயப்பிரமாணப் புத்தகத்தில் தெளிவாகச் சொல்லப் பட்டிருந்த நீதியான வாழ்வுக்குரிய மேன்மையான நியதிகளில் உறு தியாக நின்றான் தீர்க்கதரிசி. ஆனாலும், மிகவும் தீர்மானமான நட வடிக்கைகளால் மாத்திரமே நன்மைக்கேதுவான மாற்றங்களைக் கொண்டுவர முடியும் எனும் நிலையில் யூதா தேசம் இருந்தது. எனவே, மனந்திருந்தாத அந்த மக்களுக்காக ஊக்கத்தோடு அவன் பிரயாசப்பட்டான். நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங் கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள். எருசலேமே, நீ இரட்சிக்கப்படும் படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு’ என்று வேண்டிக்கொண்டான். எரே 4:3, 14.தீஇவ 412.2

    ஆனால், மனந்திருந்தவும் சீர்திருந்தவும் கொடுக்கப்பட்ட அழைப்பிற்குப் பெருந்திரளானவர்கள் செவி சாய்க்கவில்லை. நல்லராஜாவான யோசியாவிற்குப்பிறகு, தேசத்தை ஆண்ட அரசர் கள் நம்பிக்கைக்குப் பாத்திரமற்றவர்களாகவும் அநேகரை வழி விலகச் செய்கிறவர்களாகவும் விளங்கினார்கள். எகிப்தின் ராஜா வால் அரசாளாதபடி செய்யப்பட்ட யோவாகாஸைத் தொடர்ந்து, யோசியாவின் மூத்த குமாரனான யோயாக்கீம் அரசாண்டார். யோயாக்கீமுடைய ஆளுகையின் ஆரம்பத்திலிருந்தே, தன் பிரிய மான் தேசத்தை அழிவிலிருந்தும் தன் மக்களைச் சிறையிருப்பிலி ருந்தும் தப்புவிக்க முடியுமென்கிற நம்பிக்கையை இழந்தான் எரே மியா. கொடிய அழிவு தேசத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. ஆனால், அவன் அமைதியாக இருந்துவிடவில்லை . தேவனுக்கு உண்மையோடிருந்தவர்கள், தொடர்ந்து நீதியிலேயே நிலைத்திருக்க அவர் அவர்களை ஊக்கப்படுத்தப்பட வேண்டியிருந்தது; முடிந் தால், பாவிகளையும் அவர்கள் அக்கிரமத்திலிருந்து மனந்திருப்ப வேண்டியிருந்தது.தீஇவ 412.3

    அதற்குப் பகிரங்கமாகவும் நீடிய விளைவை ஏற்படுத்தும் வகையிலும் முயற்சி எடுக்கவேண்டியது கட்டாயமானது. தேவா லயத்தின் பிராகாரத்தில் நின்றுகொண்டு, அங்கு வந்து போய்க் கொண்டிருந்த யூதா மக்கள் யாவரிடமும் அறிவிக்குமாறு எரேமி யாவுக்குக் கட்டளையிட்டான் தேவன். சீயோனிலிருந்த பாவிகள் அச்செய்திக்குச் செவிகொடுத்துத், தங்கள் தீய வழிகளிலிருந்து திரும்புவதற்கான சகல தருணங்களையும் ஏற்படுத்த, தனக்குக் கொடுக்கப்பட்ட செய்திகளில் ஒரு வார்த்தை விடாமல் எரேமியா சொல்ல வேண்டியிருந்தது.தீஇவ 413.1

    அதற்குக் கீழ்ப்படிந்தான் தீர்க்கதரிசி . கர்த்தருடைய வீட்டின் வாசலில் நின்றுகொண்டு, வேண்டுதலோடும் எச்சரிப்போடும் தன் சத்தத்தை உயர்த்தினான்.தீஇவ 413.2

    ’கர்த்தரைப் பணிந்துகொள்ள இந்த வாசல்களுக்குள்ளே பிர வேசிக்கிற யூத ஜனங்களாகிய நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய சேனை களின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும், உங்கள் கிரியை களையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத் திலே குடியிருக்கப் பண்ணுவேன். கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த் தைகளை நம்பிக்கொள்ளாதிருங்கள். நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் கிரியை களையும் நன்றாய்ச் சீர்ப்படுத்தி, நீங்கள் மனுஷ னுக்கும் மனுஷனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து, பரதேசி யையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், குற்ற மில்லாத இரத்தத்தை இந்த ஸ்தலத்திலே சிந்தாமலும், உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும் இருப்பீர்களே யாகில், அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேச மாகிய இந்த ஸ்தலத்திலே உங்களைச் சதாகாலமும் குடியிருக்கப்பண் ணுவேன்’ என்று அவர் சொன்னார். எரேமியா 7:2-7.தீஇவ 413.3

    அவர்களைத் திருத்துவதற்காக, அவர்களைக் கடுமையாகக் கண்டிக்க தேவன் விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரி கிறது. மனந்திருந்தாதவர்களிடம் மன்றாடும் பொருட்டு அவர் தம் நியாயத்தீர்ப்புகளைத் தாமதப்படுத்தியிருந்தார். ‘பூமியிலே கிருபை யையும் நீதியையும் நியாயத்தையும் செய்கிறவர், பாவிகளான தம் பிள்ளைகள் மேல் இரக்கம் கொண்டார்; நித்திய ஜீவனுக்கான வழியை எவ்விதத்திலாவது அவர்களுக்குப் போதிக்க முடிந்த வரையில் முயன்றார். எரே 9:24. ஜீவனுள்ள மெய் தேவனாகிய தம்மை மட்டுமே அவர்கள் சேவிக்கும் படியாகவே, அடிமைத் தனத்திலிருந்து அவர்களைக் கொண்டுவந்தார். நெடு நாட்களாக சிலைவழிபாட்டில் நிலைத்திருந்து, தம்முடைய எச்சரிப்புகளை அவமதித்தபோதிலும், அவர்களைத் தண்டிக்கிற செயலைத் தாமதிக்கவும், மனந்திரும்புவதற்கு இன்னொரு தருணம் கொடுக் கவும் தாம் சித்தமாயிருந்ததை அவர்களுக்கு இப்போது அறிவித் தார். இருதயம் முற்றிலுமாகச் சீர்திருந்தினால் மட்டுமே சீக்கிரத்தில் நிகழ இருந்த அழிவைத் தவிர்க்கமுடியும் எனும் உண்மையை அவர்களுக்குத் தெளிவுப்படுத்தினார். தேவாலயத்திலும் அதன் ஆராதனைகளிலும் அவர்கள் வைத்திருந்திருந்த நம்பிக்கை வீணா யிருந்தது. சம்பிராதயங்களும் சடங்காச்சாரங்களும் பாவத்தை நிவிர்த்தி செய்யமுடியாது. தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமென்று அவர்கள் தங்களைச் சொல்லிக்கொண்டாலும், இரு தயமும் வாழ்க்கை முறையும் மாறுவதால் மாத்திரமே, நீண்ட நாள் அக்கிரமத்தின் தவிர்க்கமுடியாத விளைவிலிருந்து அவர்கள் தப் பிக்கக்கூடிய நிலை இருந்தது.தீஇவ 413.4

    பரிசுத்த வேதாகமத்திலுள்ள யேகோவாவின் நியமங்களான ‘உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படியே செய்யுங்கள்’ என்பதே ‘யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும்’ எரேமியாவின் செய்தியாயிருந்தது. எரே 11:6. யோயாக் கீமுடைய ஆளுகையின் ஆரம்பத்தில் தேவாலயப் பிராகாரங்களில் நின்று அவர் அறிவித்த செய்தி இதுவே.தீஇவ 414.1

    எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதல் இஸ்ரவேலுக்கு ஏற் பட்ட அனுபவம் சுருக்கமாகச் சொல்லப்பட்டது. என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப் பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக் கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும் படிக்கு நடவுங்கள்’ என்று அவர்களோடு தேவன் உடன்படிக்கை செய்திருந்தார். எரே 7:23. இந்த உடன்படிக்கையை மீண்டும் மீண் டும் வெட்கமில்லாமல் மீறினார்கள். தெரிந்துகொள்ளப்பட்ட தேசத் தாரோ, ‘தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின் படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்னிட்டல்ல, பின்னிட்டே போனார் கள். ‘எரே 7:23, 24.தீஇவ 414.2

    ’’எருசலேமியராகிய இந்த ஜனம் என்றைக்கும் வழிதப்பிப் போகிறதென்ன?’‘ என்று கேட்டார் தேவன். எரே 8:5. தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாததும், திருந்த மறுத்ததுமே அதற்குக் காரணமென கூறினான் தீர்க்கதரிசி. எரே 5:3. ‘சத்தியம் அழிந்து, அது அவர்கள் வாயிலிருந்து அற்றுப்போனது.’ ‘ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப் புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியா யத்தை அறியார்கள்’‘ இவைகளினிமித்தம் அவர்களை விசாரியா திருப்போனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்’‘ என்று புலம்பினான். எரே 7:28; 8:7; 9:9.தீஇவ 415.1

    இருதயத்தை ஆழமாகச் சோதிப்பதற்கான நேரம் சமீபித்திருந் தது. யோசியாவின் ஆட்சியில் மக்களின் நிலையில் சிறிதளவு நம் பிக்கையாவது இருந்தது. அவனும் யுத்தத்தில் விழுந்து போனதால், அவர்களுக்காகப் பரிந்து பேச அவரால் கூடாமற்போனது. அவ் வாறு பரிந்து பேசுவதற்கான தருணமெல்லாம் தீர்ந்து போகுமா விற்கு தேசத்தின் பாவமிருந்தது. ‘மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்ச மாய்ச் சாராது; இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும் படி இவர்களைத் துரத்திவிடு. ‘’எங்கே புறப் பட்டுப்போவோம்?’‘ என்று இவர்கள் உன்னைக்கேட்டால், நீ அவர்களை நோக்கி, ‘’சாவுக் கும் ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும்” என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு என் றார் தேவன். எரே 15:1,2.தீஇவ 415.2

    அப்பொழுது கொடுக்கப்பட்டிருந்ததேவ இரக்கத்தின் அழைப் புக்கு செவிகொடுக்க மனக்கடினம் கொண்ட அந்தத் தேசத்தார் மறுத்ததால், ஒரு நூற்றாண்டுக்கு முன் இஸ்ரவேல் எனும் வடராஜ் யத்திற்குச் சம்பவித்த நியாயத்தீர்ப்பே அவர்கள் மேல் கொண்டுவர இருந்தது. இப்பொழுதும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட செய்தி இதுவே: ‘நான் உங்களிடத்துக்கு, ஏற்கனவே அனுப்பிக்கொண்டி ருந்தும், நீங்கள் கேளாமற்போன என் ஊழியக்காரராகிய தீர்க்க தரிசிகளின் வார்த்தைகளை நீங்கள் கேட்கும்படிக்கும், நான் உங்கள் முன் வைத்த என் நியாயப்பிரமாணத்தின்படி நீங்கள் நடக் கும்படிக்கும், நீங்கள் என் சொல்லைக் கேளாமற்போனால், நான் இந்த ஆலயத்தை சீலோவாவைப் போலாக்கி, இந்த நகரத்தைப் பூமி யிலுள்ள எல்லா ஜாதிகளுக்கு முன்பாகச் சாபமாக்கிப் போடுவேன்’ எரே 26:4-6.தீஇவ 415.3

    தேவாலயப் பிராகாரத்தில் நின்று, எரேமியா சொல்வதைக் கேட்டவர்கள் அவர் சீலோபற்றிக் குறிப்பிட்டதையும், ஏலியின் நாட்களில் பெலிஸ்தியர் இஸ்ரவேலை மேற்கொண்டு, உடன்படிக் கைப் பெட்டியைக் கொண்டுசென்ற காலத்தைக் குறிப்பிட்டதையும் தெளிவாக அறிந்துகொண்டார்கள்.தீஇவ 416.1

    பரிசுத்தப் பணியில் இருந்ததன் குமாரர் செய்த அக்கிரமத்தை யும், தேசத்தில் பரவியிருந்த தீமையையும் கண்டுகொள்ளாமல் இருந் ததுதான் ஏலியின் பாவமாகும். அந்தத் தீமைகளைச் சரிசெய்ய அவர் அக்கறையற்றிருந்ததால், இஸ்ரவேலின்மேல் கொடிய அழிவு வர இருந்தது. அவனுடைய குமாரர் யுத்தத்தில் விழுந்தனர். ஏலிதாமே தன் ஜீவனை இழந்தான். தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி இஸ்ரவேல் தேசத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டது, ஜனங்களில் முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். பாவம் கண்டிக்கப்படாமலும் தடுக்கப்படாமலும், வளரும்படி விடப்பட்டதாலேயே இப்படியெல் லாம் நடந்தன. தாங்கள் பாவம் செய்துவந்த போதிலும், உடன் படிக்கைப் பெட்டி தங்களோடிருந்ததால், பெலிஸ்தியர்மேல் தங் களுக்கு வெற்றி கிடைக்குமென இஸ்ரவேலர் வீணாக எண்ணியிருந் தனர். ஏரேமியாவின் நாட்களிலும் அப்படியே. தேவனால் நியமிக்கப் பட்ட ஆலயச் சடங்காச்சாரங்களைச் சரியாக ஆசரித்தால், தங்கள் பாவ போக்குக்கேற்ற நீதியான தண்டனையிலிருந்து தாங்கள் தப்பிக்கொள்ளலாமென யூதாவின் குடிகள் நம்பினர்.தீஇவ 416.2

    இன்றைய தேவசபையில் பொறுப்பான பதவி வகிப்பவர் களுக்கு எத்தகைய ஒரு பாடம் இது! சத்தியத்தின் நோக்கத்திற்குக் கனவீனத்தைக் கொண்டுவரும் பாவங்களை உண்மையோடு அணுக வேண்டியதற்கு எத்தகைய எச்சரிப்பு இது! தேவ பிரமாணத்திற்குப் பாத்திரவான்களெனச் சொல்லிக்கொள்ளும் எவரும், தாங்கள் வெளிப்பார்வைக்குக் கற்பனையை மதித்து நடப்பதாகக் காட்டிக் கொள்வதால், தேவனுடைய நியாயத்திலிருந்து தப்பிக்கொள்ள லாமென்று தங்களையே வஞ்சித்துக்கொள்ள வேண்டாம். பாவச் செய்கையிலிருந்து மக்களைச் சுத்திகரிக்க தேவ ஊழியர்கள் பெரு முயற்சி எடுத்துக்கொள்ளும்போது, அவர்களின்வைராக்கியத்தைக் குற்றப்படுத்தவோ, தங்கள் பாவத்தைக் கண்டிக்கக் கூடாதென்று சொல்லவோ வேண்டாம். தம்முடைய பிரமாணத்தைக் கைக்கொள் வதாகச் சொல்கிறவர்கள் சகல அக்கிரமங்களிலிருந்து விலகவேண்டு மென்று பாவத்தை வெறுக்கும் ஒரு தேவன் அழைக்கிறார். விருப் பத்தோடு கீழ்ப்படிவதையும், மனந்திரும்புவதையும் இன்றைய ஆண்களும் பெண்களும் புறக்கணிக்கும்போது, முற்கால இஸ்ர வேலருக்கு ஏற்பட்ட மோசமான விளைவுகளையே அவர்கள் சந் திக்க நேரிடும். யேகோவாவின் நியாயத்தீர்ப்புகள் தாமதித்துக் கொண்டே இருப்பதில்லை. அதற்கும் ஒரு எல்லையுண்டு . தெரிந்து கொள்ளப்பட்ட கருவிகள் மூலம் இன்றைய இஸ்ரவேலருக்கு கொடுக்கப்படுகிற ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் புறக்கணிப்போர் தண்டனையிலிருந்து தப்பமுடியாது என்பதற்கு எரேமியாவின் நாட்களில் நிகழ்ந்த எருசலேமின் அழிவு அவர் களுக்கு ஒரு எச்சரிப்பாகும்.தீஇவ 416.3

    ஆசாரியர்களுக்கும் மக்களுக்கும் எரேமியா கொடுத்த செய்தி அநேகருடைய எதிர்ப்பைச் சம்பாதித்தது. அவர்கள் எல்லாரும் மிகவும் மூர்க்ககோபங்கொண்டு, ‘இந்த ஆலயம் சீலோவைப் போலாகி, இந்த நகரம் குடியில்லாமல் பாழாய்ப்போம் என்று, நீ கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்வானேன் என்று சொல்லி, கர்த்தருடைய ஆலயத்திலே எரேமியாவுக்கு விரோத மாய்க் கூடினார்கள்’. எரே 26:9. அவர் பூசி மெழுகுகிறவண்ணம் தங்களிடம் பேசாததாலும், பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லாததா லும், ஆசாரியர்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களும் அவர் மேல் கடுங்கோபங்கொண்டார்கள். இப்படியாகத் தேவசெய்தி புறக்கணிக்கப்பட்டது; அவருடைய ஊழியருக்குக் கொலைமிரட் டல் விடப்பட்டது.தீஇவ 417.1

    எரேமியாவின் வார்த்தைகள் பற்றிய செய்தி , யூதாவின் பிரபுக் களை எட்டியது. காரியத்தின் உண்மை குறித்துத் தாங்களே அறிந்து கொள்ள ராஜ மாளிகையைவிட்டு, தேவாலயத்திற்கு விரைந்தார் கள். ‘அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக் களையும் சகல ஜனங்களையும் நோக்கி, ‘’இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன்; உங்கள் செவிகளாலே நீங்கள்கேட்டபடி இந்த நகரத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே” என்றார் கள். எரே 26:11. ஆனால், பிரபுக்களுக்கும் மக்களுக்கும் முன்பாக தைரியத்தோடு நின்றிருந்த எரேமியா, ‘’நீங்கள் கேட்ட எல்லா வார்த்தை களையும் இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்திற்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார். இப் பொழுது நீங்கள் உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்தி, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளுங் கள்; அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன தீங்குக்கு மனஸ்தாபப்படுவார். நானோவெனில், இதோ, உங்கள் கையில் இருக்கிறேன்; உங்கள் பார்வைக்கு நன்மையும் நியாய முமாயிருக்கிறதை எனக்குச் செய்யுங்கள். ஆகிலும் நீங்கள் என் னைக் கொன்று போட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின் மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள்: இந்த வார்த்தை களையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யா கவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார்’‘ என்றான். வச 12-15.தீஇவ 417.2

    உயர் அதிகாரத்தில் இருந்தவர்களின் மிரட்டல் தொனிக்குத் தீர்க்கதரிசி அடிபணிந்திருப்பானானால், அவனுடைய செய்தி பய னற்றதாய்ப்போயிருக்கும்; அவன் தன் உயிரையும் இழந்திருக்கக் கூடும். ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த அந்த எச்சரிப்பைத் தைரி யத்தோடு அவன் அறிவித்ததால், அது மக்களிடம் மதிப்பைப் பெற்ற றது; அதன் விளைவாக, இஸ்ரவேலின் பிரபுக்கள் அவனுக்குச் சாதக மாகத் திரும்பினார்கள். அவர்கள் ஆசாரியர்களோடும் கள்ளத்தீர்க்க தரிசிகளோடும் வாதிட்டு, அவர்கள் பரிந்துரைத்த கடுமையான நட வடிக்கைகள் எத்தனை மதியீனமானவை என்பதைக்காட்டினார்கள். அவர்களுடைய வார்த்தைகள் மக்களைச் சிந்திக்கும்படிச் செய்தது. இப்படியாக, தேவன் தம்முடைய ஊழியனுக்குப் பாதுகாவலர்களை எழும்பச் செய்தார்.தீஇவ 418.1

    எரேமியாவுக்கு விரோதமாக ஆசாரியர்கள் தீர்மானித்ததை எதிர்ப்பதற்கு மூப்பர்களும் ஒன்றுசேர்ந்துகொண்டார்கள். ‘சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம்; இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போம்’ என்று எருசலேமின்மேல் தீர்க்கதரிசனம் உரைத்த மீகாவின் சம்ப வத்தை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். மேலும் அவர்கள், அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனஸ்தாபப் பட்டார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகாபொல்லாப்பை வரப்பண்ணுகிறவர்களாயிருக்கிறோமே’‘ என்று சொன்னார்கள். வச 18, 19.தீஇவ 418.2

    தங்களைக் கடிந்து கொள்ளும் சத்தியங்களை அவர் சொன்ன போது சகிக்க முடியாமல் போன ஆசாரியர்களிலும் கள்ளத்தீர்க்க தரிசிகளிலும் அநேகர் தேசத்துரோகம் என்று குற்றச்சாட்டப்பட்டு, அவர் கொல்லப்படுவதைக் காண ஆவலோடிருந்தார்கள். ஆனா லும், உயர் அந்தஸ்திலிருந்தோரின் வேண்டுகோள் மூலம் தீர்க்க தரிசியின் உயிர் தப்பியது.தீஇவ 419.1

    தான் அழைக்கப்பட்ட நாள் முதல், தன்னுடைய ஊழியத்தின் முடிவுமட்டும் யூதாவுக்கு முன் ஓர் அரணாகவும் துருக்கமாகவும் ‘ நின்றான் எரேமியா. மனிதரின் கோபம் அவனை மேற்கொள்ள முடியவில்லை. ‘அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணு வார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பல வந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்’ என்று தம் ஊழியனுக்கு முன்னதாகவே தேவன் வாக்குக் கொடுத்திருந்தார். எரே 6:27; 15:20, 21.தீஇவ 419.2

    இயல்பிலேயே பயமும், கூச்ச சுபாவமும் கொண்ட எரேமியா, அமைதியும் சமாதானமுமான மரணத்தையே விரும்பினான். என்றென்றுமாக பாவத்தில் கிடந்த தன் அன்பு தேசத்தாரின் மனக் கடினத்தை அங்கு அவர் காணவேண்டியதில்லையே. பாவத்தால் ஏற்பட்ட அழிவை எண்ணி, அவனுடைய இருதயம் வியாகுலத்தால் துன்புற்றது. ‘ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமா னால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும் பகலும் அழுவேன். ஆ, வனாந்தரத்தில் வழிப்போக்கரின் தாபரம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என்ஜனத்தைவிட்டு, அவர்களிடத்தில் இராதபடிக்குப் போய்விடுவேன்; அவர்களெல் லாரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள்’ என்று புலம்பினான். எரே 9:1,2.தீஇவ 420.1

    கொடுமையான பரியாசங்களை அவன் சகிக்க வேண்டியிருந் தது. மக்களின் மனமாற்றத்திற்காக அவர் கொண்ட பாரத்தை அவர் கள் அற்பமாக எண்ணி, அவனுடைய செய்திகளைப் புறக்கணித்த போது, பரியாசம் எனும் அம்புகள், அவருடைய இளகின் மனதை மீண்டும் மீண்டும் புண்படுத்தின. ‘நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப்பாடலுமானேன்.’ ‘நாள் தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம் பண்ணுகிறார்கள்.’‘ என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து: ஒரு வேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு அவனில் குரோதந்தீர்த்துக் கொள்வோம் என்கிறார்கள்’ என்று புலம்பினான். புலம்பல் 3:14; எரே மியா 20:7, 10.தீஇவ 420.2

    ஆனால், அதனைத் தாங்கிக்கொள்ளும்படி அனுதினமும் பெலப்படுத்தப்பட்டான் தீர்க்கதரிசி. ‘கர்த்தரோபயங்கரமான பராக் கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்; ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங் கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும் ‘கர்த் தரைப் பாடுங்கள், கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்’ என்று விசுவாசத்தோடு கூறினான். எரே 20:11,13தீஇவ 420.3

    தன்னுடைய வாலிப நாட்களிலும், பின்னர் தன்னுடைய ஊழி யக்காலத்திலும் எரேமியாவுக்கு ஏற்பட்டிருந்த அனுபவங்கள் ‘மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடை களை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் ‘ அவர் கற்றுக்கொண்டார். ‘கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த்தண்டியும்’ என்று ஜெபிக்க அவன் கற்றுக்கொண் டான். எரே 10:23, 24.தீஇவ 421.1

    சோதனை மற்றும் வேதனையின் பாத்திரத்தில் பானம்பண்ண அழைக்கப்பட்டபோதும், என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத் திருந்த நம்பிக்கையும் அழிந்து போயிற்று’ என்று தன் துக்கத்திலே சொல்லத் தூண்டப்பட்ட போதும், தேவன் தனக்குச் செய்தவற்றை நினைத்துப் பார்த்தார்; ‘’நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவை கள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக் கிறது. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும் ; ஆகை யால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன். தமக்குக் காத் திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக் கிறது நல்லது’‘ என்று சந்தோஷத்தோடு கூறினான். புலம் 3:22-26.தீஇவ 421.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents