Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    31 - அஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை

    தன் ஊழியக்காலம் முழுவதும் புறஜாதியாருக்கான தேவதிட் டம் குறித்துத் தெளிவான சாட்சி உடையவராய் இருந்தார் ஏசாயா. அந்தத் தேவதிட்டம் குறித்து மற்ற தீர்க்கதரிசிகளும் குறிப்பிட்டிருந்த னர். ஆனால், அவர்களின் வார்த்தைகளை மக்கள் புரிந்துகொள் ளவே இல்லை. மாம்சத்தின்படி ஆபிரகாமின் சந்ததியாரல்லாத அநே கர், தேவனுடைய இஸ்ரவேலரோடு எண்ணப்படுவார்கள் எனும் சத்தியத்தை யூதாவுக்குத் தெளிவாக அறிவிக்கும்படி ஏசாயாவுக்கு அரு ளப்பட்டது. அவர் காலத்தின் இறையியல் கருத்தோடு இப் போதகம் ஒத்திருக்கவில்லை . ஆனாலும், தேவன் தனக்கு அரு என செய்திகளை ஏசாயா பயமின்றி அறிவித்தார்; ஆபிரகாமின் சந்ததிக்கான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற விரும்பின அநேகரின் இருதயங்களில் நம்பிக்கையைக் கொண்டுவந்தார்.தீஇவ 367.1

    ஏசாயாவின் இப்போதனையில் கவனம் கொள்ள ரோமின் விசுவாசிகளுக்குத் தன் நிருபத்தில் அழைப்பு விடுக்கிறார் புறஜாதி யாருக்கான அப்போஸ்தலன். ‘’அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான்” என்கிறார் பவுல். ரோமர் 10:20தீஇவ 367.2

    பெரும்பாலும், புறஜாதியாருக்கான தேவ திட்டத்தை அறிய விரும்பாதவர்களாக, அல்லது இயலாதவர்களாகவே இஸ்ரவேலர் காணப்பட்டனர். ஆனால், இந்த ஒரே நோக்கத்தை முன்னிட்டே அவர்கள் பிரித்தெடுக்கப்பட்ட மக்களாக விளங்கினார்கள்; பூமி யின் தேசங்களுக்கு மத்தியில் சுதந்தர தேசத்தாராக நிலை நிறுத்தப் பட்டார்கள். உடன்படிக்கையின் வாக்குத்தத்தத்தை முதன்முதலில் பெற்றுக்கொண்ட அவர்களின் பிதாவான ஆபிரகாம், தான் புறஜாதி யாருக்கு வெளிச்சம் தரும்படியாக, தன் இனத்தாரைவிட்டு அப்பா லுள்ள தேசங்களுக்குச் செல்ல அழைக்கப் பட்டார். ஆபிரகாமின் சந்ததி கடற்கரை மணலத்தனையாய்த் திரளாயிருக்கும் என்று அவ ருக்கு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்ட போதிலும், கானான் தேசத் தில் ஒரு மகத்தான ஜாதியை அவர் உருவாக்க இருந்தது, சுயநல நோக்கத்திற்காக அல்ல. தேவன் அவரோடு பண்ணின உடன்படிக் கையில், பூமியின் சகல ஜாதிகளுக்கும் பங்கிருந்தது. நான் உன் னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன்; உன்னைச் சபிக்கிற வனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்’‘ என்றார் யேகோவா. ஆதி 12:2,3.தீஇவ 368.1

    ஈசாக்கு பிறப்பதற்குச் சற்றுமுன் அந்த உடன்படிக்கை புதுப் பிக்கப்பட்டது. அப்போது, மனித இனத்திற்கான தேவநோக்கம் மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டது. அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்’ என்பதே அந்த வாக்குத்தத்தப் பிள்ளையைக்குறித்த தேவனுடைய நிச்சயமாயிருந்தது. ஆதி 18:17. அதன்பிறகு, ‘’உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்’‘ என்று மீண்டும் ஒருமுறை பரலோகத்தின் தேவன் அறிவித்தார். ஆதியாகமம் 22:18.தீஇவ 368.2

    இந்த உடன்படிக்கையோடு சம்பந்தப்பட்ட அனைத்து நிபந்த னைகளையும் ஆபிரகாமின் பிள்ளைகளும் அவருடைய பிள்ளை களின் பிள்ளைகளும் நன்கு அறிந்திருந்தனர். ஜாதிகளுக்கு ஓர் ஆசீர்வாதமாக இருக்கும் படிக்கும் தேவனுடைய நாமம் ‘’பூமியி லெங்கும் “பிரஸ்தாபமாகும் படிக்கே எகிப்தின் அடிமைத்தனத்தி லிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். யாத்திராகமம் 9:16. அவ ருடைய நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தால், மற்ற ஜனங் களைக் காட்டிலும் அறிவிலும் ஞானத்திலும் அதிகம் உயர்த்தப்பட விருந்தனர். ஆனால், அவர்கள் மூலமாக பூமியின் சகல ஜாதிகளுக் கான’ தேவநோக்கம் நிறைவேறும் படிக்கே, அவர்கள் இந்த மேன் மையைப் பெற்று, உயர் இருந்தனர்.தீஇவ 368.3

    இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப் பட்டதிலும் வாக்குத்தத்த தேசத்தை அவர்கள் பெற்றுக்கொண்ட திலும் சம்பந்தப்பட்டிருந்த மகத்தான தேவசெயல்கள், இஸ்ரவே லின் தேவனே ஒப்புயர்வற்ற ராஜா’ என்பதைப் புறஜாதியார் அநே கர் உணர்ந்துகொள்ள வழிவகுத்தது. நான் எகிப்தின் மேல் என் கையை நீட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப் படப் பண்ணும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார் கள்” என்பதே வாக்குத்தத்தமாயிருந்தது. யாத்திராகமம் 7:5. அகங் காரம் கொண்ட பார்வோன்கூட யேகோவாவின் வல்லமையை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குள்ளானான். நீங்கள் புறப்பட் டுப்போய் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள். என்னையும் ஆசீர் வதியுங்கள்’‘ என்று மோசேயையும் ஆரோனையும் அவன் கேட் டுக்கொண்டான். யாத்திராகமம் 12:31, 32.தீஇவ 369.1

    அவ்வாறு புறப்பட்டுச் சென்ற திரளான இஸ்ரவேலர்கள், எபி ரெயர்களான தங்கள் தேவனுடைய மகத்துவம் கிரியைகள் குறித்த அறிவு தங்களுக்கு முன்னரே அஞ்ஞானிகளை எட்டியதையும், அவர்களில் சிலர் அவரே மெய்யான தேவன் என்பதை அறிந்து கொண்டிருந்ததையும் கண்டுகொண்டார்கள். ‘’உங்கள்தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்” என் பதே துன்மார்க்க எரிகோவில் ஓர் அஞ்ஞானப் பெண்ணின் சாட்சி யாயிருந்தது. யோசுவா 2:11. அவ்வாறு , யேகோவாவைக் குறித்து அவள் பெற்ற அந்த அறிவுதான் அவளுடைய இரட்சிப்புக்கு ஏது வாயிற்று. விசுவாசத்தினாலே, ராகாப் ... கீழ்ப்படியாதவர்கள் ளோடேகூடச் சேதமாகாதிருந்தாள்” எபிரெயர் 11:31. தம்முடைய தெய்வீக அதிகாரத்தை ஒப்புக்கொண்ட சிலைவழிபாட்டுக்காரர் கள்மேல் தேவன் இரக்கம் பாராட்டியதற்கு அவளுடைய மனமாற் றம் மாத்திரம் உதாரணமல்ல. கிபியோன் தேசத்தாரில் ஏராளமான மக்கள் தங்கள் அஞ்ஞான மார்க்கத்தைப் புறக்கணித்து, இஸ்ரவேல ரோடு இணைந்து, உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களில் பங்கு கொண்டார்கள்.தீஇவ 369.2

    தேசம், இனம் அல்லது ஜாதி ஆகியவற்றை முன்னிட்டு எழும்பு கிற எந்த வேறுபாட்டையும் தேவன் அங்கீகரிப்பதில்லை. சகல மனிதரையும் சிருஷ்டித்தவர் அவர். சிருஷ்டிப்பின்படி சகல மனி தரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மீட்பின்படியும் அனை வரும் சமம்தான். ஒவ்வொரு ஆத்துமாவும் தேவனிடத்தில் சுதந்தர மாகச் செல்லும் படி, பிரிவினையான ஒவ்வொரு சுவரையும் உடைத்து, தேவாலயப் பிராகாரங்களின் ஒவ்வொரு அறையையும் திறந்து விடும்படி வந்தார் கிறிஸ்து. அவருடைய அன்பு அதிக விஸ்தாரமானது, ஆழமானது, நிறைவானது; அது எங்கும் ஊடுரு விச் செல்கிறது. சாத்தானுடைய வஞ்சகங்களால் ஏமாந்தவர்களை, அவனுடைய செல்வாக்கிலிருந்து தூக்கிவிட்டு, வாக்குத்தத்தமெனும் வானவில்லால் சூழப்பட்ட தேவ சிங்காசனத்திற்கு அருகாமையில் அது அவர்களை நிறுத்துகிறது. கிறிஸ்துவில் யூதனென்றோ கிரேக்க னென்றோ, அடிமையென்றோ சுயாதீன னென்றோ இல்லை.தீஇவ 369.3

    இஸ்ரவேலர் வாக்குத்தத்த தேசத்தைச் சென்றடைந்த பிறகான காலங்களில், அஞ்ஞானிகளின் இரட்சிப்புக்கான யேகோவாவின் நன்மையான திட்டங்கள் முற்றிலும் மறக்கப்பட்டுப்போயின. எனவே, அவர் தம் திட்டத்தை மீண்டும் புதுப்பிக்கவேண்டியதா யிற்று. இவ்வாறாகப் பாடுகிறார் சங்கீதக்காரன்:தீஇவ 370.1

    ’’பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்;
    ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்”

    “பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்,
    எத்தியோப்பியா தேவனை நோக்கிக்கையெடுக்கத் தீவிரிக்கும்.”

    “ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும்
    , பூமியிலுள்ள ராஜாக்களெல்லாம் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.”

    ’’பின் சந்ததிக்காக இது எழுதப்படும்;
    சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும்.
    கர்த்தர் கட்டுண்ட வர்களின் பெருமூச்சைக் கேட்கவும்,
    கொலைக்கு நியமிக்கப்பட்ட வர்களை விடுதலையாக்கவும்,
    தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து,
    வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.

    கர்த்தருக்கு ஆராதனை செய்ய
    , ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில்,
    சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும்,
    எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்.’‘
    தீஇவ 370.2

    சங்கீ தம் 22:27; 68:31; 102:17-22.

    இஸ்ரவேல் தன் தேவனுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்திருக்குமானால், அதன் ஆசீர்வாதங்களில் பூமியின் சகல தேசங்களும் பங்கு பெற்றிருக்கும். ஆனால், இரட்சிப்பின் சத்தியம் குறித்த அறிவைப் பெற்றிருந்தவர்கள், தங்களைச் சுற்றிலுமிருந்த வர்களின் தேவைகளை தங்கள் இருதயங்களில் உணராதிருந்தார் கள். தேவநோக்கத்தை இஸ்ரவேலர் மறந்ததால், புறஜாதியார் தேவடைய இரக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று இஸ்ரவேலர் நினைத்தார்கள். சத்தியத்தின் ஒளி மறைக்கப்பட்டது, எங்கும் இருள் பரவியது. அறியாமை எனும் திரையானது தேசங்களை மூடியிருந்தது; தேவ அன்பு அறியப்படவில்லை ; தீமையும் மூட நம் பிக்கையும் பெருகின.தீஇவ 371.1

    தீர்க்கதரிசன ஊழியத்திற்கு ஏசாயா அழைக்கப்பட்டபோது, இப்படிப்பட்ட ஒரு நிலைதான் அவரை வரவேற்றுக் கொண்டிருந் தது; ஆனாலும், அவர் அதைரியமடையவில்லை . ஏனெனில், தேவ னுடைய சிங்காசனத்தைச் சுற்றிலுமிருந்த தூதர்களின், ‘பூமி யனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” எனும் வெற்றிகீதம் அவருடைய காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருந்தது. ஏசாயா 6:3. ‘’சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமிகர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் போது, தேவ னுடைய சபையால் உண்டாகும் மகிமையான வெற்றி குறித்த தரி சனங்களால், அவருடைய விசுவாசம் பெலப்பட்டது. ஏசாயா 11:9. ‘’சகல ஜனங்கள் மேலுள்ள முக்காடும், சகல ஜாதிகளையும் மூடி யிருக்கிற மூடலும்” இறுதியில் அழிக்கப்பட இருந்தது. ஏசாயா 25:7. மாம்சமான யாவர் மேலும் தேவ ஆவியானவர் ஊற்றப்பட இருந் தார். நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்கள் தேவனுடைய இஸ்ர வேலரோடு எண்ணப்பட இருந்தார்கள். ‘’அதினால் அவர்கள் புல் லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச் செடிகளைப் போலவளருவார்கள். ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன், யாக்கோபின் பேரைத் தரித்துக்கொள்ளுவான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப் போட்டு, இஸ்ரவே லின் நாமத்தை தரித்துக்கொள்ளுவான்” என்றார் தீர்க்கதரிசி. ஏசாயா 44:4, 5.தீஇவ 371.2

    பாவத்தைவிட்டு மனந்திருந்தாத யூத மக்களைப் பூமியின் தேசங்கள் நடுவே சிதறப்பண்ண இருந்ததில் தேவனுடைய நன்மை யான திட்டம் பற்றி தீர்க்கதரிசிக்கு ஒரு வெளிப்பாடு கொடுக்கப்பட் டது. ‘’என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச் சொல்லு கிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்” என்று கர்த்தர் சொன்னார். ஏசாயா 52:6. கீழ்ப்படிதலோடு நம்பிக்கைக்குரியவர் களாகவும் இருக்கவேண்டியது பற்றி அவர்கள்தாமே கற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. மேலும், தாங்கள் நாடு கடந்து செல்லும் இடங்களில் ஜீவனுள்ள தேவனைப் பற்றிய அறிவைப் பிறருக் குப் போதிக்க வேண்டியதுமிருந்தது. அந்நிய புத்திரரில் அநேகர் அவரைத் தங்கள் சிருஷ்டிகராகவும் மீட்பகராகவும் எண்ணி, அவரை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது; அவருடைய சிருஷ்டிப்பு வல்லமையின் ஒரு நினைவுச் சின்னமாக, அவருடைய பரிசுத்த ஓய்வுநாளை அவர்கள் கைக்கொள்ள ஆரம்பிக்க வேண்டி யிருந்தது. தம்முடைய ஜனங்களைச் சிறையிருப்பிலிருந்து விடு விக்க ‘’எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம் முடைய பரிசுத்த புயத்தை” வெளிப்படுத்தும்போது, ‘’பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் ” தேவனுடைய இரட்சிப் பைக் காண்பார்கள். வசனம் 10. இப்படியாக அஞ்ஞான மார்க்கத்தி லிருந்து மனம் மாறிய அநேகர் இஸ்ரவேலரோடு தங்களை முற்றி லும் இணைத்துக்கொள்ள விரும்பி, அவர்களோடு சேர்ந்து யூதேயா வுக்குத் திரும்பிவருவார்கள். ‘’கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவார்” என்று அவர்களில் ஒருவனும் சொல்வதில்லை . ஏசாயா 56:3. ஏனெனில், தங்களைத் தேவனிடத்தில் ஒப்படைத்து, அவருடைய பிரமாணத்தைக் கைக் கொள்கிறவர்களுக்கு அவருடைய தீர்க்கதரிசியால் உண்டான தேவவார்த்தை என்னவென்றால், ‘’பூமியின் மேலுள்ள அவரு டைய சபையான ஆவிக்குரிய இஸ்ரவேலர் நடுவே அச்சமய முதல் அவர்கள் எண்ணப்படுவார்கள்” என்பதே.தீஇவ 371.3

    ’’கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக் கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன் படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நிய புத்திரர் அனைவரையும், நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து, என் ஜெப வீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களு டைய சர்வாங்க தகனங்களும், அவர்களுடைய பலிகளும் என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெப வீடு என்னப்படும். இஸ்ரவேலில் தள் ளுண்டவர்களைச் சேர்க்கிற கர்த்தராகிய ஆண்டவர்; ‘’அவனிடத் தில் சேர்க்கப்பட்டவர்களையல்லாமல் இன்னும் அவனிடத்தில் சேர்ப்பேன்” என்கிறார்.’‘ வசனங்கள் 6-8.தீஇவ 372.1

    வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா வரவிருந்த சமயம் வரைக்குமான காலங்களை முன்னோக்கிப் பார்க்க அனுமதிக்கப் பட்டார் தீர்க்கதரிசி. இக்கட்டு, அந்தகாரம், இடுக்கத்தால் வந்த இருள் ஆகியவற்றையே முதலில் அவரால் காணமுடிந்தது. ஏசாயா 8:22. சத்தியத்தின் ஒளிக்காக ஏங்கிக்கொண்டிருந்த அநேகர் தத்து வம், மந்திரவாதம் எனும் குழப்பம் நிறைந்தவர்களுக்குள் பொய்ப் போதகர்களால் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள்; மற்றவர்கள், தங்கள் வாழ்க்கையில் மெய்யான பரிசுத்தத்தைக் கொண்டுவராத ஒருவகை பக்தி மார்க்கத்தை நம்பிக்கொண்டிருந் தனர். அவர்களின் நிலை நம்பிக்கையற்றதாகத் தோன்றியது; ஆனாலும் அந்நிலை உடனே மாறியது. தீர்க்கதரிசியின் கண்களுக்கு முன் பாக ஓர் அருமையான தீர்க்கதரிசனம் உண்டானது. தம் செட் டைகளில் ஆரோக்கியம் உடையவராக நீதியின் சூரியன் உதிப்பதை அவர் கண்டார்; அந்தக் காட்சியில் மெய்மறந்தவராக, ‘ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப் பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத் தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார். இருளில் நடக் கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது’ என்றார். ஏசாயா 9:1,2.தீஇவ 373.1

    உலகின் அந்த மகிமையான ஒளியானது சகலதேசத்தாருக்கும் இனத்தாருக்கும் ஜாதிக்காரருக்கும் பாஷைக்காரருக்கும் இரட்சிப் பைக் கொண்டுவரவிருந்தது. இயேசுவானவர் செய்ய வேண்டிய பணி குறித்து நித்திய பிதா பின்வருமாறு சொன்னதைக் கேட்டார் தீர்க்கதரிசி : ‘யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவே லில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனா யிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்த மும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.’ ‘அநுக்கிரக காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவிசெய் தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க் கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக் கப்பண்ணவும். கட்டுண்டவர்களை நோக்கி, ‘’புறப்பட் டுப் போங்கள்’‘ என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி, ’’வெளிப்படுங்கள்” என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப் பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்து வேன்’‘ ‘’இதோ, இவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இதோ, அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள்; இவர்கள் சீனீம்தேசத்திலுமிருந்து வருவார்கள் என்கிறார்.” ஏசாயா 49:6, 8, 9, 12.தீஇவ 373.2

    இன்னும் வெகுகாலம் முன்னோக்கிப் பார்த்து, அந்த மகிமை யான வாக்குத்தத்தங்கள் சொல்லப்பட்டபடியே நிறைவேறினதைக் கண்டார். இரட்சிப்பின் நற்செய்தியை உடையவர்கள் பூமியின் கடையாந்தரங்களுக்கும், சகல ஜாதிக்காரர் மற்றும் மக்களிடத்திற் கும் சென்றதைக் கண்டார். சுவிசேஷ சபை குறித்து, இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவ்விடமாகப் பாயும்படிச் செய்கிறேன்” என்று தேவன் சொல்வதையும், ‘’உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவா கட்டும்; தடை செய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளை களை உறுதிப்படுத்து. நீ வலது புறத்திலும் இடது புறத்திலும் இடங் கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்’ எனும் ஊழியக்கட்டளையையும் அவர் கேட்டார். ஏசாயா 66:12; 54:2,3.தீஇவ 374.1

    ’’ஜாதிகளின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும் பூலுக்கும், லூதுக் கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும்’‘ தம்முடைய சாட்சிகளை அனுப்புவதாகத் தீர்க்கதரிசியிடம் சொன் னார் யேகோவா. ஏசாயா 66:19.தீஇவ 374.2

    “சமாதானத்தைக் கூறி,
    நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து,
    இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி:
    உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று
    சீயோனுக்குச் சொல்லுகிற
    சுவிசேஷகனுடைய பாதங்கள்
    மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.”
    தீஇவ 374.3

    ஏசாயா 527

    தேவனுடைய நித்திய ராஜ்யத்தைத் துரிதப்படுத்தும் வழியை ஆயத்தம்பண்ணும்படிதாம் நியமித்த பணிக்காக, சபையைத் தேவன் அழைக்கும் சத்தத்தைக் கேட்டார் தீர்க்கதரிசி. அது சந்தேகத்திற்கு இடமற்ற தெளிவான செய்தியாயிருந்தது:தீஇவ 374.4

    “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது,
    கர்த்தருடைய மகிமை உன் மேல் உதித்தது.

    “இதோ, இருள் பூமியையும்
    காரிருள் ஜனங்களையும் மூடும்;
    ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்;
    அவருடைய மகிமை உன் மேல் காணப்படும்.
    உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும்,
    உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.

    “சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்,
    அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்;
    உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து,
    உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.

    “அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி,
    அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்;
    என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்;
    ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன்.
    உன்னிடத்துக்கு ஜாதிகளில் பலத்த சேனையைக்
    கொண்டு வரும்படிக்கும்,
    அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும்,
    உன் வாசல்கள் இரவும் பகலும் பூட்டப்படாமல்
    எப்பொழுதும் திறந்திருக்கும்.

    ‘’பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே,
    என்னை நோக்கிப் பாருங்கள்;
    அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்,
    நானே தேவன், வேறொருவரும் இல்லை.”
    தீஇவ 375.1

    ஏசாயா 60:1-4,10,11; 45:22.

    கொடிய அந்தகாரம் கொண்டிருந்த ஒரு காலக்கட்டத்தில் ஒரு மாபெரும் ஆவிக்குரிய எழுச்சி குறித்துச் சொல்லப்பட்ட இந்தத் தீர்க்கதரிசனங்கள், இன்று பூமியில் இருளில் கிடக்கும் பகுதிகளில் வேகமாக ஊழியம் செய்துவரும் ஊழியத்தளங்கள் மூலம் நிறை வேறி வருகின்றன. சத்திய ஒளியைத் தேடுகிறவர்களுக்கு வழி காட்டும்படி நாட்டப்பட்டுள்ள கொடிகளாகப் பிரதேசங்களின் நற் செய்தியாளர்களைத் தீர்க்கதரிசி ஒப்பிடுகிறார்.தீஇவ 375.2

    ’’அக்காலத்திலே, ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசா யின் வேருக்காக ஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தாபர ஸ்தலம் மகிமையாயிருக்கும். அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும் சமுத்திரத் தீவுகளி லும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம் விசை தமது கரத்தை நீட்டி, ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப் பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலும் மிருந்து கூட்டுவார்’ என்கிறார் ஏசாயா. ஏசாயா 11:10-12.தீஇவ 376.1

    விடுதலையின் நாள் சமீபித்திருக்கிறது. ‘’தம்மைப்பற்றி உத் தம் இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலா விக்கொண்டிருக்கிறது” 2 நாளாகமம் 16:9 . வெளிச்சமும் அறிவும் வேண்டி ஜெபிக்கும் ஆண்களையும் பெண்களையும் சகல தேசத் தார், ஜாதிக்காரர், பாஷைக்காரர் மத்தியில் அவர் பார்த்துக்கொண் டிருக்கிறார். அவர்களுடைய ஆத்துமாக்கள் திருப்தியடையாமல் இருக்கின்றன; ஏனெனில், வெகுகாலமாக அவர்கள் சாம்பலை மேய்ந்தார்கள். பார்க்க: ஏசாயா 44:20. சகல நீதிக்கும் எதிரியான வன் அவர்களை வழிவிலக்கினான், அவர்கள் குருடர்போல தட்ட வித்தேடினார்கள். ஆனால் அவர்கள் நேர்மையான இருதயத்தோடு, சிறந்ததொரு வழியைக் கண்டுபிடிக்க வாஞ்சித்தார்கள். எழுதப் பட்ட தேவனுடைய பிரமாணம் பற்றியோ அவருடைய குமாரனா கிய இயேசுவைப் பற்றியோ எவ்வித அறிவும் இல்லாமல், அஞ் ஞான மார்க்கத்தில் வெகுவாக மூழ்கிக்கிடந்த போதிலும், தங்கள் மனதிலும் குணத்திலும் ஒரு தெய்வீகவல்லமை கிரியை செய்து வந் ததைப் பலவழிகளில் அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.தீஇவ 376.2

    தேவகிருபையின் செயல்பாடுகளால் தாங்கள் அறிந்தது போக தேவனைப்பற்றி எவ்வித அறிவும் இல்லாதவர்கள், சில சமயங் களில் அவருடைய ஊழியர்கள்மேல் இரக்கம் காண்பித்து, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களைப் பாதுகாக்கிறார்கள். உண்மையோடு சத்தியத்தைத் தேடும் ஒவ்வொருவனின் இருதயத் திலும் பரிசுத்த ஆவியானவர் தேவ கிருபையை ஊன்றச் செய் கிறார்; அவனுடைய முந்தைய அனுபவத்திற்கு மாறாக, அவனு டைய இரக்க உணர்வுகளை உயிர்கொள்ளச் செய்கிறார், ‘’உலகத் திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளி’‘ அவனு டைய ஆத்துமாவில் பிரகாசிக்கிறது; யோவான் 1:9. அந்த ஒளிக்குச் செவிகொடுத்தால், அது அவனை தேவனுடைய ராஜ்யத்திற்கு வழி நடத்திச் செல்லும். நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார். அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டு வருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்’‘ என்கிறார் மீகா தீர்க்க தரிசி. மீகா 7:8, 9.தீஇவ 376.3

    பரலோக இரட்சிப்பின் திட்டம் விஸ்தாரமானது; உலகம் முழு வதையும் உள்ளடக்கியது. சோர்ந்து போயுள்ள மனித இனத்திற்குள் ஜீவசுவாசத்தை ஊத தேவன் ஏக்கங்கொண்டுள்ளார். உலகத்தால் தரக்கூடாத மேன்மையையும் உன்னதமானதை மெய்யாகவே பெற விரும்பும் எந்தவொரு ஆத்துமாவையும் அவர் ஏமாந்து போகவிடு வதில்லை. மிகவும் ஏமாற்றமான சூழ்நிலைகள் சூழ்ந்திருக்கும் போது, தங்களை ஆட்கொண்டு தங்களுக்கு விடுதலையும் சமா தானமும் தரும்படி தங்களைவிட மேலான ஒரு வல்லமைக்காக விசுவாசத்தோடு ஜெபிக்கிறவர்களுக்குத் தம்முடைய தூதர்களை அவர் அனுப்பிக் கொண்டே இருக்கிறார். ‘’தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மற வாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும் படிக்கு’’, பல் வேறு வழிகளில் தேவன் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தி, பரலோகத்தோடு அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் வைப் பார். நம் எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மையே தந்தவர் மேல் அவர்களின் நம்பிக்கை நிலைப்பட அது ஏதுவாயிருக்கும். சங்கீதம் 78:7.தீஇவ 377.1

    ’’பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக் கக்கூடுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப் போனவர்களை விடுவிக்கக்கூடுமோ?’‘ என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப் படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்... என்று கர்த்தர் சொல்கிறார் “ஏசா49:24, 25. ‘‘ சித்திரவேலையான விக்கிரங்களை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி: நீ எங்கள் தேவர் கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னடைந்து மிகவும் வெட்கப்படும் வார்கள்.’’ஏசாயா 42:17.தீஇவ 378.1

    ’’யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக் கியவான்’’. சங் 146:5. ‘’நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்.” சகரியா 9:12. தேசங்களில் உத்தம இருதயத்தோடிருக் கும் யாவருக்கும் அதாவது, பரலோகத்தின் பார்வையில் செம்மை யானவர்களுக்கு ” இதோ’ இருளிலே வெளிச்சம் உதிக்கும்“. சங் கீதம் 112:4. குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர் களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக் கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்.’‘ என்றார் தேவன். ஏசாயா 42:16.தீஇவ 378.2