Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    பரலோகத்தில் சந்தோஷம்

    அந்த ஸ்திரீ வெள்ளிக் காசைக் கண்டுபிடித்தபோது அவள் தன சிநேகிதியையும் அயல் வீட்டுக் காரிகளையும் கூட வரவழைத்து: “காணாமற் போன வெள்ளிக் காசைக் கண்டுபிடித்தேன், என்னோடு கூட சந்தோசப் படுங்கள்” என்றால். “அதுபோல மனதிரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷ முண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகின்றேன்.” தவறி நடப்போர் தங்கள் தப்பிதங்களைக் கண்டு அவைகளை அறிக்கையிட்டு திரும்பவும் தங்கள் சகோதரரின் ஐக்கியத்திற்குத் திரும்புகிறது தேவ தூதர்களுக்குச் சந்தோஷமாயிருந்தால் தாங்களே தப்பிதம் செய்கிறவர்களும், தேவனுடைய மன்னிப்பும் தங்கள் சகோதரரின் மன்னிப்பும் அனுதினமும் அவசியப்பட்டவர்களுமாகிய கிறிஸ்துவின் பின்னடியார்கள் சாத்தானின் வஞ்சகத்தால் வஞ்சிக்கப்பட்டு தப்பிதமான மார்க்கத்தில் சென்று அதனிமித்தம் துன்பப் பட்டுப் போன ஓர் சகோதரன் அல்லது ஓர் சகோதரி திரும்பி வருகிறதைக் குறித்து எவ்வளவு அதிகமாய்ச் சந்தோஷப்பட வேண்டும்.LST 173.4

    தப்பித நடக்கை உள்ளவர்களைத் தள்ளி வைப்பதற்குப் பதிலாக அவர்கள் இருக்கும் இடங்களில் அவர்களுடைய சகோதரர் அவர்களைப் போய்ச் சந்திக்க வேண்டும். அவர்கள் இருளில் இருக்கிறதினிமித்தம் அவர்களிடத்தில் குற்றம் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக தப்பிதத்தில் இருப்போரிடம் தாங்கள் கொண்டு வருகிற வெளிச்சத்தினால் அவர்களுடைய இருளை நீக்கத்தக்கதாக அவர்கள் இன்னும் அதிகமான தேவ கிருபையையும் இன்னும் வேத வாக்கியங்களைப் பற்றி அதிகத் தெளிவான் அறிவையும் அடைவதினால் அவர்கள் தங்கள் சொந்த விளக்கைக் கொளுத்த வேண்டும். அவர்கள் சித்தி தப்பித நடைக்கையுள்ளவர்கள் தன்கள் தப்பிதத்தை உணர்ந்து வெளிச்சத்தைப் பின்பற்றி நடக்கச் சம்மதிக்கும் பொது முறுமுறுப்பின் ஆவியோடு அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் அல்லது அவர்களுடைய பாவத்தன்மையின் மிகுதியை அவர்களுக்கு உணர்த்துவதற்கு பிரயாசப்படாமல் சந்தோஷமாய் அவர்களை ஏற்றுக் கொளவேண்டும். அப் பாவத்தனமையின் மிகுதி, மிச்சமான முயற்சி, கவலை, களைப்பு இவைகளை உண்டாகியிருக்கிறது. தேவனுடைய பரிசுத்த தூதர்கள் அச்சம்பவத்தை கண்டு களிகூர்ந்தால், தாங்கள் தப்பிதம் செய்தபோது தங்களுக்கு அனுதாபமும், அன்பும், உதவியும் அவசியப்பட்டவர்களும், தங்களுடைய அந்தகாரத்தில் தங்களுக்கே உதவி செய்து கொள்ளக் கூடாதிருந்தவர்களுமான அவர்களுடைய சகோதரர் எவ்வளவு அதிகமாய்க் களிகூர வேண்டும். ---- 3. T. 99-100.LST 174.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents