Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    சபை சிட்சை

    குற்றமுள்ள சபை அங்கத்தினரை நடத்தும் விஷயத்தில் தேவனுடைய ஜனங்கள் மத்தேயு பதினெட்டாம் அதிகாரத்தில் நமது இரட்சகர் கொடுத்திருக்கும் போதனையை ஜாக்கிரதையாய்ப் பின்பற்ற வேண்டும். மானிடர் கிறிஸ்துவினால் மட்டில்லா விலைக்கு கொள்ளப்பட்ட அவருடைய சொத்தாய் இருக்கிறார்கள்; தாமும் தமது பிதாவும் அவர்களுக்காகக் காட்டிய அன்பினால் அவர் அவர்களைத் தம்மோடு கட்டிக் கொண்டார். அப்படியானால் நாம் ஒருவருக்கொருவர் நடத்திக் கொள்ளும் நமது நடவடிக்கைகளில் எவ்வளவு ஜாக்கிரதை உள்ளவர்களாய் இருக்க வேண்டும்! மனுஷர் கங்கள் உடன் மனிதருடைய விஷயத்தில் தீங்கு நினைக்க அவர்களுக்கு யாதொரு உரிமையுங் கிடையாது. சபை அங்கத்தினர்கள் குற்றஞ் செய்துள்ள தங்கள் உடன் சபை அங்கத்தினரை நடத்தும் விஷயத்தில் அவர்கள் தங்கள் சொந்த எண்ணங்களையும் விருப்பங்களையும் பின்பற்றுவதற்கு அவர்களுக்கு யாதொரு நியாயமும் கிடையாது. தப்பிதம் செய்தவர்களைக் குறித்து அவர்கள் தங்கள் தப்பெண்ணங்களையும் கூட வெளியிடலாகாது; ஏனெனில் அவர்கள் அவ்விதம் பொல்லாப்பென்னும் புளித்த மாவை மற்றவர்களுடைய மனசில் வைக்கிறார்கள். சபையிலுள்ள ஓர் சகோதரன் அல்லது ஓர் சகோதரிக்கு விரோதமான சங்கதிகள் சபை அங்கத்தினர் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அறிவிக்கப்படுகின்றன. நமது கர்த்தராகிய இயேசு கொடுத்த கட்டளைகளைப் பின்பற்ற யாதாமொருவருக்கு மனமில்லாததினிமித்தம் குற்றங்கள் ஏற்படுகின்றன, அநியாயங்கள் செய்யப்படுகின்றன.LST 228.2

    “உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்தால் அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில் அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து” என்று கிறிஸ்து கூறினார். (மத. 18:15-18) அக் குற்றத்தை மற்றவர்களிடம் போய்ச் சொல்லாதே. ஒருவனிடத்தில் சொல்லி, இன்னொருவனிடத்தில் சொல்லி பின்னும் ஒருவனிடத்தில் சொல்லி அவ்விதம் சபை முழுவதும் வருத்தப்படுமட்டும் காரியம் வளர்ந்து தீமை பெருகுகிறது. “நீயும் அவனும் தனித்திருக்கையில்” காரியத்தைத் தீர்த்துக்கொள். இது தேவ ஒழுங்கு.LST 229.1

    “வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப் படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாய. நீ உன் அயலானுடனே மாத்திரம் உன் வியாஜ்யத்தைக் குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.” நீதி. 25:8,5. உன் சகோதரனிடத்தில் பாவமிருக்கச் சகியாதே; ஆனால் அவனை வெளிப்படுத்தாதே, அப்படிச் செய்தால் கடிந்து கொள்ளுதல் பழிக்குப் பழி வாங்குதல் போலக் காணச் செய்து வருத்தத்தை அதிகரித்துக் கொள்வாய். தேவ வசனத்தில் சொல்லப்பட்டபடி அவனைச் சீர்ப்படுத்து.LST 229.2

    மனவருத்தம் வர்மமாகும்படி இடங் கொடாதே. காயம் கொதித்து, கேட்போரின் மனசைக் கறைப்படுத்தக் கூடிய விஷமுள்ள வார்த்தைகளைக் காக்கும்படி விடாதே. உன் மனசும் அவன் மனசும் கசப்பான எண்ணங்களால் நிறையும்படி இடங் கொடாதே. நீ உன் சகோதரனிடத்தில் பொய் மனத் தாழ்மையோடும் உண்மையோடும் அக்காரியத்தைக் குறித்துப் பேசு.LST 229.3

    குற்றத்தின் தன்மை எப்படியிருந்தாலும், இது தப்பெண்ணங்களையும் மன வருத்தங்களையும் தீர்த்துக் கொள்வதற்காக தேவன் ஏற்படுத்தின ஒழுங்கை மாற்றுகிறதில்லை. குற்றமுள்ளவனிடத்தில் தனித்துப் போய் கிறிஸ்துவின் ஆவியோடு பேசுகிறதினால் அக்கஷ்டம் அடிக்கடி நிவர்த்தியாகும். கிறிஸ்துவின் அன்பும் அனுதாபமும் நிறைந்த இருதயத்தோடு குற்றமுள்ளவனிடத்தில் போய்க் காரியத்தைச் சீர்ப்படுத்தப் பார். சாந்தமாயும் அமைதியாயும் அவனிடத்தில் விசாரி. கோப வார்த்தைகளை ஒன்றும் உன் உதடுகளை விட்டுப் புறப்படாதிருப்பதாக. அவனுடைய நல்ல புத்திக்குப் படத்தக்கதாகப் பேசு. “தப்பிப்போன மார்க்கத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவான்” என்னும் வார்த்தைகளை நினைப்பாயாக. (யாக். 5:20.)LST 229.4

    அதிருப்தியாகிய நோயைக் குணமாக்கும் பரிகாரத்தை உன் சகோதரனிடம் கொண்டு போ. அவனுக்கு உதவி செய்வதில் நீ உன் பாகத்தைச் செய். சபையின் சமாதானத்தின் பொருட்டும் ஐக்கியத்தின் பொருட்டும் இப்படிச் செய்கிறது உன் சிலாக்கியமும் கடமையுமாய் இருக்கிறதென உணர்ந்து கொள். அவன் உனக்குச் செவி கொடுத்தால் அவனை உனக்கு ஓர் சிநேகிதனாகப் பெற்றாய்.LST 229.5

    நஷ்டம் அடைந்தவனுக்கும் தப்பிதத்திற்கு உள்ளானவனுக்கும் நடக்கும் சம்பாஷனையைப் பரலோகமெல்லாம் உற்று நோக்குகிறது. தப்பிதம் செய்தவன் கிறிஸ்துவின் அன்பினால் கொடுக்கப்பட்ட கடிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொண்டு, தன தப்பிதத்தை உணர்ந்து தேவனிடமிருந்தும் தன சகோதரனிடம் இருந்தும் மன்னிப்புக்காகக் கெஞ்சும் போது, பரம வெளிச்சம் அவன் இருதயத்தை நிரப்புகிறது. வழக்கு முடிந்தது; சினேக பான்மையையும் நம்பிக்கையும் திரும்பவும் ஏற்படுகிறது. தப்பிதத்தினால் ஏற்பட்ட புண்ணை அன்பின் எண்ணெய் ஆற்றுகிறது; தேவ ஆவி இருதயத்தோடு இருதயத்தை இணைக்கிறது; ஏற்பட்ட ஐக்கியத்தைப் பற்றி பரலோகத்தில் சங்கீதம் ஏற்படுகிறது.LST 230.1

    கிறிஸ்தவ அன்னியோன்னியத்தில் இவ்வாறு இணைக்கப்பட்டவர்கள் நீதியாய் நடந்து கொள்ளவும், இரக்கத்தை நேசிக்கவும், தேவனுக்கு முன்பாக மனத் தாழ்மையாய் நடக்கவும் உடன்பட்டு தேவனை நோக்கி ஜெபிக்கும்போது, அவர்களுக்குப் பெரிய ஆசீர்வாதம் உண்டாகிறது. அவர்கள் மற்றவர்களுக்கும் தீங்கு செய்திருந்தால், மனந் திரும்புதலின் கிரியையைத் தொடர்ந்து செய்து அறிக்கையிட்டு, பரிகாரம் செய்து ஒருவருக்கொருவர் நன்மை செய்வதாக முழுத் தீர்மானம் பண்ணுகிறார்கள். இதுவே கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுதல் ஆகும்.LST 230.2

    “அவன் செவிகொடாமற் போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினிலே சங்கதிகள் எல்லாம் நிலைவரப் படும்படி இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக் கொண்டு போ.” (மத். 18:16.) ஆவியின் சிந்தனை உடையவர்களை உன்னுடனே கூட்டிக் கொண்டு பொய் குற்றஞ் செய்தவனிடத்தில் அக் குற்றத்தைக் குறித்துப் பேசு. தன சகோதரர்கள் ஒன்று சேர்ந்து கேட்கும் விண்ணப்பங்களுக்கு அவன் இணங்கலாம். அவர்கள் அக்காரியத்தில் ஒருமனப் பட்டிருக்கிறதை அவன் காணும்போது அவன் மனசு பிரகாசிப்பிக்கப் படலாம்.LST 230.3

    “அவர்களுக்கு அவன் செவி கொடாமற் போனால்” பிறகு செய்யப்பட வேண்டியதென்ன? தப்பிதம் செய்தவனை சபையை விட்டு நீக்கும் உத்திரவாதத்தை சங்கத்தாரில் சிலர் எடுத்துக் கொள்ளலாமா? “அவர்களுக்கு அவன் செவிகொடாமற் போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து.” (மத். 18:17.) சபை தன அவயவங்கள் விஷயமாய்ச் செய்ய வேண்டியதைச் செய்யட்டும்.LST 230.4

    “சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப் போலவும் ஆயக்காரனைப் போலவும் இருப்பானாக.” அவன் சபையின் சத்தத்திற்கும் செவிகொடாமற் போனால், அவனைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் படிக்கான சகல பிரயத்தனங்களுக்கும் அவன் கேட்காவிட்டால், அவனைச் சபை ஐக்கியத்தை விட்டு நீக் கும் உத்தரவாதம் சபையின் மேல் பொறுக்கும். அப்புறம் அவன் பெயர் புத்தகங்களில் கிறுக்கப்பட வேண்டும்.LST 230.5

    கிறிஸ்து கொடுத்த போதனை உண்மையாய்க் கையாடப் படுமட்டும், குற்றஞ் செய்தவனுடைய பெயரை சபை புத்தகங்களிலிருந்து எடுத்துப் போடும்படிக்கு சபை உத்தியோகஸ்தர்களில் எவனும் ஆலோசனை சொல்லவோ, எந்தக் கமிட்டியும் சிபாரிசு செய்யவோ, அல்லது எந்தச் சபையும் சம்மதிக்கவோ கூடாது. இதைச் செய்தானதும் சபை தேவனுக்கும் முன்பாகத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டது. அப்புறம் தீங்கு தீங்காகவே தோன்றும்படி செய்யப்பட்டு அது வர வர அதிகமாய்ப் பரவாதபடிக்கு நீக்கப்பட வேண்டும். கிறிஸ்துவின் நீதியாகிய அங்கிகளைத் தரித்து சபையானது தேவனுக்கு முன்பாகத் தூய்மையாய் நிற்கும் பொருட்டு அதின் ஆரோக்கியமும் பரிசுத்தமும் காக்கப்பட வேண்டும்.LST 231.1

    குற்றஞ் செய்தவன் மனந்திரும்பி கிறிஸ்துவின் சிட்சிப்புக்கு உட்படும்போது அவனுக்கு இன்னொரு பரீட்சை கொடுக்கப்பட வேண்டும். அவன் மனந்திரும்பாமல் சபைக்கு வெளியே நின்ற போதிலும் கூட இன்னும் அவனுக்காகச் செய்ய வேண்டிய ஒரு வேலை தேவ தொண்டர்களுக்கு உண்டு. அவனுடைய குற்றம் எவ்வளவு பாரமாயிருந்த போதிலும், அவன் பரிசுத்த ஆவியின் போராட்டத்திற்கு இணங்கி, மனந் திரும்பினதற்கு அத்தாட்சியாக அவன் தன பாவத்தை அறிக்கையிட்டு அதை விட்டு விட்டால், அவனுக்கு மன்னித்து திரும்பும் அவனை மந்தையோடு சேர்த்துக் கொள்ளவேண்டும். அவனுடைய சகோதரர்கள் அவன் சரியான பாதையிலே நடக்க அவனைத் தைரியப்படுத்துவார்களாக; அவர்கள் தாங்களும் சோதிக்கப் படாத படிக்கு தங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவன் இருந்த இடத்தில் அவர்கள் இருந்தால் எப்படி நடத்தப்பட விரும்புவார்களோ அப்படியே அவனையும் நடத்துவார்களாக.LST 231.2

    “பூலோகத்தில் நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளை கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பூலோகத்திலும் கட்டவிழ்க்கப் பட்டிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசு கிறிஸ்து தொடர்ந்து உரைத்தார். (மத். 18:18.)LST 231.3

    இந்த உரை சகல் யுகங்களுக்கும் செல்லும் வலுவுடையது. கிறிஸ்துவுக்கு பதிலாக காரியம் நடத்துவதற்கான அதிகாரம் சபைக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேவனுடைய ஜனங்களுக்குள் ஒழுங்கையும் சிட்சிப்பையும் காப்பாற்றுவதற்காக அது தேவனுடைய கருவியாயிருக்கிறது. அதின் வாழ்வையும், பரிசுத்தத்தையும் ஒழுங்கையும் குறித்துள்ள சகல் கேள்விகளையும் தீர்க்கும் அதிகாரத்தை ஆண்டவர் அதற்கு அளித்திருக்கிறார். அபாத்திரமாய் நடப்பவர்களை, தங்களுடைய கெட்ட நடக்கையினால் சத்தியத்திற்கு நிந்தையை கொண்டு வருகிறவர்களை சபையின் ஐக்கியத்தை விட்டு நீக்கும் உத் தரவாதம் அதின் மேலிருக்கிறது. தேவ வசனத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற கட்டளைகளின்படி சபை செய்கிறதெதுவோ அது பரலோகத்திலும் தீர்மானிக்கப் படுகிறது. ---- G. W. 486-502.LST 231.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents