Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உபத்திரவ காலம்

    தேசத்தில் பட்டயத்தையும் பஞ்சத்தையும் கொள்ளை நோயையும் பெரும் குழப்பத்தையும் நான் கண்டேன். நாம் அக்கிரம காரர் மேல் தண்டனைகள் விழப்பண்ணினோம் என்று அவர்கள் நினைத்து நம்மை பூமியினின்று அப்புறப்படுத்தி விட்டால் தீமை நிற்பாட்டப்படும் என்பதாக எண்ணி அவர்கள் கூடி ஆலோசித்தார்கள்.LST 52.2

    உபத்திரவ காலத்தில் நாம் எல்லோரும் நகரங்களையும் கிராமங்களையும் விட்டோடினோம். அக்கிரமக்காரர் நம்மை தொடர்ந்து முடுக்கினார்கள். அவர்கள் பரிசுத்தவான்களுடைய வீடுகளில் பட்டயத்துடன் பிரவேசித்தார்கள். நம்மைக் கொள்ளும்படி அவர்கள் பட்டயத்தை ஓங்கவே அது துரும்பை போல் வல்லமை அற்று முறிந்து விழுந்தது.LST 52.3

    பிறகு நாம் எல்லோரும் இரவும் பகலும் மீட்பிற்காகக் கூப்பிட்டோம், அக்கூகுரல் தேவ சமூகம் எட்டினது. சூரியன் வெளிப்பட்டது, சந்திரன் அசையாமல் நின்றது, ஓடிக் கொண்டிருந்த ஓடைகள் ஓட வில்லை. இரண்டு கனத்த மேகங்கள் கூடி ஒன்றை ஒன்று மோதினது. ஆனால் மகிமை தங்கப்பெற்ற ஓரிடம் தெளிவாய் இருந்தது, அங்கிருந்து பெரு வெள்ளத்தின் இரைச்சல் போன்ற தேவ சத்தம் உண்டாகி வானகங்களையும் பூமியையும் அசைத்தது. ஆகாயம் திறந்து மூடி கொந்தளிப்பாய் இருந்தது. காற்றினால் அசையும் நாணலை போல் பர்வதங்கள் அசைந்து சுற்றிலும் எங்கும் கரடு முரடான கட்டிகளை வீசினது. கடல் ஒரு பாத்திரம் போல் கொதித்து கற்களை தரை மேல் எறிந்தது.LST 52.4

    இயேசு வருகிற நாளையும் நாழிகையையும் தேவன் பேச்சி சொல்லி தமது ஜனங்களுக்கு நித்ய உடன்படிக்கையை ஒப்புவித போது, அவர் ஒரு வசனம் வசனித்து அப்புறம் நிறுத்தினார். அப்பொழுது அவ்வார்த்தைகள் பூமிஎங்கும் சுற்றி ஓடினது. தேவனுடைய இஸ்ரவேலர் தங்கள் கண்களை மேலே நோக்கின வண்ணமாய், யோகொவோவின் வாயிலிருந்து புறப்பட்டு வாந்த வார்த்தைகள் பலத்த இடி முழக்கத்தின் சத்தம் போல பூமிஎங்கும் சுற்றி ஓடுகிறதை கேட்டுக்கொண்டு நின்றனர். அது பயங்கர பக்தி வினயமாய் இருந்தது. ஒவ்வொரு வசனத்தின் முடிவிலும் பரிசுத்தவான்கள் “மகிமை உண்டாவதாக! அல்லேலூயா!” என்று சாத்தமிட்டார்கள். அவர்களுடைய முகங்கள் தேவனுடைய மகிமையினால் பிரகாசிக்கப்பட்டன. அவைகள் மொசெசீனாய் மலையில் இருந்து இறங்கி வந்த போது அவனுடைய முகம் மகிமையால் பிரகாசித்தது போல பிரகாசித்தன. இந்த மகிமை நிமித்தம் துன்மார்கர் அவர்களை நோக்கி பார்க்க கூடாதிருந்தது. தேவனுடைய ஒய்வு நாளை பரிசுத்தமாய் ஆச்சரித்து அவரை மகிமை படுத்தினவர்களின் மேல் நித்ய ஆசிர்வாதம் கூறப்பட்டபோது , மிருகத்தின் மேலும் அதன் சொருபத்தின் மேலும் அடைந்த வெற்றியை பற்றி உண்டான ஆரவாரம் பலமாய் இருந்தது.LST 53.1

    தேசம் இளைப்பாற வேண்டிய ஜுபிலி ஆரம்பித்தது. கொல்லாத எஜமானானவன் கலங்கி யாது செய்வதென்று அறியாதிருக்கையில் அவனுடைய பக்தி உள்ள அடிமையானவன் தான் கட்டுண்டிருந்த சங்கிலியை உதை எறிந்து விட்டு வெற்றியாய் ஆர்பரித்து எழும்புவதை நான் கண்டேன். ஏனெனில் துன்மார்கர் தேவனுடைய சத்தத்தின் வார்த்தைகளை உணர்ந்து கொள்ள முடியாதிருந்தினர்.LST 53.2

    சீக்கிரத்தில் பெரிய வெண்மையான மேகம் காணப்பட்டது. அது வர வர மிகவும் சிறப்பைக் காணப்பட்டது. மனுஷ குமாரன் அதன் மேல் சிறப்பாய் வீற்றிருந்தார். முதலில் நாம் இயேசுவை மேகத்தின் மேல் பார்க்கவில்லை, ஆனால் அது பூமிக்கு சமீபமாய் வந்ததும் அவரது அன்பின் ரூபத்தை நாம் கண்டு கொண்டோம். இந்த மேகம், முதல் முதல் அது வானத்திலே காணப்பட்டபோது மனுஷகுமாரனுடைய அடையாளமாயிருந்தன.LST 53.3

    தேவ குமாரனுடைய சத்தத்தினால் நித்திரை செய்யும் பரிசுத்தவான்கள் மகிமையான சாவாமையைத் தரித்தவர்களாய் வெளிப்பட்டு வந்தார்கள். உயிருள்ள பரிசுத்தவான்கள் க்ஷணபொழுதிலேமறு ரூபமாக்கப்பட்டு மெகா வானத்திலே அவர்களோடு கூட எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். அது மேலெழும்பிச் செல்கையில் எங்கும் மகிமையாய் காணப்பட்டது. வாகனத்தின் இரு பக்கங்களிலே செட்டைகளும் அதன் கீழே சக்கரங்களும் இருந்தன. இரதம் மேலெழும்பி ஓடும் போது சக்கரங்கள், “பரிசுத்தர்” என்றும், செட்டைகள் அசைகையில் அவைகள், “பரிசுத்தர்” என்றும் மேகத்தைச் சுற்றிலுமிருந்த பரிசுத்த தூதர்களின் கூட்டம், “சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்றும் சத்தமிட்டனர். மேகத்திளிருந்த பரிசுத்தவான்களும், “மகிமையுண்டாவதாக, அல்லேலூயா” என்றார்கள். இரதம் பரிசுத்த நகரத்தை நோக்கி ஓடியது. இயேசு பொன் நகரின் வாசல்களை விரிவாய் திறந்து நம்மை உள்ளே நடத்தி சென்றார். “தேவனுடைய கற்பனைகளை” நாம் கைகொண்ட நிமித்தமும் “ஜீவா விருட்சத்தின் மேல் அதிகாரமுள்ளவர்களா” இருந்தநிமித்தமும் இங்கு நாம் நல வரவேற்கப்பட்டோம். வெளி 14:2:22:14LST 53.4

    * * * * *