Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    முன்னேறுதல்

    அதிக மனக் குழப்பத்துடனும் அதைரியதுடனும் நாங்கள் ரோசெச்டரில் பாடு பட்டோம். நகரத்தில் விஷ பேதி வாதை வந்து மும்முரித்த போது நம்பிக்கை மலை என்னும் கல்லறைத் தோட்டத்துக்கு மரித்தோரை எடுத்துப் போகும் வண்டிகளின் சத்தம் தெருக்களில் இரவெல்லாம் கேட்டது. இவ்வ்யாதிக்கு இரையானது தாழ்ந்த வகுப்பினர் மாத்திரம் அல்ல. சகல வகுப்பினரும் இரை கொடுத்தார்கள். மிக்க சாமார்த்தியம் உள்ள வைத்தியர்களும் மரித்து நம்பிக்கை மலைக்கு கொண்டு போகப்பட்டார்கள். ரோச்செச்டரில் நாங்கள் எந்த வீதி வழி போனாலும் ஏறக்குறைய சகல மூலைகளிலும் வெறும் பிரேதப்பெட்டிகளை ஏற்றியுள்ள வண்டிகளை நாங்கள் சந்திப்போம்.LST 70.1

    எங்கள் பாலகன் எட்சன் அதனால் பீடிக்கப்பட்டான். நாங்கள் அவனை அந்த பெரிய வைத்தியரிடம் கொண்டு போனோம்.நான் என் கரங்களில் அவனை ஏந்திக் கொண்டு இயேசுவின் நாமத்தில் அவ்வியாதியை கண்டித்தேன்; உடனே அவனுக்கு சொஸ்தமாயிற்று. ஓர் சகோதரி ஆண்டவர் அவனை சுகமாக்கும்படி ஜெபிக்க ஆரம்பித்த போது, மூன்று வயதுள்ள அச்சிறுவன் பிரமிப்படைந்து, “அவர்கள் இனி எனக்காக ஜெபிக்க வேண்டாம், கர்த்தர் எண்ணை சொச்தப்படுதி விட்டார்,” என்று சொன்னான். அவன் மிகவும் பலவீனமாயிருந்தான். ஆனால் அவ்வியாதி பிறகு அவனுக்கு ஒன்றும் செய்ய வில்லை. என்றாலும் அவன் பலனடயவில்லை. எங்கள் விசுவாசம் இன்னும் பரீட்சிக்கப்பட வேண்டியிருந்தது. மூன்று நாட்களாய் அவன் ஒன்றுமே புசிக்க வில்லை.LST 70.2