Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    வாழ்வின் நோக்கங்கள் ஊனமடைதல்

    அவர் பாலியமாயிருந்தும், தமது வாழ்வின் நோக்கங்கள் தொலைந்து போனது போற் காணப்பட்டதிலிருந்து உண்டான ஆசா பங்கத்தைக் குறித்து அவருடைய பெற்றோர் எவ்வளவாய்த் துன்புற்றார்களோ அவ்வளவாய் அவர் துன்புற்றார். பெலமும் தைரியமும் மன மகிழ்ச்சியுமுள்ள பிள்ளையாயிருப்பதற்குப் பதிலாக, அவர் பெலவீனமும் கோழை நெஞ்சமும் மன மடிவும் உள்ளவரானார். ஆனால், அவருடைய மனதிலும் இருதயத்திலுமுள்ள சிறந்த குணங்கள் ஒழியவில்லை. வாழ்வின் சாதாரண சுகங்களையும் ஒரு வேளை பிராணனையும் கூட இழந்து விடுவோமோ என்னும் பயம் அவருடைய கவனத்தையும் பரலோகத்தின் மேலான சந்தோஷங்களுக்கு நேராய்த் திருப்பிற்று. இயற்கையிலேயே அவர் உரோசமும் மிகுந்த மன நேர்மையுமுடையவராதலின், ஜீவியத்தின் சோதனைகளைச் சகிக்கத் தக்கதாகவும், வரப்போகும் உலகத்திற்குத் தம்மை ஆளாக்கத்தக்கதாகவும், தமக்கு வேண்டிய தேவ கிருபையையும் இரக்கத்தையும் அவர் அவ்வளவு பாலியத்திலேயே உணர்ந்தார்; இயல்பான தமது பூரண வைராக்கியத்துடன் அவர் கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தைத் தழுவிக் கொண்டு, பாலிய பருவத்தின் துவக்கத்திலேயே அவர் தமது பக்திக்கும் சன்மார்க்க ஒழுக்கத்திற்கும் பேர் போனவரானார். இவ்வனுபோகத்தைக் குறித்து அவர் எழுதினதாவது -LST 10.2

    “இந்த என் நிர்ப்பாகிய நிலைமையில் என் வாழ்நாட்களைக் கடத்துவது சாத்தியப்படவில்லை, ஆதலின் ஜீவனோடிருப்பதில் எனக்கு ஓர் இன்பமுமில்லை. நான் உயிரோடிருக்கப் பிரியப்படவுமில்லை, ஆயதமில்லாததினால் மரிக்கவும் பயப்பட்டேன். பெற்றோரை அடிக்கை சந்திக்க வந்த சிநேகிதர் எல்லாம் என் பேரில் பரிதாப்பட்டு, எனக்குத் தீங்கிழைத்த அச் சிறுமியின் தந்தைக்கு விரோதமாய் வியாச்சியம் செய்யும்படி போதனை செய்தனர். ஆனால் அவ்வித நடவடிக்கையின் மூலமாய் என் சுகமும் இயல்பான என் முகத்தோற்றங்களும் திரும்ப எனக்குக் கிடைக்குமாயின் பிரயோஜனமுண்டு, ஆனால் அது கூடாததாகையால் அவர்களை விரோதிகளாக்காதிருப்பதே மேன்மை என சமாதானத்தைக் கருதி என் தாயார் சொன்னார்.LST 10.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents