Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பள்ளிக்கூடம் போக எடுத்த முயற்சிகள்

    இதற்குப் பின் இரண்டு ஆண்டுகளாய் எலன் பிணியாளியாகவே இருந்தார். அவருக்கு மூக்கினால் சுவாசிக்க முடியாது. என்றாலும் கல்வி கற்க வேண்டுமென்னும் தீர்மான முடையவராய் அவர் பள்ளிக்கூடம் போவதற்குப் பல தடவை பிரயத்தனப்பட்டார். ஆனால் அவர் படிக்கக் கூடாதபடி அவருடைய நரம்புகள் மிகவும் பலவீனமடைந்திருப்பதுமன்றி, படித்தவைகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் கூடாதிருந்தது. இனி அவர் படிக்கப் பிரயாசப்படுவதில் யாதொரு பிரயஜோனமுமில்லை என்றும் நற்சுகம் அடையுமட்டும் அவர் பள்ளிக்கூடம் போகக் கூடாதென்றும் உபாத்திமாரும் பெற்றோரும் கண்டார்கள். அதன் பின் இன்னொரு தடவை பள்ளிக்கூடம் போக எத்தனித்தார். அதுவும் அவருடைய சுகத்திற்கனுகூலமாய்க் காணப்படாததினால், இனி பிரயாசப்படுவது அவருக்குப் பிராணாபத்தாயிருக்குமென்று புலப்பட்டது. ஆகவே கற்க வேண்டுமென்னும் எண்ணத்தை மன வெறுப்புடன் அவர் விட்டுவிட வேண்டியதாயிற்று; பன்னிரண்டு பிராயத்திற்குப் பின் அவர் ஒரு போதும் பள்ளிக்குப் போகவில்லை. இதுவே அவர் அடைந்த கஸ்தியிலெல்லாம் மிகப் பெரிய கஸ்தி. கொடிய இச்சோதனையை குறித்துப் பின்னால் அவர் எழுதினதாவது :-LST 11.3

    “பலவீனத்திற்குட்பட்டு என் படிப்பை நிறுத்த வேண்டும் எனத் தீர்மானிப்பதும், கல்விடையலாம் என்னும் பெரிய எண்ணத்தை விட்டுவிடுவதும், என் பாலிய ஜீவியத்தின் கடும் போராட்டமாயிருந்தது. பாண்டித்தியம் பெற விரும்பின என் ஆசைக்கோர் அளவில்லை. நம்பிக்கொண்டிருந்த நம்பிக்கைகள் எல்லாம் தவறிப் போனதைப் பற்றியும், என் வாழ்நாளெல்லாம் நான் நோயாளியாயிருக்க வேண்டுமென்பதைப் பற்றியும், நான் சிந்தித்த பொது மிகவும் கலங்கினேன். எனக்கு இப்படி லபித்ததைப் பற்றி நான் வெறுப்புற்று சில வேளைகளில் கடவுள் என்னை இவ்விதமாய்த் துன்பப்படவிட்டதைப் பற்றி அவருடைய திருவுளச் செயலுக்கு விரோதமாய் முறுமுறுத்தேன். நான் நோய்ப் பட்டிருந்த காலத்தில் இரட்சகரின் அன்பைப் பற்றி நான் மகிழ்வுற்றிருந்த என் மகிழ்ச்சியான நம்பிக்கை எல்லாம் பொய் விட்டது. உலகில் சக ஜீவியாய் வாழலாம் என்னும் நம்பிக்கை அற்றுப் போயிற்று; பரலோகம் எனக்கு அடைபட்டது போற் காணப்பட்டது.”LST 12.1

    * * * * *