Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அன்றாட பணிவிடை

    பூலோக பரிசுத்தஸ்தல ஊழியம் இரு பாகங்களுள்ளது: ஆசாரியர்கள் அனுதினமும் பரிசுத்தஸ்தலத்தில் ஊழியங் செய்தார்கள்; ஆனால் பிரதான ஆச்சரியனோ வருஷத்திர்கொர் தடவை மகா பரிசுத்த ஸ்தலத்தில் பரிசுத்தஸ்தலத்தின் சுத்திகரிப்புக்கென்று பாவ நிவாரண வேலையாகிய ஓர் விசேஷித்த வேலையைச் செய்தான். நாடோறும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்கு மனந்திரும்பும் பாவி பலியிடும் படிக்கன தன காணிக்கையைக் கொண்டு வந்து அப்பளியின் தலைமேல் தன காணிக்கையைக் கொண்டு வந்து அப்பலியின் தலைமேல் தன கையை வைத்து தன பாவங்களை அறிக்கையிட்டு அவ்விதமாய் குற்றமற்ற அப்பலியினிடமாக அவைகளை ஒப்பனையாக மாற்றிக் கொண்டான்.LST 42.3

    பிறகு அப்பிராணி அடிக்கப்பட்டு, அதின் இரத்தமோ அல்லது மாம்சமோ ஆசாரியனால் பரிசுத்தஸ்தலத்திற்குள் கொண்டு போகப் பட்டு, அவ்விதமாக பாவம் அடையாளமாய் பரிசுத்தஸ்தலத்திற்கு மாற்றப்பட்டது.LST 42.4

    இப்படிப்பட்ட வேலை வருஷ முழுவதும் நடை பெற்றது. பாவங்கள் பரிசுத்தஸ்தலத்திற்கு ஓயாமல் மாற்றப் பட்டதினால் அவைகளைப் போக்குவதற்காக இன்னொரு ஆராதனை நடைபெற வேண்டியது அவசியமாயிற்று. ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே பிரதான ஆசாரியன் உள் அறையில் அல்லது, மகா பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசித்தான். வேறே சமயங்களில் அவன் அதில் பிரவேசிக்கலாகாது, பிரவேசித்தால் செத்தான். அப்பொழுது நடைபெற்ற பரிசுத்தஸ்தல சுத்திகரிப்பு வேலையோடு வருஷாந்தர ஆராதனை முடிவடைந்தது.LST 42.5