Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இக்காலத்தில் அதின் பொருத்தம்

    யோசுவாவையும் தூதனையும் பற்றிய சகரியாவின் தரிசனம் பெரிய பாவநிவாரண நாளின் முடிவிலிருக்கிற தேவனுடைய ஜனங்களின் அனுபோகத்திற்கு மிகவும் பொருத்தமாயிருக்கிறது. மீதியான சபை பெரிய கஷ்டதிற்குள்ளும் இடுக்கனுக்குள்ளும் கொண்டுவரப் படும். தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்கள் வலுசர்ப்பத்தின் கோபத்தையும் அதின் சேனைகளின் கோபத்தையும் உணருவார்கள். உலகிலுள்ளவர்கள் எல்லாம் தன் குடிகளென சாத்தான் தொகைஇடுகிறான், விழுந்து போன சபைகள் அவனுடைய ஆதீனத்திலிருகின்றன; ஆனால் அவன் அதிகாரத்தை எதிர்க்கும் ஓர் சிறு கூட்டம் இங்கே இருக்கிறது. அவன் அவர்களைப் பூமியின் நின்று அப்புறப்படுத்தக் கூடுமானால் அவன் வெற்றி பூரணமாயிற்று.LST 129.2

    இஸ்ரவேலரை அழிக்க அவன் அஞ்ஞான ஜாதிகளைத் தூண்டி விட்டது போல சீக்கிரத்துள்ளாக தேவனுடைய ஜனங்களை அழிக்க பூமியில் உள்ள பொல்லாத அதிகாரிகளை அவன் எழுப்பி விடுவான். தேவனுடைய நியாயப் பிரமாணத்துக்கு விரோதமான மனுஷ ஏற்பாடுகளுக்கு சகலரும் கீழ்ப்படியும்படிக் கேட்கப் படுவார்கள். தேவனுக்கும் அவருக்குச் செய்யவேண்டிய எல்லாவற்றிற்கும் உண்மையாயிருப்போர் பயமுறுத்தப் பட்டு நிந்திக்கப் பட்டு, கொலைக்கு நியமிக்கப் படுவார்கள். அவர்கள் ” பெற்றோராலும், சகோதரர்களாலும் இன ஜனங்களாலும் தோழராலும் காட்டி கொடுக்கப் படுவார்கள்.”LST 129.3

    அவர்களுடைய ஒரே நம்பிக்கை தேனுடைய கிருபையைப் பற்றியிருக்கிறது; அவர்களுடைய ஒரே அரண் ஜெபமே. தூதனுக்கு முன்பாக யோசுவா கெஞ்சி நின்றாற் போல் மீதியான சபையாரும் உள்ளம் உருகி ஊக்கமான விசுவாசத்தோடு பரிந்து பேசும் தங்கள் இரட்சகர் மூலமாய் மன்னிப்புக்காகவும் மன்றாடுவார்கள். தங்கள் ஜீவியம் பாவமுள்ளதென்று அவர்களுக்கு நன்றாய்த் தெரியும்; தங்கள் பெலவீனத்தையும் அப்பாத்திர தன்மையையும் அவர்கள் காண்கிறார்கள். அப்படி அவர்கள் தங்களையே நோக்கிப் பார்க்கும் போது சோர்வடைய எத்தனிக்கிறார்கள்.LST 130.1

    யோசுவாவுக்கு விரோதஞ் செய்ய சோதனைக்காரன் அவன் பக்கம் நின்றாற் போல அவர்கள் மேல் குற்றஞ் சுமத்தும் பொருட்டு அவன் அவர்கள் பக்கம் நிற்கிறான். அவர்களுடைய குற்றங்களாகிய அழுக்கு வஸ்திரங்களை அவன் சுட்டிக் காண்பிக்கிறான். அவர்களுடைய பெலவீனத்தையும் தப்பிதத்தையும் அவர்களுடைய நன்றிக்கேட்டின பாவங்களையும் தங்கள் மீட்பருக்கு உண்டாக்கின அவமானத்தையும் கிறிஸ்துவுக்கு நேர் விரோதமான அவர்கள் சுபாவத்தையும் அவன் எடுத்துக் காட்டுகிறான். தங்கள் காரியம் மோசகரமானதென்றும் தங்கள் தீட்டின் கறை ஒருபோதும் கழுவப்பட முடியாதென்றும் எண்ணும் எண்ணங்களால் அவன் ஆத்துமாக்களைப் பயப படுத்தப் பார்க்கிறான். அவர்களைத் தன் சேனைகளுக்கிணங்கச் செய்து தேவனை வழிபடுவதை விட்டுத் திரும்பி மிருகத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளத்தக்கதாக அவர்கள் விசுவாசத்தை அவ்விதம் அழித்துப் போடலாமென்பது அவன் எண்ணம்.LST 130.2

    தேவனுடைய ஜனங்கள் அநேக விஷயங்களில் மிகவும் குற்றமுள்ளவர்கள் தான். என்னென்ன பாவங்களைச் செய்யும் படி அவன் அவர்களைச் சோதித்திருக்கிறான் என்பதைப் பற்றிச் சாத்தானுக்குத் திடமான அறிவுண்டு.; இவைகளை அவன் மிகவும் பிரமாதமாய்க் காண்பித்து அவன் சொல்கிறான்.: “தேவன் என்னையும் என் தூதர்களையும் தமது சமூகதிநின்று தள்ளிவிட்ட அதே பாவங்களைச் செய்து குற்றமுள்ளவர்களாய் இருக்கும் அவர்களுக்குப் பலனளிப்பாரா? கர்த்தாவே, நீர் இப்படிச் செய்வது உமக்கு நீதியல்ல. உமது சிங்காசனம் நீதியிலும் நியாயத்திலும் நிலை நிற்காது. அவர்களுக்கு விரோதமாய்த் தீர்ப்புக் கொடுக்க வேண்டும்.”LST 130.3

    ஆனால் கிறிஸ்துவின் பின்னடியார்கள் பாவஞ்செயய்திருப்பினும் தீமையின் ஆளுகைக்கு அவர்கள் தங்களை ஒப்புக்கொடுக்கவில்லை. அவர்கள் தங்கள் பாவங்களைத் தள்ளிப் போட்டு தாழ்மையோடும் மனஸ்தாபத்தோடும் கர்த்தரைத் தேடினார்கள். தெய்வீக மத்தியஸ்தர் அவர்களுக்காக மன்றாடுகிறார். அவர்களுடைய நன்றிக்கேட்டால் மிகவும் அதிக அபகீர்த்தி அடைந்திருக்கிறவரும் அவர்களுடைய பாவத்தையும் அவர்களுடைய மனந்திரும்புதலையும் கூட அறிந்திருக்கிறவருமானவர், “சாத்தானே, கர்த்தர் உன்னை கடிந்துகொள்வாரக. இந்த ஆத்துமாக்களுக்காக நான் என் ஜீவனைக்கொடுத்தேன். அவர்கள் என் உள்ளங்கைகளில் வரையப்பட்டிருக்கிறார்கள்” என்கிறார்.LST 130.4