Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வாலிப நண்பருக்காக உழைத்தல்

    என் அனுபோகத்தைச் சொல்லுகையில், என்னில் அவ்வளவு ஆச்சரியமானதோர் மாறுதல் உண்டாக்கின மன்னிக்கும் தேவன்பின் அத்தாட்சியை எவரும் மறுத்துப் பேச முடியாதென்று உணர்ந்தேன். மெய்யான மனந்திரும்புதலின் நிச்சயம் எனக்கு எவ்வளவோ தெளிவாயிருந்தபடியால், நான் என் வாலிப நண்பரை வெளிச்சத்துக்குக் கொண்டு வர விரும்பினதுமன்றி, சமயம் கிடைத்த போதெல்லாம் இந்நோக்கமாகவே என் பெலத்தையும் உபயோகித்தேன்.LST 23.3

    என் வாலிப நேசருக்காக கூட்டங்கள் ஒழுங்கு செய்தேன், அவர்களில் சிலர் என்னை விட அதிக வயதுள்ளவர்களும் சிலர் விவாகஞ் செய்தவர்களுமாயிருந்தார்கள். அவர்களில் அநேகர் வீணரும் நீர்விசாரிகளுமானவர்கள்; என் அனுபோகம் அவர்களுக்கு வீண் கதை போலிருந்தபடியினால் என் வேண்டுகோள்கள் அவர்கள் செவியில் ஏறவில்லை. ஆகிலும் நான் எவ்வளவோ கவலையெடுத்து இந்த அருமை ஆத்துமாக்களுக்கெல்லாம், தங்களைத் தேவனுக்கு ஒப்புக் கொடுக்குமட்டும் அவர்களுக்காக உழைக்க வேண்டுமென நிர்ணயித்தேன். உழைக்கவும் அவர்களோடு ஜெபிக்கவும் வேண்டுமென்னும் நோக்கமாய் நான் தேடித் பிடித்து ஒன்று சேர்த்துக் கொண்டு வந்தவர்களினிமித்தம் பல இரவுகள் முழுவதையும் நான் என் ஜெபத்தில் செலவிட்டேன்.LST 24.1

    இவர்களில் சிலர் நன் என்ன சொல்லப் போகின்றேனென்று வேடிக்கை பார்க்கும்படி கூறி வந்தவர்கள்; மற்றவர்கள், விசேஷமாய் அவர்கள் தங்கள் சொந்த விஷயத்தைக் குறித்து அசாத்திய நிர்விசாரமாயிருக்கும்போது , நான் வைராக்கியமாய் முயற்சிப்பதினால் என்னைப் பைத்தியக்காரி என்று எண்ணினவர்கள்; எனினும் எங்கள் ஒவ்வொரு சிறு கூட்டங்களிலும், ஒவ்வொருவரும் இயேசுவுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து, மன்னிக்கும் அவருடைய அன்பின் புண்ணியங்களை ஏற்றுக்கொள்ளுமட்டும் நான் அவர்களுக்கு தனித்தனியாய்ப் புத்தி சொல்லி ஜெபிக்க முயன்றேன். ஒவ்வொருவரும் குணப்பட்டு தேவனிடம் திரும்பினார்கள்.LST 24.2

    இராத்திரி தோறும் என் சொப்பனங்களில் ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக உழைப்பதாய் நான் கண்டேன். அச்சமயங்களில் சிலருடைய முக்கிய காரியங்கள் என் மனதிற்குக் காட்டப்பட்டன. இவர்களைப் பிறுக நான் தேடிக் கண்டு பிடித்து இவர்களோடு ஜெபித்தேன். ஒரு சமயம் தவிர மற்ற தடவைகளிளெல்லாம் இந்த ஆட்கள் தங்களைத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்கள். பெருக்கென்று இருந்த எங்கள் சகோதரிகள் சிலர் ஆத்துமாக்களின் குணப்படுத்தலுக்காக நான் மிதமிஞ்சி வைராக்கியமாயிருப்பதாக பயந்தனர்; ஆனால் காலம் அதிகம் குறுகி இருப்பதாய் எனக்குத் தோன்றின படியால் சாவாமையின் ஆசிர்வாதத்தை அடைய எதிர்நோக்கிக் கொண்டிருந்தோரும், கிறிஸ்துவின் அதி சீக்கிர வருகைக்கு எதிர் பார்த்திருந்தோருமாகிய அனைவரும் இன்னும் தங்கள் பாவங்களில் நிலைத்திருந்து, பயங்கர அழிவின் கரையோரம் னின்று கொண்டிருப்போருக்காக இடைவிடாமல் உழைக்க வேண்டியது அவர்களுடைய கடமை.LST 24.3