Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மனுஷ குமாரனின் அடையாளம்

    சீக்கிரத்தில் எங்கள் கண் கீழ்ப்பக்கமாய் இழுப்புண்டது, ஏனெனில் ஒரு மனுஷனுடைய உள்ளங்கையில் பாதியளவான சிறய கருப்பு மேகம் காணப்பட்டது; மனுஷ குமாரனுடைய அடையாளம் அதுதான் என்று நாங்கள் அனைவரும் அறிந்து கொண்டோம். மேகம் சமீபமாய் வர வர அதிகப் பிரகாசமாகிரதையும் பின்னும் அதை விட அதிக மகிமையாகிரதையும், பிறகு அது ஒரு பெரிய வெண்மையான மேகமாகி, அதைச் சுற்றி பதினாயிரமான தூதர்கள் கூடி மிக்க இனிய கீதம் பாடுகிறதையும், அதின் மேல் மனுஷ குமாரன் வீற்றிருக்கிறதையும், நாங்கள் யாவரும் மிகுந்த பக்தி வினைய அமைதியுடன் பார்த்தோம். அவருடைய சிரசின் மயிர் வெண்மையாயும் சுருளாயும் இருந்தது; அது அவருடைய புயங்கள் மீது கிடந்தது; அவருடைய சிரசின் மேல் அனேக கிரீடங்கள் இருந்தன. அவருடைய பாதங்கள் அக்கினிமயமாயிருந்தன; அவருடைய வலது கையிலே கருக்குள்ள அரிவாளும், அவருடைய இடஹு கையிலே ஓர் வெள்ளி எக்காளமும் இருந்தது. அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தன, அவைகள் அவருடைய பிள்ளைகளை முற்றும் ஆராய்ந்து பார்த்தன. பிறகு முகங்களெல்லாம் வெளுத்துக் காணப்பட்டன, தேவானல் கைவிடப்பட்டவர்களின் முகங்களோ கறுத்துக் காணப்பட்டன. பின்பு நாங்கள் எல்லாரும், “நிலைநிற்கக் கூடியவர் யார்? என் அங்கி கரையற்றிருக்கின்றதா?” என்று அலறினோம். பிறகு தூதர்கள் கீதம் நின்றது, அங்கே சிறிது நேரம் நிசப்தமாயிருந்தது. அப்பொழுது இயேசு, “சுத்தமான கைகளும் மாசில்லாத இருதயமுடையவர்கள் நிலை நிற்பார்கள்; என் கிருபை உங்களுக்குப் போதும்” என்றார். உடனே எங்கள் முகங்கள் பிரகாசமடைந்தன; ஒவ்வொரு இருதயமும் சந்தோஷத்தால் நிறைந்தது, மேகம் பூமிக்கு அதிக சமீபத்தில் வந்தபோது தூதர்கள் இன்னும் அதிக உயர்ந்த சுரம் மீட்டி திரும்பவும் பாடினார்கள்.LST 33.1