Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சோதனைகளைக் குறித்து முறு முறுத்தல்

    ஏதாவதோர் சோதனை வருகிறதனால் சிலர் பின்னிட்டு பார்த்ஹு தங்களுக்கு ஓர் கஷ்ட காலம் வந்திருக்கிறதென்று எண்ணுகிறார்கள். தேவ ஊழியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலறுக்கு சுத்திகரிக்கும் சோதனைகள் எதுவென்று தெரியாது. அவர்கள் சில வேளைகளில் தாங்களே சோதனைகளை உண்டாக்கிக்கொண்டும் அவைகளை சோதனைகளாக பாவித்துக் கொண்டும் இலகுவில் அதைரியப் பட்டு நொந்து வருந்துகிறார்கள். அவர்கள் அவ்வளவு சீக்கிரம் நொந்து வருந்தி தங்கலஊக்கு மாத்திரம் அல்ல , மற்றவர்களுக்கும் தேவனுடைய வேலைக்கும் கேடு உண்டாக்குகிறார்கள். சாத்தான் அவர்களுடைய சோதனைகளைப் பெரியதாய்க் காண்பித்து, அவர்கள் இணங்கும் பட்சத்தில் அவர்களுடைய செல்வாக்கையும் அவர்கள் மற்றவர்களுக்கு பிரயோஜனப் படுவதையும் தொலைத்து போட தக்கதான எண்ணங்களை அவார்கள் மனதில் போடுகிறான்.LST 74.2

    சிலர் தங்களை வேலையினின்று நீக்கிக்கொண்டு தங்கள் கைகளினால் உழைப்பதற்கு சோதிக்கப்பட்டதாய் உணர்ந்திருக்கிறார்கள். தேவ கரம் அவர்களை விட்டெடுபட்டு, அவர்கள் வியாதிக்கும் மரணத்துக்கும் ஆளாகும்படி விடப்பட்டால் வருத்தம் இன்னதென்று அப் பொழுது அவர்கள் அறிவார்கள் என்று நான் கண்டேன். தேவனுக்கு விரோதமாய் முறு முறுப்பது ஒரு பயங்கரமான காரியம். தாங்கள் பிரயாணம் பண்ணும் பாதை கர்ரடு முரடானதும், சுய வெறுப்பு, சுய தாதமுள்ளதும் ஆனதென்றும் அவர்கள் விசாலமான ரஸ்தாவில் பிரயாணம் பண்ணினாற்போல் சகலமும் மனோகரமாயிருக்கும்படி எதிர்நோக்கக் கூடாதென்றும் அவர்கள் நினைக்கிறதில்லை.LST 74.3

    தேவ ஊழியர்களில் சிலர், போதகர்களும் கூட , வெகு சீக்கிரம் அதைரியப் பட்டு போகிறார்கள். அவார்கள் அற்பமாய் எண்ணப்பட்டாலும் கனவீனப் படுத்தப் படாமலிருக்கு அவர்கள் அவ்விதம் அற்பமாய் எண்ணப்பட்டதாகவும், கனவீனப் படுத்தப் பட்டதாகவும்எண்ணிக்கொண்டு அவர்கள் இலகுவாய் அதைரியப்பட்டும்சீக்கிரம் வருத்தப்பட்டும் விடுகிறார்கள் என நான் கண்டேன். தங்கள் கதி கஷ்டமானதென்று அவர்கள் நினைக்கிறார்கள். தாகும் தேவ கரம் நீக்கப் பட்டு அவர்கள் ஆத்தும வேதனையை அடைகிறதாய் இருந்தால் அது அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை அப்படிப்பட்டவர்கள் உணருகிறதில்லை. அவர்கள் தேவனுடைய வேலையில் இருக்கையில் சோதனைகளையும், கஷ்டங்களையும் சகித்து, ஆண்டவரின் தயவைப் பெற்றிருந்த போது இருந்த தங்கள் கதியை விட அப்போது அவர்கள் கதி பத்து மடங்கு அதிக கஷ்டமாய் இருப்பதை அவர்கள் காண்பார்கள்.LST 75.1

    தேவனுக்கு என்று உழைப்போர் சிலர் தாங்கள் கஷ்டமின்றி சுகாமாய் இருக்கிறதை அறியாதிருக்கிறார்கள். அவர்கள் அனுபவித்திருக்கும் கஷ்டங்கள் எவ்வளவு சொற்பமேன்றும் வறுமை அல்லது மேலிவுரும்படிக்கான உழைப்பு இன்னதென்றும், ஆத்துமா பாரம் இன்னதென்றும் அவர்களுக்கு தெரியாது. அவார்கள் கஷ்டமின்றி சுகமாய் இருக்கையில் ஆவி கலக்கமின்றி சுயாதீனம் பெற்றிருக்க தேவன் அவர்களுக்கு கிருபை அளித்திருக்கும் போது அவர்கள் அதை அறியாமல் தங்கள் கஷ்டங்கள் பெய்தேன்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தன் தியாக ஆவி இல்லாமலும் தங்களை ஒரு பொருட்டென்று பாராமல் உற்சாகமாய் உழைக்க ஆயத்தமில்லாமலும் இருந்தால் தேவன் அவர்களை நீக்கிப்போடுவார் என்று நான் கண்டேன். தேவன் அவர்களை தற்தியாகமாக உள்ள தம் ஊழியர்ர்கலாக ஏற்றுக் கொள்வார். ஆனால் அவர் சோம்பலாய் அல்ல, ஊக்கமாய் உழைக்கிறவர்களையும் இளைப்புறுங் காலத்தை அறிவோரையும் எழும்பப் பண்ணுவார். தேவ ஊழியர்கள் ஆத்துமா பாரத்தை உணர்ந்தவர்களாய் மண்டபத்துக்கும், பலி பீடத்துக்கும் நடுவே அழுது, “கர்த்தாவே நீர் உமது ஜனத்தைத் தப்புவியும்” என்று கெஞ்ச வேண்டும்.LST 75.2

    தேவ ஊழியர்களில் சிலர் தங்கள் சரீர கட்டுகள் உடைந்து போகும் மட்டும் தேவனுடை வேலைக்கென்று செலவழிக்கவும் செலவு பண்ணப் படவும் தங்கள் பிராணனை ஒப்புக் கொடுத்திருக்கிறார்கள். அன்றியும் அவர்கள் ஓயாக் கவலை, பாடு, கஷ்டங்கள் அடைந்து அதிகமாய் இளைத்து போயிருக்கிறார்கள். மற்றவர்கள் அந்த சுமையை தங்கள் மேல் எடுத்ததுமில்லை; எடுக்கவும் மாட்டார்கள். என்றாலும் அப்படிப் பட்டவர்கள் தான் தாங்கள் ஒருபோதும் கஷ்டங்களை அனுபவியாததின் நிமித்தம் தங்களுக்கு கஷ்டகாலமென நினைக்கிறார்கள். அவார்கள் ஒரு போதும் கஷ்ட பாகமான ஸ்னானம் பெற்றதில்லை. அவார்கள் அவ்வளவு பலவீனத்தையும் திடமின்மையையும் காண்பித்து அவ்வளவு அதிக சுகமாய் இருக்க பிரியப்படும் மட்டும் அவர்கள் அந்த ஸ்நானம் பெறுவதில்லை.LST 75.3