Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    பவுலின் போதனை

    சமயங் கிடைக்கும் போதெல்லாம் முழு சத்தியங்களையும் அவிசுவாசிகளுக்குச் சொல்லிவிட வேண்டுமென ஊழியன் நினைக்கலாகாது. எப்பொழுது பெசுகிறதென்றும், என்ன சொல்லுகிறதென்றும், எதைச் சொல்லக் கூடாதென்றும் அவன் கவனித்து ஆராய்ந்தறிய வேண்டும். இது வஞ்சகத்தைக் கையாடுகிறதல்ல; இது பவுல் செய்தாப் போல் செய்கிறதாயிருக்கிறது. (1 கொரி. 9:19-24 பார்.)LST 213.3

    யூதருடைய பொறாமையை எழுப்பி விடத்தக்க விதமாய்ப் பவுல் அவர்களிடம் போகவில்லை. முதன் முதல் அவர்கள் நசரேயனாகிய இயேசுவை விசுவாசிக்க வேண்டுமென அவன் அவர்களுக்குச் சொல்லாமல் கிறிஸ்துவைக் குறித்தும் அவருடைய ஊழியம் வேலையைக் குறித்தும் பேசின தீர்க்கதரிசனங்களை விவரித்துப் பேசினான். படிப்படியாக அவன் தேவனுடைய நியாயப் பிரமாணத்தை மகிமைப் படுத்துவதின் முக்கியத்தை அவர்களுக்குக் காண்பித்தான். யூத ஒழுங்கையும் பலிமுறை ஆராதனையையும் ஸ்தாபித்தவர் கிறிஸ்து தானெனக்காட்டி, சடங்காச்சரப் பிரமானத்துக்குக் கொடுக்க வேண்டிய கனத்தை அவன் கொடுத்தான். பிறகு அவன் அவர்களை மீட்பரின் முதலாம் வருகைக்குக் கொண்டு வந்து, பலிமுறை ஆராதனையில் குறிக்கப்பட்டவைகள் எல்லாம் கிறிஸ்துவின் ஜீவியத்திலும் மரணத்திலும் நிறைவேறலாயினவென்று காட்டினான்.LST 213.4

    பவுல் புறஜாதிகளிடம் கிறிஸ்துவை உயர்த்தினதினாலும் பின் நியாயப்பிரமாணத்தின் கட்டுப்படுத்தும் உரிமைகளை எடுத்துக் கூறினதினாலும் புறஜாதியாரைக் கிட்டினான். கல்வாரிச் சிலுவையினால் பிரதி விம்பிக்கப்பட்ட வெளிச்சம் எவ் விதம் யூத ஒழுங்கு முழுவதையும் முக்கியப்படுத்தி மகிமைப்படுத்திற்று என்று காட்டினான். இவ் விதம் அப்போஸ்தலன் தான் வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பங்களுக்குத் தக்கதாகத் தன தூதை ஒழுங்கு செய்து கொண்டு வெவ்வேறு விதமாய் வேலை செய்தான். எவ்வளவோ பொறுமையுடன் வேலை செய்த பிறகு அவன் மிக்க பெரிய சித்தியடையலானான்; என்றாலும் அநேகர் மனந்திரும்பினதில்லை. சத்தியத்தை எவ்வகையாக எடுத்துக் காட்டினாலும் இக் காலத்திலும் சிலர் மனந்திரும்ப மனமற்றிருக்கின்றனர்; தேவ ஊழியன் பொறாமை அல்லது விவாதத்தை எழுப்பி விடாதபடி அவன் சிறந்த வழிகளைக் கவனமாய் ஆராய்தல் வேண்டும். இதில் தான் தவறி விட்டனர். தங்கள் சுபாவ எண்ணங்களைப் பின்பற்றினதினால், அவர்கள் வேறு விதமாய் வேலை செய்து ஆத்துமாக்களையும் அவர் மூலமாய் வேறு ஆத்துமாக்களையும் அடைந்திருக்கக்கூடிய வாசல்களை அவர்கள் அடைந்துவிட்டார்கள். தேவ ஊழியர் பல வழியறிந்தவர்களாயிருக்க வேண்டும்; அதாவது அவர்கள் விசால குணமுடையவர்களாயிருக்க வேண்டும். தாங்கள் உழைத்து வரும் ஜனங்களின் வகுப்பிற்கும் தங்களுக்கு எதிர்ப்படும் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றபடி சத்தியத்தை பிரஸ்தாபிக்க வேண்டுமென்பதை அறிந்து கொள்ளக் கூடாமல், வேலை செய்கிற வகையில் அசையாவச்சு அடிக்கும் வண்ணம் அவர்கள் ஒரே அபிப்பிராயமுள்ளவர்களாயிருக்கக் கூடாது.LST 214.1

    பகை, கசப்பு, விரோதம் முதலியன ஏற்படும் போது ஊழியன் சிறந்த வேலை செய்ய வேண்டியதுண்டு. மற்றவர்களைவிட அதிகமாய், “முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற் கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிற” அந்த ஞானம் அவனுக்கு அவசியம். அவன் சத்தியத்தைக் கூறி அறிவிக்கும் போது பணியும் மெதுவாயிறங்கும் மழையும் வாடும் பயிர்கள் மேல் விழுவது போல அவருடைய வார்த்தைகளும் மெது வாய் விழ வேண்டும். அவன் ஆத்துமாக்களைத் தள்ளுகிறவனாயிராமல் அவர்களை ஆதாயம் செய்கிறவனாயிருக்க வேண்டும். ஏதோ சில விஷயங்களை நிர்வகிப்பதற்குரிய சட்டங்கள்இல்லாதிருக்கும் போது அவன் சாமர்த்தியமாய் அவைகளை நிர்வகிக்கப் பிரயாசப்பட வேண்டும்.---G.W. 117-9.LST 214.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents