Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மாபெரும் விசுவாச துரோகம்

    வேத வாக்கியங்கள் ஓர் மார்க்க துரோகத்தை முன்னறிவிக்கிறது. அது அப்போஸ்தலரின் நாட்களிலேயே சபையில்” உள்ள சில கள்ள சகோதரர்க்குள் தலை காட்ட ஆரம்பித்து, கடைசியாக பவுல் தேசலோநியருக்கு எழுதினபடி அது ஓர் விசுவாச துரோகமாக” ஸ்திரப்பட்டு ‘பாவமனுஷன் .... கேட்டின் மகனாக” வெளிப்பட வேண்டி இருந்தது. 2 தெச. 2:1- 7.LST 58.1

    இவ்வார்த்தைகளின் நிறைவேறுதலாக இயேசுவின் அப்போஸ்தலரில் கடைசியானவருடைய மரணத்திற்கு பிறகு கிறிஸ்துவ சபையில் உள்ள சிலர் கிறிஸ்து போதித்த சுதா சத்தியத்தை விட்டு விலக ஆரம்பித்தனர். இவர்கள் மெதுவாக அஞான நடவடிக்கைகளை கையாடி உலகத்துடன் சேர்ந்து கொள்ள ஏதுவாயிற்று.LST 58.2

    காலம் செல்ல செல்ல, சபையின் தொகையும் புகழும் பெருக பெருக கண்டிப்பாய் வேத உபதேசங்களுக்கு கீழ்பட்டிருந்து நடப்போரின் தொகை படிப் படியாய் குறைவு பட்டது. கடைசியாக கிறிஸ்துவுக்கு பின் ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்துவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களில் பலர் மெய்யாய் கிறிஸ்துவின் போதனைகளுக்கு இசைந்து நடக்க வில்லை, அதன் பிறகு பல நூற்றாண்டுகளாக கிறிஸ்து மார்கத்திற்கு விரோதமானதோர் மார்க்கம் ஆளுகை செய்தது. சத்தியம் தரையிலே தள்ளுண்டது; அஞ்ஞானம் மேற்கொண்டது.LST 58.3

    இம்மார்க்க துரோக நூற்றாண்டு வரை சரித்திரம் சரியாய் “இருந்தா யுகங்கள்” என வரையருக்கிரது. இக்காலத்தில் அடிப்படியான வேத உபதேசங்களில் பலவற்றை மாற்றிப் போட அல்லது தள்ளிப் போடா முயற்சிகள் செய்யப்பட்டன.கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னான நாலு நூற்றாண்டுகளிலும் இருந்தார் போல ஆவிக்குரிய இவ்வதிகார யுகத்திலும் தீர்க்க தரிசன வரத்தின் வெளிப்படுதளைப் பற்றிய குறிப்புகளை நமக்கு இல்லாதிருப்பது ஆச்சரியமன்று.LST 58.4