Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ஒய்வு நாளுக்காக ஆயத்தப்படுதல்

    வார முழுவதும் ஓய்வுநாளை நாம் மனதில் வைத்திருந்து கரபனையின் படி அதைக் கைக்கொள்ள ஆயத்த படுகிறவர்களாயிருக்க வேண்டும். சட்டமான ஓர் விஷயமாக மாத்திரம் நாம் ஓய்வை ஆசரிக்கிறவர்களாய் இருக்கக் கூடாது. ஜீவியத்தின் சகல காரியங்களிலும் ஆவிக்குரிய அதின் நோக்கத்தை நாம் அறிய வேண்டும். ஒய்வு நாளைத் தங்களுக்கும் தேவனுக்குமுள்ள ஓர் அடையாளமாக மதிக்கிறவர்களெல்லோரும் அவருடைய ஆட்சியின் சத்தியங்களுக்குப் பிரதிநிகளாயிருந்து அவரே தங்களைப் பரிசுத்தம் பண்ணுகிற தேவன் என்று காட்டுவார்கள். அவருடைய ராஜ்யத்தின் பிரமாணங்களை அவர்கள் அனுதினமுன் கைக்கொண்டு நடப்பார்கள். ஓய்வுநாளின் பரிசுத்தம் தங்கள் மேல் நிலைத்திருக்க வேண்டுமென்பதே அவர்களுடைய அன்றாட ஜெபமாயிருக்கும். நாடோறும் அவர்கள் கிறிஸ்துவுடன் ஐக்கியமாயிருந்து அவருடைய குணத்தின் பூரணத்தைக் காண்பார்கள். தினந்தோறும் அவர்களுடைய வெளிச்சம் நற்கிரியைகளினால் மற்றவர்களுக்குப் பிரகாசிக்கும்.LST 156.1

    இவ்விதம் ஒய்வு நாள் நினைவு கூரப்படும் பட்சத்தில் லெளதீகம் வைதீகத்தைத் தொடுவதற்கிடங் கிடையாது. ஆறு வேலை நாட்களிலும் செய்யப்பட வேண்டிய எந்தக் கடமையாயினும் ஒய்வு நாளுக்கேண்டு விட்டுவைக்கப்படக் கூடாது. ஆண்டவர் ஓய்ந்திருந்து பூரித்த அந்த நாளில் நாம் அவருடைய ஆராதனையில் ஈடுபடக் கூடாவண்ணம் அதிக அலுப்பாயிருப்பதற்கு வாரத்தில் நமது சக்திகள் லெளதிக வேலைகளால் அவ்வளவு தூரம் தளர்ச்சியடைய விடக்கூடாது.LST 156.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents