Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    கிறிஸ்து அதைரியமடையவில்லை

    உலகின் நிர்ப்பந்தங்கள், சஞ்சலங்கள் முதலியவற்றின் ஆழங்களையும் அவைகளை நிவிர்த்தி செய்வதற்கான வழிகளையும் இரட்சகர் அறிவார். பாவத்தினாலும், துக்கத்தினாலும், வேதனையினாலும் பாரமடைந்து எங்கும் ஆத்துமாக்கள் அந்தகாரத்தில் கிடந்தது தவிக்கிறதை அவர் காண்கிறார். ஆனால் அவர்கள் எப்படியாகக் கூடுமென்பதும் அவருக்குத் தெரியும். அவர்கள் எவ்வளவு மேலான நிலைமையை அடையலாம் என்பதை அவர் அறிவார். மானிடவர்க்கங்கள் தங்கள் கிருபைகளைத் தூஷித்து, தங்கள் தாலந்துகளைப் பாழாக்கி, தெய்வத்துக்கொப்பான மனுஷ தன்மையின் கனத்தை இழந்து போன போதிலும் அவர்களுடைய மீட்பிலே சிருஷ்டி கர்த்தாவானவர் மகிமைப் படுத்தப்பட்டால் வேண்டும்.LST 200.3

    கிறிஸ்து தமது மெய்யடியார்கள் கேட்க அல்லது நினைக்கக் கூடியதை தாம் அதிகமாய் அவர்களுக்குச் செய்யக் கூடுமென மகிழ்வுற்றார். பரிசுத்த ஆவியினுடைய சர்வ வல்லமையின் காவலுக் குட்பட்டு சத்தியம் போள்ளப்போடு புரியும் போரில் வெற்றியடையுமென்றும், உதிரக் கறைப்பட்ட கொடி தமது மெய்யடியார்கள் மேல் மகிமையாய் வீசுமேன்றும் அவர் கண்டார். தம்மை நம்பும் சீஷர்களுடைய ஜீவியம் இனி வரும் அப் பெரிய உலகில், இவ்வுலகில் காணப்படுகிற மாதிரியிராமல், அவருடைய ஜீவியத்தைப் போல் ஜெயத்தின் மேல் ஜெயம் பெற்று விளங்குமென அவர் கண்டார்.LST 200.4

    “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங் களுக்கு உபத்திரவம் உண்டு; ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” என்று சொன்னார். யோவா.16:33. கிறிஸ்து தவறினதுமில்லை, அதைரியமடைந்ததுமில்லை; அவருடைய மெய்யடியார்களும் அதே சகிப்பின் தன்மையையுடையதோர் கொள்கையை வெளிப்படுத்துகிறவர்களாயிருத்தல் வேண்டும். அவர்கள் அவர் ஜீவித்த வண்ணம் ஜீவிக்கவும் அவர் கிரியை செய்த வண்ணம், கிரியை செய்யவும் வேண்டும், ஏனெனில் வேலைக்காரரில் எல்லாம் சிரேஷ்ட வேலைக்காரராக அவர்கள் அவர் மேல் சார்ந்திருக்கின்றனர்.LST 200.5

    தைரியத்தையும், ஊக்கத்தையும், விடாமுயற்சியையும் அவர்கள் அடைந்திருத்தல் வேண்டும். கூடாத காரியங்கள் போல் தொன்றுவன தங்கள் வழிக்கு இடையுறாயிருந்த போதிலும் அவருடைய கிருபையை முன்னிட்டு அவர்கள் முன்னேறிச்செல்ல வேண்டும். கஷ்டங்களினிமித்தம் அவர்கள் புலம்பி அழாமல் அவைகளைக் கடந்து செல்ல வேண்டும். அவர்கள் யாதொன்றையும் குறித்து நல் நம்பிக்கையிருக்க வேண்டும்.---G.W.36-9.LST 201.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents