Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சுவிசேஷகராகிய கிறிஸ்து

    கிறிஸ்துவைப் போன்ற சுவிசேஷகன் எக்காலத்திலும் இருந்ததில்லை. அவர் பரலோகத்தில் மகத்துவம் பொருந்தினவராயிருந்தார், ஆயினும் அவர் மனு மக்களாகிய நம்மை நாம் இருக்கும் இடத்திலேயே சந்திக்கும் பொருட்டு நமது சுபாவத்தை எடுத்துக் கொள்வதற்கென்று தம்மைத் தாமே தாழ்த்தினார். ஐசுவரியவான்கள் ஏழைகள், சுயாதீனர் அடிமைகளாகிய சகல ஜனங்களுக்கும் உடன்படிக்கையின் தூதனாகிய கிறிஸ்து இரட்சிப்பின் செய்திகளைக் கொண்டுவந்தார். பெரிய பரிகாரி என அவருடைய புகழ் பலஸ்தீனா நாடெங்கும் பிரசித்தமாயிற்று. நோயாளிகள் அவருடைய சகாயத்தைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர் கடந்து செல்லும் இடங்களுக்கு வந்தார்கள். இங்கே பின்னும் அவருடைய வார்த்தைகளைக் கேட்பதற்கும் அவருடைய கரத்தினால் தொடப் பெறுவதற்கும் ஆவலுடன் வந்தார்கள். இவ்விதம் அவர் ஒரு நகரத்தை விட்டு இன்னொரு நகரத்திற்கும், ஒரு பட்டணத்தை விட்டு மறு பட்டணத்திற்கும் சென்று சுவிசெஷத்தைப் பிரசங்கித்து நோயுற்றோரைக் குணமாக்கினார். மகிமையின் ராஜா கேவலம் மானிட கோலங்கொண்டார்.LST 206.1

    அந்த ஜனம் கொண்டாடின பெரிய வருஷாந்தரப் பண்டிகைகளுக்கும் போய், வெளியாசாரத்தில் மூழ்கியிருந்த திரளான ஜனங்களுக்கு அவர் பரம காரியங்களைப் பற்றிப் பேசி, நித்தியத்தை அவர்கள் காணச் செய்தார். ஞானத்தின் பண்டக சாலையிலிருந்து அவர் எல்லாருக்கும் பொக்கிஷங்களைக் கொண்டு வந்தார். அவர்களுக்கு விளங்கத்தக்கதாக அவ்வளவு தெளிவான பாஷையில் அவர் அவர்களிடம் பேசினார். துக்கத்திலும் துன்பத்திலும் அகப்பட்டிருந்த அனைவருக்கும் அவர் தமக்கே சொந்தமாயுள்ள விசேஷ முறைகளைக் கையாடி உதவி செய்தார். உள்ளங் கனிந்து உபசாரக் கிருபையுடன் பாவப் பிணிப்பட்ட ஆத்துமாவுக்கு ஊழியஞ் செய்து குணமும் பலமுங் கொடுத்தார்.LST 206.2

    போதகர்களின் பிரபுவாகிய அவர் ஜனங்களுக்கு மிக்க பழக்கமான வாழ்க்கை விஷயங்களைக் கொண்டே அவர் அவர்களிடம் நெருங்கிச் சேரப் பிரயாசப்பட்டார். சத்தியத்தைக் கேட்போர் அதை ஒரு போதும் மறந்து போகாமல் நினைத்துக் கொள்ளத்தக்க விதமாய் அவர் அதை வெளிப்படுத்தினார். தங்கள் வாழ்வுக்கும் செஷமத்துக்கும் அடுத்த விஷயங்களை அவர் பூரணமாய் அறிந்திருந்தாரென அவர்கள் உணர்ந்து கொள்ளத்தக்க விதமாய்ப் போதித்தார்.LST 206.3