Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    இருபத்திரண்டாம் அத்தியாயம்—போரின் தரிசனம்

    இரண்டு சேனைகள் பயங்கரமாய்ப் போர்செய்வதை நான் என் காட்சியில் கண்டேன். ஒரு சேனை உலக அடையாளமுள்ள கொடிகளால் நடத்தப் பட்டது; மற்றது இம்மானுவேல் அரசனின் இரத்தக் கறைகொடியினால் நடத்தப் பட்டது. கர்த்தரின் சேனையிலிருந்து கூட்டங் கூட்டமாய்ச் சத்துருவோடு சேர்ந்து கொண்ட போதும், சத்துருவின் பக்கமிருந்து கோத்திரங் கோத்திரமாய் கற்பனையைக் கைக்கொள்ளும் தேவனுடைய ஜனங்களுடன் சேர்ந்து கொண்ட போதும் கொடிகொடியாய்த் தூளிலே மிதிபடும்படி விடப்பட்டது. வானத்தின் மத்தியிலே பறந்த ஓர் தூதன் பல இன்னொரு பலத்த தள கர்த்தன், ” வரிசையில் வாருங்கள். தேவனுடைய கற்பனைகளுக்கும் கிறிஸ்துவைப் பற்றிய சாட்சிக்கும் உண்மையாயிருக்கிறவர்கள் இப்பொழுது தங்கள் இடத்தைப் பெற்றுக் கொள்வார்களாக. நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து போய் அசுத்தமானததைத் தொடாதிருங்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்கு பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்கு குமாரரும் குமாரத்திகளுமாய் யிருப்பீர்கள். விருப்பமுள்ளவர் அனைவரும் பலவானுக்கு விரோதமாக கர்த்தருக்குத் துணையாக வருவார்களாக.” என்று பலத்த சத்தமிட்டுச் சொன்னான்.LST 101.1

    சண்டை மும்மரித்தது. ஜெயம் மாறி மாறியிருந்தது. “கொடி பிடிக்கிறவன் களைத்து விழுவது போல” இபொழுது சிலுவை வீரர்கள் இடம் கொடுத்தார்கள். ஏசா. 10:18. ஆனால் பின் வாங்கினது போல் காணப்பட்ட அவர்களுடைய பின்வாங்கல் இன்னும் அதிக வாய்ப்பான ஸ்தலத்தைப் பெறுவதற்கேதுவாகவே இருந்தது. மகிழ்ச்சியின் சத்தங்கள் கேட்கப்பட்டன. சத்துரு அக்காலமட்டும் கைப்பற்றிக் கொண்டிருந்த கோட்டைகளின் சுவர்கள் மேல் கிறிஸ்துவின் வீரர்கள் அவருடைய கொடியை நட்டின போது, ஓர் துதியின் கீதமும் அத்துடன் தேவதூதர்கள் சத்தங்களும் சேர்ந்து தேவனிடம் சென்றன. நமது இரட்சிப்பின் அதிபதி போரை நடத்திக் கொண்டும் தம்முடைய வீரருக்கு வேண்டிய உதவி புரிந்து கொண்டுமிருந்தார். அவருடைய வல்லமை மகா வல்லமையாய் வெளிப்பட்டுப் போரை அவர்கள் வாசல் மட்டும் நெருங்கிச் செல்ல தைரியப்படுத்தினது. ஜெயிக்கிறவராகவும் ஜெயிப்பறவராகவும் அவர் அவர்களைப் படிப்படியாய் நடத்திச் சென்ற போது அவர் அவர்களுக்கு பயங்கர காரியங்களை நீதியோடு கற்பித்தார்.LST 101.2

    முடிவிலே ஜெயம் கிடைத்தது. ” தேவனுடைய கற்பனைகளும் இயேசு கிறிஸ்துவின் விசுவாசமும்” என்று எழுதப் பெற்ற கொடியைப் பின்பற்றிப் போன சேனை மகிமையாய் வெற்றியடைந்தது. கிறிஸ்துவின் வீரர்கள் நகரத்தின் வாசல் மட்டும் நெருங்கியிருந்தார்கள்; சந்தோசத்துடன் நகரம் தன் ராஜாவை ஏற்றுக்கொண்டது. சமாதானம், சந்தோசம், நித்திய நீதியின் ராஜ்யம் ஸ்தாபிக்கப் பட்டது.LST 102.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents