Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பரிசுத்த ஸ்தலம் எது?

    தானியேல் 8:14-ல் சொல்லப்பட்ட பரிசுத்த ஸ்தல சுத்திகரிப்பானது பூமி பரிசுத்தவான்களின் குடியிருப்பு ஸ்தலமாகுமுன் அது அக்கினியால் சுத்திகரிக்கப் படுவதை குறித்ததென மிஸ்டர் மில்லரும் அவருடன் செர்ந்திருந்தோரும் நினைத்தார்கள். இது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் நடை பெற வேண்டியதாயிருந்தது; ஆகவே 2300 நாட்கள் அல்லது வருஷங்களின் முடிவிலே நாங்கள் அச்சம்பவத்தை எதிர் பார்த்தோம். ஆனால் எங்கள் எமாற்றத்திற்குப் பின்பு வேத வாக்கியங்கள் ஜெபத்தோடும் ஊக்கமான தியானத்தோடும் வெகு ஜாக்கிரதையுடன் ஆராய்ச்சி செய்யப்பட்டன. கொஞ்சக் காலம் சென்றதும் எங்கள் இருளில் வெளிச்சம் பிரகாசித்தது; சந்தேகங்களும் தடுமாற்றங்களும் பறந்து போயின.LST 30.4

    தானியேல் 8:14-ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் பூமி சுத்திகரிக்கப் படுவதி குறிப்பதற்குப் பதிலாக பரலோகத்திலுள்ள பிரதான ஆசாரியின் முடிவான வேலையாகிய பாவ நிவாரண வேலையின் முடிவையும் அவருடைய வருகையின் நாளிலே நிலை நிற்பதற்கு ஜனத்தை ஆயத்தப்படுத்துவதையும் குறித்ததென்று இபொழுது தெளிவானது.LST 31.1