Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்துவின் உத்தியோகம் மகிமை படுத்தப்பட்டது

    தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மனுசாவதாரம், “கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பது” என்பது தான் சுவிசேசத்தின் பெரிய விஷயம். “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப் பிரகாரமாக அவருக்குள் வாசமாய் இருக்கிறது. அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள். “கொலோ 1:27;2:9,10. இவ் விசேஷ சத்தியத்தை ஏற்றுக்கொள்வதும் அல்லது தள்ளி விடுவதும் தீர்க்க தரிசன வரமுடையவனென்று சொல்லும் ஒருவனைக் பரீட்சப்பதற்கு தேவனால் நியமிக்கப்பட்ட பரீட்சைகளில் ஒன்றாயிருக்கிறது.LST 110.2

    “உலகத்தில் அநேகங் கள்ளத் தீர்க்கத் தரிசிகள் தோன்றி இருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என சோதித்தறியுங்கள். தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல ” என்று யோவான் அப்போஸ்தலர் எழுதுகிறார். 1, யோவா 4:1-3LST 110.3

    கள்ளத் தீர்க்கத் தரிசிகள் கிறிஸ்துவை உயர்த்துகிறதில்லை. அவர்கள் அதற்கு பதிலாக தங்களையே கவனிக்கச் செய்கிறார்கள். “அவர்கள், சீசர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடான வைகளைப் போதிப்பார்கள்.” அப். 20:30. இதைச் செய்து முடிப்பதற்கு, “தரிசனக்காரரை நோக்கி : தரிசனங் காண வேண்டாம் என்றும், ஞான திருஷ்டிக்காரரை நோக்கி: யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ் சொல்லாமல், எங்களுக்கு இதமான சொற்களை உரையுங்கள்” என்று தங்கள் இருதயங்களில் சொல்லுகிறவர்களின் மர்மச்சிந்தையைப் பிரியப் படுத்துமாறு அவர்கள் போதிக்கிறார்கள் . ஏசா 30:10. கள்ளத் தீர்க்கத்தரிசிகள் அல்லது போதகர்கள் “உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுவார்கள் .உலகமும் அவர்களுக்குச் செவி கொடுக்கும்.” 1 யோவா .4:5.LST 110.4

    உவைட் அம்மாளின் உபதேசங்களில் கிறிஸ்து பாவிகளின் ஒரே இரட்சகராகக் காண்பிக்கப்பட்டு, மகிமை படுத்தப்பாட்டிருகிறார். கிறிஸ்துவைத் தவிர “நாம் இரட்சிக்கப்படும் படிக்கு வானத்தின் கீழ் எங்கும் ..வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை.” அப்.4:12.ஊழியத்திலுள்ள சகோதரர்களுக்கு அந்த அம்மாளால் கொடுக்கப்பட்ட பின்வரும் போதனையை ஆண்டவருக்கென்று அவர் செய்த தமது சொந்த வேலையிலே சாதித்துக் காண்பித்தார் :LST 111.1

    “கிறிஸ்து சிலிவையி லறையுன்டதும், கிறிஸ்து உயிர்த்தெழுந்ததும், கிறிஸ்து பரலோகம் போனதும் ,கிறிஸ்து திரும்பவும் வருகிறதுமான சாத்தியங்களை ஊழியன் அன்புடன் மிகவும் ஊக்கமாய் ஜனங்களுக்கு போதிக்கத்தக்கதாக அவனுடைய மனம் அவ்வளவு தூரம் அச்சத்தியங்களினால் உருகி, பூரிப்படைந்து நிரம்பி யிருக்க வேண்டும். அப்பொழுது ஊழியன் மறைக்கப்பட்டு இயேசு வெளிப்படுத்தப் படுவார். ஜனங்களுக்கு போதிக்கிற நீ இயேசுவை உயர்த்து .பிரசங்கதிலும்,பாட்டிலும்,ஜெபத்திலும் அவரை உயர்த்து. கலங்கித் திகைத்துக் கெட்டுப்போன ஆத்துமாக்கெளுக்கு “தேவாட்டுக்குட்டி”யைக் காட்ட உன் சக்திகளெல்லாம் பிரயோகிக்கப் படட்டும். உயிர்த்தெழுந்த இரட்சகராகிய அவரை உயர்த்திக் காட்டிக் கொண்டு, கேட்போர் யாவரும் ‘நம்மில் அன்பு கூர்ந்து நமக்காகத் தம்மை தாமே ஒப்புக்கொடுத்த ‘ அவரண்டை வரும்படி அவர்களுக்குச் சொல்லு. இரட்சிப்பின் சாஸ்திரமே ஒவ்வொரு பிரசங்கத்தின் பாகமாயும், ஒவ்வொரு பாட்டின் பொருளாயும் இருப்பதாக விண்ணப்பங்களிளெல்லாம் அதுவே சாற்றப்பட்டிருக்கட்டும். தேவ ஞானமும் பெலமுமாகிய கிறிஸ்துவுக்குச் சேர்மானமாக உன் பிரசங்கத்தில் வேறதையும் கொண்டு வராதே. மனஸ்தாபப்பட்டோரின் நம்பிக்கையாகவும், விசுவாசிகளின் அரணாகவும் கிறிஸ்துவைக் காண்பித்து ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொள். கலங்கித் திகைப்போருக்கு சமாதானத்தின் வழியை வெளிப்படுத்தி இரட்சகரின் கிருபையையும் பரிபூரணத்தையும் தெளியக் காட்டு.”LST 111.2