Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வெற்றிசிறந்த சபை

    இப்பொழுது சபையானது போரிடும் சபையாயிருக்கிறது. சற்றேறக்குறைய முழுவதும் விக்கிரகாராதனைக்கு ஒப்புக் கொடுக்கப் பட்டு, நடுராத்திரி அந்தகாரத்தில் கிடக்கும் ஓர் உலகத்தோடு நாம் இப்பொழுது தடுமாறிக் கொண்டு நிற்கிறோம். தேவனுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுகிறது போல பூலோகத்திலும் செய்யப்பட வேண்டும். அப்போது ஜாதிகள் பரம பிரமாணத்தைத் தவிர வேறொரு பிரமாணத்தையும் அறியாதிருப்பார்கள்.துதி தோத்திர வஸ்திரங்களாகிய கிறிஸ்துவின் நீதியாக அங்கியத்தரித்தவர்களாய் சகலரும் பாக்கியமுள்ள ஒரே குடும்பமாயிருப்பார்கள். இயற்கை எல்லாம் மட்டற்ற வனப்புடன் கடவுளை சாதாவும் துதித்துப் போற்றிக் கொண்டிருக்கும். ஆண்டுகள் சந்தோசமாய்க் கழியும். சந்திர வெளிச்சம் சூரிய வெளிச்சத்தைப் போலவும் சூரிய வெளிச்சம் இப்பொழுதுதிருப்பதை விட ஏழு மடங்கு அதிக வெளிச்சமாயும் மிருக்கும். அக்காட்சியைக் கண்டு விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரிப்பார்கள். தேவனும் கிறிஸ்துவும் சேர்ந்து, “இனி அங்கே பாவமுமில்லை, மரணமுமில்லை” என்று கூறுவார்கள்.LST 102.2