Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வருஷாந்தர ஆராதனை

    பெரிய பாவ நிவாரண நாளில் இரண்டு வெள்ளாட்டுக் கடாக்கள் கூடார வாசலிலே கொண்டு வரப்பட்டு, அவைகளைக் குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும் போக்காடக விடப்படும் வெள்ளாட்டுக் கடாவுக்கென்று ஒரு சீட்டுமாக இரண்டு சீட்டுகள் போடப்பட்டன (லேவி. 16:8). கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக் கடா ஜனங்களின் பாவ நிவாரண பலியாக அடிக்கப்பட வேண்டும், ஆசாரியன் அதன் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டு வந்து கிருபாசனத்தின் மேலும் அதற்கு முன்பாகவும் அதைத் தெளிக்க வேண்டும்.LST 43.1

    “இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுக்களினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்தஸ்தலத்திற்காகப் பிராயச் சித்தஞ் செய்து அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசாரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவேன்.” லேவி 16:16.LST 43.2

    “அதின் தலையின் மேல் ஆரோன் தன இரண்டு கைகளையும் வைத்து, அஹின் மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு அவைகளை வெள்ளாட்டுக் கடாவினுடைய தலையின் மேல் சுமத்தி அதை அதற்கான ஆள் வசமாய் வனாந்திரத்துக்கு அனுப்பிவிடக் கடவன். அந்த வெள்ளாட்டுக் கடா அவர்களுடைய அக்கிரமங்களை எல்லாம் தன மேல் சுமந்து கொண்டு குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக் கடாவை வனாந்தரத்திலே போக விடக்கடவன்.” (லேவி. 16:21,22)LST 43.3

    போக்காடு பின் ஒருபோதும் இஸ்ரவேலின் பாலயத்துள் வந்ததில்லை; போக்காடாகிய வெள்ளாட்டுக் கடாவைக் கொண்டு போய் விட்டவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து ஜலத்தில் ஸ்நானம் பண்ணின பின்பு பாளையத்துக்குள் வரவேண்டும்.LST 43.4

    1. பாவ நிவாரண நாளின் ஆராதனைகளை பரிசுத்தஸ்தல சுத்திகரிப்பின் போங்காயிருந்த தென்பதற்கு இன்னும் வாக்கியங்கள் பார்க்க வேண்டுமானால் லேவி. 16:9-30 பார்க்க.LST 43.5

    தேவனுடைய பரிசுத்தத்தையும் பாவத்தைப் பற்றிய அவருடைய அருவருப்பையும் இஸ்ரவேல் ஜனங்களுடைய மனதில் படும் படி செய்து அவர்கள் தீட்டுப்படாமல் பாவத்தோடு சகவாசம் செய்ய முடியாதென அவர்களுக்குக் காண்பிக்கும் நோக்கமாய்த் தான் அந்த ஆராதனை முழுவதுமிருந்தது. இப்பாவ நிவாரண வேலை நடை பெறுகையில் ஒவ்வொரு மனுஷனும் தன்னைத் தாழ்மைப் படுத்த வேண்டும். வேலை ஜோலிகள் எல்லாம் நிற்பாட்டப்பட வேண்டும், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் தேவசந்நிதியிலே தங்களை மிகவும் தாழ்த்தி உபவாசித்து, ஜெபத்திலும் இருதயத்தை உய்த்து ஆராய்ந்து பார்ப்பதிலும் அந்நாளைச் செலவிட வேண்டும்.LST 43.6