Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வாலிபர் சுமை சுமப்போராயிருக்க

    “வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவ வசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும் உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.” 1 யோவா 2:14.LST 210.3

    வேலை பல வழியாய் முன்னேறிச் செல்லும் பொருட்டு தேவன் ஊக்கமும் வைராக்கியமும் தைரியமுமுள்ள வாலிபரை அழைக்கிறார். தமது வேலையை முன்னேற்றம் செய்வதற் குதவியாக அவர் வாலிபரைத் தெரிந்தெடுக்கிறார். தெளிந்த மனதோடு ஆலோசனை செய்து தைரியமாய் நடத்துவதற்கு நவமான ஸ்திரமுள்ள ஊக்கங்கள் அவசியம். வாலிப ஆண்களும் பெண்களும் நல்லோசனையாயும் நன்முயற்சியாயும் தங்கள் சக்திகளைப் பிரயோகம் செய்வதனால் தேவனுக்கு மகிமையையும் தங்கள் உடன் மனிதருக்கு இரட்சிப்பையும் கொண்டு வரத் தக்கதாக அவர்கள் தங்கள் வாலிப பெலத்தை அவருக்குக் கொடுக்கும்படி அழைக்கப்படுகிறார்கள்.LST 210.4

    ஒருவனும் தனக்குத் தானே ஜீவிக்கிறதில்லை; எல்லாரும் நன்மைக்காகவோ அல்லது தீமைக்காகவோ ஓர் சக்தியைப் பிரயோகி க்கிறார்கள். இதினிமித்தமே அப்போஸ்தலன் வாலிபர் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கும்படி கற்பிக்கிறார். அவர்கள் கிறிஸ்துவுக்கு உடன் வேலையாட்களாக, அவருடைய சுயவெறுப்பு, தியாகம், பொறுமை, கிருபையுள்ள கடமை முதலியவற்றிற்கு அவரோடு பங்காளிகளாயிருக்க வேண்டுமென்பதை அவர்கள் நினைக்கும் போது அவர்கள் எப்படித்தான் வேறு விதமாயிருக்கக் கூடும்?LST 210.5

    முன் ஒருபோதும் மக்கள் காரியம் அவ்வளவு ஆபத்தாயிருந்ததில்லை. தற்போதுள்ள சந்ததியின் மேல் பலத்த காரியங்கள் பொறுத்து நிற்குமாப் போல இதற்கு முன்னுள்ள எந்தச் சந்ததியின் மேலும் பொறுத்து நிற்கவில்லை. நற்குணத்தை யடையாமல் வாலிபர் உத்தரவாதமான எப் பதவியையும் தடையின்றி ஒப்புக் கொள்ளக் கூடுமென அவர்கள் சஷணப் பொழுதும் எண்ணலாகாது. அப்படியானால் முட்செடிகளில் திராட்சப்பழங்களையும் அல்லது முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் சேகரிக்கலாமென அவர்கள் எண்ணத் தகுமே.LST 211.1

    எந்த நற்குணமும் செங்கல் மேல் செங்கல் வைத்துக் கட்டப் பட வேண்டும். வாலிபர் தேவனுடைய வேலையில் சித்தி பெற உழைக்கச் செய்யும் அக் குணங்களை அவர்கள் அடைய வேண்டுமானால் தங்கள் தத்துவங்களை ஜாக்கிரதையாய்ப் பிரயோகிக்கிறவர்களாயும், தெய்வ நடத்துதலால் தங்களுக்குக் கிடைக்கும் சிலாக்கியங்களை விருத்தி செய்கிறவர்களாயும், எல்லா ஞானத்துக்கும் ஊற்றானவரோடு சேர்ந்திருக்கிரவர் களாயுமிருக்க வேண்டும். தாழ்ந்த திட்டத்தைப் பற்றி அவர்கள் திருப்தி யடைகிறவர் களாயிருக்கலாகாது. யோசேப்பு, தானியேல் இவர்களின் குணங்கள் அவர்களுக்குச் சிறந்த மாதிரிகளாகும், இரட்சகரின் ஜீவியத்திலோ அவர்கள் பூரண மாதிரியைக் கண்டடையலாம்.LST 211.2