Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    நம்பிக்கை புதுப்பிக்கப்பட்டது

    இப்பொழுது 1844 லில் கர்த்தரின் வருகையிருக்குமென நாங்கள் உறுதியாய் நம்பினோம். இது “பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது!” என்று வானத்தின் மத்தியிலே சத்தமிட்டுக் கூறின இரண்டாம் தூதனுடைய தூதின காலமாகவுமிருந்தது. வெளி 14:8 அந்தத் தூது 1844 கோடை காலத்தில் முதலாவதாக தேவனுடைய ஊழியக்காரரால் கூறி அறிவிக்கப்பட்டது. அதின் பயனாக அநேகர் மருள விழுந்துபோன சபைகளை விட்டுவிட்டார்கள்.LST 28.1

    (குறிப்பு: “இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும் வரைக்கும் இருக்கும், பின்பு பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும்” என்று தானியேல் 8:14 லில் கண்டுள்ள தீர்க்கதரிசன வார்த்தையே ஆண்டவர் 1843-ல் வருவாரென அட்வெந்திஸ்தர் விசுவாசிக்கும்படிச் செய்தது. இதைத் தீர்க்கதரிசன நாட்கள் சொல்லப்பட்ட படியுள்ள ஆண்டுகளைக் குறித்ததென்றும் அந்தக் கால அளவு தானியேல் 9:24-ல் சொல்லப்பட்ட “எழுபது வாரங்”களுடன் “எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிரதிர்கான கட்டளை” வெளிப்பட்டது முதல் ஆரம்பித்ததென்றும் இவர்கள் நம்பினார்கள். இக்கட்டளை எஸ்றா 7ஆம் அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது; அது, கி.மு 457-ல் கொடுக்கப்பட்டது மன்றி பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டாவின் ஏழாம் வருஷமாகவுமிருந்தது. (எஸ்றா 7:8) 2300 வருஷங்களுக்கான மொத்தக் காலத்திலிருந்து கிறிஸ்துவுக்கு முன்னான 457 வருஷங்களைக் கழித்தால் 1843 கி.பி. வருஷங்கள் உண்டு. இவ்வாண்டு கழிந்து அவர்கள் ஏமாற்றம் அடைந்த பின்பு, அக்கட்டளை அவ்வாண்டின் துவக்கத்தில் கொடுக்கப்பட்டதென்று காணப்பட்டபடியினால் அவர்கள் 457ஐக் கழியாமல் 456 1/2 யைக் கழித்திருக்க வேண்டும். இது சரிப்படுத்தப்பட்டு 1843 1/2 மீதியானது அக்காலம் வாஸ்தவத்தில் 1843-ல் முடிவாகாமல் கி.பி. 1841-ல் முடிவாயிற்றென்று காட்டிற்று.)LST 28.2

    இத்துடன் சேர்ந்தே “இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு அதிர்கொண்டு போகப் புறப்படுங்கள்” என்னும் “நடு ராத்திரி சத்தம்” கொடுக்கப்பட்டது (மத்தேயு 25:1-13 பார்க்க) தேசமெங்கும் இத்தூதைப் பற்றிய வெளிச்சம் கொடுக்கப்பட்டது; அந்தச் சத்தத்தினால் ஆயிரக்கணக்கான ஜனங்கள் எழுப்புதலடைந்தார்கள். எது பட்டணம் பட்டணமாகவும் கிராமம் கிராமமாகவும் வெகு தூரத்திலுள்ள தேசங்களுக்கும் போனது, அது சுற்றறிவளருக்கும் சாமார்த்தியுமுள்ளோருக்கு மாத்திரமல்ல, சாமானியருக்கும் பாமர ஜனங்களுக்கும் எட்டினது.LST 28.3

    இதுவே என் ஆயுசுகாலத்திலெல்லாம் மிக்க பாக்கியமான ஆண்டாயிருந்தது. என் இருதயம் எதிர் நோக்கும் எண்ணங்களால் பூரித்திருந்தது. ஆனால் அதைரிய மடைந்து இயேசுவின் மேல் நம்பிக்கை யற்றிருந்தோரைக் குறித்து எண்ணாத எண்ணமெல்லாம் என்னிமிகுந்த பரிதாபப்பட்டேன். நாங்கள் ஓர் ஜனமாக மெய்யான ஓர் அனுபோகத்திற்காகவும், தேவன் எங்களை ஏற்றுக் கொண்டார் என்ற நிச்சய அத்தாட்சிக்காகவும் சேர்ந்து ஜெயித்தோம்.LST 28.4

    ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு மிகவும் அருமையாய்க் காணப்பட்டது. நாங்கள் நிச்சயத்திற்கான கிரியை செய்தோமென்றும் நிர்விசாரிகளோ பேராபத்திலிருந்தார்களென்றும் நான் உணர்ந்தேன். என் விசுவாசம் களங்கமற்றதாயிருந்தது, இயேசுவின் அருமையான வாக்குத் தத்தங்களை நான் என்னுடயதாக்கிக் கொண்டேன். “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” என்று அவர் தம்முடைய சீஷர்களுக்குச் ஸெஒல்லியிருந்ட்ஹார். நான் தேவனுடைய சித்தத்திற் கிசைவாக எதைக் கேட்டாலும் அதை அவர் நிச்சயமாய் எனக்குத் தந்தருள்வாரென்றுநான் உறுதியாய் விசுவாசித்தேன். என் உள்ளம் அவருடைய சித்தத்தோடு ஐக்கியப்பட்டிருக்க என் மனத் தாழ்மையுடன் இயேசுவின் பாதம் விழுந்தேன்.LST 29.1

    கருத்தாய் இருதயத்தை ஆராய்ந்து பார்த்து மனத் தாழ்மையுடன் அறிக்கை செய்து எதிர்பார்த்திருந்த வேலைக்கு நாங்கள் ஜெபத்துடன் வந்தோம். காலைதோறும் எங்கள் ஜீவியங்கள் தேவனுக்கு முன் ஒழுங்கயிருந்த தென்பதை நிச்சயப் படுத்திக் கொள்வதே எங்கள் முதல் வேலை என்று நாங்கள் உணர்தோம், பரிசுத்தத்தில் நாங்கள் முன்னேறா விட்டால் பின்வாங்கிப் போவோம் என்பது நிச்சயம் என்றும் நாங்கள் கண்டோம். ஒருவருக்காக ஒருவர் பட்ட ஆத்திரம் கொஞ்சமல்ல; நாங்கள் ஒருவருக்காக ஒருவர் அதிகம் ஜெபித்தோம். பூந்தோட்டங்கள் சோலைகளாகிய அவருடைய இயற்கை அமைப்புகள் மத்தியில் இருக்கும்போது அவருடைய சமுகத்தை நாங்கள் அதிகமாய் உணர்ந்ததினால் தேவனோடு சம்பாஷிக்கவும் எங்கள் விண்ணப்பங்களை அவருக்கு நேராக ஏறெடுக்கவும் நாங்கள் அப்படிப்பட்ட இடங்களில் போய்க் கூடினோம். போஜன பானங்களை விட இரட்சிப்பின் சந்தோஷங்களே அதிக அவசியமாயிருந்தன. எங்கள் மனசுகளில் குழப்பங்கள் ஏற்பட்டால் கர்த்தருடைய சமாதானம் எங்களுக்குக் கிடைக்குமட்டும், நாங்கள் இளைப்பாறவாவது அல்லது நித்திரை செய்யவாவது துணிந்ததில்லை.LST 29.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents