Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இரண்டாம் அத்தியாயம்—ஆவிக்குரிய ஓர் எழுப்புதல்

    1804-ம் ஆண்டு மார்ச் மாதம் அ. ஐ. மாகாணத்தைச் சேர்ந்த மெயின் நாட்டிலுள்ள போர்ட்லாந்துக்கு உவில்லியம் மில்லர் வந்து கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றி தொடர் உபந்நியாசங்கள் செய்தார். இவ் வுபந்நியாசங்கள் மூலமாய் ஜனங்களுக்குப் பெரிய உணர்ச்சி ஏற்பட்டதினால், பிரசங்கங்கள் நடத்தப்பட்ட அக் கோயிலில் அல்லும் பகலும் ஜனங்கள் திரள் திரளாய்க் கூடினார்கள். பிரசங்கங்களைக் கேட்போர் மனதில் மகா பக்தி வினயமான எண்ணங்கள் உண்டாயின. நகரத்தாருக்குள் பெரிய உற்சாகம் கிளம்பினது மாத்திரமல்ல, நாட்டுப்புறத்தரும் கூட்டங் கூட்டமாய் நாடோறும் தங்கள் கூடைகளில் போஜனங்கள் எடுத்து வந்து காலை முதல் சாயங்காலக் கூட்டம் முடியுமட்டும் தரித்திருந்தார்கள்.LST 12.2

    நான் என் சிநேகிதருடன் அக் கூட்டங்களுக்குப் போனேன். கேட்போரின் இருதயங்கள் அசையும் வண்ணம் மிஸ்டர் மில்லர் தீர்க்கதரிசன உரைகளை அவ்வளவு தெளிவுடன் எடுத்துரைத்தார். தீர்க்க தரிசன காலங்களைக் குறித்து பேசின பொது அவர் தமது நிலையைப் பல ஆதாரங்களைக் கொண்டு ஸ்திரப்படுத்தினார். ஆயத்தப்படாதிருந்தோருக்கு அவர் கூறின புத்தி போதனைகளும் பக்தி விநயமான வேண்டுகோள்களும் ஜனங்களைக் கவர்ந்து கொண்டன.LST 13.1

    இரட்சகரைத் தேட பாவிகளுக்கு நற்றருணம் கிடைக்கத்தக்கதாகவும், சீக்கிரத்தில் நடைபெறும் பயங்கரச் சம்பவங்களுக்கு அவர்கள் ஆயத்தப்படத் தக்கதாகவும், விசேஷ கூட்டங்கள் நடைபெற்றன. ஜனங்கள் தங்கள் மனசாட்சியில் கடிந்து கொள்ளப்பட்டதினால் நகரம் முழுவதும் நடுங்கினது. ஜெபக்கூட்டங்கள் ஏற்பட்டன. சகல வகுப்பினருக்குள்ளும் பொதுவான ஓர் எழுப்புதல் உண்டாயிற்று. ஏனெனில் கிறிஸ்துவின் அதி சீக்கிற வருகையைப் பற்றிய உபதேசத்திலிருந்து உண்டானதோர் வல்லமையை ஏறக்குறைய அவர்கள் யாவரும் உணர்ந்தார்கள்.LST 13.2

    * * * * *

    1. நியூயார்க்கைச் சேர்ந்த லோ-ஹாம்டனிலுள்ள உவில்லியம் மில்லர் தீர்க்கதரிசனங்களை ஆராய்ச்சி செய்ததின் மூலமாய், இயேசு கிறிஸ்து சொன்னபடியே (யோவா. 14:1-3) அவர் சுமார் 1843-ம் ஆண்டிலே\ மருபடியே இப் பூமிக்குத் திரும்புவார் என்று உணர்ந்தார். இத் தீர்மானத்திற்கு அவர் சொன்ன சில நியாயங்கள் இப்புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் காணப்படும்.LST 13.3

    மனதிரும்ப வாஞ்சிப்போருக்கென்று முன்னுக்கு இடப்பட்டிருந்த ஆசனங்களுக்குப் பாவிகள் வரவழைக்கப் பட்டபோது, நூற்றுக் கணக்கான ஜனங்கள் முன்னேறிச் சென்றார்கள். அவர்களில் நானும் கூட்டத்தோடு கூட்டமாய்ப் பொய் ஓர் ஆசனத்தில் அமர்ந்தேன். ஆனால் என் உள்ளத்தில் ஒரு போதும் தேவனுடைய பிள்ளையென்றழைக்க பாத்திரவாட்டியாக முடியாதென்னும் எண்ணம் குடிகொண்டிருந்தது. கிறிஸ்துவுக்குள்ளான சமாதானத்திற்காக நான் அடிக்கடி விரும்பியும் அவ விருப்பத்தைக் கண்டடைந்ததாக எனக்குத் தோன்றவில்லை, என் இருதயம் துக்கத்தால் நிறைந்திருந்தது. அவ்விதம் துக்கப்படுவதற்கு நான் என்ன செய் தேன் என்று எனக்குப் புரியவில்லை; பரலோகம் போவதற்கு நான் அவ்வளவு பாத்திரமானவ ளல்லவென்று எனக்குத் தோன்றிற்று.LST 13.4

    நான் என்னையே நம்பாமற் போனதினாலும், என் எண்ணங்களை மற்றெவரும் அறிந்து கொள்ளச் செய்வது அசாத்தியமென்று நான் கண்டதினாலும், என் கிறிஸ்தவ நண்பர்களிடம் ஆலோசனையும் உதவியையும் நான் தேடவில்லை. இவ்விதம் நான் இருளிலும் அவநம்பிக்கையிலும் அனாவசியமாய் அலைந்து திரிந்தேன்; அவர்களோ என் மௌன சாதனையினால் என் யதார்த்த நிலையைத் தெரிந்து கொள்ளக் கூடாதிருந்தார்கள்.LST 14.1