Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    முடிவை எதிர்பார்த்தல்

    பூலோக கிரீடத்தை அடையும் படி நாடும் கூட்டத்தினரை பற்றி வெறுப்படைகிறவர்கள் பூலோக ஐசுவர்யத்தை பெரும் படி பிரயாசப் படுகிற அனைவரின் ஜீவியத்தையும் முடிவையும் கவனித்தவர்கள். அப்படிபட்டாவார்கள் ஒருபோதும் திருப்தி அடையாமல் நிர்பாக்கியம் உள்ளவார்களாக ஆகியிருப்பதை அவர்கள் காண்கிறார்கள். ஆகவே அவர்கள் திகில் அடைந்து அந்த நிர்பாக்கிய வகுப்பினரை விட்டு தங்களை பிறிது கொண்டு மெய்யனதும் நிலையானதும் ஆன ஐசுவரியத்தை நாடுகிறார்கள்.LST 81.2

    பரம கிரீடத்தை அடைய நாடி பரிசுத்த தூதர்களின் காபந்தில் கூட்டத்தின் ஊடே நெருக்கிச் சென்றவர்கள் தேவனுடைய உண்மையான ஜனங்கள் என்று எனக்கு காண்பிக்கப் பட்டார்கள். தேவ தூதர்கள் அவர்களை வழ்ஹி நடத்தி கொண்டு போகிறதும் அன்றி அவர்கள் அப்பரம பொக்கிஷத்தை அடைவதற்கு வைராக்கியத்துடன் முன்னேறி செல்ல ஏவப்படுகிறார்கள்.LST 81.3

    பரிசுத்தவான்களுக்குப் பின்னால் எறியப் பட்ட கருப்பு பந்துகள் பொய்யை சிநேகித்து அதை பிறப்பிபோர் தேவனுடைய ஜனங்களை குறித்து கட்டி விட்ட அபாண்ட பொய்கள். நாம் குற்றமற்ற ஜீவியம் செய்வதற்கும் பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகி இருப்பதற்கும் மிகுந்த ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும். பிறகு நாம் துன்மார்க்கரின் அபாண்ட பொய்களை சட்டை செய்யாமல் தைரியமாய் முன்னேறி செல்லல வேண்டியது நமது கடமை ஆகிறது.. நீதி மான்களின் கண்கள் விலை மதிக்க முடியாத அப்பரம பொக்கிஷத்தின் மேல் நோக்கமாயிருக்கும் போது, அவர்கள் அதிகமாய் கிறிஸ்துவின் சா யலை அடைந்து மறு ரூபமாக்கப் படுவதற்கு தகுதி உள்ளவர்களாய் இருப்பார்கள்..LST 81.4

    * * * * *