Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    தேவனுடைய ஆவிக்குரிய ஆலயம்

    யூதரின் ஆலயம் மலைகளிலிருந்து பெயர்த்து வெட்டின கற்களால் கட்டப்பட்டது; ஒவ்வொரு கல்லும் எருசலேமுக்குக் கொண்டு வரப்படு முன்னே ஆலயத்தில் அதினதின் இடத்தில் பொருந்தி இருக்கத்தக்கதாக வெட்டப்பட்டு, பனி தீர்ந்து பரீட்சிக்கப் பட்டிருந்தது. கற்கள் எல்லாம் அந்த இடத்திற்குக் கொண்டுவரப் பட்டதும் வாச்சிகள் அல்லது சுத்திகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமுமின்றி கட்டடம் ஏகமாய்க் கட்டி எழுப்பப்பட்டது. இக் கட்ட டம் சகல ஜாதிகளிலும், பாஷைக் காரரிலும் ஜனக் கூட்டத்தாரிலும், உயர்ந்தோர் தாழ்ந்தோர், ஐசுவரியவான்கள் ஏழைகள், கற்றோர் கல்லாதோர் முதலான சகல வகுப்புக்களிலிருந்தும் சேர்க்கப்பட்ட ஆட்களடங்கிய தேவனுடைய ஆவிக்குரிய ஆலயத்தைக் குறிக்கிறது. கத்தியினாலும் உளியினாலும் சீர்ப்படுத்திப் பொருந்த வைப்பதற்கு இவைகள் செத்த பொருட்கள் அல்ல. அவைகள் சத்தியத்தினால் உலகத்தினின்று வெட்டி எடுக்கப்பட்ட ஜீவனுள்ள கற்கள்; சிற்பாசாரிகளுக்கெல்லாம் பெரிய சிர்பாசாரியரும், ஆலயத்தைக் காட்டும் பெரிய எஜமானருமான ஆவிக்குரிய ஆலயத்தில் அவர்கள் தங்கள் தங்கள் இடங்களில் இசைந்திருக்கத் தக்கதாக இப்பொழுது அவர்களை வெட்டி செம்மைப்படுத்திச் சீர்ப்படுத்திக் கொண்டிருக்கிறார். கட்டி முடியும் போது இவ்வாலயம் அதின் சகல பாகங்களிலும் பூரணமாயிருப்பதுடன் தேவதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் வியப்பாயிருக்கும்; ஏனெனில் தேவன் தாமே அதைக் கட்டி உண்டாக்கினவர்.LST 185.4

    தன மேல் ஒரு தட்டும் கொட்டும் பட அவசியமில்லை என்று ஒருவனும் எண்ணாதிருப்பனாக. சகல வழக்கங்களிலும் எண்ணங்களிலும் பூர்ணமுள்ள ஒரு ஆளுமில்லை, ஒரு ஜாதியுமில்லை. ஒருவர் இன்னொருவரிடம் கற்க வேண்டும். ஆகையினால் பல ஜாதிகளும் ஒரே நியாயமும் ஒரே நோக்கமுமாயிருப்பதற்கு ஒன்றைக் கலந்து கொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். அப்போது தான் கிறிஸ்துவில் இருக்கிற ஐக்கியம் சிறந்து விளங்கும். ----- 9 T 180-1.LST 186.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents