Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ஊழியத்திற்கான ஆயத்தம்

    வேத வசனம் குறித்த அறிவற்றவர்களாக இருந்தும் மன திருப்தியுடன் இருக்கும் இயேசுவின் பின்னடியார்கள், தேவனுடைய சித்தமும் விருப்பமும் என்னவென்று அறியாதவர்களாக இருக்கிறார்கள். அனைவரும் வேதாகமமாணவர்களாக மாறவேண்டும். “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே” என்று கிறிஸ்து தம்பின்னடியார்களுக்குக் கட்டளையிட்டார்.“கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” என்று பேதுரு நமக்கு அறிவுறுத்துகிறார். 22T; 633,634 TamChS 188.1

    மெய்யான மனமாற்றம் பெற்றவர்கள் இருளில் இருப்போருக்கும் தங்களுடைய பாவங்களில் அழிந்து போகிறவர்களுக்கும் இரட்சிப்பு வெளிச்சத்தின் வார்த்தைகளைப் பேச அறிந்திருக்கும் படி வேத வசனங்களைப் புரிந்துகொள்வதில் அதிக ஞானமுள்ளவர்களாக அதிகமதிகமாக மாறவேண்டும். 39T, 121 TamChS 188.2

    மனிதர்களுக்கு தேவனுடைய கடைசி எச்சரிப்பை நாம் கொடுக்கவேண்டும். அப்படியானால் வேதாகமத்தை ஆராய்வதில் நாம் எத்தகைய ஊக்கமுள்ளவர்களாகவும், வெளிச்சத்தைப்பரப்புவதில் எவ்வளவு வைராக்கியமுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்! தெய்வீக வெளிப்பாட்டைப் பெற்ற ஒவ்வோர் ஆத்துமாவும் அதைமற்றவர்களுக்கு வழங்கப் பிரயாசப்பட வேண்டும். ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, மக்களுக்கு வேதாகமத்தை விளக்கிக்கூறி, வெளியீடுகளை விநியோகித்து, தங்களுடைய ஆத்துமாக்களுக்கு ஆசீர்வாதமாக இருந்த வெளிச்சத்தை மற்றவர்களுடன் பகிரவேண்டும். 4GW, 353TamChS 188.3

    வேதாகம ஊழியர்களுக்கென பயிற்சிபள்ளி ஒன்று நடைபெற்றால்தான் சமநிலையான ஓர் ஊழியத்தை சிறப்பாகச் செய்ய முடியும். இந்தப்பயிற்சி பள்ளி அல்லது நகர ஊழியப்பணி தொடர் பாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்போது, ஆழமான ஆவிக்குரிய அறிவைப் பெற்றவர்களை அழைக்கவேண்டும், வேதாகம ஊழியர்களுக்கு அவர்கள் தினமும் போதனை செய்யவேண்டும், மேலும் முன்வைக்கப்படும் பொதுவானமுயற்சியில் முழுமனதுடன் அவர்கள் தங்களை ஈடுபடுத்தவேண்டும். 19T, 111TamChS 188.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents