Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இன்றைய நெகேமியாக்களுக்கான அழைப்பு

    இன்று திருச்சபையில் நெகேமியாக்கள் தேவை. ஜெபிக்கவும் பிரசங்கிக்கவும் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, உறுதியும் ஆர்வமுமான நோக்கத்தோடு ஜெபிக்கிறவர்களும் பிரசங்கிக்கிறவர்களும் தேவை. தன் திட்டங்களை நிறைவேற்றும்படி இந்த எபிரெய தேச பக்தர் பின்பற்றின வழிதான், இன்று ஊழியர்களும் தலைவர்களும் பின்பற்றவேண்டிய வழியாகும். அவர்கள் திட்டங்களைப் போட்ட துமே, சபையாருக்கு அவை பிடித்துப்போய், ஒத்துழைப்பு தருகிற விதத்தில் அவர்களிடம் அவற்றைத் தெரிவிக்கவேண்டும். மக்களும் அந்தத் திட்டங்களை அறிந்துகொண்டு, அந்த வேலையில் பங்குபெறட்டும். அத்திட்டங்களின் வளர்ச்சியில் அவர்களுக்கு தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். ஜெபம், விசுவாசம், ஞானம், சுறு சுறுப்பான செயல் போன்றவற்றால் என்ன சாதிக்கலாம் என்பதைத் தான் நெகேமியாவின் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றி சுட்டிக் காட்டுகிறது. உயிருள்ள விசுவாசமானது ஊக்கத்தோடு செயல்படு வதற்குத் தூண்டும். தலைவரிடம் வெளிப்படுகிற ஆவியை மக்கள் பெருமளவில் பிரதிபலிப்பார்கள். இக்காலத்தில் உலகத்தைச் சோதிக்கக்கூடிய முக்கியமான, பக்திக்குரிய சத்தியங்களை நம்புவதாகச் சொல்கிறதலைவர்கள், ‘தேவனுடைய நாளில் நிற்கும்படி மக்களை ஆயத்தப்படுத்தவேண்டும்’ என்கிற தீவிர வைராக்கியமுடையவர்களாகக் காணப்படாவிட்டால், திருச்சபை அக்கறையற்றதாக சோம்பேறித்தனமுள்ளதாக சிற்றின்பத்தை நாடுகிறதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 1SW, March 29, 1904TamChS 232.3