Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    நிச்சயமான பிரதிபலன்

    அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக’ அவனவனுக்கு தன் வேலையை நியமித்திருக்கிறவர், உண்மையோடு செய்யப்படுகிற கடமைக்கேற்ற பிரதிபலன் கிடைக்காமல்போக ஒருபோதும் விடமாட்டார். மெய்ப்பற்றோடும் விசுவாசத்தோடும் செய்யப்படுகிற ஒவ்வொரு செயலும், தேவனுடைய தயவாலும் ஒப்புதலின் விசேஷித்த அடையாளங்களாலும் முடிசூட்டப்படும். “அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்” என்கிற வாக்குறுதி ஒவ்வோர் ஊழியனுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 15T, 395TamChS 348.5

    நமது சேவை குறுகிய காலமே இருக்கலாம், அல்லது நமது ஊழியம் சாதாரணமானதாக இருக்கலாம்; எளிய விசுவாசத்தோடு கிறிஸ்துவைப் பின்பற்றினால், பிரதிபலனைப் பெறுவதில் ஏமாற்றம் அடையவேமாட்டோம். முக்கியஸ்தர்களும் ஞானிகளும் பெற முடியாததை, பெலவீனர்களும் சாமான்யர்களும் பெறலாம். சுயத்தை உயர்த்துபவர்களுக்கு பரலோகத்தின் பொற்கதவுகள் திறக்கிறதில்லை. ஆவியில் பெருமையுள்ளவர்களுக்கும் அவை திறக்கப்படுவதில்லை. ஆனால், ஒரு சிறுபிள்ளை மெதுவாகத் தொட்டாலே அந்த நித்தியக் கதவுகள் விரிவாகத்திறக்கும். எளிய விசுவாசத்தோடும் அன்போடும் தேவனுக்காகப் பிரயாசப்பட்டு, கிருபையைப் பிரதிபலனாகப் பெறுகிறவர்கள் பாக்கியவான்கள்! 2 COL, 404TamChS 349.1

    இந்தப் பணியைச் செய்கிறவர்களுடைய நெற்றிகளில் தியாகத்தின் கிரீடம் சூட்டப்படும். அவர்கள் தங்கள் பிரதிபலனைப் பெறுவார்கள். 36T, 348TamChS 349.2

    இவ்வுலக வாழ்வில், தேவனுக்காக நாம் செய்யும் பணி கிட்டத்தட்ட பயனற்றதுபோல பெரும்பாலும் தெரிகிறது. நன்மை செய்யும்படி ஊக்கத்தோடும் விடாமுயற்சியோடும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனாலும் அவற்றின் விளைவுகளைக் காண நாம் அனுமதிக்கப்படாமல் இருக்கலாம். அந்த முயற்சியால் பயனேதும் இல்லாததுபோல நமக்குத் தெரியலாம். ஆனால், நம் ஊழியத்தை பரலோகம் காண்கிறது என்றும், அதற்கேற்ற பிரதிபலன் கிடைப்பதில் சந்தேகமே இல்லை என்றும் இரட்சகர் நிச்சயப் படுத்துகிறார். தேவனுடைய ஊழியர் ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணமே தூண்டுதலாகவும் ஊக்கமாகவும் இருக்கவேண்டும். 46T, 305TamChS 349.3

    நீதியோடும் இரக்கத்தோடும் தயாளத்தோடும் செய்கிற ஒவ்வொரு கிரியையும் ஒவ்வொரு செயலும் பரலோகத்தில் இன்னிசையை உண்டாக்குகிறது. அவற்றைச் செய்பவர்களைஈடு இணையற்ற தமது சம்பத்துகளில் ஒருவராக சிங்காசனத்தில் வீற்றிருக்கிற பிதா எண்ணுகிறார். ‘என் சம்பத்தை நான் சேர்க்கும் அந்நாளிலே அவர்கள் என்னுடையவர்களாய் இருப்பார்கள். தேவையில் அல்லது உபத்திரவத்தில் இருப்போருக்குச் செய்கிற ஒவ்வொரு நன்மையும் இயேசுவுக்கே செய்ததாகும். ஒடுக்கப்பட்டோர் மேலும் பாடனுபவிப்போர் மேலும் பரிவுகாட்டுகிறவரும் தரித்திரருக்கு உதவுகிறவரும் இயேசுவோடு நெருங்கிய உறவுக்குள் நுழைகிறார்கள். 1 RH, Aug. 16, 1881TamChS 349.4

    திக்கற்றோர், விதவைகள், வியாதியஸ்தர்கள், நடக்கமுடியாதவர்கள், பார்க்கமுடியாதவர்கள், கஷ்டப்படுகிறவர்கள் போன்றோருக்கு இரக்கத்தோடும் தயாளத்தோடும் அக்கறையோடும் செய்கிற ஒவ்வொரு செயலையும் தமக்கே செய்ததாக கிறிஸ்து கருதுகிறார். இந்தக் கிரியைகள் பரலோகப் பதிவுகளில் பதிவுசெய் யப்படுகின்றன; அவற்றிற்குப் பிரதிபலன் வழங்கப்படும். 23T, 512,513 TamChS 350.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents