Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    கிறிஸ்தவக் கண்ணியமும் மரியாதையும்

    ஓய்வுநாளைக் கைக்கொள்கிற மக்களிடம் மெய்யான கண்ணியமும் கிறிஸ்தவச் சிறப்பும் இல்லையென்றால், ஒரு திருச்சபையாக அது நமக்கு எதிரானது ஆகும்; நாம் அறிக்கையிடுகிற சத்தியத்தின்மேல் அது வெறுப்பை உண்டாக்கும். மனதையும் பழக்க வழக்கங்களையும் பயிற்றுவித்து, பூரண நிலையை அடையவேண்டும். சத்தியத்தைப் பெற்றிருப்பதாகச் சொல்வோர், கிறிஸ்து இயேசுவில் முழு வளர்ச்சியடைந்த ஆண்களாகவும் பெண்களாகவும் மாறுவதற்கான வாய்ப்புகளையும் சிலாக்கியங்களையும் மேம்படுத்தாவிட்டால், அவர்கள் சத்தியத்தின் நோக்கத்திற்கு கனத்தைக் கொண்டுவர முடியாது. கிறிஸ்துவிற்கும் கனத்தைக் கொண்டுவர முடியாது. 24T, 358,359 TamChS 295.1

    ஒழுக்கமிக்க வாழ்க்கையாலும், பக்திமிக்க பேச்சாலும் ஊழியத்தின் கண்ணியத்தைக் காப்பதில் உறுதியாக இருக்கவேண்டும். தரத்தை உச்சநிலைக்குக் கொண்டுசெல்லப் பயப்படவே கூடாது. நாகரிகமற்ற, முரட்டுத்தனமான சகல தன்மைகளையும் நம்மை விட்டு அகற்றவேண்டும். மனிதாபிமானம், தூயநடத்தை, கிறிஸ்தவ அமைதி போன்றவற்றைப் பேணி வளர்க்க வேண்டும். உணர்ச்சி வசத்திற்கும், மழுங்கின தன்மைக்கும் எதிராக மனதைப் பாதுகாக்க வேண்டும். இத்தகைய விசித்திரத் தன்மைகளை நல்லொழுக்கங்களாகக் கருதக்கூடாது; தேவன் அவற்றை அவ்வாறு கருதுவதில்லை. தேவையில்லாமல் யாரையும் புண்படுத்தாமலிருக்க பெரிதும் முயலவேண்டும். 3 RH, Nov. 25, 1890TamChS 295.2

    தேவனுடைய சித்தத்தை அறிந்த ஆண்களும் பெண்களும் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுகிற வெற்றிமிக்க பணியாளர்களாக மாறவேண்டியது அவசியமாக உள்ளது. மென்மையான, புரிந்துகொள்கிற மனிதர்களாக அவர்கள் இருக்கவேண்டும்; வஞ்சகமான வெளிப்புற பளபளப்பும், உலகத்தாரைப் போன்ற போலி முறுவலும் காணப்படக்கூடாது. அதற்கு மாறாக, தூய நடத்தையும் மெய்யான மனிதாபிமானமும் காணப்படவேண்டும். இவை பரலோகத்தின் நற்கந்தங்களாக இருக்கின்றன. தெய்வீக சுபாவத்தில் பங்குள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும் இவற்றைப் பெறமுடியும். 14T, 358 TamChS 296.1

    நம் உலகத்திற்குக் கொடுக்கப்பட்டதிலேயே மிகப் பெரிய சத்தியத்தையும் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் நாம் பெற்றிருக்கிறோம்; இவற்றை மேன்மையான தன்மையுடன் உலகத்திற்கு எடுத்துக்காட்ட விரும்புகிறோம். இந்த ஒப்பற்ற, பரிசுத்தமான சத்தியத்தை விசுவாசிப்பதற்கு எல்லாவிதத்திலும் தீர்மானித்திருப்பதால், உலகத்திடம் மன்னிப்புக் கேட்பதுபோன்ற மனநிலையில் பேசக்கூடாது. உன்னதமான தேவனுடைய பிள்ளைகள்போல நடந்துகொள்ளவேண்டும்; அதே சமயம், தேவனோடு சேர்ந்து மனத்தாழ்மையோடு நடக்கவேண்டும்; பெலவீனமான கருவிகளாக இருந்தாலும், மிகமுக்கிய நலன்களை உள்ளடக்கிய விஷயங்களைக் கையாளுகிறோம்; லௌகீகக் கருத்துகளைவிட மிகமேலான கருத்துகளைக் கையாளுகிறோம். 2RH, Jul. 26, 1887TamChS 296.2

    ஆத்துமாக்களுக்காக ஊழியம் செய்பவரிடம் அர்ப்பணிப்பும் புத்திக்கூர்மையும் கடின உழைப்பும் ஆற்றலும் சாமர்த்தியமும் காணப்படவேண்டும். இத்தகைய தன்மைகளைப் பெற்றிருந்தால், எந்த மனிதனிலும் தரக்குறைவு வெளிப்படாது; மாறாக, நன்மைக்கேதுவாக மிகுந்த செல்வாக்கை உடையவனாக இருப்பான். 3GW, 111TamChS 296.3

    தனி நபர்களையும் குடும்பங்களையும் அணுகுவதற்கான சிறந்த வழியைக் கற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிற மனிதர்கள் ஊழியத்தில் இருக்க வேண்டும். அதிக பகட்டில்லாத, சுத்தமான ஆடைகளை அணியவேண்டும்; குமட்டல் உண்டாக்குவது போன்ற நடத்தைகள் காணப்படக்கூடாது. ஒரு திருச்சபையாக நம் மத்தியில் மெய்யான மரியாதை காணப்படவேண்டியது மிகவும் அவசியம். நற்செய்தி ஊழியத்தில் மும்முரமாக இருக்கிற அனைவரும் இதைப் பேணி வளர்க்கவேண்டும். 44T, 391,392TamChS 296.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents