Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    விகிதாச்சார வெற்றி

    ஒரு குறிப்பிட்ட வேலையை நிறைவேற்றி முடிப்பதற்கான வழியை தேவன் திறந்து, வெற்றியின் நிச்சயத்தைக் கொடுக்கும் போது, தெரிந்துகொள்ளப்பட்ட அந்தக் கருவியானவர் நிச்சயமான விளைவை ஏற்படுத்துவதற்கு தன் திறனுக்குட்பட்ட அனைத்தையும் செய்யவேண்டும். எந்த அளவுக்கு ஆர்வத்தோடும் விடாமுயற்சியோடும் வேலை செய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு வெற்றி கொடுக்கப்படும். 2PK, 263.TamChS 343.1

    தூய அன்பை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகிற வேலை எதுவாக இருந்தாலும், அது சிறிய வேலையோ மனித பார்வைக்கு அற்பமான வேலையோ எப்படி இருந்தாலும், அது முற்றிலும் பயனுடையதாக இருக்கும்; ஏனென்றால், ஒருவர் எவ்வளவு அதிகம் வேலைசெய்கிறார் என்றல்ல, எவ்வளவு அன்போடு வேலைசெய்கிறார் என்றுதான் தேவன் பார்க்கிறார்.TamChS 343.2

    ஆத்துமாக்கள்மேல் ஆழமான அன்பில்லாமல், நூறுபேர் கூடி சில திட்டங்களைப் போட்டு, இயந்திரம் போல தங்கள் விதிகளை நிலைநாட்டவும் முயற்சிசெய்வதைவிட மெய்யாகவே மனமாற்றமடைந்து, விருப்பமுள்ளமனதோடு சுயநலமின்றி இருக்கும் பத்து ஊழியர்கள் ஊழியக்களத்தில் அதிகம் சாதிக்கமுடியும். 34T, 602TamChS 343.3

    இப்போது நீங்கள் பெற்றுள்ள, அல்லது இனிப்பெறப்போகின்ற திறன்கள் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத்தரமுடியாது. தேவன் மட்டுமே வெற்றியைப் பெற்றுத்தர முடியும். விசுவாசமுள்ள ஒவ்வோர் ஆத்துமாவுக்கும் மனிதன் என்ன செய்யமுடியும் என்று மனிதனை நம்பாமல், தேவன் என்ன செய்யமுடியும் என்று தேவனை நம்பவேண்டும். விசுவாசத்தோடு நீங்கள் அவரைத் தேடிச்செல்வதை தேவன் விரும்புகிறார். மகத்தானவற்றை நீங்கள் அவரிடமிருந்து எதிர்பார்க்க வேண்டுமேன்று அவர் விரும்புகிறார். இவ்வுலகிற்கடுத்த காரியங்களிலும், ஆவிக்குரிய விஷயங்களிலும் உங்க(ளுக்கு அறிவைத் தருவதற்கு அவர் வாஞ்சிக்கிறார். அறிவுத்திறனை அவர் கூர்மையாக்குவார். திறமையும் சாமர்த்தியமும் அவர் கொடுப்பார். தேவபணியில் உங்கள் தாலந்துகளைச் செலவிட்டு, அவரிடம் ஞானம் கேளுங்கள்; அப்பொழுது அது உங்களுக்குக் கொடுக்கப்படும். 1 COL, 146TamChS 343.4

    கிருபையின் எண்ணெயானது மனிதர்களுக்குத் தைரியத்தைக் கொடுக்கிறது; மேலும், தேவன் அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன நோக்கங்களுக்காக வேலை கொடுக்கிறார் என்பதையும் புரிய வைக்கிறது. புத்தியற்ற அந்த ஐந்து கன்னிகைகளிடமும் விளக்குகள் இருந்தன. அதாவது, வேதாகமம் குறித்த அறிவு இருந்தது. ஆனால், அவர்களிடம் கிறிஸ்துவின் கிருபை இல்லை . ஒவ்வொருநாளும் மாற்றி மாற்றி சடங்காச்சாரங்களையும் வெளிப்புறக் கடமைகளையும் செய்துவந்தார்கள்; ஆனால் அவர்களுடைய சேவையில் ஜீவனில்லை; கிறிஸ்துவின் நீதியில்லை. நீதியின் சூரியன் அவர்களுடைய மனதிலும் இருதயங்களிலும் உதிக்கவில்லை ; கிறிஸ்துவின் வாழ்க்கைக்கும் குணத்திற்கும் சாயலுக்கும் ஒத்ததாக, சத்தியத்தின்மேல் அன்பு அவர்களில் காணப்படவில்லை. கிருபையின் எண்ணெயானது அவர்களுடைய முயற்சிகளோடு கலக்கவில்லை. மணி இல்லாத காய்ந்த கதிர்போல, அவர்களுடைய பக்தி மார்க்கம் இருந்தது. கொள்கைகளின் சடங்குகளைப் பிடித்திருந்தார்கள்; ஆனால் தங்கள் கிறிஸ்தவ வாழ்வில் வஞ்சிக்கப்பட்டிருந்தார்கள். முற்றிலும் சுயநீதியால் நிறைந்திருந்தார்கள்; கிறிஸ்துவின் பள்ளியில் பாடங்களைக் கற்றுக்கொள்ளத் தவறினார்கள்.அந்தப் பாடங்களின்படி நடந்திருந்தால் , இரட்சிப்புக்கேற்ற ஞானமுடையவர்களாக அவர்களை மாற்றியிருக்கும். 2RH, Mar. 27, 1894TamChS 344.1

    தெய்வீக ஏதுகரங்களோடு மனித ஏதுகரங்களும் ஒத்துழைத்து, தேவபணியை நிறைவேற்ற பிரயாசப்பட வேண்டும். சுய நிறைவுடன் வாழ்பவர்கள் வெளியே பார்ப்பதற்கு தேவபணியில் மும்முரமாக இருப்பதுபோலத் தெரியலாம். ஆனால், அவர்கள் ஜெபிக்காவிட்டால், அவர்களுடைய செயல்பாடுகளால் பயன் இல்லை. வானவில் சூழ்ந்த சிங்காசனத்திற்குமுன் நிற்கிற தூதனுடைய தூபக்கலசத்தை அவர்கள் காணமுடிந்தால், நம் ஜெபங்களும் முயற்சிகளும் இயேசுவின் புண்ணியத்தோடு சேர்ந்திருக்கக்கவேண்டும்; இல்லையேல், காயீனின் காணிக்கைபோல அவை பிரயோஜனமற்றவையே. மனிதராகிய கருவிகள் செய்தவற்றின் விளைவுகளையும் நாம் காணமுடிந்தால், அதிக ஜெபத்தால் நிறைவேற்றப்பட்டதும் றிஸ்துவின் புண்ணியத்தால் பரிசுத்தமாக்கப்பட்டதுமான பணியே நியாயத்தீர்ப்பின் பரீட்சையில் நிலைநிற்க முடியும் என்பதைக் கண்டிருப்போம். மாபெரும் விசாரணை நடைபெறும்போது, தேவனைச் சேவிப்பவனுக்கும் அவரைச் சேவிக்காதவனுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் கண்டுகொள்வீர்கள். 1RH, July 4, 1893TamChS 344.2

    கிரியைத்துவ மார்க்கத்தில் இக்காலக் கேள்விகளுக்கான பதில் இல்லை. தொழுகைக்கான வெளிப்புறச் சடங்குகள் அனைத்தையும் நாம் செய்தாலும், பரிசுத்த ஆவியானவரின் உயிரூட்டுகிற வல்லமை இல்லாமல் இருந்தால், கில்போவா மலையானது மழையும் பனியுமின்றி காய்ந்து கிடக்கிறதோ அதுபோல நாமும் வறண்டிருப்போம். நியதியில் கற்பாறை போன்ற உறுதியுள்ளவர்களாக நாம் இருக்கவேண்டும். வேதாகம நியதிகளைப் போதிக்கவேண்டும்; பரிசுத்த நடத்தையால் அவற்றைப் பின்பற்றவேண்டும். 26T, 417,418TamChS 345.1

    வெற்றி என்பது விருப்பத்தோடும் உற்சாகத்தோடும் செயல்படுவதைச் சார்ந்தது ஆகும்; அது தாலந்தைமாத்திரம் சார்ந்ததல்ல. மிகச்சிறந்த தாலந்துகளைப் பெற்றால்தான் பயன்மிக்க சேவை செய்யமுடியும் என்பது தவறு. மனச்சாட்சியின்படி அனுதினக் கடமைகளை நேர்மையாக நிறைவேற்றுவதும், போதுமென்ற ஆவியும், பிறர் நலனில் உண்மை ஆர்வங் காட்டுவதுமே சேவை. பணிவுமிக்க நடத்தையில்தான் மெய்மேன்மையைக் காணமுடியும். உண்மை அன்போடு நிறைவேற்றப்படும் அனுதினக் கடமைகள் எல்லாம் தேவபார்வையில் அருமையானவை. 3 PK, 219TamChS 345.2

    ஒவ்வொரு கடமையையும் செய்யும்போதுதான் வலுவான, அருமையான குணம், சீரான அமைப்புடன் உருவாகிறது. நம் வாழ்க்கையின் மிகச்சிறிய விஷயங்களானாலும், மிகப்பெரிய விஷயங்களானாலும் அவற்றில் உண்மை காணப்படவேண்டும். சிறிய காரியங்களில் நேர்மையாக இருப்பதும் சிறுசிறு விஷயங்களில் உண்மையோடும் அன்போடும் நடந்துகொள்வதும் நம் வாழ்க்கைப் பாதையை மகிழ்விக்கும். உண்மையாக செய்யப்பட்ட ஒவ்வொரு கடமையும் நன்மைக்கேதுவானதும், ஒருபோதும் அழியாததுமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காணலாம் பூமியில் நம் வேலை முடிவடையும்போது, அது நமக்குத் தெரியும். 4PP, 574.TamChS 345.3