Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நெருக்கமான தனிநபர் தாக்கம்

    தனி முயற்சியால் மக்களுக்கு நெருக்கமாக வரவேண்டிய அவசியம் உள்ளது. பிரசங்கத்திற்கான நேரத்தைவிட தனி ஊழியத் திற்கு அதிக நேரம் செலவிட்டால், பெரிய விளைவுகள் ஏற்படும். 1MH, 143TamChS 156.5

    ஒவ்வோர் ஆத்துமாவையும் தம் கிருபையின் வார்த்தை தொடவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். தனிமனித சந்திப்பின் மூலமாகத்தான் இது நிறைவேறும். இதுதான் கிறிஸ்துவின் வழிமுறை. 2COL, 229TamChS 157.1

    தங்கள் திறமைகளைப்பற்றிப் பெருமைப்படாமல் தாழ்மையோடும் விசுவாசத்தோடும் மற்றவர்களுக்கு உதவிசெய்ய விரும்புகிறவர்கள்தாம் ஆத்தும ஆதாயத்தில் வெற்றிபெறுகிறார்கள். இயேசு இதே வேலையைத்தான் செய்தார். யாருடைய உள்ளத்தை அவர் தொடவிரும்பினாரோ, அவர்களோடு அவர் நெருக்கமாகப் பழகினார். 3GW, 194TamChS 157.2

    கிறிஸ்துவின் அனுதாபத்தோடு, நாம் தனிநபர்களிடம் நெருங்கிவந்து, நித்திய வாழ்க்கைமீது அவர்களுக்கு ஆர்வத்தை எழுப்பவேண்டும். நெடுஞ்சாலையைப்போல அவர்கள் இதயங்கள் கடினமாக இருக்கலாம்; இரட்சகரை அவர்களுக்கு அறிமுகப் படுத்துதல் பயனற்ற முயற்சியாகத் தெரியலாம்; வாதங்களும் விவாதங்களும் அவர்கள் மனதை அசைக்க முடியாமல் போகலாம். ஆனால், தனி ஊழியத்தில் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தினால், கல்லான இதயம் மென்மையாகும். இதனால் சத்திய விதை வேரூன்றும். 4COL, 57TamChS 157.3

    தனி ஊழியத்தின்மூலம் அருகில் உள்ளவர்களைச் சந்தியுங்கள். அவர்களுடன் பழகுங்கள். பிரசங்கத்தின்மூலம் அந்த வேலையைச் செய்ய முடியாது. அவர்களுடைய வீட்டிற்கு நீங்கள் செல்லும்போது, தூதர்கள் உங்களோடு வருவார்கள். உங்களுக்குப் பதிலாக வேறு ஆட்களை வைத்து, இந்த வேலையைச் செய்யமுடியாது. பணம் கொடுத்து இதைச் சாதிக்க முடியாது. பிரசங்கங்கள் இதைச் சாதிக்க முடியாது. அவர்களை வீடுகளில் சந்தித்து, ஆறுதலாகப் பேசி, ஜெபித்து அவர்கள் உள்ளத்தைக் கொள்ளைகொள்ள வேண்டும். நற்செய்திப் பணியில் இது மிகவும் பிரதானமான வேலை. இதைச் செய்வதற்கு உறுதியும் விடாப்பிடியுமான விசுவாசமும் வேண்டும். சோர்ந்து போகாத பொறுமையும், ஆத்துமாக்கள் மேல் ஆழமான அன்பும் வேண்டும். 59T; 41TamChS 157.4

    யோவான், அந்திரேயா, சீமோன், பிலிப்பு, நாத்தான் வேலை அழைத்து, கிறிஸ்து தமது சபைக்கு அடித்தளம் போட்டார். யோவான் ஸ்நானன் தனது சீடர்களில் இருவரை கிறிஸ்துவிடம் அனுப்பினான். இவர்களில் ஒருவனான அந்திரேயா தனது சகோதரனை இரட்சகரிடம் அழைத்துவந்தான். பிலிப்புவை அழைத்த போது, அவன் நாத்தான்வேலை அழைத்து வந்தான். தனி ஊழியத்தின் முக்கியத்துவத்தை இந்த எடுத்துக்காட்டுகள்மூலம் உணர்ந்து, நம் உறவினர், நண்பர், அயலகத்தரை நேரடியாகச் சந்தித்து அழைக்க வேண்டும். கிறிஸ்துவை அறிந்திருப்பதாக வாழ்நாள் முழுவதும் கூறிக்கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு ஆத்துமாவைக் கூட இரட்சகரிடம் கொண்டுவந்ததில்லை; கொண்டுவர ஒருபோதும் தனிமுயற்சி எடுத்ததுமில்லை. எல்லா வேலைகளையும் போதகர் செய்யட்டும் என்று விட்டு விடுகிறார்கள். தனது அழைப்புக்கு ஏற்ற வேலையைச் செய்ய, போதகர் தகுதியானவராக இருக்கலாம்; ஆனால், விசுவாசிகளுக்கு தேவன் ஒதுக்கியிருக்கிற வேலையை விசுவாசிகள்தாம் செய்யவேண்டும்.TamChS 157.5

    அன்பான கிறிஸ்தவ இதயங்களின் ஊழியம் தேவைப்படுகிறவர்கள் பலர் உள்ளனர். அண்டை வீட்டாருக்காக சாமான்யர்கள் தனிமுயற்சி செய்யாததால், இரட்சிப்பை பெற்றிருக்கக்கூடிய பலர் அழிவை நோக்கிச் சென்று விட்டார்கள். தனிமனித சந்திப்புக்கு பலர் காத்திருக்கிறார்கள். நம் குடும்பத்தில், நம் வீட்டருகில், நாம் வாழும் நகரத்தில் கிறிஸ்துவுக்காக நாம் நற்செய்திப் பணி செய்யலாம். நாம் கிறிஸ்தவர்களாக இருந்தால், இந்த வேலை நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இயேசுவில் தான் கண்டசிறந்த நண்பரை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்கிற ஆசை மனந்திரும்பியவுடன் ஒவ்வொருவருக்கும் வருகிறது. இரட்சித்து, பரிசுத்தப்படுத்தும் சத்தியத்தை அவர் தனது இதயத்திலேயே மூடி வைக்க முடியாது. 1DA, 141TamChS 158.1

    மற்றவர்களுக்கு வெளிச்சம் தருவதற்கான சிறந்த வழி தன யாள் ஊழியம்தான். பக்கத்து வீட்டு வரவேற்பறையில், நோயாளியின் படுக்கையறையில் அமைதியாக வேதவசனம் வாசித்து, இயேசுவுக்காகவும் சத்தியத்துக்காகவும் சில வார்த்தைகளைப் பேசலாம். இவ்வாறு நீங்கள் விலைமதிப்பற்ற விதைகளை விதைத்தால், அது சிறந்த கனி கொடுக்கும். 26T, 428,429TamChS 158.2

    உணவை உப்பு பாதுகாக்க வேண்டுமென்றால், அந்த உணவுக்குள் உப்பு ஊடுருவிச் செல்லவேண்டும். அதுபோலவே நற்செய்தியின் இரட்சிக்கும் வல்லமையால் மனிதர்கள் காக்கப்பட வேண்டும் என்றால், நாம் அவர்களோடு நெருங்கிப் பழகவேண்டும். கூட்டங்களாக அல்ல, தனிமனிதர்களாகத்தான் மக்கள் இரட் சிக்கப்படுகிறார்கள். தனிமனித தாக்கம் மிகுந்த வல்லமை உள்ளது. நம்மால் யார் பயனடைய விரும்புகிறோமோ, அவர்களோடு நாம் நெருக்கமாக இருக்க வேண்டும். 1MP, 36TamChS 158.3

    மனிதர் ஒவ்வொருவரையும் தம்முடைய ராஜ்யத்திற்கு அழைக்க வேண்டுமென்று இயேசு விரும்புகிறார். அவர்களுடைய நன்மையைத் தேடி, அவர்கள் அருகே சென்று, அவர்கள் உள்ளங்களைத் தொட்டார். பொது வீதிகளிலும், தனியார் வீடுகளிலும், படகுகளிலும், ஜெபாலயத்திலும், ஏரிக்கரையிலும், திருமண விருந்திலும் அவர்களைச் சந்தித்தார். அன்றாடத் தொழில் இடங்களில் அவர்களைச் சந்தித்தார்; அவர்களுடைய உலக விவகாரங்களில் ஆர்வம் காட்டினார். வீடுகளுக்குச் சென்று, தமது தெய்வீக பிரசன்னத்தின் தாக்கத்தால் அந்த குடும்பங்களை வெற்றிகொண்டார். அவரது வலுவான தனிப்பட்ட அனுதாபம் இதயங்களை வென்றது. 2DA, 151TamChS 159.1

    கிறிஸ்துவின் வழிமுறை மட்டுமே மக்களைச் சந்திப்பதில் உண்மை வெற்றி தரும். மனிதரின் நன்மையை நாடி, இரட்சகர் அவர்களோடு பழகினார். அவர்கள்மீது தமது அனுதாபத்தைக் காட்டினார். அவர்களின் தேவைகளுக்கு ஊழியம் செய்தார்; அவர்களின் நம்பிக்கையை வென்றார். பின்னர் அவர், ‘என்னைப் பின் தொடருங்கள்’ என்று அவர்களிடம் சொன்னார். 3MH, 143TamChS 159.2

    கிறிஸ்து செய்ததைப் போலவே நாம் செய்யவேண்டும். ஜெபாலயம், பாதை, பரிசேயரின் விருந்து, ஆயக்காரனின் விருந்து, கரையிலிருந்து கொஞ்சம் தள்ளி நின்ற படகு போன்று எங்கிருந்தாலும், அவர் பரலோக வாழ்க்கைகுறித்துப் பேசினார். இயற்கை, அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகள் போன்றவற்றை சத்தியத்தோடு இணைத்துப்பேசினார். கேட்டவர்களின் உள்ளங்கள் அவரிடம் நெருங்கிவந்தன; ஏனெனில், நோயுற்றவர்களுக்கு அவர் சுகம் தந்தார்; துயருற்றவர்களுக்கு ஆறுதல் தந்தார்; குழந்தைகளை கையிலெடுத்து ஆசீர்வதித்தார்; அவர் பேச தமது உதடுகளைத் திறந்த போது, அவர்கள் கவனம் அவர்மீது வந்தது. ஒவ்வொரு வார்த்தையும் ஏதோ ஒரு ஆத்துமாவுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயனுடையதாக இருந்தது.TamChS 159.3

    நாமும் அப்படித்தான் செய்யவேண்டும். நாம் எங்கிருந்தாலும், இரட்சகரைப்பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கான வாய்ப்பைத் தேட வேண்டும். கிறிஸ்து செய்ததுபோல நாம் நன்மை செய் தால், கிறிஸ்துவின் பேச்சைக் கேட்டு மக்கள் அவரிடம் வந்தது போல, நம் பேச்சைக்கேட்டும் மக்கள் கிறிஸ்துவிடம் வருவார்கள். அவர் ‘பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்; முற்றிலும் அழகானவர்’ என்று அவரைப்பற்றி நாம் அவர்களுக்குச் சொல்லலாம். நம் பேச்சாற்றலால் செய்யக்கூடிய மிகப்பெரிய வேலை இதுதான். கிறிஸ்து நம் பாவங்களை மன்னிக்கிறவர் என்பதைச் சொல்வதற்கே பேச்சாற்றலை தேவன் நமக்குத் தந்திருக்கிறார். 1COL, 338,339TamChS 159.4

    அவர் இருந்த வீட்டில் தூய்மையான சூழ்நிலை நிலவியது. அவர் வாழ்க்கையால் சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன. சிந்தனை சிதறியவர்கள், ஒழுக்கம் ஒழிந்தவர்கள், முரட்டு மூர்க்கர்கள், வன்சொல் வம்பர்கள், அநியாய ஆயக்காரர்கள், அநீதியான சமாரியர்கள், உருப்படாத ஊதாரிகள், புறஜாதி போர்வீரர்கள், கரடுமுரடான கிராமத்தார் மத்தியில், கறைதிரை இல்லாமல் பத்திரமாக வாழ்ந்தார். சோர்வுற்ற நிலையிலும் பாரஞ்சுமந்தவர்களைப் பார்த்தபோது, அவர்களுடைய பாரங்களைப் பகிர்ந்து கொண்டார்; ஆறுதலான வார்த்தைகளைச் சொன்னார். இயற்கையிலிருந்து அவர் கற்றுக்கொண்ட தேவ அன்பு, கனிவு, தயவு ஆகிய பாடங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.TamChS 160.1

    தங்களுக்கு விலைமதிப்பற்ற திறமைகள் உள்ளதை அனைவரும் உணரவேண்டும். அவற்றைச் சரியாக பயன்படுத்தினால், நித்திய ஐசுவரியம் கிடைக்கும். வாழ்க்கையிலிருந்து வீணான கர்வங்களை அவர் நீக்கினார். ஒவ்வொரு நிமிடமும் நாம் செய்கிற தீர்மானங்கள்கள் நித்திய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதைக் கற்பித்தார். நேரத்தை புதையலாக மதித்து, புனித நோக்கங்களுக்கு அதைப் பயன்படுத்தவேண்டும். எந்த மனிதரையும் பயனற்றவர் என்று அவர் ஒதுக்கியதில்லை. ஆனால், ஒவ்வொருவரும் இரட்சிப்படைவதற்கு உதவி செய்கிறார். யாராக இருந்தாலும் அவர்களுக்கு அந்த நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் பொருத்தமான பாடத்தைக் கற்பித்தார். நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கை தந்தார்; அவர்கள் குற்றமற்றவர்களாகவும் குற்றமிழைக்காதவர்களாகவும் மாறி, குணத்தில் தேவனுடைய பிள்ளைகளாக மாறலாம் என்றார். சாத்தானுடைய கட்டுப்பாட்டின் கீழிருந்து, அவன் வலையிலிருந்து விடுபடச் சக்தியற்றவர்களை அவர் சந்தித்தார். அதைரியப்பட்டவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களும் சோதிக்கப்பட்டவர்களும் சோதனையில் வீழ்ந்தவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைகளைப் பேசினார். ஆத்துமாக்களை அழிக்கப் பார்க்கிற வனோடு தனியாகப் போராடுகிற மக்களைச் சந்தித்தபோது, விடா முயற்சியுடன் நிலைத்திருக்குமாறும், வெற்றி கிடைக்குமென்றும் ஊக்குவித்தார்; தேவதூதர்கள் அவர்களோடிருந்தால், அவர்கள் வெற்றிபெறலாம். 1DA, 91TamChS 160.2