Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    உயர்ந்த தரங்களைப் பேணுதல்

    மேன்மையான பணியைச் செய்ய தகுதியுடைய பலர் குறைவாகவே சாதிக்கிறார்கள்; ஏனென்றால் அவர்கள் குறைவாக முயற்சி செய்கிறார்கள். எவ்வித உயர்ந்த நோக்கத்திற்காகவும் தாங்கள் வாழாததுபோல, எவ்வித உயர்ந்த தரத்தையும் அடையத் தேவையில்லாததுபோல ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்நாட்களைக் கழிக்கிறார்கள். இதற்கு ஒரு காரணம், அவர்கள் தங்களையே குறைத்து மதிப்பிடுவதுதான். கிறிஸ்து நமக்கு ஈடு இணையற்ற விலையைச் செலுத்தியிருக்கிறார்; தாம் செலுத்தின விலைக்கேற்ப நம்மை நாம் மதிக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறார். 1GW, 291TamChS 310.4

    இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்த நாட்களிலெல்லாம் எப்போதும் ஊக்கத்துடன் பணிசெய்து வந்தார். அவர் அதிகமாக எதிர் பார்த்தார்; அதனால் அதிகமாக முயற்சி எடுத்தார். 2DA, 72TamChS 311.1

    எஜமானின் சேவையில் ஈடுபடுகிற பலர் தங்களுக்கு சில அனுபவங்கள் இருக்கவேண்டுமென நினைக்கிறார்கள்; அவர்கள் நினைப்பதைக் காட்டிலும் அதிக உயரமும் ஆழமும் அகலமுமான அனுபவங்கள் தேவைப்படுகின்றன. தேவனுடைய மாபெரும் குடும்பத்தில் அங்கத்தினர்களாக இருக்கிற பலர் அவருடைய மகிமையைக் காண்பதின் அர்த்தம் பற்றியும், மகிமைமேல் மகிமையடையும்படி மாறுவதின் அர்த்தம் பற்றியும் மிகக்குறைவாகவே அறிந்திருக்கிறார்கள். கிறிஸ்தவ மேன்மை குறித்து பலர் அரைகுறையாகவே உணர்ந்திருக்கிறார்கள்; அதிலேயே அவர்களுடைய இருதயங்கள் மகிழ்ச்சியால் பூரிக்கின்றன. இரட்சகரின் அன்பு குறித்து முழுமையாகவும் ஆழமாகவும் உணர்ந்துகொள்ள ஏங்குகிறார்கள். தேவனுக்கடுத்த ஒவ்வொரு விருப்பத்தையும் இவர்கள் பெரிதாக எண்ணுவார்களாக. 3GW, 274TamChS 311.2

    நம் ஊழியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எஜமானுடைய சேவையில் ஈடுபட்டுள்ள மற்றவர்களுக்கும் நான் சொல்லவேண்டிய செய்தி ஒன்று உள்ளது. நீங்கள் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும்; பரிசுத்தமான தரநிலையை அடையவேண்டும்; இது ஆண்டவர் கட்டளை. பெறவேண்டுமென இதுவரையிலும் நீங்கள் நினைத்திருந்ததைவிட அதிக ஆழமான ஓர் அனுபவத்தை நீங்கள் பெற்றாகவேண்டும். தேவனுடைய மாபெரும் குடும்பத்தில் அங்கத்தினர்களாக இருக்கிற பலர் அவருடைய மகிமையைக் காண்பதின், மகிமை மேல் மகிமையடையும்படி மாறுவதின் அர்த்தம்பற்றி மிகக்குறைவாகவே அறிந்திருக்கிறார்கள். உங்களில் அநேகர் கிறிஸ்தவ மேன்மை குறித்து அரைகுறையாகவே உணர்ந்திருக்கிறீர்கள்; அதிலேயே உங்கள் இருதயங்கள் மகிழ்ச்சியால் பூரிக்கின்றன. இரட்சகரின் அன்புகுறித்து முழுமையாகவும் ஆழ மாகவும் உணர்ந்துகொள்ள ஏங்குகிறீர்கள். அறிந்ததுபோதும் என்கிற திருப்தி இல்லை. ஆனால், நம்பிக்கை இழக்காதீர்கள். இருதயத்தின் மிகச்சிறந்த, பரிசுத்தமிக்க விருப்பங்கள் இயேசுவின் பேரில் இருக்கவேண்டும். ஒவ்வோர் ஒளிக்கதிரையும் பெரிதாகப் போற்றுங்கள். ஆத்துமா விரும்புகிற தேவனுக்கடுத்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் பெரிதாக மதியுங்கள். ஆவிக்குரியவற்றைச் சிந்திப்பதையும், பரிசுத்தமானவற்றைப் பேசுவதையும் உங்கள் கலாச்சாரமாக மாற்றுங்கள். அவருடைய மகிமையின் விடியற்கால வெளிச்சத்தின் முதல் ஒளிக்கதிர்களைப் பெற்றிருக்கிறீர்கள். ஆண்டவரை அறிந்துகொள்ளும்படி நீங்கள் தொடர்ந்து செல்லும் போது, அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாக்கப்பட்டிருப்பதைக் கண்டுகொள்வீர்கள். நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும். நம் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, அவற்றை அறிக்கையிட்டபிறகு, சுவிசேஷத்தின் விசுவாசத்தில் பூரணப்படுவதாகிய நண்பகலின் வெளிச்சத்தைக் காணும் வரை யிலும் தொடர்ந்து கிறிஸ்துவை அறிந்துகொள்ளவேண்டும். 18T, 318TamChS 311.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents