Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    இச்சையடக்கம்

    புசிப்பதிலும் உடைஉடுத்துவதிலும் வேலைசெய்வதிலும் இச் சையடக்கத்தோடு நடக்கவேண்டியது அவசியம் என்கிற உணர்வு ஒவ்வொரு தேவபிள்ளையிலும் உண்டானால், தேவ நோக்கத்திற்காக மிகச்சிறந்த ஊழியத்தைச் செய்யமுடியும். பணிசெய்கிறவர் கவலையின்கீழும் வேலை அழுத்தத்தின்கீழும் இருந்தால், மனதளவிலும் உடலளவிலும் அளவுக்கதிகமாக வேலை வாங்கப்பட்டால், அவர் திரும்பிச்சென்று, சற்று ஓய்வெடுக்கவேண்டும்; அதுவும் சுயத்தைத் திருப்திப்பருத்துவதற்காக அல்ல, இனிவரும் கடமைகளைச் செய்ய சிறப்பாக ஆயத்தமாவதற்காகத்தான். விழிப்புமிக்க ஓர் எதிரி நமக்கு இருக்கிறான்; அவனுடைய சோதனைகளில் நாம் வீழ்ந்து, நாம் பாவம் செய்யும்படிக்கு, ஒவ்வொரு பெலவீனத்தையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்காக அவன் எப்போதும் நம் பாதையில் காத்திருக்கிறான். மனது அதிகம் களைப்படைந்து, உடல் பெலவீனப்பட்டிருக்கும்போது, அவன் அதைச் சாதகமாக் கிக்கொண்டு, தேவபிள்ளையை விழச்செய்யும்படிக்குகடும் பாவச் சோதனைகளால் ஆத்துமாவைச் சோதிப்பான். தேவனுடைய ஊழியக்காரர் தன் பெலத்தை கவனமாகப்பயன்படுத்துவாராக; கடுமை யான பிரயாசத்தால் களைத்துவிடும்போது அவர் திரும்பிச் சென்று, ஓய்வெடுத்து, இயேசுவோடு பேசுவாராக. 1 RH, Nov. 14, 1893TamChS 323.3

    உடலின் ஆற்றல்களை தவறாகப் பயன்படுத்துவது தேவமகிமைக்காக நாம் வாழ்கிற காலக்கட்டத்தைக் குறைக்கிறது. தேவன் நமக்கு நியமித்திருக்கிற வேலையைச் செய்துமுடிக்க நம்மைத் தகுதியற்றவர்களாக்குகிறது. தவறான பழக்கவழக்கங்கள் உருவாகவும், இரவில் வெகுநேரம் விழித்திருக்கவும், ஆரோக்கியத்தை விலை கொடுத்து சிற்றின்ப வேட்கையைத் தணிக்கவும் நாம் இடமளித்தால், உடல்பெலன் கெடுவதற்கு அடித்தளமிடுகிறோம். உடற்பயிற்சியே செய்யாமல், மனதுக்கோ உடலுக்கோ அதிகமாக வேலை கொடுக்கும்போது, நரம்புமண்டலம் சமநிலையை இழக்கிறது. இவ்வாறு தங்கள் வாழ்நாளைக் குறைத்து, இயற்கை விதிகளுக்கு புறம்பாக நடந்து, சேவைசெய்ய தகுதியற்றவர்களாகக் காணப்படுபவர்கள் தேவனைக் கொள்ளையடிக்கிற குற்றத்தைச் செய்கிறார்கள். தங்கள் சகமனிதர்களையும் அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள். பிறருக்கு ஆசீர்வாதமாக வாழ்வதற்கான வாய்ப்பும், தேவன் இந்த உலகத்தில் அவர்களை அனுப்பி செய்யச்சொன்ன பணியும், அவர்களுடைய தவறான செய்கையால் முற்றிலும் நிறைவேறாமல் போகின்றன. ஒரு குறுகிய காலக்கட்டத்தில் நிறைவேற்றவேண்டிய பணியைக்கூட செய்யத் தகுதியற்றவர்களாகிறார்கள். தீயப் பழக்க வழக்கங்களால் உலகத்திற்கு நன்மை செய்யாமல் போவோரை குற்றவாளிகளாக ஆண்டவர் தீர்க்கிறார். 2COL, 346,347TamChS 324.1

    நம் தேவன் எப்போதும் இரக்கமுள்ளவராகவும், மனதுருக்கம் நிறைந்தவராகவும், தம் நிபந்தனைகளில் எல்லாம் நியாயமுள்ளவராகவும் இருக்கிறார். ஆரோக்கியத்தை இழக்கச்செய்கிற, அல்லது மனத்திறன்களைப் பெலவீனப்படுத்துகிற பாதையில் சென்று செயல்படும்படி அவர் நம்மிடம் கேட்கமாட்டார். நாம் முற்றிலும் களைத்து, நரம்புகளெல்லாம் களைத்துப்போகும்படியான அழுத்தத்தின்கீழும், நெருக்கத்தின்கீழும் நாம் வேலைசெய்வதை அவர் விரும்பமாட்டார். ஆண்டவர் நமக்கு பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார்; நாம் பகுத்தறிவைப் பயன்படுத்தி, நமக்குத் தரப்பட்டுள்ள வாழ்க்கையின் சட்டங்களுக்கு இசைந்து வாழவேண்டும்; சமச்சீரான ஒழுங்குடன் நாம் இயங்கும்படி பிரமாணங்களுக்குக் கீழ்ப் படியவேண்டும். இதை ஆண்டவர் எதிர்பார்க்கிறார். ஒவ்வொரு நாளாகக் கழிந்துவருகிறது; ஒவ்வொரு நாளும் செய்யவேண்டிய கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன. ஆனால், நாளைக்குச் செய்யவேண்டியதை இன்றைக்கே நம்மேல் குவித்துக்கொள்ளக் கூடாது. தேவ நோக்கத்தை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தேவ ஊழியர்கள் அதன் பரிசுத்த தன்மையை உணரவேண்டும்; இன்றே தங்களுடைய திறன்களை புத்தியோடு பயன்படுத்தி, நாளைய வேலைக்கு தங்களை ஆயத்தப்படுத்தவேண்டும். 1 RH, Now. 7, 1893TamChS 324.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents