Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    2—வாலிபர்களுக்கான அழைப்பு

    தேவன் நியமனம்

    தேவன் தம்முடைய உதவிக்கரங்களாகவாலிபர்களை நியமித் திருக்கிறார். 1Ed, p 64TamChS 44.1

    நம் வாலிபர்கள்போன்ற வாலிபர் படையினர் சரியான பயிற்சியும் தேவையான தகுதியும் பெற்றால், சிலுவையிலறையப்பட்டு, உயிர்த்தெழுந்து, சீக்கிரம் வரப்போகிற இரட்சகர் குறித்த செய்தி எத்துணை விரைவில் உலகம்முழுவதிற்கும் கொண்டுசெல்லப் படும்! 2Ed, p 271TamChS 44.2

    சரியான வழிகாட்டலும் ஊக்கமும் கிடைத்தால் அதிகமானதைச் சாதிக்கக்கூடிய வாலிபர் படை இன்று நம்மிடம் இருக்கிறது. நம் பிள்ளைகள் சத்தியத்தை விசுவாசிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். அவர்கள் தேவ ஆசீர்வாதத்தைப் பெறவேண்டுமென்று விரும்புகிறோம். பிற வாலிபர்களுக்கு உதவக்கூடிய நேர்த்தியான திட்டங்களில் அவர்களும் பங்கெடுக்கவேண்டுமென்று விரும்புகிறோம். சத்தியத்தை உள்ளபடி எடுத்துக்காட்டவும், தங்களுக்குள்ளான நம்பிக்கைக்கு சரியான காரணத்தைச் சொல்லவும், எந்தப் பணிக்கு தகுதியானவர்களென நியமிக்கப்படு கிறார்களோ அதில் தேவனைக் கனப்படுத்தவும் அவர்கள் அனைவரையும் பயிற்று விக்கவேண்டும். 12GCB 24, Jan 29,30, 1893TamChS 44.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents