Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    நல்லதொரு முன்மாதிரி

    தன்னுடைய ஊழியத்தின் நிமித்தம் மனமாறியவர்களுடைய ஆவிக்குரிய நலனில் அதிக அக்கறை காட்ட தான் கடமைப்பட்டிருந்ததை அப்போஸ்தலனாகிய பவுல் உணர்ந்தார். மெய்யான ஒரே தேவனையும் அவர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிகிற அறிவில் அவர்கள் வளருவதை அவர் விரும்பினார். ஊழியத்தின்போது பல சமயங்களில் இயேசுவில் அன்பாயிருந்த ஆண்கள் - பெண்களோடு சேர்ந்து ஜெபிப்பார்; தேவனோடு உயிருள்ள உறவைவைத்திருக்க உதவும்படி தேவனிடம் கேட்டுக்கொள்வார். சுவிசேஷ சத்தியத்தின் வெளிச்சத்தை மற்றவர்களுக்கு எவ்வாறு வீசவேண்டும் என்று அவர்களுக்கு ஆலோசனை வழங்குவார். இவ்வாறு தாம் ஊழியம் செய்த மக்களை விட்டுப் பிரிந்தபிறகு, தேவன் அவர்களை தீமையிலிருந்து பாதுகாக்கவும், நற்செய்தி பணியில் ஊக்கமாகவும் தீவிரரமாகவும் ஈடுபட அவர்களுக்கு உதவிசெய்யவும் வேண்டிக்கொள்வார். 2AA, p. 262TamChS 99.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents