Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    பரலோகக் கலிக்கம் தேவை

    பரலோகக் கலிக்கத்தால் சபையாரின் கண்கள் அபிஷேகிக்கப்பட வேண்டியுள்ளது. அப்போதுதான் தேவனுக்கு ஊழியம் செய்ய தங்களைச்சுற்றிலும் பல வாய்ப்புகள் இருப்பதை அவர்கள் காண முடியும். பிரதான வழிகளிலும் வேலிகளருகிலும் போய், தேவனுடைய வீடு நிறையும்படிக்கு மனிதர்களை உள்ளே வரும்படி அழைக்குமாறு அவர் அழைப்பு கொடுத்துக்கொண்டே இருக்கிறார். ஆனாலும், நாம் குடியிருக்கிற பகுதிகளிலுள்ள குடும்பத்தினர்மேல் நாம் அக்கறைகாட்டி, அவர்களுடைய ஆத்துமாக்கள் மேல் நமக்கு அக்கறையிருப்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள நாம் செய்வதில்லை. நம் கைக்கெட்டுகிற தூரத்திலுள்ள இந்த வேலையைச் செய்யும்படி சபையை தேவன் இப்போது அழைக்கிறார். நாம் நின்றுகொண்டு, ‘எனக்குப்பிறன் யார்?’ என்று கேட்கக் கூடாது. நம்முடைய பரிவும் இரக்கமும் தேவைப்படுகிற நபர்தான் நமக்குப் பிறன் என்பதை நினைவுகூர வேண்டும். எதிரியால் அடிபட்டு, காயப்பட்டுள்ள ஒவ்வோர் ஆத்துமாவும் நமக்குப் பிறன் தான். தேவனுக்கு சொந்தமான ஒவ்வொருவரும் நமக்குப் பிறன் தான். தங்களுக்குப் பிறன் யார் என்று யூதர்கள் வகுத்திருந்த பிரிவினைகள் கிறிஸ்துவில் அகற்றப்பட்டன. தேசத்தால் வரும் பிரிவினைகளும், நாமே வகுத்துள்ள பிரிவினைகளும், சாதியும், வகுப்புப் பிவினைகளும் இல்லாமல் போயின. 226T, p 294TamChS 57.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents