Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    செயல்படுவது முக்கியம்

    ஏதாவது மாற்றம் நடக்கும் என்றோ , வலுக்கட்டாயமான ஒரு வல்லமை தங்களை ஆட்கொள்ளும் என்றோ தேவனுடைய மக்கள் காத்திருப்பதாக எனக்குக் காட்டப்பட்டது. அது தவறு. அவர்கள் ஏமாந்து போவார்கள்.அவர்கள் செயல்படவேண்டும்; அவர்களே பணியைச் செய்ய வேண்டும், பணிகுறித்து உள்ளபடி அறிந்து கொள்ள, தேவனிடம் அவர்கள் ஊக்கத்தோடு கதறவேண்டும். நம்மை விழிக்கச்செய்யவும், செவிகொடுக்கிற அனைவருடைய இருதயங்களிலும் சத்தியத்தை வலியுறுத்தவும் இன்று நம் கண் முன்னால் நடக்கும் நிகழ்வுகளே போதுமானவை. பூமியானது அறுவடையை நோக்கிக் காத்திருக்கிறது. 11T; 261TamChS 113.3

    மூன்றாம் தூதில் தேவன் தங்களுக்கு தந்துள்ள சத்தியத்தை அப்படியே அறிவிக்கவேண்டும். அந்த வேலையைச் செய்வதற்கு சத்தியம் அறிந்தவர்களை இப்பிரபஞ்சத்திலுள்ளவை எல்லாம் அழைக்கின்றன. நாம் பார்ப்பவையும் கேட்பவையும் கடமை செய்ய நம்மை அழைக்கின்றன. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தனக்குரிய கடமையைச் செய்யவேண்டுமென்று, சாத்தானிய ஏதுகரங்களின் கிரியைகள் அழைக்கின்றன. 29T, 25,26 TamChS 114.1

    கிறிஸ்துவின் சீக்கிர வருகைகுறித்த செய்தி பூமியின் சகல தேசத்தாருக்கும் அறிவிக்கப்படவுள்ளது. சத்துருவின் ஆற்றல்களை மேற்கொள்ள, விழிப்புமிக்கதும் களைப்பற்றதுமான முயற்சி தேவைப்படுகிறது. வெறுமனே உட்கார்ந்து, அழுது, கைகளைப் பிசைந்துகொண்டிருப்பது நம் வேலையல்ல. மாறாக, எழுந்து இன்றைக்கும் என்றைக்குமான பணியைச் செய்வதாகும். 3Sw, May 29, 1902 TamChS 114.2

    ஏதாவது செய், உடனே செய், உன் முழுப்பெலத்தோடு செய்;
    நீண்டநேரம் ஓய்வெடுத்தால் ,தூதனின் சிறகும் தொய்ந்துவிடும்;
    தேவனும் கூட ஓய்வெடுத்தால், ஆசீர்வாதமாக இருக்காது. 45T 308
    TamChS 114.3

    கைகளைக் கட்டிக்கொண்டு, எதுவும் செய்யாமலிருக்க தனக்கு உரிமையுண்டென எவரும் நினைக்கக்கூடாது. நாம் செயல்படாமல், சோம்பேறியாக இருந்துகொண்டு, நாம் இரட்சிக்கப்படுவது கொஞ்சமும் இயலாதது. இயேசு தம் பூலோக ஊழியத்தில் செய்ததை யோசியுங்கள். அவருடைய முயற்சிகள் எவ்வளவு ஊக்கத்தோடும் களைப்பின்றியும் இருந்தன! தேவன் தமக்குக் கொடுத்திருந்த பணியிலிருந்துதம்மை விலக்கிவிட அவர் எதையும் அனுமதிக்கவில்லை. நாம் இன்று அவருடைய அடிச்சுவடுகளில் நடக்கிறோமா? 5 CEv, 38 TamChS 114.4

    ஆத்துமாக்களை இரட்சிக்கும் பணியில் தேவனுடைய ஏது கரங்களும் மனிதருடைய ஏது கரங்களும் இணைந்துள்ளன. தேவன் தம் பங்கை நிறைவேற்றிவிட்டார்; கிறிஸ்தவர் தன்னுடைய பங்கைச் செய்யவேண்டியுள்ளது. இதற்காக தேவன் கிறிஸ்தவர்களை அழைக்கிறார். சத்தியத்தின் ஒளியை சகல தேசத்தாருக்கும் வழங்குவதற்கு தம் மக்கள் தங்களுடைய பங்கைச் செய்யவேண்டு மென்று அவர் எதிர்பார்க்கிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு இவ்வாறு கூட்டணி அமைக்க யாரெல்லாம் ஆயத்தமாக இருக்கிறோம்? 1 RH, March 1, 1887TamChS 114.5

    திருச்சபையானது உயிருள்ள சபையாக இருப்பதற்கு, அது செயல்படுகிற சபையாக இருக்கவேண்டும். எதிர்த்து நிற்கிற பாவத்திற்கும் பொய்களுக்கும் எதிராக உறுதியுடன் நிற்பதிலும், அவசரமே காட்டாமல் மெதுவாக முன்னேறுவதிலும் திருப்தியடைந்து விடக்கூடாது. மாறாக, கிறிஸ்துவின் நுகத்தைச் சுமந்துகொண்டு, நம் தலைவரோடு இணைந்துசெல்ல வேண்டும்; அதே நேரத்தில் நாம் செல்லுகிற வழியில் புதிய ஊழியர்களை ஆதாயப்படுத்தவும் வேண்டும். 2 RH, Aug. 4, 1891TamChS 115.1

    போராடும்படி ஊக்குவிக்க இன்னும் கொஞ்ச அவகாசம் தான் உள்ளது; பிறகு கிறிஸ்து வருவார்; இந்தக் கலகம் முடிந்துவிடும். எனவே கிறிஸ்துவோடு சேர்ந்து வேலை செய்யவும், அவருடைய ராஜ்யத்தைப் பரப்பவும் கடைசி முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். யுத்தத்தின் முன்னணியில் நின்று, உள்ளே வரும் தீமையை வைராக்கியமாக எதிர்ப்பவர்கள், தங்கள் கடமையிலிருந்து தவறி விடுகிறார்கள். விழுந்துபோன வீரர்களை சிலர் துக்கத்தோடு பார்க்கிறார்கள்; ஆனால், வேலையை நிறுத்த நேரமில்லை. அணியாக அவர்கள் நெருங்கிச்செல்ல வேண்டும். மரணத்தால் செயலற்றுப் போனவருடைய கரத்திலிருந்து கொடியை எடுக்கவேண்டும்; கிறிஸ்துவின் சத்தியத்தையும் கனத்தையும் நியாயப்படுத்த புத்தாற்றலோடு செயல்படவேண்டும். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, பாவத்தையும் அந்தகாரத்தின் வல்லமைகளையும் எதிர்க்கவேண்டும். தற்காலச் சத்தியத்தை விசுவாசிக்கிறவர்கள் ஆற்றலோடும் உறுதியோடும் செயல்பட அழைக்கிற காலம் இது. முன்மாதிரியாலும் போதனையாலும் சத்தியத்தை அவர்கள் போதிக்கவேண்டும். 3RH, Oct. 25, 1881TamChS 115.2

    ஒவ்வோர் இடத்திலுமுள்ள செவந்த்-டே அட்வென்டிஸ்டுகள் தங்களைப் பரிசுத்தப்படுத்தி, தங்களுடைய சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி தங்களால் முடிந்தவரை அவருடைய வேலையில் சிறப்பாகச் செயல்படுமாறு தேவன் அவர்களை அழைக்கிறார். 49T, 132TamChS 115.3

    சோம்பேறித்தனத்துக்கும் பக்திக்கும் சம்பந்தமில்லை; கிறிஸ்தவ வாழ்க்கையிலும் அனுபவத்திலும் அதிகளவு குறைபாடு காணப்படுவதற்கான காரணம் தேவபணியில் எதுவும் செய்யாமல் இருப்பதுதான். உடற்பயிற்சி செய்யாவிட்டால் நம் உடல் தசைகள் பெலவீனமாகி, பயனற்றுப்போவதைப் போலவே நம் ஆவிக்குரிய இயல்பிலும் நடக்கிறது. உங்கள் ஆற்றல்களைப் பயன்படுத் தினால்தான் வலுவானவர்களாக இருப்போம். 1RH, March, 13, 1888TamChS 115.4

    கருத்துமிக்க ஊழியர்களாக இருக்கவேண்டும்; சோம்பேறி நிர்பந்தமான நிலையில் இருக்கிறான். கிறிஸ்து தம் உயிரையே கொடுத்த மாபெரும் பணியை நிறைவேற்றாமல் சோம்பேறியாக இருந்தால், என்ன சாக்குப்போக்குதான் சொல்லமுடியும்? ஆவிக்குரிய மனத்திறன்களைப் பயன்படுத்தாவிட்டால் அவை ஒழிந்து விடும்; அவற்றை ஒழிக்கவேண்டும் என்பதே சாத்தானின் திட்டம். உலகிற்கு வரப்போகிற கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக ஒரு கூட்ட மக்களை ஆயத்தப்படுத்துவதற்கு பரலோகம் முழுவதுமே சுறு சுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. நாம் ‘தேவனுக்கு உடன் வேலையாட்களாயிருக்கிறோம். ‘சகலத்தின் முடிவும் சமீபித்திருக்கிறது. பணி செய்ய இதுவே நமக்குத் தருணம். 2RH, Jan. 24, 1893TamChS 116.1

    மனப்பூர்வமாக நற்செய்தி ஊழியம் செய்கிறவர்கள் தேவை. அவ்வப்போது எடுக்கப்படுகிற முயற்சிகளால் அதிக பயனில்லை. நம் கவனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்; அதிக ஊக்கமுள்ளவர்களாக இருக்கவேண்டும். 39T, 45TamChS 116.2

    நம் மத்தியில் இருப்பவர்கள் நேரமெடுத்து யோசித்தால், தாங்கள் எதுவும் செய்யாமல் இருந்தால், தேவன் தங்களுக்குக் கொடுத்துள்ள தாலந்துகளைப் புறக்கணிக்கிற பாவத்தைச் செய்கிறோமென்பதை அறிந்துகொள்வார்கள். 46T, 425TamChS 116.3

    உலகத்தில் நம் நிலை என்ன? தவணையின் காலத்தில் இருக்கிறோம். மாயையான பக்தியில் இந்தக் காலத்தைச் செலவிடக் கூடாது. விழிப்பும் காத்திருப்பும் கருத்தான பிரயாசமும் சேர்ந்து காணப்படவேண்டும். தேவன் எதிர்பார்க்கிறதனிப்பட்ட பக்தியையும் சேவையையும் புறக்கணித்துவிட்டு, இவ்வுலகத்திற்குரியவைகளைத் திட்டமிட்டு, அந்தச் சலசலப்போடு ஓடுவதிலேயே நம் வாழ்க்கையைக் கழித்துவிடக் கூடாது. பணியில் சோம்பேறிகளாக இல்லாத அதே வேளையில், ஆவியில் அனலுள்ளவர்களாக ஆண்டவரைச் சேவிக்கவும் வேண்டும். ஆத்தும் விளக்கின்திரியை நறுக்கவேண்டும்; நம் விளக்குகளோடு கிருபையாகிய எண் ணெயையும் நம் பாத்திரங்களில் வைத்திருக்கவேண்டும். கர்த்தரு டைய நித்திரை நிலையிலிருந்து எழும்புவதற்கான அழைப்பு நாள் திருடன் வருகிறவிதமாய் வராதபடிக்கு, ஆவிக்குரிய வீழ்ச்சியைத் தடுப்பதற்கான ஒவ்வொரு முன்னெச்சரிக்கையையும் எடுக்கவேண்டும். 15T, 276TamChS 116.4

    ஆவிக்குரிய சோம்பேறித்தனம் காணப்படக்கூடாத ஒரு யுகத்தில் நாம் வாழ்கிறோம்.பரலோக ஜீவன் என்னும் மின்னோட்டம் ஒவ்வோர் ஆத்துமாவிலும் ஊட்டப்பட்டிருக்கவேண்டும். 28T, 169TamChS 117.1

    இந்த வாழ்க்கையில் நீங்கள் செய்யக்கூடிய சகல நற்கிரியைகளாலும் உங்கள் வாழ்க்கையை நிரப்புங்கள். 35T, 488TamChS 117.2

    தம் நாமத்தை அறிக்கையிடுகிற அனைவரும் ஊக்கமிக்க பணியாளர்களாக மாறுவதை இயேசு விரும்புகிறார். ஒவ்வோர் அங்கத்தினரும் கன்மலையாகிய கிறிஸ்து இயேசுவின்மேல் கட்ட வேண்டியது அவசியம். ஒரு புயல் எழும்புகிறது; அது ஒவ்வொருவரின் ஆவிக்குரிய அடித்தளத்தையும் மிக அதிகமாக அசைத்து, சோதிக்கப்போகிறது. எனவே, மணலான அஸ்திபாரம் வேண்டாம்; கற்பாறையான அஸ்திபாரத்தைத் தேடுங்கள். ஆழமாகத் தோண்டி, உங்கள் அஸ்திபாரத்தை உறுதியாகப் போடுங்கள். கட்டுங்கள், ஓ, நித்தியத்திற்காகக் கட்டுங்கள்! கண்ணீரோடும் மனமார்ந்த ஜெபங்களோடும் கட்டுங்கள். இதுமுதல் நீங்கள் ஒவ்வொருவரும் நற்கிரியைகளால் உங்களுடைய வாழ்க்கையை அழகுமிக்கதாக்குவீர்களாக. இந்தக் கடைசி நாட்களில் காலேப் போன்றவர்கள் மிகவும் அவசியம். 45T, 129,130TamChS 117.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents