Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    எழுத்தாலும் பேச்சாலும்

    நமக்காகப் பரிந்துபேசும்படி இயேசு ஜீவிக்கிறார் என்று எழுத்தாலும் பேச்சாலும் அறிவியுங்கள். மாபெரும் பணியாள் தலைவரான அவருடன் இணையுங்கள். சுயத்தை மறுத்தவராக பூமியில் மீட்பர் மேற்கொண்டுள்ள அன்பின் பயணத்தில் அவரைப் பின் பற்றிச் செல்லுங்கள். 3 RH, Jan. 24, 1893TamChS 172.3

    சிலர் ஒருவிதத்திலும், மற்றவர்கள் வேறுவிதத்திலும் ஊழியம் செய்வார்கள். ஆண்டவர் அவர்களை அழைத்து, வழிநடத்துவார். ஆனால் அவர்கள் அனைவரும் சேர்ந்து பாடுபட்டு, ஊழியம் பரி பூரணம் அடையும்படி முயலவேண்டும். பேச்சாலும் எழுத்தாலும் அவருக்காக ஊழியம் செய்யவேண்டும். 19T, 26TamChS 172.4

    சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றியே பேசுங்கள்; ஜெபியுங்கள்; பாடுங்கள்; அது அவர்களுடைய இருதயங்களை நொறுக்கி, ஆதாயப்படுத்தும். 29T, 67TamChS 173.1

    இருதயமாகிய பலிபீடத்தின்மேல் சத்தியம் கொழுந்துவிட்டு எரிவதுபோல, மிகுந்த பகுத்தறிவோடும் தேவன்மேல் வைராக்கியத்தோடும் உணர்வோடும் இருக்கிற நபர்களுடயை கரங்களில் பேனாமிகுந்த ஆற்றலுள்ளதாகத்திகழும். கலப்பட்டமற்ற சத்தியத்தின் நீருற்றில் தொட்டு எழுதுகிற பேனா, பூமியின் இருள்படிந்த மூலைமுடுக்குகளுக்கு ஒளிக்கதிர்களை அனுப்பும், அங்கிருந்து அந்தக் கதிர்கள் பிரதிபலிக்கப்பட்டு, புதிய ஆற்றலைக் கொடுத்து, எங்கும் சிதறுண்டு செல்கிற கூடுதல் ஒளியைக் கொடுக்கும். 3LS, 214TamChS 173.2

    பிரசங்கம் செய்வதிலேயே ஆற்றல் முழுவதையும் செலவிட்டு, அதோடு ஊழியம் முடிந்துவிடுவதற்கு நம் ஊழியர்கள் அனுமதிக்கக்கூடாது. நம் துண்டுப்பிரதி ஊழியத்திற்கும் நற்செய்தி ஊழியச் சங்கத்திற்கும் சக்கரத்திற்குள் இருக்கிற சக்கரம் போல விளங்குகிற நற்செய்தி கடித ஊழியத்தில் ஈடுபட்டு, அதை எவ்வாறு வெற்றிகரமாக நடத்தலாம் என்பதை திருச்சபையின் அங்கத்தினர்களுக்கு அவர்கள் போதிக்கவேண்டும். இந்த உட்சக்கரத்தின் அசைவுதான் வெளிச்சக்கரத்தை நன்றாக, ஆற்றல் மிகுதியோடு இயங்க வைக்கிறது. இந்த உட்சக்கரம் செயல்படாமல் நின்று விட்டால், துண்டுப் பிரதி ஊழியமும் நற்செய்தி ஊழியச் சங்கமும் ஆற்றல் குறைந்து, செயலற்றுப் போய்விடும். 4RH, June 10, 1880TamChS 173.3

    விழிப்போடு நற்செய்தி ஊழியத்தைச் செய்வதில் சோர்ந்து போகவேகூடாது. நீங்கள் தேவனோடு தொடர்பிலிருந்தால், நீங்கள் அனைவருமே இந்த ஊழியத்தில் வெற்றிகரமாக ஈடுபட முடியும். விசாரித்து, கடிதம் எழுதுவதற்கு முன்பாக, ஜெபத்தின்மூலம் தேவனிடம் உங்கள் இருதயங்களை ஒப்படையுங்கள். அப்போது தான் சுபாவக்கிளையில் ஒட்டவைத்து, தேவமகிமைக்கென கனிகொடுக்கிற சில காட்டுக்கிளைகளை நீங்கள் சேர்க்கமுடியும். இந்த ஊழியத்தில் தாழ்மையான இருதயத்தோடு பங்கெடுக்கிற அனைவருமே, ஆண்டவருடைய திராட்சத்தோட்டத்தில் எப்போதும் கற்றுக்கொள்கிற ஊழியர்களாக இருக்கிறார்கள். 5 RH, June 10, 1880TamChS 173.4