Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    5—ஒரு பயிற்சி மையம்

    இன்றைய தேவை

    சபையில் தாலந்துள்ளவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை வளர்க்கும்படி உண்மையோடு பிரயாசப்படுகிற ஞானமுள்ள ஊழியர்கள்தாம் நம் சபைகளை மேம்படுத்துவதற்கு இப்போதைய தேவை. எஜமானின் பணிக்காக அந்தத் தாலந்துகளைக் கற்பிக்க வேண்டும். நம்முடைய பெரிய, சிறிய திருச்சபைகளுக்குச் சென்று, திருச்சபையை மேம்படுத்துவதையும், அவிசுவாசிகளுக்குப் பிரயாசப்படுவதையும் கற்றுக்கொடுக்கிற பணியாளர்களை நியமிப்பதற்கு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டம் ஒன்று தேவை. திருச்சபைகளைச் சந்தித்து, இந்தப் பணியைச் செய்கிறவர்கள், ஊழியம் செய்வதுபற்றிய செயல்திட்டங்களை சகோதர சகோதரி களுக்குக் கற்பிக்கவேண்டும். 19T, 117TamChS 82.1

    உலகத்திற்கு வெளிச்சம் கொடுக்கிற ஊழியத்திற்காக அங்கத்தினர்களுக்குப் பயிற்சியளித்துத் தகுதிப்படுத்துகிற வேலையை திருச் சபை செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். நூற்றுக்கணக்கானோர் தங்கள் தாலந்துகளைப் பயன்படுத்தி ஊழி யம் செய்வதற்கான பயிற்சியை வழங்கவேண்டும். நம்பிக்கையும் செல்வாக்கும் தேவையான பதவிகளை நிரப்புவதற்குத் தேவையான வளர்ச்சியை இந்தத் தாலந்துகளை உடையவர்கள் பெறலாம்; தூய்மையானதும் மாசற்றதுமான நியதிகளை இப்படிப்பட்டவர்கள் கடைப்பிடிப்பார்கள். இவ்வாறு எஜமானுக்காக ஏராளமான நன்மை விளையும். 16T; 431,432TamChS 82.2

    ஒவ்வொரு பணியாளருமே திறமைசாலியாக இருக்கவேண்டும் என்பது புரிகிறது. அப்போது, இயேசுவிலுள்ள சத்தியத்தை உள்ளபடியே அவர் அறிவிக்கமுடியும். 27T; 70TamChS 83.1

    நன்றாகத்திட்டமிட்டு, சபை அங்கத்தினர்களைப் பயிற்றுவிக்கிற முயற்சியில் தாமதமே காணப்படக்கூடாது. 39T, 119TamChS 83.2

    தேவனுக்காக வேலை செய்யுங்கள். ஊழியர்களைச் சார்ந்திராமல் தேவனைச் சார்ந்திருங்கள் என்று நம்மக்களுக்குப் போதிப்பது தான் நாம் அவர்களுக்குச் செய்கிற மிகப்பெரிய உதவியாகும். 47T, 19TamChS 83.3

    எல்லாப் பிரசங்கங்களும் சுயமறுப்பு மிக்க ஊழியர்களை உருவாக்கவில்லை என்பது உண்மை. இதில் மிகமோசமான விளைவுகள் சம்பந்தப்பட்டிருப்பதை மனதில் வைத்து இதை யோசிக்க வேண்டும். எதிர்காலத்தில் நம் நித்திய வாழ்க்கை என்னவாகப் போகிறது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. வெளிச்சம் வீசுவதற்காக சபைகள் தங்கள் தாலந்துகளைப் பயன்படுத்தாததால், அவை வாடிவருகின்றன. எஜமான் போதிப்பது போலவே கவனமாகப்பாடங்களைச் சொல்லிக்கொடுத்து, அன்றாட வாழ்க்கையில் எல்லோரையும் வெளிச்சம் வீச வைக்கவேண்டும். 56T; 431TamChS 83.4

    அளவுக்குமிஞ்சி மக்கள் பிரசங்கங்களைக் கேட்டு விட்டார்கள். ஆனால், கிறிஸ்து யாருக்காக மரித்தாரோ அவர்களுக்காக ஊழியம் செய்ய அவர்களுக்குச் சொல்லப்பட்டதா? அப்பணியில் ஒவ்வொருவரும் பங்கெடுப்பது அவசியமென உணரும்படி, ஒரு குறிப்பிட்ட பணித்திட்டத்தை வகுத்து, அதில் கலந்துகொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டதா? 66T, 431TamChS 83.5

    எத்தகைய அவசரநிலை எழுந்தாலும் அதை எதிர்கொள்ளும் படி மக்களைத் தகுதிப்படுத்துவதற்கு கல்வியும் பயிற்சியும் அவசியம். ஒவ்வொருவரும் தங்களுடைய பொறுப்பை நிறைவேற்றுகிற அனுபவத்தைப் பெறும்படிக்கு, அதற்கேற்ற இடத்தில் அவரை வைப்பதற்கான ஞானமான திட்டமிடல் அவசியம். 79T, 221TamChS 83.6