Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    நற்செய்தி ஊழியமுறைகள் குறித்த செயல்முறை விளக்கம்

    முகாம் கூட்டத்தில் பணிசெய்வதன்மூலம் அவரவர் தங்கள் சொந்த திருச்சபைகளில் வெற்றிகரமாகச் செயலாற்றும் விதத்தைக் கற்றுக்கொள்ளலாம். 36T, 49TamChS 256.2

    நம்முடெய முகாம் கூட்டங்களில் சிலவற்றில், நகரங்களுக்கும் அதன் புறநகர்ப்பகுதிகளுக்கும் சென்று புத்தகங்களை விநியோகிக்கவும், மக்களை கூட்டங்களுக்கு அழைக்கவும் வலுவான ஊழியர் குழுக்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான நபர்கள் தவறாமல் கலந்துகொண்டார்கள்; இல்லையேல், அவர்கள் அதுபற்றி கொஞ்சங்கூட யோசித்திருக்க மாட்டார்கள். 46T, 36TamChS 256.3

    பெற்றுக்கொள்வதற்காக மட்டுமல்ல, கொடுப்பதற்காகவும் நாம் முகாம் கூட்டத்திற்குச் செல்லலாம். கிறிஸ்துவினுடைய பாவ மன்னிப்பின் அன்பைப் பெற்ற ஒவ்வொருவரும், தேவ ஆவியானவருடைய வெளிச்சத்தைப் பெற்று, மனமாறி சத்தியத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் இந்த விலையேறப்பெற்ற சத்தியங்களை அறிந்துகொண்டதின் நிமித்தம், தாங்கள் தொடர்புகொள்கிற ஒவ்வோர் ஆத்துமாவுக்கும் தாங்கள் கடன்பட்டிருப்பதை உணருவார்கள். அபிஷேகிக்கப்பட்ட ஊழியர்கள் அணுக முடியாத ஆத்துமாக்களைகூட இருதயத்தில் தாழ்மையுள்ளவர்கள் அணுகும்படி ஆண்டவர் பயன்படுத்துவார். கிறிஸ்துவின் இரட்சிப்புக்கேதுவான கிருபையை வெளிப்படுத்துகிற வார்தைகளைப் பேச அவர்கள் அசைக்கப்படுவார்கள். 16T; 43 TamChS 256.4

    ஆண்டவர் வகுக்கிற திட்டங்களை நாம் பின்பற்றும்போது, “தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்.” கான்ஃபரன்ஸ் தலைவர்கள், ஊழியர்கள், போதகர்கள், மாணவர்கள் அல்லது சுயாதீன அங்கத்தினர்கள் என நாம் எந்தப் பதவியில் இருந்தாலும், தற்கால சத்தியத்தை அறிந்துகொள்ள வேண்டிய நிலையில் இருந்தவர்களுக்கு அதைச் சொல்வதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தினோமா என்று ஆண்டவர் கணக்கு கேட்பார். நாம் பயன்படுத்தும்படி அவர் நியமித்துள்ள முக்கிய ஏதுகரங்களில் ஒன்று அச்சிடப்பட்ட பக்கங்கள். நம் பள்ளிகளின் சுகாதார மையங்களிலும், நம் உள்ளூர்ச் சபைகளிலும், குறிப்பாக நம் வருடாந்தர முகாம் கூட்டங்களிலும் இந்த ஈடு இணையற்ற ஏதுகரத்தை ஞானமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளவேண்டும். அவிசுவாசிகளை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறவிதத்தில் அன்போடு அணுக வேண்டும் என்பதையும், தற்காலத்திற்கான சத்தியம் தெளிவாகவும் வல்லமையாகவும் சொல்லப்பட்டுள்ள புத்தகப்படைப்புகளை அவர்களுடைய கரங்களில் எவ்வாறு சேர்க்கவேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியர்கள் நம் மக்களுக்கு கருத்து மிக்க பொறுமையோடு போதிக்கவேண்டும். 29T, 86, 87 TamChS 257.1

    மனிதன் வகுக்கிற திட்டத்தின்படி அல்ல, கிறிஸ்து ஊழியம் செய்த பிரகாரமே நம் முகாம் கூட்டங்களில் பணிகள் நடத்தப்பட வேண்டும். ஊழியம் செய்யும்படி திருச்சபையின் அங்கத்தினர்களை இழுக்கவேண்டும். 39T, 120TamChS 257.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents