Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    வேத ஆராய்ச்சிக்காக உங்கள் வீட்டிற்கு கூப்பிடுங்கள்

    பக்கத்து வீட்டுக்காரர்களை உங்கள் வீட்டிற்குக் கூப்பிடுங்கள். வேதாகமத்திலிருந்தும், ஆவிக்குரிய புத்தகங்களிலிருந்தும் சத்தியங்களை அவர்களுக்கு வாசித்துக்காண்பியுங்கள். உங்களோடு சேர்ந்து அவர்கள் பாட்டுபாடி ஜெபிக்கட்டும். தமது வாக்கின்படியே இந்தச் சிறு கூட்டங்களில், கிறிஸ்து இருப்பார்; கிருபையால் அவர்களுடைய இதயங்கள் தொடப்படும். 3MH, 152,153 TamChS 162.2

    எபேசுவில் அப்பொல்லோ ‘ஜெபாலயத்தில் தைரியமாகப் பேசத்தொடங்கினான்.’ ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசினதைக்கேட்டார்கள். சுவிசேஷத்தின் முழு வெளிச்சத்தையும் அவன் இதுவரை பெறவில்லை என்பதை உணர்ந்தார்கள். ‘அவனைச் சேர்த்துக்கொண்டு தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள். அவர்களுடைய போதனையின்மூலம் வேதவசனங்களைப் பற்றிய தெளிவான புரிதலை அவன் பெற்றான். மேலும் கிறிஸ்தவ விசுவாசத்தின் திறமையான பேச்சாளன் ஆனான். 4AA, 270TamChS 162.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents