Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    மிக மோசமான தவறு

    ஆத்தும இரட்சிப்பின் பணியை ஊழியத்தின்மூலம் மட்டும் தான் செய்ய முடியுமென நினைப்பது மிகப்பெரிய தவறு. தாழ்மையும் அர்ப்பணிப்புமிக்க விசுவாசிகளுக்கு திராட்சத்தோட்டத்தின் எஜமான் ஆத்துமாக்கள் மேலான பாரத்தைக் கொடுத்திருக்கிறார். ஆண்டவர் யாருக்கு மிகுந்த பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறாரோ அவர்கள் இவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். தேவனுடைய நாமத்தை விசுவாசிக்கிற அனைவருக்கும் இரட்சகரின் ஊழியக்கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தேவசபையின் தலைவர்கள் உணர வேண்டும். ஊழியத்திற்கென்று கைகளை வைத்து அபிஷேகிக்கப்படாத ஏராளமானவர்களை தேவன் தம்முடைய திராட்சத்தோட்டத்திற்கு அனுப்புவார். 3AA, 110TamChS 96.2

    ஊழியர்தான் எல்லாச் சுமைகளையும் சுமக்கவேண்டும், எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் என்று நினைப்பது தவறானது. அளவுக்கு மிஞ்சி வேலை செய்பவர், சுகமிழந்து மரிக்கக்கூடும். ஆனால் ஆண்டவர் திட்டமிட்டுள்ளது போல அந்தப் பாரத்தைச் சுமக்க தோள்கொடுத்திருந்தால், அவர் உயிரோடு இருந்திருப்பார். கிறிஸ்துவைப் பின்பற்றவும், அவர் ஊழியம் செய்தபடி செய்யவும் பணியாளர்களுக்குப் போதிக்கக் கூடியவர்கள் பாரத்தைப் பகிர்ந்துகொள்ளும்படி திருச்சபையில் உள்ளவர்களுக்குப் பயிற்சிகொடுக்க வேண்டும். 46T, 435TamChS 96.3

    தானே எப்போதும் ஜெபிக்கவேண்டும்; தானே எல்லாவற்றை யும் செய்யவேண்டும்; தானே பேசவேண்டும் என்று ஊழியர் நினைக்கக்கூடாது. ஒவ்வொரு சபையிலும் அதற்கென உதவிக் காரர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். கூட்டங்களையும் வேத பாடங்களையும் நடத்துவதற்கு மாறிமாறி ஆட்களை நியமிக்கலாம். அவ்வாறு செய்யும்போது தேவன் தந்துள்ள தாலந்துகளை விசுவாசிகள் பயன் படுத்தமுடியும்; செய்கிற வேலையில் அவர்கள் பயிற்சிபெற முடியும். 1GW, 197TamChS 96.4

    திருச்சபை செய்யவேண்டிய வேலையை ஊழியர்களே செய்யக்கூடாது; பிறர் கடமையாற்ற தடையாக இருக்கக்கூடாது. சபையிலும் சமுதாயத்திலும் எவ்வாறு சேவைசெய்ய வேண்டுமென அங்கத்தினர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். 2HS, 291TamChS 97.1

    அவிசுவாசிகளுக்கு நம் விசுவாசத்தைச் சொல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அதில் தங்களுக்கு ஆர்வம் இல்லாததுபோல சபை அங்கத்தினர்கள் பெரும்பாலும் பின்தங்குகிறார்கள். பாரம் முழுவதையும் ஊழியர்மேல் சுமத்துகிறார்கள். இதனால்தான் நம்மில் திறமை வாய்ந்த ஊழியர்களுடைய பிரயாசத்திற்குக்கூட சிலசமயங்களில் பயனில்லாமல் போகிறது. 3GW, 196TamChS 97.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents